புதுடெல்லி: கடந்த 2018 ஆம் ஆண்டில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில், உலகில் வெப்பம் தொடர்பான இறப்புகளில், இந்தியா இரண்டாவது இடத்தை பெற்றது. புதிய ஆய்வறிக்கை ஒன்றின்படி, 31,000 இறப்புகளை கொண்ட இந்தியா, 62,000 இறப்புகளை பதிவு செய்த சீனாவுக்கு அடுத்ததாக உள்ளது.

வெப்ப மன அழுத்தம், வெப்ப பக்கவாதம் மற்றும் தற்போதுள்ள இருதய மற்றும் சுவாச நோய்களில் அவற்றின் தாக்கமானது, 2018 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் 296,000 உயிர்களைக் கொன்றது என்று, டிசம்பர் 3, 2020 அன்று தி லான்செட் இதழில் வெளியான உடல்நலம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த லான்செட் கவுண்டவுன் அறிக்கையின் ஐந்தாவது பதிப்பு கூறியது. பெரிய மற்றும் சிறிய பொருளாதாரங்களில் இந்த நெருக்கடி காணப்பட்டது, காலநிலை மாற்றத்தின் சுகாதார பாதிப்புகளில் இருந்து, செல்வச் செழிப்புகளை நாடுகளால் பாதுகாக்க முடியாது என்பதை இது குறிக்கிறது.

தி லான்செட் அறிக்கை அதன் சமீபத்திய கண்டுபிடிப்புகளை 2016 ஆம் ஆண்டில் அதன் கவுண்டவுன் தொடரின் தொடக்கத்தில் இருந்து கவனிக்கப்பட்ட "மிகவும் கவலைக்குரிய பார்வை" என்று குறிப்பிட்டது. லட்சக்கணக்கான வேலை நேரங்களுக்கு சமமான உற்பத்தி இழப்புகளை, அது குறிப்பிட்டது; காட்டுத்தீ மற்றும் வறட்சியின் தீவிரம்; டெங்கு மற்றும் இரைப்பை குடல் தொற்று போன்ற நோய்களை விரைவாக பரப்பும் சாத்தியமான ஆபத்துகள் என்றது.

முதியவர்கள், 2000ம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து அதிகளவு வெப்பத்திற்கு ஆளாகியுள்ளனர், உலகளவில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களில் வெப்பத்தால் ஏற்படும் இறப்புகள், 2018ம் ஆண்டுடனான 18 ஆண்டுகளில் 53.7% அதிகரித்துள்ளதாக, அறிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு காரணம், வெப்ப அலைகள் மற்றும் வயதான மக்கள்தொகையின் அதிகரிக்கும் நிகழ்வுகளின் கலவையாகும்.

கோவிட்-19 தொற்றுநோய், உலகளாவிய சுகாதார நெருக்கடி ஒட்டுமொத்த நாடுகளையும் செயல்படாத நிலைக்கு கொண்டு வரக்கூடும் என்பதையும், அவசர நடவடிக்கையின்றி, காலநிலை மாற்றமும் உயிர்களுக்கும் வாழ்வாதாரங்களுக்கும் இதேபோன்ற சேதத்தை ஏற்படுத்தும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. தற்போதைய தொற்றுநோயைப் போலவே, காலநிலை மாற்றமும் உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகளை மூழ்கடிக்கும்.

உலக வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க உலகத்தால் முடியுமா என்பது, தொற்றுநோய்க்கு பிந்தைய மீட்பை நாடுகள் எவ்வாறு கையாள்கின்றன என்பதைப் பொறுத்தது என்று, அந்த அறிக்கை கூறியது - காலநிலை மற்றும் தொற்றுநோயை மீட்டெடுப்பதன் மூலம், உலகம் நீண்ட காலத்திற்கு சுகாதார நலன்களை வழங்க முடியும். பசுமை மீட்புக்கு நாடுகள் காலநிலை நட்புரீதியான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும், அவை புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கின்றன / தவிர்க்கின்றன மற்றும் தூய்மையான போக்குவரத்து, கட்டிடங்கள் மற்றும் பலவற்றை ஊக்குவிக்கின்றன.

