பெங்களூரு: ஸ்வச் பாரத் மிஷன் (எஸ்.பி.எம் - SBM ) திட்டத்தின் கீழ் அனைத்து கிராமப்புற குடும்பங்களுக்கும் கழிப்பறைகள் கட்டப்பட்டு, திறந்தவெளியில் மலம் கழிக்கும் முறை அகற்றப்பட்டதாக அரசு அறிவித்த ஒரு வருடத்திற்கும் மேலான நிலையில், தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 2019 (NFHS-5 என்.எஃப்.எச்.எஸ் -5) மற்றும் ஸ்வச் பாரத் மிஷன் இணையதள தரவுகளுக்கு இடையிலான வேறுபாடுகளை, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு காட்டுகிறது.

அக்டோபர் 2, 2019 அன்று, பிரதமர் நரேந்திர மோடி, ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் 699 மாவட்டங்களும், 599,963 கிராமங்களும் "திறந்தவெளியில் மலம் கழிக்கும் முறையில் இருந்து விடுபட்டதாக" தங்களை அறிவித்துக் கொண்டதாக கூறினார். அக்டோபர் 2014 இல் தொடங்கப்பட்ட, முதன்மை கிராமப்புற சுகாதார திட்டம், ஐந்து ஆண்டுகளில் துப்புரவு பாதுகாப்பினை, 39% இல் இருந்து, 100% வரை அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு கூறியது.

ஆனால், வீட்டு அளவிலான மக்கள்தொகை கணக்கெடுப்பான, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -5 (NFHS-5, 2019-20), மற்றும் சுகாதார கணக்கெடுப்பானது, என்.எப்.எச்.எஸ்.-5 மாநில அறிக்கைகள் கிடைக்கக்கூடிய 18 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில், கிராமப்புற குடும்பங்கள் ஐந்து மாநிலங்களில் (கேரளா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம்) 100% கழிப்பறை வசதி இருந்தது. பீகார், குஜராத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் கிராமப்புறங்களில் 80% க்கும் குறைவான கழிப்பறை வசதி இருந்தது.

ஆராய்ச்சியாளர்கள் இந்தியாஸ்பெண்ட் உடன் பேசுகையில், எஸ்.பி.எம் போர்ட்டலின் கழிப்பறை பாதுகாப்பு தரவு மற்றும் என்.எஃப்.எச்.எஸ் தரவு வேறுபடுகின்றன, ஏனெனில் முந்தையவை கணக்கீட்டாளர்களிடம் சொல்வதை அடிப்படையாகக் கொண்டவை, பிந்தையது, அரசு அதிகாரிகளால் நேரடியாக சரிபார்க்கப்படுகின்றன. என்.எப்.எச்.எஸ். கணக்கெடுப்பு வேறுபட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளது, அங்கு ஒரு தகுதி வாய்ந்த வீட்டு உறுப்பினரிடம் மட்டும் துப்புரவு கேள்விகள் கேட்கப்படுகின்றன. இது தவறான புள்ளி விவரங்களுக்கு வழிவகுக்கும், ஏனெனில் ஒவ்வொரு வீட்டு உறுப்பினரும் அவர்களின் துப்புரவு நடைமுறைகள் குறித்து தனித்தனியாக கேள்வி கேட்கப்படுவதில்லை.

எட்டு சமூக-பொருளாதார பின்தங்கிய மாநிலங்களில்-- பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் உத்தரபிரதேசம்-- என்.எஃப்.எச்.எஸ் -5 பீகாரில் மட்டுமே கிடைக்கிறது. என்.எஃப்.எச்.எஸ் -5 மற்றும் என்.பி.எம். போர்டல் தரவுகளுக்கிடையேயான மிகப்பெரிய முரண்பாடு இந்த மாநிலத்துக்கானது - 57% கிராமப்புற வீடுகளில் கழிப்பறை வசதி இருப்பதாக என்.எஃப்.எச்.எஸ் -5 தெரிவிக்கிறது. எஸ்.பி.எம் போர்டல் தரவு அறிக்கை 100% அணுகல் என்கிறது. உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிக்கு பாதுகாப்பான துப்புரவு இல்லாதது மற்றும் 494 மில்லியன் மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்க வேண்டும் என்று, ஜூலை 2021 உலக சுகாதார அமைப்பு / யுனிசெஃப் நீர் வழங்கல், சுகாதாரம் மற்றும் சுகாதாரம் (JMP) அறிக்கைக்கான கூட்டு கண்காணிப்பு திட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்தியா 2015 முதல், திறந்த வெளியில் மலம் கழிப்பதற்கான முழுமையான எண்ணிக்கைகளின் அடிப்படையில் "மிகப்பெரிய சரிவை" கண்டது.

