மும்பை: இந்தியாவின் சிறைகளில் உள்ள நான்கு கைதிகளில் மூன்று பேர், விசாரணைக்கு உட்பட்டு கைதிகள் என்று, சமீபத்தில் கிடைக்கப்பெற்ற 2020 ஆம் ஆண்டிற்கான அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. குறைந்தபட்சம் 1995 ஆம் ஆண்டுக்கு பிறகு, இதுபோன்ற தரவுகள் கிடைக்கப்பெறும் ஆரம்ப ஆண்டில் இருந்து சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகளின் அதிகபட்ச பங்கு இதுவாகும். சிறைக் கைதிகளின் மொத்த எண்ணிக்கை, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 1% அதிகரித்தாலும், விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 12% அதிகரித்துள்ளது என்று சிறைப் புள்ளியியல் இந்தியா- 2020 அறிக்கை கூறுகிறது. விசாரணைக் கைதிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், நிரம்பி வழியும் மாவட்ட சிறைகளில் இருந்தனர்: சராசரியாக ஒரு மாவட்ட சிறை, கொள்ளளவை விட 136% அதிக விகிதத்தில் கைதிகளை கொண்டு இயங்குகிறது.

கடந்த 2019 உடன் ஒப்பிடும்போது, ​​2020 ஆம் ஆண்டில் விசாரணைக்கு உட்பட்டவர்களின் வெளியீடு, 19.6% குறைந்துள்ளது. சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கான சில காரணங்களில் நிரபராதி, ஜாமீனில் விடுதலை, மேல்முறையீட்டில் விடுதலை, இடமாற்றம், நாடு கடத்தல் மற்றும் வருட நிகழ்வுகளின் போது பிற விடுதலை ஆகியன அடங்கும். விசாரணைக் கைதிகள் மத்தியில், பரோல் மற்றும் ஜாமீன் விதிகள் குறித்து விழிப்புணர்வு இல்லை என்று, இந்தியா ஸ்பெண்ட் செப்டம்பர் 2020 கட்டுரையில் தெரிவித்துள்ளது. உதாரணமாக, 2020 இல், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Cr.P.C.) 436A பிரிவின் கீழ் – குற்றம் சாட்டப்பட்ட குற்றங்களுக்காக பாதிக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வரும் விசாரணை கைதிகளை விடுவிக்க இது வழிவகை செய்கிறது – முன்கூட்டியே விடுதலை செய்யத் தகுதியுடைய கைதிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே உண்மையில் விடுவிக்கப்பட்டனர்.

தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த கைதிகளின் பங்கு சற்றும் குறையவில்லை. 2020 ஆம் ஆண்டில், மூன்று விசாரணைக் கைதிகளில் இருவர் பட்டியல் சாதி (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) அல்லது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) யைச் சேர்ந்தவர்கள். இந்த சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோத தடுப்புக்காவல், பொய்யான வாக்குமூல அறிக்கைகள் மற்றும் கைதுகளுக்கு ஆளாக நேரிடும், மேலும் அவர்களுக்கு ஜாமீன் பெற எந்த வழியும் இல்லை என்று, செப்டம்பர் 2020 அறிக்கை கண்டறிந்துள்ளது.

விசாரணைக் கைதிகளின் பங்கு உயர்கிறது

கடந்த 2020 ஆம் ஆண்டில், சிறைகளில் உள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 22% குறைந்துள்ளது, அதே நேரத்தில் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை 12% அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, விசாரணைக் கைதிகள் இப்போது 2020 இல் 76% கைதிகளாக உள்ளனர், இது 2019 இல் 69% ஆக இருந்தது. என்சிஆர்பி அறிக்கைகள் கிடைக்கும் 1998 ஆம் ஆண்டு முதல், விசாரணைக் கைதிகளின் பங்கு 75% ஐத் தாண்டவில்லை.

10,000 கைதிகளுக்கு மேல் உள்ள மாநிலங்களில், பஞ்சாப் (19 சதவீத புள்ளிகள்) மற்றும் ஹரியானாவில் (17 சதவீத புள்ளிகள்) விசாரணைக் கைதிகளின் பங்கு அதிகமாக அதிகரித்துள்ளது.

மேலும், விசாரணைக்குட்பட்ட 4% பெண்களின் விகிதம், 2019 ஆம் ஆண்டில் 13,550 என்பதில் இருந்து, 12% (15,167) என்று அதிகரித்துள்ளது.


