மும்பை: கோவிட்19 இருதயத்தை பாதிப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், முன்பே இருதய பிரச்சனைகள் உள்ள நோயாளிகள், நோயின் தீவிரத்தை கொண்டிருக்கிறார்கள், இது இரு முனைகள் உள்ள வாளாக மாறும் என்று, டெல்லியில் உள்ள மெட்ரோ மருத்துவமனை மற்றும் இருதய இன்ஸ்டிடியூட்டின் தலையீட்டு இருதயநோய் நிபுணர் சமீர் குப்தா தெரிவித்தார்.

மீண்டுள்ள கோவிட்-19 நோயாளிகள் மன அழுத்த இருதய நோய் (cardiomyopathy) --அதாவது இதய தசையை தற்காலிகமாக பலவீனப்படுத்துதல் -- மற்றும் இருதய தசை அழற்சி (myocarditis) -- அதாவது வீக்கம் காரணமாக இதய தசையில் பலவீனம்-- ஆகிய நோயால் பாதிக்கப்படுவதாக, இந்த நேர்காணலில் குப்தா கூறுகிறார், இது வைரஸால் அல்ல, பெருந்தொற்று அல்லது அழற்சியின் விளைவே என்கிறார்.

குப்தா, இருதய மற்றும் புற நடைமுறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். பென் (Penn) மாநில பல்கலைக்கழகத்தில் மருத்துவ இல்லம், தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் பெல்லோஷிப்பையும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் இருதயவியல் பெல்லோஷிப்பையும், அவர் நிறைவு செய்தார். குப்தா, கோவிட் -19 இல் இருந்து மீண்டு வந்துள்ளார்.

திருத்தப்பட்ட பகுதிகள்:

இருதய நோய் நிபுணராக, அறிகுறிகள் அல்லது கோவிட்-19 இன் முன்னேற்றத்தின் அடிப்படையில் நீங்கள் இன்று என்ன காண்கிறீர்கள்?

கோவிட், இருதயத்தை பாதிக்கிறது. இருதய நோய் உள்ள நோயாளிகளுக்கு கோவிட்டால் மோசமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, இது ஒரு இரட்டை முனைகள் கொண்ட வாள். இருதய செயலிழப்பு நோயாளிகள் (அதாவது இருதயதசை பலவீனத்துடன் தொடங்குவது), அடைப்புகள் மற்றும் இரத்தக்குழாய் சார்ந்த தமனி நோய் ஆகியன, கோவிட் உடன் மோசமான முன்கணிப்பு (அல்லது இறப்பு) அதிகமாக இருப்பதைக் கண்டோம். மேலும், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் சில ஆபத்து காரணிகளும், கோவிட்டால் மோசமான சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன.

இன்னொருபக்கம், கோவிட் (இருதய நோய் இல்லாத ஒருவருக்கு) இருதய நோயின் முழுநோய் அலையை ஏற்படுத்துகிறது. இது அரித்மியா (arrhythmias) எனப்படும் இரத்த ஊட்ட குறைபாடு (அசாதாரண இருதய துடிப்புகள்) ஆபத்தை அதிகரிக்கிறது. கோவிட் நோயாளிகளுக்கு [இருதய] தசை பலவீனம் மற்றும் மாரடைப்பு அதிகமாக இருப்பதைக் கண்டோம்.

நீங்கள் சிகிச்சை அளித்த நோயாளிகளுக்கு இடையே உள்ள போக்குகள் என்ன? இருதயம் தொடர்பான பிரச்சினைகளுடன் அவர்கள் பின்னர் திரும்பி வந்திருக்கிறார்களா?

