2022 இல் பஞ்சாப் வயல் எரிப்பு சம்பவங்கள் 30% குறைவு: தரவு எவ்வளவு நம்பகமானது?
பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் செப்டம்பர் நடுப்பகுதியிலிருந்து நவம்பர் வரை, சாகுபடி முடிந்த விளை நிலங்களில் புற்களை எரிப்பது குறைந்துள்ளதாக, நாசா தரவுகள் காட்டினாலும், இந்த தரவுத்தொகுப்பில் பல வரம்புகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை: டிசம்பர் 5 ஆம் தேதி, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC), செம்டம்பர் 15 முதல், நவம்பர் 30 வரையிலான காலகட்டத்தில், பஞ்சாபில் திறந்தவெளியில் வயலில் புற்களை எரிக்கும் சம்பவங்களின் எண்ணிக்கையில் 30% குறைந்துள்ளதாகவும், ஹரியானாவில் 48% குறைந்துள்ளதாகவும் தெரிவித்தது. ஆனால், சாட்டிலைட் தரவு மட்டும் போதாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், தரவுத் துல்லியம் வானிலை சூழல், செயற்கைக்கோள் படங்களின் தீர்மானம் மற்றும் அந்தப் பகுதியில் இருந்து கண்காணிப்புகளை செயற்கைக்கோள் பதிவு செய்யும் காலம் ஆகியவற்றைப் பொறுத்தது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் பிற பங்குதாரர்களின் முயற்சிகள் பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள மாவட்டங்களில், 2021 இல் 78,550 ஆக இருந்த வயல்வெளி புல் எரிப்பு சம்பவங்கள் 2022 இல் 53,792 ஆக குறைந்துள்ளது என்று அரசாங்கம் கூறியது. 2022 ஆம் ஆண்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் விவசாயிகள் ஒரு பகுதியை மட்டுமே எரித்ததால், இந்த ஆண்டு காட்டுத்தீயை குறைத்து மதிப்பிடுவதற்கு வழிவகுத்திருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வயல்வெளி புற்களை எரிப்பது என்றால் என்ன, அதை ஏன் கண்காணிக்க வேண்டும்?
நெல் மற்றும் கோதுமை அறுவடைக்குப் பின், அடுத்த பயிர் விதைப்பதற்கு முன், மண்ணில் எஞ்சியிருக்கும் வைக்கோல், புற்கழிவுகளை எரிக்கும் செயல்முறையே, வயல்வெளி புற்கள் எரிப்பு ஆகும்.
புற்களை எரிப்பது கார்பன் டை ஆக்சைடு மற்றும் எரிக்கப்படாத புகை துகள்களை காற்றில் வெளியிடுகிறது, மேலும் மனித முடியை விட மெல்லிய துகள் மாசுபடுத்திகளை சேர்க்கிறது (PM 2.5 மற்றும் PM 10). தேசிய தலைநகரின் காற்று மாசுபாட்டிற்கு விவசாய நிலங்களின் தீயின் பங்களிப்பு, இருப்பினும் உள்ளூர் வானிலை தவிர, காற்றின் வேகம் மற்றும் திசையைப் பொறுத்து பரவலாக மாறுபடும் என்று டிசம்பர் 2021 இல் எங்கள் கட்டுரை குறிப்பிட்டது. அக்டோபர் மற்றும் நவம்பர் 2022 ஆம் ஆண்டின் பகுப்பாய்வின் அடிப்படையில், டெல்லியில் தினசரி PM 2.5 அளவுகளில் இந்த விளை நிலங்களது தீயின் அதிகபட்ச பங்களிப்பு நவம்பர் 3 அன்று 34% ஆகும். மோசமான காற்றின் தரத்திற்கு வழிவகுப்பதைத் தவிர, விளை நிலங்களின் தீ மண்ணின் ஆரோக்கியத்தையும் வளத்தையும் பாதிக்கிறது, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் பிற உயிரினங்களை அழிக்கிறது.
அறுவடைக்கு பின்னர் எஞ்சிய கழிவுகள் எரிப்பதைக் குறைக்க, விதைப்பு செயல்முறையின் போது (முன்பு இருந்த முறைகள்) பயன்படுத்துவதை ஊக்குவிக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் பயோமாஸ்-அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து காய்களின் தேவையை வரைபடமாக்குவது போன்றவை, விவசாயிகளுக்கு வழங்க முடியும். இருந்த போதிலும், சில விவசாயிகள், அடுத்த பயிரை விதைப்பதற்குத் தயாராவதற்கு ஒரு குறுகிய சாளரம் இருப்பதால், இந்தக் கழிவுகளை எரிப்பதன் மூலம் அப்புறப்படுத்த விரைவான மற்றும் சிக்கனமான முறையைத் தொடர்ந்து தேர்வு செய்கின்றனர்.
வயலில் எரிப்பு எவ்வாறு அளவிடப்படுகிறது?
