6 விளக்கப்படங்களில்: கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன் இந்தியாவின் சுகாதாரம்
கோவிட்-19 தொற்றுநோய் தாக்குவதற்கு முன்பு இந்தியாவில் நச்சு உணவு, வயிற்றுப்போக்கு ஆகியன முக்கிய நோய் பரவல்களாக இருந்தன. ஆறு விளக்கப்படங்கள் மூலம், 2019 இல் இந்தியாவின் சுகாதார சுயவிவரத்தினை பார்க்கலாம்
மும்பை: இந்தியாவின் கிராமப்புற மக்களில் ஐந்தில் ஒரு பகுதியினர், 2019 ஆம் ஆண்டில் சராசரியாக வறுமைக் கோட்டின் அளவீடான ஒரு மாதத்திற்கு ரூ.972 என்பதைப்போல் 12 மடங்கு தங்களது செலவழித்துள்ளனர் என்று, சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய சுகாதார சுயவிவரத்தின் தரவு காட்டுகிறது. நகர்ப்புறங்களில் உள்ள ஏழைகள், சராசரியாக ஒரு மாதத்திற்கு, நகர்ப்புற வறுமைக் கோட்டின் அளவீடு ரூ.1,407 ஐ விட ஒன்பது மடங்கு செலவழிப்பதாக தரவு காட்டுகிறது.
தேசிய சுகாதார சுயவிவரம் என்பது, சுகாதார அமைச்சகத்தின் மத்திய சுகாதாரப் புலனாய்வுப் பிரிவால் வெளியிடப்படும் வருடாந்திர தரவுத்தொகுப்பாகும். ஆறு விளக்கப்படங்களில், அதன் சிறப்பம்சங்களைப் பார்க்கிறோம்:
இந்தியாவில், 2019 இல் 480,000 க்கும் மேற்பட்ட மலேரியா, டெங்கு நோயாளிகள் இருந்தனர்
கடந்த 2019 ஆம் ஆண்டில், ஒவ்வொரு 1,000 நோயாளிகளில் கிட்டத்தட்ட 6 ஆண்கள் மற்றும் ஒவ்வொரு 1,000 நோயாளிகளில் 5 பெண்கள் என, வேறெந்த தொற்று நோயும் இல்லாமல் நிமோனியாவால் அதிகம் இறப்பு விகிதம் உள்ளது.
மலேரியா மற்றும் டெங்கு ஆகியவை மிகவும் பொதுவான கிருமிகள் - கொசுக்கள் போன்றவற்றின் மூலம் பரவும் நோய்கள். 2019 இல் 330,000 க்கும் மேற்பட்ட மலேரியா நோயாளிகள் மற்றும் 150,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டனர், இது அனைத்து பூச்சிகள் மூலம் பரவும் நோய்களில் 83% ஆகும்.
தீவிர மூளையழற்சி நோய்க்குறி (AES) காரணமாக, இது பல நோய்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது, கிருமிகளால் பரவும் நோய்களால் அதிக இறப்புகள் ஏற்பட்டன. இதில் காய்ச்சலின் கடுமையான தொடக்கம் மற்றும் குழப்பம், கவனமின்மை, மயக்கம் மற்றும் மன நிலையில் மாற்றம், கோமா ஆகியன அடங்கும்.
ஜப்பானிய மூளைக்காய்ச்சல் காரணமாக , 2019 இல் 220 பேர் இறந்தனர், போலியோ ஒழிக்கப்பட்ட பிறகு, ஆசியாவில் குழந்தை பருவ வைரஸ் நரம்பியல் தொற்று மற்றும் இயலாமைக்கான முக்கிய காரணம் என்று ஆகஸ்ட் 2016 கட்டுரையில் நாங்கள் தெரிவித்தோம்.
உயர் இரத்த அழுத்தம் இந்தியாவில் மிகவும் பொதுவான தொற்றாத நோயாகும்
இந்தியாவில் நோய் முறை மாறி வருகிறது; தொற்று நோய்களை விட தொற்று அல்லாத நோய்கள் (NCDs) இன்று இறப்புகளில் அதிக பங்கு வகிப்பதை , தரவு காட்டுகிறது. இதன் விளைவாக, இந்தியாவின் சுகாதார அமைப்பு இரட்டை சவாலை எதிர்கொள்கிறது - வயிற்றுப்போக்கு, குறைந்த சுவாச நோய்த்தொற்றுகள், காசநோய் மற்றும் பிறந்த குழந்தை கோளாறுகள் போன்ற நோய்களுடன் போராட வேண்டியுள்ளது. அதே நேரத்தில், இதய நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட தொற்று அல்லாத நிலைமைகளைக் கொண்டவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டியுள்ளது என்று, நாங்கள் நவம்பர் 2017 கட்டுரையில் தெரிவித்திருந்தோம்.
கடந்த 2019 ஆம் ஆண்டில், புற்றுநோய், நீரிழிவு நோய், இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின் கீழ் 68 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள், தொற்று அல்லாத நோய்களுக்காக கண்காணிக்கப்பட்டனர். இவர்களில், 4.3 மில்லியன் பேர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதை தொடர்ந்து 3.3 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1.3 மில்லியன் பேர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2019ல் இந்தியாவில் 187 சின்னம்மை, 181 டெங்கு பரவல்
இந்தியாவின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம், 2004 ஆம் ஆண்டில் தொற்றுநோய்களின் பரவலை கண்டறிந்து அதற்கு பதில் தரக்கூடிய நடவடிக்கைகளுக்காக தொடங்கப்பட்டது, மேலும் பரவும் வாய்ப்புள்ள 30 நோய்களின் தரவுகளைப் பதிவு செய்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டில், நாட்டில் 1,677 நோய் பரவல் இருந்தன - பெரும்பாலான நச்சு உணவு (345), அதைத் தொடர்ந்து கடுமையான வயிற்றுப்போக்கு நோய்கள் (341), சின்னம்மை (187), டெங்கு (181) மற்றும் சிக்குன்குனியா (72) ஆகும்.
சொந்த பணத்தில் இருந்து சுகாதாரச் செலவு
ஆரம்ப சுகாதார நிலையங்களில் குணப்படுத்த முடியாத நோய்களுக்கான சிகிச்சைக்காக, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரையிலான குடும்ப நல காப்பீட்டுத் தொகையைப் பெற்றாலும், மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் சராசரியாக மருத்துவமனைக்குச் செல்வதற்காக சொந்த பணத்தில் ரூ.11,994 செலவிட்டுள்ளனர். நகர்ப்புறங்களில், மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் சராசரியாக ரூ.13,578 செலவிட்டுள்ளனர்.
கடந்த 2011-12 தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் கிட்டத்தட்ட 40% கிராமப்புற மக்களும், 26%க்கும் அதிகமான நகர்ப்புற மக்களும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.
மருத்துவமனை செலவுகளுக்கு நிதி அளிப்பதற்காக, மக்கள் பெரும்பாலும் தங்கள் சேமிப்பில் இருந்து செலவிடுகிறார்கள், சிலர் கடன் வாங்குகிறார்கள், சிலர் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து நிதி உதவியை பெறுகிறார்கள்.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.