மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள். கோவிட்-19 பரவல் குறித்து பெற்றோர்கள் கவலைப்பட வேண்டுமா?
சமூகத்தில் கோவிட் -19 பரவலுக்கு முக்கிய காரணமாக குழந்தைகள் இல்லை என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன, பள்ளியை மீண்டும் திறப்பது மூன்றாவது அலைக்கு வழிவகுக்க வாய்ப்பில்லை, அத்துடன் போதுமான முன்னெச்சரிக்கையுடன், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியும்
ஜெய்ப்பூர்: பள்ளிகளை மீண்டும் திறப்பது மூன்றாவது கோவிட் -19 அலையை ஏற்படுத்தவோ அல்லது, அதிக தொற்று டெல்டா உருமாறிய வைரஸாக இருந்தாலும் கூட, பெரியவர்களுக்கு பெருந்தொற்று பரவுவதற்கோ வழிவகுக்கும் என்பதற்கு வாய்ப்பில்லை என்று , நிபுணர்கள் கூறுகிறார்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி காட்டுகிறது. இந்தியாவின் பெரும்பான்மையான குழந்தைகள் ஒன்றரை வருடமாக கற்றலை இழந்துவிட்டதால், முன்னெச்சரிக்கையுடன் பள்ளிகளைத் திறப்பதால், அபாயங்களை விட நன்மைகளே அதிகம்.
முகக்கவசம் அணிவது, வகுப்பறைகளில் காற்றோட்டத்தை உறுதி செய்தல் மற்றும் கூட்டமாக கூடுவதை தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கைகள் பின்பற்றப்பட்டால், பள்ளிகளில் கோவிட் -19 பரவுதல் குறைந்தளவே இருக்கும் என்று, பல்வேறு ஆய்வுகளின் பகுப்பாய்வு காட்டுகிறது. அதிக பரவும் டெல்டா உருமாரிய வைரஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு, கோவிட் -19 பரவல் எண்ணிக்கையை அதிகரித்த போதும், தீவிர பாதிப்புகள் மற்றும் இறப்புகள், 2020ம் ஆண்டில் இருந்ததைப் போலவே உள்ளன மற்றும் தீவிர பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் வயதானவர்களை விட குழந்தைகள் மத்தியில் குறைவாக உள்ளது என்று, தரவு மற்றும் ஆராய்ச்சி காட்டுகிறது.
விரைவில் வெளியிடப்படவுள்ள மாடலிங் ஆய்வில், பள்ளி மீண்டும் திறப்பது இந்தியாவில் மூன்றாவது கோவிட் -19 அலையை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்பதைக் காட்டும் அதே வேளையில், ஊரடங்கு மற்றும் பள்ளி மூடல்களால் குழந்தைகள் தொற்றுநோயில் இருந்து பாதுகாக்கவில்லை என்பதையும், உயர் செரோபோசிட்டிவிட்டி விகிதங்களை சுட்டிக்காட்டி, வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பள்ளிகள் என்ன செய்ய வேண்டும்? அனைத்து பெரியவர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
"பள்ளிகளை மீண்டும் திறப்பது பாதுகாப்பானதா என்ற கேள்வி தவறானது" என்று உள் மருத்துவ நிபுணர் ஸ்வப்நீல் பரிக் கூறினார். இவர், "கொரோனா வைரஸ்: உலகளாவிய தொற்றுநோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது" என்ற நூலின் ஆசிரியர். "கேள்வி, செலவுகளை எடை போடுவது பற்றியது. தெளிவான உறுதியான பலன்கள் இல்லாமல், பள்ளிகளை மூடுவது சமூகத்திற்கு அதிக செலவுகளைக் கொண்டிருக்கலாம். கோவிட் -19 இன் சமூக பரவலைக் குறைப்பதில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பது நமக்கு தெரியாது. பள்ளியில் ஏற்படும் கோவிட் -19 இன் அபாயங்களை விட, நேரில் பள்ளிக்கு வருவஹ்டால் பயன்கள் அதிகம்" என்றார்.