காற்றின் தர மேலாண்மை ஆணையத்தின் நெறிமுறையின் அடிப்படையில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமானது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 மற்றும் நவம்பர் 30 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், நெற்பயிர் எரியும் பருவத்தில் திறந்த தீயைக் கண்காணிக்க நாசாவின் `வள மேலாண்மை அமைப்பு'(Fire Information for Resource Management System - FIRMS) எரிப்பு குறித்த தகவலை பயன்படுத்தியுள்ளது.
நாசாவின் காணக்கூடிய அகச்சிவப்பு இமேஜிங் ரேடியோமீட்டர் சூட் (VIIRS) மற்றும் மிதமான தெளிவுத்திறன் இமேஜிங் ஸ்பெக்ட்ரோரேடியோமீட்டர் (MODIS) ஆகியவற்றிலிருந்து தீயைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் தரவுகள் பெறப்படுகின்றன. சுவோமி நேஷனல் போலார்-ஆர்பிட்டிங் பார்ட்னர்ஷிப் (SNPP) செயற்கைக்கோளில் உள்ள VIIRS சென்சார் 375 மீட்டர் சதுர தெளிவுத்திறன் கொண்டது, அதாவது 375 x 375 சதுர மீட்டர் பரப்பளவில் - தோராயமாக 17 கிரிக்கெட் மைதானங்களின் அளவுள்ள தீயை துல்லியமாகக் கண்டறிய முடியும். இந்தப் பகுதிக்குள் ஒரு தீ விபத்து முழுப் பகுதிக்கும் காரணமாகக் கூறப்படும், அதேபோல், இந்தப் பகுதியில் ஏற்படும் பல தீ விபத்துகள் ஒரு தீயாகக் கணக்கிடப்படும். இதனுடன் ஒப்பிடுகையில், பஞ்சாபில் ஒரு விளை நிலத்தின் சராசரி அளவு 3.6 ஹெக்டேர் (36,000 சதுர மீ) ஆகும், அதாவது VIIRS SNPP செயற்கைக்கோளின் தெளிவுத்திறன் பஞ்சாபில் உள்ள சராசரி விளை நிலத்தைவிட நான்கு மடங்கு அதிகமாகும்.
மோடிஸ் அக்வா மற்றும் டெர்ரா இன்னும் அதிக தெளிவுத்திறன் கொண்ட 1 கி.மீ. இதனால், எரிக்கப்படும் விவசாய நிலத்தின் பரப்பளவை மதிப்பிடுவது கடினமாக உள்ளது மற்றும் இந்த விளை நிலங்கள் முழுவதும் ஏற்படும் தீயின் எண்ணிக்கையின் துல்லியத்தையும் கணக்கிடுகிறது.
2022 தீ வைப்பு எண்ணிக்கைகளில் மேகங்களின் தாக்கம், பகுதியளவு எரிப்பு
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், களத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் தெளிவான படத்தை வழங்க, செயற்கைக்கோள் தரவு மட்டும் போதுமானதாக இருக்காது என்று எனர்ஜி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் (CEEW) ஆராய்ச்சியாளர் எல்.எஸ். குறிஞ்சி இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "இந்த ஆண்டு விவசாய நிலங்களின் விவசாயக் கழிவுகளுக்கு தீ வைக்கும் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், உச்ச எரியும் காலத்தில் மூன்று மேகமூட்டமான நாட்களைக் கண்டது என்பது கவனிக்கத்தக்கது, இது செயற்கைக்கோள்கள் தீயைக் கண்டறிவதைத் தடுத்திருக்கலாம். எனவே, சரிவு அறிவிக்கப்பட்ட அளவுக்கு உச்சமானதாக இருக்காது" என்றார். மேலும், இந்த ஆண்டு பகுதியளவு எரியும் பாதிப்பு அதிகமாக இருந்தது, இங்கு விவசாயிகள் கழிவுக்குச்சியின் மேல் பகுதியை எரித்துவிட்டு, அடுத்த பயிரை விதைப்பதற்கு கழிவாக பயன்படுத்துகின்றனர். "இது முக்கியமாக செயல்பாட்டு செலவைக் குறைப்பதற்கும், இயந்திரங்களின் செயல்பாட்டை சீராக்குவதற்கும் பின்பற்றப்பட்டது. பகுதியளவு எரிப்பு நடைமுறையில் உள்ள பகுதியின் அளவை நாங்கள் உண்மையில் புரிந்து கொள்ளவில்லை, எனவே பரப்பளவு, விவசாய வயல்களில் தீ விபத்துகளின் எண்ணிக்கை மற்றும் கடந்த ஆண்டு ஏற்பட்ட பாதிப்பை மதிப்பிடுவது மற்றும் ஒப்பிடுவது கடினம். பகுதியளவு எரிவதை ஒரு இடைக்கால வெற்றியாகக் கருதக்கூடாது, மேலும் பூஜ்ஜியம் எரிப்பு மாற்றுகளை ஏற்றுக்கொள்வதை நோக்கி உந்துதல் இருக்க வேண்டும்" என்றார்.
