மூன்று நகர்ப்புற வேலைகளில் கிட்டத்தட்ட இரண்டு, சேவைகள் (41%) மற்றும் உற்பத்தி (22%) 2018-19 ஆம் ஆண்டில் குவிந்திருந்தன. (வர்த்தகம் 19%, கட்டுமானம் 10%, விவசாயம் 6%மற்றும் மின்சாரம், நீர் மற்றும் எரிவாயு 2% மற்றவை). 2011 ஆம் ஆண்டில் நகர்ப்புற வேலைகளுடன் இந்த எண்ணிக்கையை ஒப்பிடும்போது, ​​உற்பத்தியின் பங்கு 1.2 சதவிகிதம் (1.2 மில்லியன் வேலைகள்) மற்றும் சேவைகளின் பங்கு 2.4 சதவிகிதம் (2.9 மில்லியன் வேலைகள்) அதிகரித்துள்ளது என்பது தெளிவாகிறது.

கடந்த 2018-19 ஆம் ஆண்டில், நகர்ப்புற வேலைகள் 23 மில்லியன் பெண்களையும் 89 மில்லியன் ஆண்களையும் ஈடுபடுத்தின. நகர்ப்புறங்களில் வேலைகளை பாலினமாக பிரிப்பது குறிப்பிட்ட போக்குகளை வெளிப்படுத்துகிறது. பெண்கள் ஆடை, ஜவுளி உற்பத்தி, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சேவைகளில் கவனம் செலுத்துகின்றனர், அதே நேரத்தில் ஆண்களோ, வர்த்தகம், ஹோட்டல் துறையிலும், கனரக தொழில் மற்றும் ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் கவனம் செலுத்துகின்றனர்.

வேலை செய்யும் வயதைக் காட்டிலும் குறைவான பெண்கள் உண்மையில் நகர்ப்புறங்களில் வேலைகளை விரும்புகிறார்கள் அல்லது வைத்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல், அவர்கள் பெரும்பாலும் பெரியளவில் வருமான மாறுபாடு, பலன் இல்லாமை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத மோசமான தரத்தில் வேலை செய்கிறார்கள். கவலைக்குரிய இந்த முக்கியமான பகுதிகளை நிவர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், நகர்ப்புற பணியாளர்களில் பெண்களின் பங்கேற்பு பற்றிய கேள்வியும் பணியிடத்தில் குழந்தை பராமரிப்பு வசதிகளை வழங்குதல் மற்றும் பாதுகாப்பான பொது போக்குவரத்து கிடைப்பதை உறுதி செய்தல் போன்ற காரணிகளிலும் உள்ளது.

*தரவு காட்சிப்படுத்தலுக்கு உதவிய, IIHS நகர்ப்புற தகவல் ஆய்வகத்தை சேர்ந்த டிவிஜ் சின்ஹாவில்லி. ஆசிரியர் நன்றி கூறுகிறார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.