கழிப்பறை வறை பயன்பாட்டின் மூலம், திறந்த மலம் கழிப்பதை நீக்குவது முக்கியம், ஏனென்றால் திறந்தவெளி மலம் கழித்தல் குழந்தைகளின் வளர்ச்சிக்குறைபாடு மற்றும் தனியார் கழிப்பறைகளுக்கு அணுகல் இல்லாத பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளின் அபாயங்களை அதிகரிப்பதாகக் காட்டப்பட்டுள்ளது, மேலும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்து தலையீடுகள் பலவீனமடைகின்றன. "திறந்த வெளியில் மலம் கழிக்கும் பெண்கள் சராசரியாக, கிராமங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் வசிக்கும் பெண்களை விட மெலிந்தவர்கள் மற்றும் அதிகமான மக்கள் கழிவறைகளைப் பயன்படுத்துகிறார்கள்,"என்று, இந்தியாஸ்பெண்டுக்கு 2017 ஆம் ஆண்டு அளித்த பேட்டியில், Research Institute for Compassionate Economics (r.i.c.e.) ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இணை நிறுவனர்களான டயான் கோஃபி மற்றும் டீன் ஸ்பியர்ஸ் கூறினார்.

கணக்கெடுப்பு வேறுபாடுகள்

2019 ஆம் ஆண்டு வரை, ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்திற்கு வெளியிடப்பட்ட 62,146 கோடி ரூபாயில் 91% மாநிலங்கள் மையத்தால் செலவிட்டன, செலவினங்களின் மிகப்பெரிய பங்கு, பல ஆண்டுகளாக, தனிப்பட்ட வீட்டு கழிவறைகளுக்காகவே இருந்தது என்று, ஒரு வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆராய்ச்சி குழுவான, அக்கவுண்டபிளிட்டி இனிஷியேடிவ், பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

திருத்தப்பட்ட 2017 ஸ்வச் பாரத் மிஷன் வழிகாட்டுதல்கள், துப்புரவு என்பது ஒரு மாநிலப் பொருள் என்பதைக் குறிப்பிடுகின்றன, எனவே மாநிலங்கள் அத்தகைய சரிபார்ப்பிற்கான வழிமுறைகளை உருவாக்குவதன் மூலம் தங்கள் திறந்த மலம் கழிக்கும் நிலையை சரிபார்க்க வேண்டும். கிராம பஞ்சாயத்து [தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றம்] திறந்தவெளி மலம் கழித்தலில் இருந்து விடுபடும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறது, அதைத் தொடர்ந்து குறுக்கு சரிபார்ப்புக்காக மாவட்ட மற்றும் மாநில மட்டங்களில் சுற்றுகள் சரிபார்க்கப்படுகின்றன.

கிராம அளவிலான திறந்தவெளி கழிப்பிடங்கள் சரிபார்ப்பு பட்டியல்


Source: SBM-G Guideline (October 2017)

ஆனால் கிராம அளவில், திறந்தவெளி மலம் கழிப்பில் இருந்து மீண்டதாக அறிவிப்பு என்பது வெளிப்படையான மலம் கழித்தல் அகற்றப்பட்டதாக அர்த்தமல்ல.கழிப்பறை வைத்துள்ள மூன்றில் ஒருவர் திறந்த வெளியில் மலம் கழிக்கும் வழக்கத்தை கொண்டிருந்ததாக, இந்தியாஸ்பெண்ட் ஆகஸ்ட் 2018 கட்டுரை தெரிவித்துள்ளது.

ஸ்வச் பாரத் மிஷன் திட்டம், கழிப்பறை அணுகலை நேரடியாக சரிபார்க்க வேண்டும் மற்றும் கிராம பஞ்சாயத்து அளவில் திறந்தவெளி மலம் கழித்தல் நிறுத்தப்பட்டுள்ளதா எனவும், அதேபோல், மாவட்ட மற்றும் மாநில அளவில் பரிசோதிக்கப்பட வேண்டும்.