நான் ஒரு தலையீட்டு இருதயநோய் நிபுணர், எனவே கோவிட் நோயாளிகளுக்கு நேரடியாகயாக சிகிச்சை தரவில்லை. ஆனால் நாங்கள் ஆலோசனைகளைப் பெறுகிறோம். கடந்த காலத்தில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளையோ அல்லது இப்போது கோவிட் உடைய இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளையோ நாங்கள் காண்கிறோம். இந்த நோயாளிகளில் சிலருக்கு முன்கணிப்பு மிகவும் சிறப்பாக இல்லை. நான் ஒரு நோயாளியை தெளிவாக நினைவில் வைத்திருக்கிறேன். அவருக்கு பெரும் மாரடைப்பு ஏற்பட்டது. நாங்கள் அவருக்கு சிகிச்சை அளித்தோம், அவர் வீட்டிற்குச் சென்றார். பின்னர் அவர் சில வாரங்களுக்குப் பிறகு கோவிட்டுக்கான மோசமான அறிகுறிகளை கொண்டிருந்தார், இறுதியில் அவர் இறந்தார்.

எனவே மக்கள் கோவிட் உடன் திரும்பி வருவதைக் கண்டோம். கோவிட் நோயாளிகளும் பிற இருதய பிரச்சினைகளுடன் வருவதை நாங்கள் கண்டிருக்கிறோம்.

தொழில்நுட்ப ரீதியாக கோவிட்டில் இருந்து மீண்டவர்கள், ஆனால் பின்னர் இருதய சிக்கல்களை சந்தித்தவர்கள் இவர்கள். அது சரிதானே?

கோவிட் உடனான இருதய பிரச்சினைகள் பல வகைகளில் வெளிப்பட்டு வருகின்றன. கோவிட்டில் இருந்து மீண்ட நோயாளிகள் இருதய செயலிழப்புடன் மீண்டும் வருவதை நாங்கள் காண்கிறோம், பின்னர் அவர்களுக்கு கார்டியோமயோபதி (இருதய தசையில் பலவீனம்) இருப்பதைக் காண்கிறோம். சில நேரங்களில் தசையின் பலவீனம் தற்காலிகமானது (மன அழுத்த கார்டியோமயோபதி), மற்றும் அதற்கு மருந்துகளுடன் சிகிச்சையளிக்க முடியும் என்பதைக் காட்ட சில தகவல்கள் உள்ளன. நம்மிடம் இன்னும் நீண்ட கால ஆய்வுகள் இல்லை, ஏனென்றால் வைரஸ் பிறந்து ஒன்பது மாதங்களே ஆகிறது.

கோவிட்-19 நோயாளிகளில், மக்கள்தொகை அடிப்படையில் (வயது அல்லது பாலினத்தைப் பொறுத்தவரை) ஒற்றுமைகள் ஏதேனும் உள்ளதா? இருதய நிலைகளின் சில அறிகுறிகளை காட்டியுள்ளனவா?

இல்லை, இப்போது அந்த நிகழ்வு மிகவும் சிறியது. எனவே அளவிடுவது மற்றும் வகைப்படுத்துவதும் கடினம். ஆனால் மறுபுறம், கோவிட் நோயால் பாதிக்கப்படும்போது மாரடைப்பு காயம் மற்றும் இதய செயலிழப்பு போன்ற இதய பிரச்சினைகள் உள்ளவர்கள் பொதுவாக வயதானவர்கள். அவர்கள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் அல்லது முன்பே இருக்கும் இதய நோய் போன்ற ஆபத்து காரணிகளைக் கொண்டவர்கள், மேலும் இருதயத்தில் கோவிட்டின் சிக்கல்களை உருவாக்குகிறார்கள். இருதய தசை அழற்சியும் உள்ளது,இது வீக்கத்தால் இருதய தசையின் பலவீனமாக்குகிறது.

இதையடுத்து வரும் கேள்வி: வைரஸ் இருதய தசை அழற்சி மற்றும் இருதயதசை காயத்தை ஏற்படுத்துகிறதா? அல்லது வீக்கமும் உடலில் நடக்கும் அனைத்தும் இருதயத்தை ஒரு அப்பாவி பார்வையாளராக்குகிறதா? பிரேத பரிசோதனை ஆய்வுகள் மற்றும் தரவுகளிலிருந்து, இஉர்தயம் அப்பாவி பார்வையாளர் என்பதைக் கண்டுபிடித்துள்ளோம். எங்கள் முழு உடலும் ஒரு வகையான சமநிலையில் வாழ்கிறது: எல்லாமே ஒருவருக்கொருவர் குறியீடாக இருக்கின்றன. எனவே, உடலில் ஒரு பெரிய தொற்று அல்லது ஒரு பெரிய அழற்சி ஏற்பட்டால், அது இருதயத்தையும் பாதிக்கிறது.

