நகரங்களின் வளர்ச்சியுடன், வீடு கட்டும் திட்டங்கள் மற்றும் சாலைகள் மற்றும் ரயில்வே போன்ற நகரங்களுக்கு இடையேயான உள்கட்டமைப்பு போன்றவை, கட்டுமானத் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்தத் துறையில் வேலைவாய்ப்பு 2004 மற்றும் 2011 ஆம் ஆண்டுக்கு இடையில் கிட்டத்தட்ட இரு மடங்கானது. தற்போது, ​​கட்டுமானத் துறை, நாட்டின் விவசாயம் சாராத வேலைகளில் 21% பங்களிப்பை கொண்டுள்ளது.

முக்கியமாக, கட்டுமானத் துறையில் மிகப்பெரிய அளவில் தற்காலிக தொழிலாளர்கள் உள்ளனர்-கட்டுமானத்தில் பணிபுரிபவர்களில் சுமார் 84% பேர் சாதாரண தொழிலாளர்கள் தான். எனவே, அவர்களுக்கான சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவது, அவசர முன்னுரிமையாக இருக்க வேண்டும். மேலும், உற்பத்தி தவிர, கட்டுமானம் விவசாய வேலைகளை விட்டு வெளியேறும் தொழிலாளர்களின் வெளியேற்றத்தை உறிஞ்சி, சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவாக்க மற்றும் திறம்பட இலக்கு வைக்கத் தூண்டுகிறது.

இத்துறை பொதுவாக குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறது மற்றும் ஜார்க்கண்ட் (22%), ஒடிசா (20%), கேரளா (20%), பீகார் (17%) மற்றும் ஜம்மு-காஷ்மீர் (16%) ஆகிய மாநிலங்களில் அதிக பணியாளர்களைக் கொண்டுள்ளது. இவற்றில், பெரும்பாலான வேலைகள், கட்டிடங்களின் கட்டுமானத்தில் உள்ளன (9%) மற்றவை சிவில் இன்ஜினியரிங், தளம் தயாரித்தல் மற்றும் கட்டிடங்களுக்கான முடித்த நடவடிக்கைகள். இந்த புள்ளிவிவரங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கியது, ஆனால் இந்த பெரிய வேலைவாய்ப்பு கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக PLFS தனித்தனியாக ஆவணப்படுத்தவோ அல்லது அவர்களின் எண்ணிக்கையை வரையறுக்கவோ இல்லை. மேலும், புலம்பெயர்ந்த மக்களை, குறிப்பாக கட்டுமான தளங்களில் வசிக்கும் மக்கள் எண்ணிக்கையை குறைத்து மதிப்பிடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

கடைசியாக எடுக்கப்பட்ட, வேலைவாய்ப்பு, வேலையின்மை மற்றும் இடம்பெயர்வு தேசிய மாதிரி கணக்கெடுப்பின் 64-வது சுற்றின் அடிப்படையில், ஜூலை 2007 – ஜூன் 2008, ஒரு சமீபத்திய ஆய்வு, 50 முதல் 60% கட்டுமானத் தொழிலாளர்கள் குறுகிய கால வட்ட புலம்பெயர்ந்தோர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் மாநிலங்களுக்கு இடையேயும் மாநிலத்திற்குள்ளும் அடங்கும். கட்டுமானத் தொழிலாளர்களில் சுமார் 30 முதல் 40% பேர், குடியேறுபவர்கள் அல்லது புலம் பெயராதவர்கள், 10% பேர் நீண்டகால குடியேறியவர்கள்.

தரவு காட்சிப்படுத்தலுக்கு உதவிய IIHS நகர்ப்புற தகவல் ஆய்வகத்தை சேர்ந்த, டிவிஜ் சின்ஹா பங்களிப்பை, ஆசிரியர் நன்றி கூறுகிறார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை
respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.