பள்ளிகள் மீண்டும் திறப்பதன் நன்மைகள் மற்றும் அபாயங்களை எடைபோடும் இக்கட்டுரை, எங்களது 'கல்வி சீர்குலைவு' தொடரில் மூன்றாவது ஆகும்; இத்தொடர், தொற்றுநோய் காரணமாக பள்ளி மூடல்கள் மற்றும் கற்றல் மீதான தாக்கத்தால் தொடங்கியது மற்றும் பள்ளிகள் மீண்டும் திறக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் தொடர்ந்தது.
பள்ளிகள், மூன்றாவது அலைக்கு வழிவகுக்க வாய்ப்பில்லை என்று கூறும் மாடலிங் ஆய்வு
இன்னும் வெளியிடப்படாத மாடலிங் ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் கவுதம் மேனன், பிரையன் வால் மற்றும் சந்தீப் கிருஷ்ணா பள்ளிகள் மீண்டும் திறப்பது இந்தியாவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே கோவிட் -19 தொற்றுகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை மதிப்பிட முயன்றனர். பள்ளிகள், பணியிடங்கள் மற்றும் இவற்றுக்கு இடையேயான மக்கள், சமூகத்தில் பல்வேறு தொற்றுநோய் நிலைகள் மற்றும் கோவிட் -19 தடுப்பூசிகள், மற்றும் முகக்கவசம், போன்ற மருந்து அல்லாத செயல்பாடுகளை கொண்ட ஒரு சமூகத்தில், அவர்கள் காரணியாக இருந்ததாக, சோன்பேட்டில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் உயிரியல் பேராசிரியர் மேனன், இந்தியாஸ்பெண்டிடம் கூறினார்.
"பள்ளிகள் மூடப்படுவதை ஒப்பிடும்போது பள்ளிகள் திறக்கப்படுவதால் குழந்தைகளில் தொற்று பரவல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என, ஆராய்ச்சியாளர்கள் செப்டம்பர் 2 அன்று, தி இந்துவில் எழுதினர். "ஆனால் பெரியவர்கள் உட்பட கோவிட் -19 நோய்த்தொற்றுகளில் ஒரு சிறிய அதிகரிப்பு மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது, இது மூன்றாவது அலை தொடங்க வாய்ப்பில்லை" என்று மேனன், இந்தியாஸ்பெண்டிடம் கூறினார். "குறிப்பாக, வட இந்தியாவின் பெரும்பகுதி முழுவதும் எதிர்பார்க்கப்படும் செரோபிரெவலன்ஸின் பிராந்தியங்களில், தொற்று பரவலின் அதிகரிப்பு ஓரளவு இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று அவர்கள் தி இந்துவில் எழுதினர்.
ஒட்டுமொத்தமாக, 68% இந்தியர்களுக்கு கோவிட் -19 நோயெதிர்ப்புகள் இருந்தன, ஒன்று தடுப்பூசி அல்லது இயற்கை தொற்று காரணமாக இருந்ததாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நான்காவது நாடு தழுவிய செரோ ஆய்வு தெரிவிகிறது, அதன் முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. ஒரு மாவட்டத்தில் சுமார் 70-75% செரோபோசிடிவிட்டி உள்ள நிலையில், பள்ளிகளை மீண்டும் திறப்பது பாதுகாப்பானது, மேலும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் இந்த அளவிலான செரோபோசிட்டிவிட்டி எதிர்பார்ப்பது நியாயமானதாக இருக்கும் என்று மேனன் கூறினார். ஆனால் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான செரோ சர்வே நடத்தப்படவில்லை, பள்ளிகளைத் திறப்பது குறித்து மேலும் தகவலறிந்த முடிவுகளை எடுக்க இது எடுக்கப்பட வேண்டும் என்று, மேனன் பரிந்துரைத்தார்.
பள்ளி மூடல்கள் குழந்தைகளை தொற்றில் இருந்து பாதுகாக்கவில்லை
பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும், "கோவிட் -19 நோய்த்தொற்றை, குழந்தைகளிடம் அண்டவிடாமல் செய்வதில் நாம் நல்ல வேலையைச் செய்யவில்லை, எப்படியிருந்தாலும் அதை சமூகத்தில் இருந்து பரவுகிறது" என்று மேனன் கூறினார். நான்காவது தேசிய செரோ சர்வேயின்படி, பள்ளி மூடப்பட்ட போதிலும், தடுப்பூசிகள் இல்லாமல், ஆறு-ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதிக்கு மேல் (57.2%), கோவிட் -19 ஆன்டிபாடிகள் இருப்பதைக் காட்டியது. 10-17 வயதுக்குட்பட்டவர்களில் 61.6% பேருக்கு ஆன்டிபாடிகள் இருந்தன என்று, ஜூலை 2021 இல் நாங்கள் கட்டுரை வெளியிட்டோம்.
