நொய்டா: உத்தரப்பிரதேசத்தில் பிறக்கும் ஒவ்வொரு 1,000 குழந்தைகளில் 60 பேர், கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானில் உள்ளதைப் போலவே, அவர்களது ஐந்தாவது பிறந்தநாளுக்கு முன்பே இறந்துவிடுகின்ரனர் என்று, சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS- 5) மற்றும் உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5 இன் படி, இந்தியா முழுவதும், ஒவ்வொரு 1,000 குழந்தைகளில், 42 பேர்ம் ஐந்து வயதிற்குள் இறக்கின்றனர். இந்த விகிதம் ஆப்கானிஸ்தான் (60.3/1,000) மற்றும் பாகிஸ்தான் (67.2/1,000) ஆகிய தெற்காசியாவில் உள்ள நாடுகளை ஒத்திருக்க்கிறது, அங்கு குழந்தை இறப்பு விகிதம் –ஐந்து வயதுக்கு முன் 1,000 குழந்தை இறப்புகளின் எண்ணிக்கை– இந்தியாவை விட அதிகமாக உள்ளது.

ஒட்டு மொத்த மாநிலங்களிலும் உத்தரப்பிரதேசம், பீகார் (ஒவ்வொரு 1,000 பிறப்புகளுக்கு 56.4 இறப்புகள்) மற்றும் சத்தீஸ்கர் (50.4/1,000) ஆகியவை ஐந்து வயதுக்குட்பட்ட இறப்பு விகிதத்தில் அதிக அளவில் உள்ளன. புதுச்சேரி (3.9/1,000), கோவா (10.6/1,000) மற்றும் கேரளா (5.6/1,000) ஆகியவை குறைந்தபட்ச விகிதம் கொண்டுள்ளதாக, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு - 5, தரவுக் காட்சி காட்டுகிறது.

உலக வங்கியின் கூற்றுப்படி, அதிக குழந்தை இறப்பு விகிதங்களைக் கொண்ட 10 இந்திய மாநிலங்கள், ஆப்கானிஸ்தானுடனும், கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள நாடுகளுடனும் ஒப்பிடப்படுகின்றன. இந்தியாவில் உள்ள 34 இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 16 குழந்தைகள் இறப்பு விகிதம் சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டிற்கான தரவுகள் கிடைக்கப்பெறும் 194 நாடுகளில், 27 நாடுகளில் மட்டுமே, இந்திய மாநிலங்களில் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.


வளர்ச்சி குன்றிய நிலை (குழந்தையின் வயதைவிட வளர்ச்சி குறைவாக இருந்தால்) மற்றும் எடைகுறைபாடு (குழந்தையின் எடை, உயரத்திற்கேற்க இல்லாமல் இருந்தால்) குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவைக் குறிக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, ஊட்டச்சத்து குறைபாடு என்பது, மற்ற காரணிகளுடன், அதிக இறப்புடன் தொடர்பு உடையது. சமீபத்திய சுகாதார ஆய்வின் அடிப்படையில், இந்தியாவில் குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தின் நிலையைப் பார்க்கிறோம்.

இந்தியக் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சி குன்றியது

கடந்த 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடையில் நடத்தப்பட்ட சமீபத்திய சுகாதாரக் கணக்கெடுப்பில், ஐந்து வயதுக்குட்பட்ட இந்தியக் குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் (35.5%) வளர்ச்சி குன்றியுள்ளனர் - ஒரு குழந்தையின் உயரம் அவர்களின் வயது அடிப்படையிலான குழந்தைகளின் சராசரி உயரத்தை விட இரண்டு நிலையான விலகல்களுக்கு மேல் இருப்பதை, உலக சுகாதார அமைப்பின் (WHO) தரநிலைகள் இவ்வாறு வரையறை செய்கின்றன.

தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு - 5 இன் படி, பெரும்பாலான குழந்தைகள், மொத்த குழந்தைகளில் 46.5% பேர், 2019-2021 ஆம் ஆண்டில் மேகாலயாவில் வளர்ச்சி குன்றியுள்ளனர், பீகாரில் 43% பேர் உள்ளனர்.


இந்தியாவில் கடுமையான எடைகுறைபாடு அதிகரிப்பு

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு குழந்தைகள் (19.3%) எடை குறைபாட்டில் உள்ளனர் - அதாவது, உலக சுகாதார அமைப்பின் தரநிலைகளின் அடிப்படையில், அவர்களின் உயரத்தில் உள்ள குழந்தைகளின் சராசரி உடல் எடையை விட, இரண்டு நிலையான விலகல்களுக்கு மேல் எடை குறைவு இருந்தது.

2015-16 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுக்கு இடையில், எடை குறைபாடு உள்ள குழந்தைகளின் விகிதம் குறைந்திருந்தாலும், அதே காலகட்டத்தில் கடுமையாக எடை குறைபாடுள்ள குழந்தைகளின் விகிதம் சற்று அதிகரித்துள்ளது. கடுமையான எடைகுறைபாடு என்பது ஒரு குழந்தையின் எடை, அவர்களின் உயரத்தின் குழந்தைகளின் சராசரி எடையை விட மூன்று நிலையான விலகல்கள் குறைவாக இருக்கும் நிலை என்பதாகும்.