என்.எப்.எச்.எஸ். செயல்முறையோ வேறுபட்டது. மூன்று கேள்விகள் உள்ளன - ஆண்களுக்கும், பெண்களுக்கும், வீடுகளுக்கும் ஆனது. துப்புரவு கேள்விகள் (40 முதல் 46 வரை) வீட்டு உள்ள மற்றும் வீட்டின் தகுதியான உறுப்பினரிடம் கேட்கப்படுகின்றன. அவர்கள் 15-49 வயதுடைய பெண்கள், 15 முதல் 54 வயதுடைய ஆண்ன்எகள் மற்றும் ஒரே இரவில் பார்வையாளர்களாக இருக்கலாம் என்று என்.எப்.எச்.எஸ்-4 (2015-16) நேர்காணலுக்கான கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழிவறை அணுகல் மற்றும் சுகாதாரம் குறித்த என்.எப்.எச்.எஸ்- 5 வீட்டு கேள்விகள்


Source: NFHS-5 Household Questionnaire

ஸ்வச் பாரத் மிஷன் திட்ட போர்ட்டலில், மாநில மற்றும் மாவட்ட அளவிலான அரசு செயல்பாட்டாளர்கள் நிர்வாகத் தரவை [ஒவ்வொரு கழிப்பறைக்கான கோரிக்கை எழுந்த இடம், மற்றும் கட்டப்பட்ட இடம் சரிபார்த்தல்] நிரப்புகையில், என்.எஃப்.எச்.எஸ் -5, ஒரு வீட்டு அளவிலான மாதிரி கணக்கெடுப்பு ஆகும் என்று, அக்கவுண்டபிளிட்டி இனிஷியேடிவ் அமைப்பின், வழிநடத்தும் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் அவானி கபூர் கூறினார். "ஒருவருக்கு எப்போதும் இரு ஆதாரங்களும் தேவை - நிர்வாக தரவு நிலையை பதிவு செய்யும் அதே வேளையில், பொறுப்பேற்பு மற்றும் பதிவு செய்யப்பட்ட தகவல்களை சரிபார்க்க , சுதந்திரமான ஆய்வுகள் முக்கியமானவை" என்று அவர் கூறினார்.

மாநில வேறுபாடுகள்

கடந்த 2014 ஐ விட அதிகமான கிராமப்புற இந்தியர்கள், 2018இல் கழிப்பறை வைத்திருந்தனர்; இன்னும் 44% பேர் பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர். மலம் கழிப்பதற்கு எந்தவொரு துப்புரவு வசதியையும் பயன்படுத்தாத குடும்பங்களின் சதவீதத்தில் பீகார் சரிவை கண்டுள்ளது; என்.எஃப்.எச்.எஸ் -4 ஆய்வில் 67% என்றிருந்தது, என்.எஃப்.எச்.எஸ் -5 ஆம் ஆய்வில் 39% ஆனது, இது என்.எஃப்.எச்.எஸ் -5 தரவு கிடைக்கக்கூடிய மாநிலங்களில் இன்னும் மிக உயர்ந்ததாகும் . என்.எஃப்.எச்.எஸ் -5 க்கு கேரளா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் மட்டுமே நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கு கழிப்பறை அணுகல் 100% க்கு அருகில் உள்ளது. நான்கு மாநிலங்களில்-- பீகார், குஜராத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா--குறைந்தது 20% குடும்பங்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதைப் பயன்படுத்துகின்றன என்று என்.எஃப்.எச்.எஸ் -5 தெரிவித்துள்ளது.