"கடைசி முயற்சியாக, பள்ளி மூடல்கள் சார்ஸ்-கோவ்-2 பரவலை குறைப்பதற்கு பங்களிக்கலாம், ஆனால் மற்ற மருந்தியல் அல்லாத தலையீடுகள் மற்றும் தடுப்பூசி உள்ளடக்கிய விரிவாக்கம் இல்லாத நிலையில், கோவிட்-19 சமூகப் பரவலைத் தடுக்க அவற்றால் போதுமானதாக இல்லை" என்று, ஜூலை 2021 இல் பள்ளி மறுதொடக்கம் மற்றும் கோவிட் -19 பற்றிய புதுப்பிப்பில், ஐரோப்பிய நோய் கட்டுப்பாட்டு மையம் (ECDC - இசிடிசி) தெரிவித்துள்ளது.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் பள்ளி மூடல்களின் செயல்திறன் "கோவிட்-19 தொற்றுநோயின் முதல் அலையுடன் ஒப்பிடும்போது, இரண்டாவது அலையில் குறைந்துவிட்டதாகத் தோன்றுகிறது, ஒருவேளை பள்ளி அமைப்புகளில் சிறந்த சுகாதார நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம்" என்று கண்டறிந்துள்ளது.
இந்தியாவும் கூட, பள்ளி மீண்டும் திறக்க முகக்கவசம், சமூக இடைவெளி, காற்றோட்டம் மற்றும் வயது வந்தோருக்கான தடுப்பூசி உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கையுடன் பரிந்துரைப்பதாக, செப்டம்பர் 2021 இந்தியாஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.
பெரியவர்களை விட குழந்தைகள் தொற்றுநோயை பரப்ப வாய்ப்பில்லை
பள்ளிகளை மூடுவதற்கான ஆரம்ப அடிப்படையானது, பள்ளிகளின் காரணமாக சமூகங்களில் பரவுதல் அதிகரித்தது மற்றும் பள்ளிகள் மூடப்பட்டால், அது பரவலை கட்டுப்படுத்த உதவும் என்று, அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய நோய் தொற்றுநோயியல் மற்றும் கட்டுப்பாட்டு உதவி விஞ்ஞானி பிரையன் வால் விளக்கினார். "ஆனால் இப்போது குழந்தைகள் பரவலுக்கு காரணமாக மாட்டார்கள் என்பது நமக்கு தெரியும். அவர்கள் நிச்சயமாக குடும்பங்களுக்கு தொற்றுநோயை மீண்டும் கொண்டு வர முடியும் ஆனால் வயதானவர்கள்-ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தில் தீவிர நோய் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை தடுப்பதற்கான சிறந்த வழி, அவர்களுக்கு தடுப்பூசி அளிப்பது மற்றும் அவர்களின் அபாயத்தை குறைப்பது, "என்று அவர் மேலும் கூறினார்.
பள்ளிகளும் குழந்தைகள், சார்ஸ்-கோவ்-2 வைரஸை பரப்புவதற்கான முதன்மை முறை அல்ல என்று, பல ஆய்வுகள் கூறுகின்றன, முதன்மை முறையானது கோவிட் -19 ஐ ஏற்படுத்துகிறது. அமெரிக்காவின் வட கரோலினாவில், ஆகஸ்ட் 2020 இல், 90,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்றனர். ஒன்பது வாரங்களில் கண்டறியப்பட்ட 805 நோய்த்தொற்றுகளில், 32 மட்டுமே பள்ளிகளால் பரவி இருக்கிறது. விஸ்கான்சின், நியூயார்க், உட்டா மற்றும் நார்வேயில் உள்ள ஆய்வுகள் பள்ளி மாணவர்கள் அல்லது ஊழியர்களில் சில கோவிட் -19 தொற்று பரவலையே காட்டி இருக்கின்றன, ஏனெனில் நேரடியாக கற்றல் மற்றும் பள்ளிகளுக்குள் குறைந்த பரிமாற்றமே இருந்தது.