"காலநிலை மாற்றம் காரணமாக மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல்கள் பெருகி, தீவிரமடைகின்றன, நாம் அந்த போக்கை மாற்றாவிட்டால், நமது சுகாதார அமைப்புகளுக்கு எதிர்காலத்தில் அதிக அபாத்துகள் உள்ளன," என்று, லான்செட் கவுண்டவுன் நிர்வாக இயக்குனர் இயன் ஹாமில்டன் கூறினார்.

இன்னமும்கூட, தேசிய சுகாதாரத் திட்டங்களில் காலநிலை மாற்ற வீழ்ச்சிகளை காரணியாக்குவதில் நாடுகள் மெதுவாக உள்ளன. அறிக்கைக்காக கணக்கெடுக்கப்பட்ட நாடுகளில் பாதி (101 இல் 51) தேசிய சுகாதார மற்றும் காலநிலை மாற்ற உத்திகளை உருவாக்கியுள்ளன. நிதி இன்னும் ஒரு சவாலாகவே உள்ளது: காலநிலை மாற்ற பாதிப்புகளைச் சமாளிக்கும் திட்டங்களையும், அதற்குத் தேவையான நிதியுதவியையும் கொண்ட 45 நாடுகளில், நான்கு (9%) மட்டுமே இத்தகைய உத்திகளை முழுமையாகச் செயல்படுத்த, போதுமான தேசிய நிதி கிடைப்பதாக அறிக்கை அளித்துள்ளன.

வெப்பம் மற்றும் அது தொடர்புடைய இறப்புக்கான இந்தியாவின் அணுகுமுறை, இதே போன்ற குறைபாடுகளைக் கொண்டுள்ளதாக, இந்தியா ஸ்பெண்ட் ஜூன் 16, 2020 கட்டுரை கூறியது. இந்தியாவில் அதன் மருத்துவ நடைமுறைகள் காரணமாக வெப்பம் தொடர்பான இறப்புகள் குறைவாகவே பதிவாகியுள்ளன, மேலும் அது ஏற்றுக் கொண்ட உத்திகள் குறைவாகவே உள்ளதை நாங்கள் கண்டறிந்தோம்.

இந்தியாவில் ஆண்டு சராசரி வெப்பநிலை 2006ஆம் ஆண்டு வரையிலான 200 ஆண்டுகளில் 2°C உயர்ந்துள்ளது. இது 2030ம் ஆண்டுக்குள் 0.6° உயர்ந்து 2.4° C ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பசுமை இல்ல வாயு வெளியேற்றம் அதிகரித்துக்கொண்டே இருந்தால், 50 ஆண்டுகளுக்குள், இந்தியாவில் 12 லட்சம் மக்கள் சஹாரா பாலையை போல் வெப்பமான பகுதிகளில் வாழ்வார்கள். இந்தியாவின் ஏழ்மையான மற்றும் மிகவும் வளர்ச்சியடையாத பகுதிகள், வெப்ப அலைகளால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை. இதனால், விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் பல லட்சக்கணக்கான வேலை நேரங்களை நாடு இழக்க உள்ளது.

லட்சக்கணக்கான வேலை நாட்கள் இழப்பு

பெரும்பாலான இறப்புகள் சீனா மற்றும் இந்தியாவில் இருந்து பதிவாகியுள்ள நிலையில், மற்ற நாடுகளும் ஆயிரக்கணக்கான இறப்புகளை சந்தித்தன - ஜெர்மனி (சுமார் 20,200), அமெரிக்கா (கிட்டத்தட்ட 19,000), ரஷ்யா (18,600), மற்றும் ஜப்பான் (சுமார் 14,200) என அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளில், உலகளவில் வயதானவர்களில், வெப்பம் தொடர்பான இறப்புகள் 54% அதிகரித்துள்ளது, இது 2019 ஆம் ஆண்டில் 65 ஆண்டுகளுக்கும் மேலானவர்களை பாதிக்கும் வகையில் 29 லட்சம் கூடுதல் நாட்கள் வெப்ப அலை வெளிப்பாடு பதிவாகியுள்ளது.

