நொய்டா: இந்தியாவின் முதன்மையான, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS), 2008 இல் தொடங்கிய பிறகு எந்த ஆண்டிலும் இல்லாதவாறு, 2020-21 இல் அதிக வேலை நாள்களை வழங்கியது. ஆனால் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க மாநிலங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மூன்று விளக்கப்படங்களில், திட்டத்தின் தற்போதைய நிலையை விரைவாகப் பார்க்கிறோம்:


2020-21 ஆம் ஆண்டில், கோவிட்-19 தொற்றுநோய்களின் முதல் ஆண்டு, நோய் மற்றும் அது தொடர்புடைய ஊரடங்குகள், வணிகங்களையும் , பொருளாதாரத்தையும் சிதைத்த சூழலில், இந்தத் திட்டம் 2019-20 உடன் ஒப்பிடும்போது 47% அதிக வேலை நாட்களை வழங்கியது.

நவம்பர் 10, 2021 வரை சுமார் 2.3 பில்லியன் தனிநபர் வேலை நாட்கள் உருவாக்கப்பட்டன, இது 2019-20 நிதியாண்டில் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பில் 86% ஆகும்.


கடந்த 2020-21 பட்ஜெட்டில், மத்திய அரசு திட்டத்திற்கு ரூ.61,500 கோடி ஒதுக்கியுள்ளது, இது முந்தைய ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட 13% குறைவாகும். இந்தத் தொகை குறைந்துவிட்டது; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மே 2020 இல் திட்டத்திற்காக ரூ 40,000 கோடி கூடுதல் நிதியை அறிவித்தார், இது 2020-21 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் ( MGNREGS) கீழ் 3.89 பில்லியன் நாட்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி சாதனை படைத்தது.

கோவிட்-19 இன் இரண்டாவது அலைக்குப் பிறகு இந்தத் திட்டத்திற்கு அரசாங்கம் கூடுதல் நிதி ஒதுக்கவில்லை. 2021-22 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு, பட்ஜெட் 2019-20 இல் செலவழித்ததை விட 1.8% அதிகம். உண்மையான வகையில், 2015-16 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடுகளை விட குறைவாகவே உள்ளது என்று வேலைவாய்ப்பு உத்திரவாதத்திற்கான பீப்பிள்ஸ் ஆக்ஷன் ஆய்வுக் குழு மதிப்பிட்டுள்ளது.

இதன் விளைவாக, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 23 எதிர்மறையான நிகர இருப்பைக் காட்டுகின்றன - அதாவது ஒதுக்கப்பட்டதை விட அதிக பணம் செலவிடப்பட்டது. நிதி பற்றாக்குறையால், தொழிலாளர்கள் தாமதமாக ஊதியம் பெறுகிறார்கள் மற்றும் குறைந்த நாட்களுக்கு வேலை பெறுகிறார்கள் என்று ஆகஸ்ட் 2021 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.

மொத்தத்தில், மாநிலங்களின் எதிர்மறை இருப்பு ரூ.10,342 கோடி. ஆந்திரப் பிரதேசம் மிகப்பெரிய எதிர்மறை சமநிலையைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு உள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு, 100% ஊதியத்திற்கும் 75% பொருள் செலவிற்கும் மத்திய அரசு பொறுப்பாகும், அதே நேரத்தில் மாநில ங்கள் பொருள் செலவில் 25% நிதியளிக்கின்றன.


இந்தியா முழுவதும், ஏப்ரல் மற்றும் செப்டம்பர் 2021 க்கு இடையில் செய்யப்பட்ட பணிகளுக்காக, 7% க்கும் அதிகமான ஊதியங்கள் (ரூ. 2,850 கோடி) மத்திய அரசின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன. பணியை முடித்த 15 நாட்களுக்குள் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.

உத்தரகாண்டில் 37% மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் 33% என அனைத்து ஊதியம் வழங்கலில் பாதி, அதிகபட்ச சதவீதம் ஆந்திரப் பிரதேசத்தில் நிலுவையில் உள்ளன. ஒப்புதல் நிலுவையில் உள்ள பெரும்பாலான ஊதியங்கள் மேற்கு வங்கத்தில் உள்ளன, அதைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளன.

தொழிலாளர்களுக்கு 15 நாட்களுக்குள் சம்பளம் வழங்கப்படாவிட்டால், மாநில அரசுகள் ஒவ்வொரு நாளும் தாமதப்படுத்தும் ஊதியத் தொகையில் 0.05% தாமத இழப்பீடு வழங்க வேண்டும்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.