மேலும், குழந்தைகளுக்கு தொற்றுநோய்கள் பரவுவது குறைவாக இருக்கும், மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கும் அது குறைந்த காலத்திற்கே கோவிட் -19 இருக்கும், ஏனெனில் குழந்தைகளுக்கு லேசான மற்றும் அறிகுறியற்ற நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று, மார்ச் 2021 இல் வெளியிடப்பட்ட 35 ஆய்வுகளின் மதிப்பாய்வில் கண்டறியப்பட்டது.
அதே சமயத்தில், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு, அதே வயதுடையவர்களிடம் இருந்து பரவும் ஆபத்து அதிகமாக உள்ளது, மேலும் பள்ளி தொடர்பு குழந்தைகளில் அதிக தொற்றுக்கு வழிவகுக்கும் என்று ஆகஸ்ட் 1, 2020 வரை கோவிட் -19 தொற்று பரவல் குறித்த ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு கண்டறிந்தது. இதேபோல், ஜூன் 2021 இல் வெளியிடப்பட்ட அமெரிக்க ஆய்வில், பள்ளிக்குச் செல்லும் குழந்தையுடன், குறிப்பாக உயர்நிலைப் பள்ளி குழந்தைகளுடன் ஒரு வீட்டில் வாழ்வது, கோவிட் -19 தொற்றுக்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டது. ஆனால் "தணிப்பு நடவடிக்கைகள் இருக்கும்போது, பள்ளிகளுக்குள் பரவுவது குறைவாக உள்ளது மற்றும் தொற்று விகிதங்கள் சுற்றியுள்ள சமூகத்தை பிரதிபலிக்கின்றன" என்று ஆய்வின் ஆசிரியர்கள் எழுதினர்.
இங்கிலாந்திலும், டிசம்பர் 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, பள்ளிகளில் கோவிட் -19 தொற்று பரவல் அசாதாரணமானது என்பதைக் காட்டுகின்றன, மேலும் பள்ளி அடிப்படையிலான பரிமாற்றத்தை விட சமூகத்தில் தொற்று பரவலின் அளவு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. "பிராந்திய அளவிலான கோவிட்-19 நிகழ்வுகளுடன் வலுவான தொடர்பு கல்வி அமைப்புகளைப் பாதுகாக்க, சமூக பரவலைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது" என்று ஆய்வு கூறுகிறது.
"குழந்தைகளின் திரள் கூட்டத்தில் இருந்து சமூகத்திற்கு ஏற்படும் ஆபத்து என்பது, பெரியவர்களின் கூட்டத்தை விட அதிகமாக இல்லை" என்று பரிக் கூறினார். இந்தியாவில், "ஆபத்துகள் -- பார்கள், உணவகங்கள் மற்றும் திருமணங்கள் போன்றவை-- நிறுத்தப்பட வேண்டும் என்று நாம் சொல்வது போல் இல்லை, பள்ளிகளை மூட வேண்டும் என்றுதான் நாம் சொல்கிறோம். இந்த எந்தவொரு செயலையும் விட பள்ளிக்கல்வி மிகவும் இன்றியமையாதது" என்றார்.
முக்கியமானது என்னவென்றால், குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் முடிவு தனிப்பட்டதாக உள்ளது என்று பரிக் கூறினார். உதாரணமாக, ஒரு குடும்பம் குழந்தைக்கு நோய்வாய்ப்பட்ட குழந்தையையோ அல்லது பெற்றோர் அல்லது வயதான தாத்தா பாட்டியுடன் புற்றுநோய் அல்லது அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை குறிப்பாக பலவீனமாக்கும் எந்தவொரு நோயுடனும் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.
மேலும், குழந்தையை வீட்டில் தொடர்ந்து கவனித்து, கல்வி கற்பிக்கக்கூடிய சில சில பெற்றோர்கள், அவர்களை தங்கள் குழந்தையை பள்ளியில் இருந்து விலக்கி வைத்தால், அதே சலுகைகள் இல்லாதவர்களுக்கு (குறைவான மாணவர்களுடன்) பள்ளி செல்லும் ஆபத்து குறைவாக இருக்கும் என்று பரிக் கூறினார்.