இந்தியாவில், 2015-16ல் 7.5% ஆக இருந்த கடுமையான எடை குறைபாடு, 2019-20ல் 7.7% ஆக உயர்ந்துள்ளது. அதே ஆண்டில், 2015-16 இல் 21% ஆக இருந்த 19% குழந்தைகள் எடை குறைபாட்டால் பாதிக்கப்பட்டனர், மேலும் 2015-16 இல் 38.4% உடன் ஒப்பிடும்போது, 35.5% வளர்ச்சி குன்றியது.


மகாராஷ்டிரா (25.6%) மற்றும் குஜராத்தில் (25.1%) நாட்டிலேயே குழந்தைகளை அதிகம் எடை குறைபாடுடன் உள்ளனர்.

"இந்தியாவில் பொருளாதார ரீதியாக முன்னேறிய சில மாவட்டங்களில் வளர்ச்சி குன்றிய மற்றும் எடை குறைந்த குழந்தைகளின் விகிதம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன" என்று, சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பூஜா மர்வாஹா கூறினார். "சமூக மற்றும் மனித மேம்பாட்டின் மூலம் திறம்பட ஆதரிக்கப்படாவிட்டால், குழந்தைகளுக்கான சிறந்த ஊட்டச்சத்து விளைவுகளை உறுதி செய்வதில் பொருளாதார வளர்ச்சி மட்டுமே ஒரே அளவுகோலாக இருக்காது என்ற உண்மையை இது எடுத்துக்காட்டுகிறது" என்றார்.

ஏன் நம்மிடம் பல குட்டையான மற்றும் எடை குறைந்த குழந்தைகள் உள்ளனர்

வளர்ச்சி குன்றிய மற்றும் எடை குறைவு விகிதங்கள் மக்கள்தொகையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக இருப்பதைக் குறிக்கும் குறிகாட்டிகளாகும், இருப்பினும் அவை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகள் அல்ல என்று, இந்தியாவின் பொது சுகாதார அறக்கட்டளையின் பொது சுகாதார ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா கண்டேல்வால் தெரிவித்தார். "மூன்று வகையான காரணிகள் ஊட்டச்சத்தை பாதிக்கின்றன; உணவு மற்றும் உணவைக் கையாளும் நேரடியானவை; தாயின் கல்வி, அவரது மனநலம், வருமான நிலைகள், கழுவுதல் (தண்ணீர், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம்), மாசுபாடு, விவசாயம் போன்ற மறைமுகமானவை; மற்றும் நிர்வாகம், தலைமைத்துவம், அரசின் திறன் (துன்ப காலங்களில் ஓய்வு அளிக்க) மற்றும் அரசின் கொள்கைகள் போன்ற ஒரு செயல்படுத்தும் சூழல்" என்றார் அவர்.

குழந்தை வளர்ச்சி, உணவுத் தரம் மற்றும் அறிவுக்கான அணுகல் ஆகியவை குழந்தை ஆரோக்கியத்தின் முக்கிய குறிகாட்டிகள் என்று, குழந்தை ஆரோக்கியத்திற்கான குறிகாட்டிகளின் இந்த சுருக்கக் குறிப்பு தெரிவிக்கிறது.

"நமது சமூக பாதுகாப்பு வலைகள் தானியங்கள் அல்லது உணவுகள் அல்லது சூடான சமைத்த உணவை வழங்குகின்றன என்பதை உறுதி செய்வதன் மூலம் (மதிய உணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள், பொது விநியோக அமைப்பு மூலம்), பல வகையான ஊட்டச்சத்து குறைபாட்டின் சிக்கலை நாம் தீர்க்கப் போவதில்லை" என்று கண்டேல்வால் கூறினார்.

கூடுதலாக, கோவிட்-19 சுகாதார சேவைகளை சீர்குலைத்திருக்கலாம். "சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற முன்களப் பணியாளர்கள் வீட்டுக்கு வீடு கோவிட்-19 கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், இது ஆலோசனை சேவைகளை வழங்குவதில் அவர்களின் பங்குகளை திசைதிருப்பியது" என்று, மர்வாஹா கூறினார். உதாரணமாக, அவர் கூறுகையில், குழந்தை மற்றும் சிறு குழந்தைகளுக்கு உணவளித்தல், ஜனனி ஷிஷு சுரக்ஷா காரியக்ரம் (ஜே.எஸ்.எஸ்.கே., கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 30 நாட்களுக்குள் பிறந்த குழந்தைகளுக்கு இலவச மற்றும் பணமில்லா சேவைகளை வழங்கும் அரசின் முயற்சி) நோய்த்தடுப்பு, வைட்டமின்-ஏ நிர்வாகம், வழக்கமான குழந்தை பருவ நோய்களைத் தடுத்தல் மற்றும் நிர்வகித்தல், மற்றும் இரத்த சோகை மற்றும் குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிர்வகித்தல் ஆகியவற்றின் கீழ் அவர்களின் பாத்திரங்களை நிறைவேற்றுவது குறைவு.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.