மற்ற உறுப்புகளை விட இருதயம் அதிகம் பாதிக்கப்படுகிறது என்று சொல்ல ஏதாவது இருக்கிறதா?

நுரையீரல், இருதயம் மற்றும் உறையும் அமைப்பு முதன்மையாக பாதிக்கப்படுகின்றன. கோவிட் நோயாளிகளில், இரத்தம் தடிமனாக இருப்பதைக் காண்கிறோம், ஏனெனில் உறைதல் பாதையில் பல்வேறு மாற்றங்கள் உள்ளன. மேலும் இரத்த உறைவு அதிகளவில் உள்ளது, பின்னர் அவை நுரையீரலுக்கு செல்கின்றன - மேலும் நுரையீரலில் ஏராளமான இரத்தக் கட்டிகளைக் கண்டிருக்கிறோம், அவை மரணத்திற்கும் ஒரு காரணமாகும். இந்த இரத்தக் கட்டிகள் மூளை, கைகள், கால்களில் ஏற்படலாம். நாம் அதை நிறைய பார்த்திருக்கிறோம்.

எனக்கு ஏற்கனவே இருதய பாதிப்பு இருப்பின், நான் எவ்வாறு அதிக கவனமாக இருக்க முடியும்? இருதயப் பிரச்சினையுடன் வந்தவர்கள் பின்னர் கோவிட்டால் பாதிக்கப்பட்டதாக நீங்கள் கூறினீர்களே.

அத்தகைய மக்கள் நிச்சயம் அதிக ஆபத்தில் உள்ளனர். நான் டெல்லியில் வசிக்கிறேன், தெருக்களில் வெளியே செல்லும்போது, சுமார் 75-80% கோவிட்டுக்கு முன்பிருந்த போக்குவரத்திற்கு டெல்லி திரும்பி வருவதைக் காண்கிறேன். வீதிகள் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நல்ல விஷயம் என்னவென்றால் எல்லோரும் குறைந்தது முகக்கவசம் அணிந்து இருக்கிறார்கள். அது தாடையில் இருந்தாலும் கூட, குறைந்தபட்சம் அவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உணர்வுடன் இருக்கிறார்கள்.

மிகுதியான எச்சரிக்கை சோர்வு இருப்பதை காண்கிறேன்: மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்தின் ஒரு பகுதியில் இருந்து மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தனர். இப்போது நேரம் செல்லச்செல்ல, மக்கள் சோர்வடைந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் 700-800 வழக்குகள் இருந்தாலும், அந்த 700 வழக்குகளில் ஒன்றாக நீங்கள் இருக்கக்கூடாது என்பதை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன். தயவுசெய்து விழிப்புடன் இருங்கள். தேவையற்ற சந்திப்புகளுக்கு வெளியே செல்ல வேண்டாம்; நீங்கள் சலிப்பாக உள்ளதே என்று வெளியே சென்று பழக வேண்டாம். எச்சரிக்கை காரணமாக நீங்கள் சோர்வடைய முடியாது.

மேலும், உங்களுக்கான மருந்துகளை உட்கொள்ளுங்கள். ஊரடங்கின் ஆரம்பப்பகுதியில், எக்காரணத்திற்காகவும் சில நோயாளிகளால் மருந்துகளை வாங்க முடியவில்லை என்பதை கண்டோம். மருந்துகள் கிடைத்தன, ஆனால் அவை மந்தமாகின. இருதய சம்பந்தப்பட்டதற்கு அந்த மருந்துகளுக்கு இணங்காததால், அவை சிக்கல்களுடன் திரும்பி வந்தன - ஆனால் கோவிட் அல்ல, எனவே, தயவுசெய்து உங்கள் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நீரிழிவு இருந்தால், தயவுசெய்து நீரிழிவு மருந்தை உட்கொள்ளுங்கள். இதில் நான் போதுமான அளவு அழுத்தம் தர முடியாது.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும், தொடர்ந்து வேலை செய்வதும் மிக முக்கியம், ஏனென்றால் இதுவும் நாம் பார்த்த ஒன்று - மக்கள் வேலை செய்யவில்லை. தயவுசெய்து உழைத்து உங்களை ஆரோக்கியமாக வைத்திருங்கள். அது மிக முக்கியமானது.