சஆய்வுகள் மற்றும் ஸ்வச் பாரத் மிஷன் போர்டல் தரவு வேறுபடுவதற்கான காரணங்கள்

என்.எப்.எச்.எஸ். போன்ற கணக்கெடுப்புகளின் நோக்கம், சுகாதாரம் மற்றும் கழிப்பறை கட்டுமானம் அல்ல, மக்களின் ஆரோக்கியம் குறித்த விவரங்களை கண்டறிதல் ஆகும், அடையாளம் காண விரும்பாத குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையின் (DDWS - டி.டி.டபிள்யூ.எஸ்) மூத்த அதிகாரி, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். சொந்தமான, அல்லது பகிர்ந்து கொள்ளும் அல்லது பொது சமூக கழிப்பறைகள் மூலம் கழிப்பறைகளுக்கான அணுகலை உறுதி செய்வதே, அரசின் நோக்கம் என்று அவர்கள் கூறியதுடன், ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ், பீகார் "சுமார் 11,000 சமூக கழிப்பறைகளை" கட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார். ஸ்வச் பாரத் மிஷன் மற்றும் என்.எஃப்.எச்.எஸ் இடையேயான வேறுபாடுகளுக்கான சரியான காரணங்கள் தெளிவாக இல்லை, ஆனால் பதிலளித்தவர்கள் நிதி நலன்களுக்கான கணக்கெடுப்புகளில் கழிப்பறை கிடைப்பதை குறைத்து மதிப்பிடுவதால் அது இருக்கலாம் என்று அதிகாரி நம்பினார். ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தில் ஒவ்வொரு கழிப்பறையும் கட்டுவதற்கு அரசு ரூ .12,000 ஒதுக்குகிறது. மேலும், என்.எப்.எச்.எஸ். காலம் நீண்டது மற்றும் வேறுபட்டது மற்றும் சமூக கழிப்பறைகளுக்கான அணுகலை இது தனித்தனியாக கணக்கிடவில்லை [கேள்வித்தாளில் 45 இல்லை] என்று அவர்கள் கூறினர்.

2013 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஸ்வச் பாரத் திட்டத்திற்கான அடிப்படை கணக்கெடுப்பின்பட், கழிப்பறை கட்டுமானத்திற்கான அரசாங்கத்தின் இலக்கு இருந்தது என்று வி.ஆர். ராமன், கொள்கைத் தலைவர், வாட்டர் ஏட் இந்தியா தெரிவித்தார். என்.எப்.எச்.எஸ்-5 கடந்த 2019 இல் நடத்தப்பட்டது, அப்போது கழிப்பறை தேவை அதிகரித்திருக்கலாம், இதனால் 2013 அடிப்படையில் இருந்து விடப்பட்ட கணக்கெடுப்பில் உள்ள வீடுகளும் அடங்கும். எவ்வாறாயினும், "ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் 2.0-க்கான வழிகாட்டுதல்களும் திட்டங்களும் தொடர்ந்து யாரும் பின்வாங்காமல் இருப்பதை உறுதிசெய்வதன் அவசியத்தை பிரதிபலிக்கின்றன, இது மிகவும் சாதகமான அறிகுறியாகும்" என்று ராமன் மேலும் கூறினார். துப்புரவு குறித்த விரிவான தகவல்களை ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் சேகரிக்க முடியும், அதேசமயம் இது என்.எஃப்.எச்.எஸ் போன்ற ஒரு கணக்கெடுப்பு சேகரிக்கும் பல கேள்விகளில் ஒன்றாகும்.

பிரிக்கப்படாத பயன்பாட்டுத் தரவைப் பெறுவதற்கு, ஒரு வீட்டில் உள்ள அனைத்து நபர்களிடமும், பாலினம் மற்றும் வயது அடிப்படையில் தகவல்களைச் சேகரிக்க ஸ்வச் பாரத் மிஷன் திட்டம் தேர்வு செய்யலாம், மேலும் கழிப்பறை அணுகலின் அதிர்வெண் குறித்த கேள்விகளையும் கேட்கலாம்.