இறப்பு தவிர, உயரும் வெப்பம் ஒரு நாட்டின் பொருளாதார உற்பத்தி மற்றும் வாழ்வாதாரங்களுக்கு குறிப்பிடத்தக்க, நேரடி தாக்கங்களைக் கொண்டுள்ளது - வெப்பம் பெருகிய முறையில் வளரும் பிராந்தியங்களில் வெளியில் வேலை செய்யும் மக்களின் திறனை பாதிக்கிறது என்பதை, அறிக்கை கண்டறிந்துள்ளது. உதாரணமாக, 2019 ஆம் ஆண்டில், வெப்பம் காரணமாக உலகம் மொத்தம் 30.2 கோடி வேலை நேரங்களை இழந்தது - அதாவது, புவியில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் சுமார் 40 மணி நேரமும், 2000 ஐ விட 100 பில்லியன் அதிகமும். இந்தியாவும் இந்தோனேசியாவும் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்தன, அவற்றின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4-6%க்கு சமமான தொழிலாளர் திறனை இழந்தன.

வரும் 2030 ஆம் ஆண்டில் இந்தியா 5.8% வேலை நேரத்தை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 3.4 கோடி முழுநேர வேலைகளுக்கு சமமான உற்பத்தித்திறன் இழப்பு, இது வேலை செய்யும் போது மிகவும் வெப்பமான சூழல் இருப்பதால் அல்லது தொழிலாளர்கள் மெதுவான வேகத்தில், குறிப்பாக விவசாயத்தில் மற்றும் கட்டுமானத்துறைகளில் வேலை செய்ய வேண்டியிருக்கும் என்று, ஜூன் 16 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

இந்தியாவை பொறுத்தவரை, வெப்ப அழுத்தத்தின் தாக்கம் ஊழியர்கள் நேரடியாக சூரிய ஒளியில் வெளிப்படும் துறைகளுக்கு மட்டுமல்ல. ஏர் கண்டிஷனிங் வாங்க முடியாத துணி-நெசவு அலகுகள் போன்ற சிறு தொழில்களும் வெப்பநிலை உயர்வு காரணமாக உற்பத்தி இழப்புகளுக்கு ஆளாகின்றன என்று சிகாகோ பல்கலைக்கழக சிந்தனைக் குழுவான எனர்ஜி பாலிசி இன்ஸ்டிடியூட் (EPIC) 2018 ஆய்வு கண்டறிந்துள்ளது.

இந்தியாவில் 27 ° C க்கு அப்பால் வெப்பமான நாளில் ஒவ்வொரு 1 ° C வெப்பநிலையும், தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் 4% வரை குறைகிறது என்று எனர்ஜி பாலிசி இன்ஸ்டிடியூட் ஆய்வு தெரிவித்துள்ளது.

கூடுதல் காட்டுத்தீ, வறட்சி மற்றும் நோய்

மாறிவரும் காலநிலை கீழ்நோக்கிய விளைவுகளை ஏற்படுத்துகிறது, இது பரந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதிக்கிறது, மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக அறிக்கை கூறியுள்ளது. வெப்பம் மற்றும் வறட்சி ஆகியன காட்டுத்தீயை உண்டாக்குகின்றன, எடுத்துக்காட்டாக. 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து, 128 நாடுகள் மக்கள் தொகை அதிகரிப்பால் காட்டுத்தீயை அனுபவித்துள்ளன, அதன் விளைவாக தீக்காயங்கள், இதயம் மற்றும் நுரையீரல் புகை மற்றும் சேதம் மற்றும் சமூகங்களின் இடம்பெயர்வு ஆகியன ஏற்படுகின்றன. இந்த பேரழிவில் அமெரிக்கா மிகப்பெரிய அதிகரிப்பை கண்டது.

தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில், 14.5 கோடி முதல் 56.5 கோடி வரையிலான மக்கள், கடல் மட்டம் உயருவதால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் தீவிர நிகழ்வுகள் அதிகரிப்பால் உலகளாவிய உணவு பாதுகாப்பு அச்சுறுத்தப்படுகிறது: முக்கிய பயிர்களுக்கான உலகளாவிய மகசூல் திறன் 1981 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 1.8 - 5.6% குறைந்துள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

மாறும் காலநிலை முறைகள் பல்வேறு நோய்களின் பரவலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன: 1950ஆம் ஆண்டுகளில் இருந்து, நோய் பரவும் திறன் வேகமாக வளர்ந்து வருகிறது, 2018 ஆம் ஆண்டில் டெங்கு பரவல் 15% அதிகரிப்பு, மற்றும் மலேரியா மற்றும் விப்ரியோ பாக்டீரியாக்களுக்கான பிராந்திய அதிகரிப்பு உணவு மூலம் தொற்றுநோய்களை ஏற்படுத்துகிறது.

கோவிட்-19 மற்றும் காலநிலை மாற்றம்

சுற்றுச்சூழல் சீரழிவுக்கு வேர்களைக் கண்டறியக்கூடிய விலங்கு வழி தொற்றான கோவிட் -19 நோயானது, 2020 ஆம் ஆண்டில் உலகை முடக்கியது, இது பல லட்சம் பேரை பலி கொண்டது மற்றும் பல நாடுகளின் சுகாதார அமைப்புகளில் உள்ள ஓட்டைகளை (இங்கே மற்றும் இங்கே) அம்பலப்படுத்தியது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள், தொற்றுநோயின் தாக்கங்களை அதிகப்படுத்துகின்றன. காட்டுத்தீ, சூறாவளி, வெப்ப அலைகள், வெள்ளம் மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகள், (இங்கே, இங்கே மற்றும் இங்கே) சமூகங்களை தொற்றுநோயால் பாதிக்கிறது. காலநிலை மாற்றத்தைத் தணிக்கவும் மாற்றியமைக்கவும் அவசர நடவடிக்கைகள் இல்லாது, உடல்நல பாதிப்புகளையும் சாத்தியமான மருத்துவ வசதிகளையும் பாதிக்கிறது. ஆனால் ஒரு நேரத்தில் ஒரு நெருக்கடியைச் சமாளிக்கும் வசதி உலகில் இல்லை.

"காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வது எதிர்கால விலங்குகள் வழியே பரவும் தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும்" என்று புதிய அறிக்கையுடன் வெளியிடப்பட்ட தி லான்செட் தலையங்கம் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 தொற்றுநோயில் இருந்து மீள்வது காலநிலை மாற்றத்தில் செயல்பட ஒரு முக்கிய தருணத்தை வழங்குகிறது. தொற்றுநோய் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட அனைத்து நெருக்கடிகளையும் நிவர்த்தி செய்யும் ஒரு கூட்டு நடவடிக்கை, பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும், நிலையான பொருளாதாரத்தை உருவாக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவும்.

பசுமை மீட்பு

பாரிஸ் ஒப்பந்தத்தின் ஆண்டு நிறைவு, 2020 டிசம்பர் 12ஆம் தேதி வருகிறது, மேலும் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் வரும் தேசிய காலநிலை கடமைகளை மறுபரிசீலனை செய்து, அதை வரும் நாடுகள் புதுப்பிக்கவுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகள் முக்கியமானவை: 1.5°C என்ற இலக்கை அடைய மற்றும் வெப்பநிலை உயர்வை "2°C என்பதற்கும் குறைவாக" கட்டுப்படுத்த, தற்போது ஆண்டுதோறும் உமிழப்படும் 56 ஜிகாடோன்கள் CO2 சமமான (GtCO2e) 2030 வரையிலான 10 ஆண்டுகளுக்குள் 25 GtCO2e என பாதிக்கு மேல் குறைய வேண்டும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