டெல்லி, ஜம்மு & காஷ்மீரில் உள்ள கைதிகளில் 90% விசாரணை கைதிகள்

டெல்லி மற்றும் ஜம்மு & காஷ்மீர் மொத்த சிறைக் கைதிகளில், விசாரணைக் கைதிகளின் அதிகபட்ச பங்கைப் பதிவு செய்துள்ளன, அதைத் தொடர்ந்து பீகார், பஞ்சாப் மற்றும் ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா உள்ளன. இவற்றில், டெல்லி, ஜம்மு & காஷ்மீர், பீகார் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை 100% க்கும் அதிகமான சிறை கொள்ளளவு வீதத்தைப் பதிவு செய்துள்ளன.


3 விசாரணைக் கைதிகளில் 2 பேர் பட்டியல் சாதிக் குழுவினர்

விசாரணைக் கைதிகளில் மூன்றில் இருவர் எஸ்.சி., எஸ்டி அல்லது ஓபிசி சாதிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்பதை தரவுகள் காட்டுகின்றன. ஐந்து விசாரணைக் கைதிகளில் இருவர், பத்தாம் வகுப்புக்குக் கீழே படித்தவர்கள் மற்றும் நான்கில் ஒரு பகுதியினர் படிப்பறிவில்லாதவர்கள். சாதிய தப்பெண்ணங்கள் மற்றும் சில சமூகங்களின் அதிகப்படியான காவல் ஆகியன, சிறைகளில் விளிம்புநிலை சாதிக் குழுக்களின் குறிப்பிடத்தக்க இருப்புக்குப் பின்னால் உள்ள முக்கியமான சமூகக் காரணிகளாகும் என்று, எங்களது செப்டம்பர்- 2020 அறிக்கை கண்டறிந்துள்ளது.


பிரிவு 436A இன் கீழ் விசாரணைக் கைதிகளின் விடுதலை

கடந்த 2020 ஆம் ஆண்டில், 1,291 விசாரணைக் கைதிகள் ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டப்பட்ட குற்றங்களுக்காக சிறைத்தண்டனையில் பாதிக்கு மேல் சிறையில் இருந்தனர். குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) பிரிவு 436A தனிப்பட்ட எழுத்துபூர்வ பிராமணம் அடிப்படையில் விடுவிக்க தகுதியுடையவர்களை விடுவிக்க அனுமதிக்கிறது. இருப்பினும், 2020ஆம் ஆண்டில் 442 கைதிகள் (34%) மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.


பிணையில் விடுவிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கையில் 18% குறைந்துள்ளது, அதாவது 2019 இல் 1.5 மில்லியனில் இருந்து 1.2 மில்லியனாக இருந்தது.

விசாரணைக் கைதிகளில் 10 பேரில் 3 பேர் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைப்பு

கடந்த 2020ஆம் ஆண்டில் விசாரணைக்குட்பட்டவர்களில் கிட்டத்தட்ட 2% பேர், இது 2019 இல் 1.5% என்பதில் இருந்து அதிகரிப்பு, 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் கழித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக, அனைத்து விசாரணைக் கைதிகளில் 29% பேர் ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் கழித்துள்ளனர்.


மேலும், 10,000 க்கும் மேற்பட்ட கைதிகளைக் கொண்ட மாநிலங்களில், தமிழ்நாடு, பீகார் மற்றும் பஞ்சாப் ஆகியன மட்டுமே 80% க்கும் அதிகமான விசாரணைக் கைதிகள் ஒரு வருடத்திற்கும் குறைவான சிறையில் கழித்துள்ளனர். மகாராஷ்டிராவில் ஒரு வருடத்திற்கும் மேலாக (40%), குஜராத்தில் (36%) சிறையில் அடைக்கப்பட்டவர்களின் அதிகபட்ச சதவீதம் இருந்தது.


விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் பாதி பேர் 18 முதல், 30 வயதுடையவர்கள்

விசாரணைக் கைதிகளில், 49% பேர், 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள், ஆனால் குற்றவாளிகளில், 29% பேர் மட்டுமே இந்த வயதிற்குட்பட்டவர்கள். மேலும், 50% குற்றவாளிகள், 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள். 10,000 க்கும் மேற்பட்ட கைதிகளைக் கொண்ட பெரிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், 30 வயதுக்குட்பட்ட (64.3%) விசாரணைக் கைதிகளின் அதிக மக்கள்தொகைப் பங்கை டெல்லி கொண்டுள்ளது, ஆனால் 30 வயதுக்குட்பட்ட குற்றவாளிகளில் 33% மட்டுமே உள்ளனர். அதைத் தொடர்ந்து சத்தீஸ்கர் (61.5%) மற்றும் கர்நாடகா (57.9%) உள்ளன.


உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.