சுவோமி நேஷனல் போலார்-ஆர்பிட்டிங் பார்ட்னர்ஷிப் (SNPP) செயற்கைக்கோள் ஒவ்வொரு 12 மணிநேரத்திற்கும் உலகளாவிய கவரேஜை வழங்குவதால், ஒரு பகுதி கண்காணிக்கப்படாத காலங்கள் உள்ளன. "ஒரு பெரிய பகுதியில் நீண்ட காலத்திற்கு தொடரும் காட்டுத் தீ போலல்லாமல், விவசாயத் தீ சிறிய சம்பவங்கள்" என்று, விண்ணில் இருந்து வேளாண் சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் மாதிரி ஆராய்ச்சிக்கான கூட்டமைப்பை (CREAMS) சேர்ந்த வினய் கே. சேகல் விளக்கினார். "இது ஒரு துறையில் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்கிறது மற்றும் 15-20 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை நீடிக்கும். எனவே, இந்த நேரத்தில் செயற்கைக்கோள் இல்லை என்றால், அந்த தீகள் எடுக்கப்படாது. "செயற்கைக்கோள்கள் எப்போது வருகின்றன என்பதை விவசாயிகள் சிலர் காலப்போக்கில் கற்றுக்கொண்டனர்" என்றும், செயற்கைக்கோள் எப்போது தலைக்கு மேல் வராது என்று அவர்கள் காலப்போக்கில் எரிந்துகொண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார். "தரநிலை அறிக்கைகளின்படி, இந்த குறிப்பிட்ட ஆண்டில் இது ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது" என்றார்.
இந்த வரம்புகளைச் சமாளிக்க, CREAMS குழு, தீ எரிப்பு தொடர்பான நிகழ்வுகளைக் கண்டறிய செயற்கைக்கோள் மூலம் வழங்கப்பட்ட வெப்ப தரவுத் தொகுப்புகளுடன் வேறுபட்ட ஆப்டிகல் தரவுத் தொகுப்பைப் பயன்படுத்துகிறது. "எரிந்த பகுதியை மதிப்பிடுவதற்கு பல தேதிகளில் அறுவடை செய்யப்பட்ட மற்றும் அறுவடை செய்யப்படாத எரிந்த வயல்களை வரைபடமாக்க 10 மீட்டர் ஒளியியல் தரவு தொகுப்பு தெளிவுத்திறனைப் பயன்படுத்துகிறோம்" என்று சேகல் கூறினார். இந்த பெரிய தரவு தொகுப்பின் பகுப்பாய்வு நேரத்தை எடுத்துக்கொள்ளும் மற்றும் இந்த நெல் பருவத்தில் விரைவில் கிடைக்கும்.
கோடை காலத்தில் விளைநிலங்கள் எரிப்பு
நெல் அறுவடைக்கு பின்பு உள்ள எச்சங்கள் எரிக்கப்படும் பருவம் செப்டம்பர் நடுப்பகுதியிலிருந்து நவம்பர் வரை இருக்கும், விவசாயிகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோதுமைப் பயிர்களின் எச்சங்ங்களை எரிப்பார்கள். NASA FIRMS அமைப்பின் தீ எரிப்பு தொடர்பான தரவுகள், விவசாயத் தீ மற்றும் காட்டுத் தீ உட்பட அதிக எண்ணிக்கையிலான திறந்தவெளித் தீ, ஆண்டின் கோடை மாதங்களில் ஏற்படுவதாகக் காட்டுகிறது. கோதுமை எச்சங்களை எரிப்பது நெல்லுக்கு இணையாக இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
சாதாரண நிலைகளில், மாசுபடுத்திகளுடன் சூடான காற்று, அதிக உயரத்திற்கு உயர்ந்து, சிதறடிக்கப்படுகிறது. ஆனால் குளிர்காலத்தில், வெப்ப தலைகீழ் மாசுபாடுகள் பூமியின் மேற்பரப்பிற்கு நெருக்கமாக சிக்க வைக்கிறது. "ஆனால் இந்த காலகட்டத்தில் [கோடை காலத்தில்] ஏற்படும் தீக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும், இல்லையென்றாலும், இந்த தீயை சமாளிப்பது எளிது".
விவசாயிகள் நெல் அறுவடை செய்த பின் அதன் எச்சங்களை எரிக்கத் தேர்ந்தெடுக்கும் காரணங்களில் ஒன்று, அடுத்த பயிர் நடவு செய்வதற்கு முன் குறுகிய சாளரம் என்று அவர் விளக்குகிறார். ஆனால், கோதுமை பயிரிடும் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் பிற மாநிலங்களில், விவசாயிகள் அடுத்த பயிரை நடுவதற்கு இரண்டு மாதங்களுக்கு மேல் உள்ளது. "மேலும், நெல் எச்சங்களைப் போலல்லாமல், கோதுமை எச்சங்களை விலங்குகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தலாம், குறிப்பாக மே மற்றும் ஜூன் மாதங்களில் உலர்த்திய மாதங்களில்" என்றார்.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.