அது ஒரு உருவக வழியில் இதயத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது தானே.

ஆமாம், நிச்சயமாக. இருதய உடற்தகுதி மிக முக்கியமானது. நான் சுட்டிக்காட்ட விரும்பும் மற்றொரு விஷயம் என்னவென்றால், ஊரடங்கின் ஆரம்ப பகுதியில் - மற்றும் சில நேரங்களில் இன்றும் கூட - மக்கள் மருத்துவமனைக்கு வர தயங்குகிறார்கள். அவசரகாலத்தில் நோயாளிகளிடம் இருந்து எனக்கு சில அழைப்புகள் வந்தன, பரவும் என்ற பயத்தால் மருத்துவமனைக்கு வர தயங்கியதாக கூறினார்கள்.

இருதய நோய் நீங்கவில்லை. இன்றும் கூட, இருதய நோய் இந்தியாவில் அதிக பலியை கொண்டிருக்கிறது. உங்களுக்கு கோவிட் இருக்கலாம் [அல்லது அதற்கான ஆபத்தில் இருக்கக்கூடும்], ஆனால் இன்னும் மாரடைப்பு ஏற்படலாம். எனவே தயவுசெய்து உங்கள் அறிகுறிகளைப் புறக்கணிக்காதீர்கள்.

நீங்கள், 700 வழக்குகளை குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த 700 பேரில் நீங்களும் ஒருவராக இருந்தீர்கள், அவதிப்பட்டீர்கள். எனவே உங்கள் அனுபவத்தை கூறுங்கள்.

அது ஒருநாள் திங்கட்கிழமை. நான் காலையில் எழுந்தேன். என் தொண்டையில் கூச்சமும், கொஞ்சம் உடல் வலியும் இருந்தது. கோவிட் என்பது முதல் விஷயம் அல்ல [நீங்கள் நினைக்கிறீர்கள்], நான் மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு சில கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை தந்திருக்கிறேன். மாரடைப்புடன் சிலர் வருகிறார்கள், யாருக்கு கோவிட் உள்ளது, யார் இல்லை என்பதும் நமக்கு தெரியாது.

அதனால் நான் ஒருவித கூச்சத்துடன் எழுந்தேன், நாள் முழுவதும் வேலை செய்தேன். எனக்கு கொஞ்சம் முதுகுவலி வர ஆரம்பித்தது. நான் தூங்கிய விதம் அல்லது நடைமுறைகளின் போது நான் அணியும் உடை [கதிர்வீச்சைத் தடுப்பதற்காக அணிவது] காரணமாக இருக்கலாம் என்று நினைத்தேன். மிகவும் சோர்வாக இருந்ததால் தூங்கச்சென்றேன். நான் அதிகாலை 4 மணிக்கு காய்ச்சலுடன் கண் விழித்தேன், அப்போதுதான் அது கோவிட்-ஆக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். நான் என் மனைவியை எழுப்பி, எனக்கு காய்ச்சல் இருப்பதாக சொன்னேன், உடனடியாக சமூக இடைவெளியை பராமரிக்க தொடங்கினேன். சிலமணி நேரத்தில் மனைவிக்கும் கூட காய்ச்சல் வந்தது. எனவே, எங்கள் இருவருக்கும் கோவிட் தொற்று இருந்தது.

அதிர்ஷ்டவசமாக, இது லேசான பாதிப்பு. எனக்கு சில நாட்கள் காய்ச்சல் இருந்தது. எனது ஆக்ஸிஜன் செறிவு மற்றும் எல்லாமே நன்றாக இருந்தது. நான் குணமடைந்தேன், இரண்டு-மூன்று வாரங்கள் தனிமைப்படுத்தபட்டு இருந்தேன். நான் பரிந்துரைகளுக்கு அப்பாலும் செயல்பட்டேன். ஏனென்றால் நான் மீண்டும் பணிக்கு செல்ல விரும்பினால், நான் 1% கூட பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். எனவே நான் எனது சொந்த திருப்திக்காக இரண்டு எதிர்மறை சோதனைகளைச் செய்தேன், பின்னர் நான் மீண்டும் பணிக்கு சென்றேன். எனது பிளாஸ்மாவை கூட தானம் செய்தேன்.