இதற்கு ஒவ்வொரு ஆண்டும் 7.6% உமிழ்வைக் குறைக்க வேண்டும், இது தேசிய அரசு நோக்கங்களின் தற்போதைய நிலைகளை ஐந்து காரணிகளால் அதிகரிப்பதைக் குறிக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் எந்த தலையீடுகளும் இல்லாமல், இந்த இலக்கை அடைய தேவையான குறைப்பு ஒவ்வொரு ஆண்டும் 15.4% ஆக அதிகரிக்கிறது என்பதால், 1.5 ° C என்ற இலக்கை அடையமுடியாது என்று, தி லான்செட் கவுண்டவுன் அறிக்கை கூறினார்.

ஆனால் இந்த பயணம் பெரும்பாலும் தொற்றுநோய்க்குப் பிந்தைய மீட்பை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதைப் பொறுத்தது என்று கூறும் அறிக்கை, அண்மையில் இருக்கும் மற்றும் நீண்டகால சுகாதார நலன்களுக்காக காலநிலை மற்றும் தொற்றுநோயை மீட்டெடுப்பதற்கான அழைப்பு என்றது.

பசுமை மீட்புக்கு, நாம் முன்பு கூறியது போல, நாடுகள் புதைபடிவ எரிபொருள் துறைகளில் இருந்து விலகி, வனப்பகுதியை அதிகரிக்க வேண்டும் மற்றும் அவர்களின் பொருளாதாரங்களை ஆற்றல் மிக்கதாக மாற்ற வேண்டும்.

மாசுபடுத்தும் எரிபொருட்களில் இருந்து விடுபடுவதன் மூலம், புதைபடிவ எரிபொருட்களின் எரிப்புடன் தொடர்புடைய காற்று மாசுபாட்டால், 70 லட்சம் வருடாந்திர இறப்புகளில் சிலதோ அல்லது பெரும்பாலான அல்லது அனைத்தையும் தவிர்ப்பதற்கு, உலகிற்கு உதவும் என்று அறிக்கை கூறியுள்ளது. காற்று மாசுபாட்டால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகள், ஆண்டுதோறும் சுமார் 16 லட்சம், பசுமை மீட்பு மூலம் பெரும் சுகாதார நன்மைகளைப் பெறலாம்.

ஐரோப்பாவில், தூய்மையான எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறைகளை மேம்படுத்துவதற்கான சுமாரான நடவடிக்கைகள், சுற்றுப்புறத்தில் பி.எம். 2.5 -- ரத்த ஓட்டத்தில் நுழைவதன் மூலம் மக்களை பாதிக்கக்கூடிய அல்லது கொல்லக்கூடிய சிறிய துகள்கள் -- மாசு தொடர்பான இறப்புகளைக் கண்டன, இது 2015 ஆம் ஆண்டில் 1,00,000 பேரில் 62 ஆக இருந்தது, 2018ம் ஆண்டில் 100,000 பேருக்கு 59 ஆக குறைந்தது. உலகளவில், நிலக்கரியுடன் தொடர்புடைய சுற்றுப்புற பி.எம். 2.5 இன் இறப்புகள் அதே ஆண்டில் 60,000 குறைந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2018 வரை, ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓரளவு காற்றின் தர மேம்பாடுகள் நீடித்தால் ஒவ்வொரு ஆண்டும் 880 கோடி மதிப்புள்ளதாக இருக்கும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. இழந்த ஆண்டுகளில் ஆண்டு சராசரி குறைப்பிலிருந்து உருவாகிறது, இந்த எண்ணிக்கை காற்றின் தரத்தில் மேலும் மேம்பாடுகளுடன் வளரும்.

ஆயினும்கூட, இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் பசுமைக்கு பதிலாக புதைபடிவ எரிபொருள் தலைமையிலான பொருளாதார மீட்சியை நோக்கி நகர்கின்றன என்று இந்தியா ஸ்பெண்ட் ஜூன் 11 கட்டுரை தெரிவித்துள்ளது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.