திறந்த மலம் கழித்தல் குறைத்து மதிப்பிடப்படுகிறது

துப்புரவு நடத்தை குறித்து கேட்கப்படும் கேள்விகளைப் பொறுத்து, நாட்டில் திறந்த வெளியில் மலம் கழிப்பதன் அளவு குறைத்து மதிப்பிடப்படலாம் என்று, பல்வேறு வகையான கணக்கெடுப்பு கேள்விகளைப் பார்த்த செப்டம்பர் 2019 ஆய்வு தெரிவித்தது. ஒரு வீட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் கேள்வி கேட்கப்படும்போது, ​​அனைத்து உறுப்பினர்களின் கழிப்பறை குறித்து, ஒரு உறுப்பினரிடம் புகார் தெரிவிக்காமல் மாறாக, திறந்த வெளியில் மலம் கழிப்பதற்கான பல நிகழ்வுகளை ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் கழிவறை உள்கட்டமைப்பை மதிப்பிடுவதற்கு கழிவறைகள் தனித்தனியான நபர்களுக்கு சொந்தமானவையா அல்லது அப்பகுதி பொது கழிப்பிடமா என்பது பற்றிய தகவல்களையும் ஆய்வுகள் சேகரிக்க வேண்டும், மேலும் திறந்த வெளியில் மலம் கழிப்பதை இன்னும் துல்லியமாக அளவிட வேண்டும் என்று, ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு தனிநபர் நிலை கேள்வி, திறந்த நிலை மலம் கழிக்கும் புள்ளி விவரங்களில் 20 சதவிகிதம் அதிகரிப்புக்கு வழிவகுத்தது, இது வீட்டு அளவில் உள்ள கேள்வி கேட்பதை ஒப்பிடும்போது, ​​வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒரே துப்புரவு நடத்தை உள்ளது என்று கருதப்படுகிறது என்று, R.I.C.E. ஆராய்ச்சியாளரும், ஆய்வு ஆசிரியர்களில் ஒருவருமான நிகில் ஸ்ரீவாஸ்தவ், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

மேலும், 92,010 வீடுகளை ஆய்வு செய்து என்.எப்.எச்.எஸ். ஐ விட அடிக்கடி நிகழ்கிறது என்று 2019-20 ஆண்டுக்கான தேசிய வருடாந்திர கிராமப்புற சுகாதார ஆய்வு (NARSS), சுற்று -3 கூறுகையில், 94% வீடுகளில் கழிப்பறை வசதி இருப்பதையும், 95% தனிநபர்கள் இதைப் பயன்படுத்துவதையும் குறிக்கிறது என்று, பெயர் வெளியிட விரும்பாத டி.டி.டபிள்யூ.எஸ் அதிகாரி கூறினார்.

ஸ்வச் பாரத் மிஷன் மற்றும் என்.எஃப்.எச்.எஸ் இரண்டும், வீட்டு அளவில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை அளவிடுகின்றன என்று, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் புள்ளி விவர நிபுணர் ஆஷிஷ் குப்தா, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். "ஸ்வச் பாரத் மிஷனில் ஒரு கழிப்பறை வைத்திருப்பது என்பது, அனைத்து வீட்டு உறுப்பினர்களுக்கும் ஒரு கழிப்பறையைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது என்று கருதுகிறது. வீட்டு அணுகலுக்கான ஸ்வச் பாரத் மிஷன் கூற்றுக்கள் மிக அதிகமாக உள்ளன என்பதை நாங்கள் இப்போது அறிவோம்" என்றார். ஒரு கணக்கெடுப்பு ஒவ்வொரு வீட்டு உறுப்பினரிடமோ அல்லது வீட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உறுப்பினரிடமோ கேள்விகளைக் கேட்கிறதா என்பதைப் பொருட்படுத்தாமல், கிராமப்புற இந்தியாவில் திறந்த வெளியில் மலம் கழிப்பதைக் குறைப்பதில் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன என்று, ஸ்ரீவாஸ்தவ் வலியுறுத்தினார்.

சவால்கள் உள்ளன

ஒரு திட்டம் அதன் இலக்கை அடைந்ததாக அறிவிக்கப்பட்டவுடன் வேகத்தைத் தக்கவைப்பது கடினம். ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் அதன் அளவு மற்றும் வேகத்தில் மிகவும் லட்சியமாக உள்ளது. மனித வளங்கள் தற்போதுள்ள வேலைகளில் இருந்து திசைதிருப்பப்பட்டு, நீண்ட காலத்திற்கு அதே வேகத்தைத் தொடரமுடியாது என்று கபூர் கூறினார்.

தொற்றுநோய் என்.எப்.எச்.எஸ்-5 க்கு தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் அடுத்த கட்டத்தின் வேகத்தை பராமரிப்பதில் சவால்களுக்கும் வழிவகுத்தது. "எந்தவிதமான கசிவும் சிக்கலும் இல்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்" என்று டி.டி.டபிள்யூ.எஸ் அதிகாரி கூறினார். துப்புரவு என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், மேலும் தொடர்ச்சியான தகவல்தொடர்பு மூலம் மட்டுமே, திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாமையை பராமரிக்க முடியும், மக்களை அவர்களின் நடத்தையை மாற்றிக்கொள்ளும் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.