நீங்களும் உங்கள் மனைவியும் ஒரே நேரத்தில் குணம் அடைந்துவிட்டீர்கள் என்று கருதுகிறேன்?

ஆமாம். இது வேறுபட்டது. எனக்கு மூன்று முதல் நான்கு நாட்கள் அறிகுறிகள் இருந்தன. ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு அவருக்கு லேசான காய்ச்சல் இருந்தது. ஆனால் நாங்கள் எங்கள் தனிமைப்படுத்தலை ஒன்றாக நிறைவு செய்தோம். சமூக இடைவெளியை கடைபிடித்தோம்.

நீங்கள் அதை உணரவில்லை, ஆனால் உலகெங்கிலும் உள்ள ஏராளமான சுகாதார வல்லுநர்கள் தங்களது அன்புக்குரியவர்களிடம் இருந்து உடல் ரீதியான இடைவெளியை பராமரித்து வருகின்றனர். வழக்குகள் அதிகரிக்கத் தொடங்கியதும், பிற அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களும் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும், அவர்களுக்கு கோவிட் இருப்பதைக் கண்டறிந்தேன், நான் அதே கட்டிடத்தில் வசிக்கும் என் பெற்றோரிடம் இருந்து சமூக இடைவெளியை கடைபிடித்தேன். முகக்கவசம் அணிந்து மட்டுமே அவர்களுடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்தேன். உலகெங்கிலும் உள்ள பல சுகாதார வல்லுநர்கள் இதைத்தான் செய்கிறார்கள் என்பதே உண்மை. ஆறு மாதங்களாக தங்கள் குழந்தையை ஆரத்தழுவ முடியாதவர்களை நான் அறிவேன். அவர்கள் ரிஸ்க் எடுக்க முடியாது.

உங்கள் முன் உள்ள சொந்த அனுபவத்தையும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் நீங்கள் பெற்ற அனுபவத்தையும் பார்க்கும் போது, உங்கள் உணர்வு என்ன? இந்த நோயைக் கட்டுப்படுத்த நமக்கு ஏதாவது இருக்கிறதா? உதாரணமாக, நமது கட்டுப்பாட்டு உணர்வு இப்போது குறைந்தது 50% என்று நீங்கள் கூறுவீர்களா, நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு முன்பு எதையும் எதிர்க்கவில்லையா? அல்லது நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

இது ஒரு நல்ல கேள்வி. இந்நோயை பற்றிய விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு நாளும், நாம் ஏதாவது கற்றுக் கொண்டிருக்கிறோம். ஒட்டுமொத்த மருத்துவ சமூகமும், உலகின் சில சிறந்த விஞ்ஞான மனங்களும் எவ்வாறு தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுவதற்கு பங்களித்தன என்பது மிக சுவாரஸ்யமானது. நீங்கள் திரும்பிச் சென்று காலவரிசையைப் பார்த்தால், முகக்கவசங்கள் உதவாது என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. பின்னர் அவர்கள் முகக்கவசம் உதவியாக இருக்கும் என்றனர். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் நல்லது என்று சொல்லிவிட்டு பிறகு அது நல்லதல்ல என்றும் சொன்னார்கள். இப்போது, புதிய சிகிச்சைகள் வருகின்றன.

ஆறு மாதங்களுக்கு முன்பு செய்ததை விட நமக்கு நிறைய தெரியும், ஆறு மாதங்களுக்கு பிறகு, இன்று நமக்குத் தெரிந்ததை விட இன்னும் நிறைய விஷயங்களை நாம் அறிவோம். எனவே, ஒரு விஞ்ஞானி, இருதயநோய் மருத்துவர் மற்றும் ஒரு மருத்துவர் என எல்லோரும் எவ்வாறு ஒன்றாக வந்துள்ளார்கள் என்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.