முன்னெச்சரிக்கை இல்லாமல் பள்ளிகள் திறக்கக் கூடாது
சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்த இடங்களில், பள்ளிகளில் கோவிட் -19 பரவல்கள் உள்ளன. மே 2021 இல், கலிபோர்னியாவில் தடுப்பூசி போடாத ஆசிரியர், முகக்கவசம் அணியாமல் அவர் கற்பித்த வகுப்பில், பாதி பாதிப்பை கண்டார், இதனால், குழந்தைகள் மூலம் உடன்பிறப்புகள் மற்றும் பெற்றோர்களுக்கு தொற்று பரவியது என்பதை, அமெரிக்க சிடிசி கண்டறிந்தது. இது "வேகமாக பரவுவதற்கான, குறிப்பாக தடுப்பூசி போட முடியாத பள்ளி மாணவர்கள் போன்றவர்களால் தடுப்பூசி போடப்படாத மக்களிடம் சாத்தியக்கூறுகளைக் காட்டுகிறது", ஆய்வு கூறுகிறது. ஆயினும், பெரிய அளவிலான "சமூக பரவல் என்பதற்கு, தடுப்பூசி மூலம் பெரிய அளவில் பரவுவது தடுக்கப்பட்டிருக்கலாம்; இந்த பரவல் சமயத்தில், பள்ளி அமைந்துள்ள நகரத்தில் சுமார் 72% தகுதியான நபர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டனர்" என்று ஆய்வு மேலும் கூறியுள்ளது.
இதேபோல், மே 2020 இல் பள்ளி திறக்கப்பட்ட 10 நாட்களுக்குப் பிறகு இஸ்ரேலில் உள்ள ஒரு பள்ளியில் பெரிய அளவில் தொற்று பரவல் ஏற்பட்டது, இது பெரிய, நெரிசலான வகுப்புகள் என்ற காரணத்துடன் தொடர்புடையது, அத்துடன் வெப்ப அலை காரணமாக முகக்கவசம் அணிவதை பலர் தவிர்த்திருந்தனர்.
பள்ளிகளை வெற்றிகரமாகத் திறக்க மற்றும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோரை சமாதானப்படுத்த, பள்ளி மீண்டும் திறக்கும் தகவல் தொடர்பு மாற வேண்டும் என்று பரிக் பரிந்துரைத்தார். "குழந்தைகளின் கல்வியை மறுப்பதால், ஒரு உண்மையான விலையை தரவேண்டி இருக்கிறது, அந்த விலை, கோவிட் -19 இன் அபாயங்களை விட அதிகமாக உள்ளது" என்று நாம் சொல்ல வேண்டும். மேலும், உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அந்த அபாயத்தை மேலும் குறைப்பதற்கும் நாம் அறிவியல் விஷயங்களைச் செய்கிறோம் " என்றார்.
"புரிந்து கொள்ளக்கூடிய காரணங்களுக்காக நாம் குழந்தைகளுடன் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்கிறோம், எனவே ஏதேனும் நடவடிக்கைகள் ஆபத்தை மேலும் குறைக்க முடிந்தால், நான் அதை ஆதரிப்பேன்" என்று வால் கூறினார். ஒரு முக்கியமான தலையீடு, அதிக வடிகட்டுதல் திறன் கொண்ட முகக்கவசம், குறிப்பாக குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது, மற்றும் பள்ளிகளில் காற்றோட்டம் தேவை என்று, பரிக் கூறினார். கார்பன் டை ஆக்சைடு சென்சார்கள் அல்லது காற்று வடிகட்டிகள் போன்ற சாதனங்களை முடிந்தவரை பயன்படுத்த வேண்டும்.
சார்ஸ்-கோவ்-2 வைரஸ் தொடர்பாக, பள்ளி கழிவுநீரைச் சோதிக்கவும், வைரஸ் கண்டறியப்பட்டால், குழந்தைகள் அல்லது ஊழியர்களைச் சோதிப்பது அல்லது கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் பரிக் பரிந்துரைத்தார். மேலும், போதிய அளவு கிடைக்கப்பெற்றவுடன், 16 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினருக்கு தடுப்பூசி போடுவதை இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
தொற்றுக்கு முன்பு அல்லது தடுப்பூசி மூலம் பெறப்பட்ட 80-85% அல்லது அதற்கும் அதிகமான செரோபோசிடிவிட்டி மட்டுமே, சமூக இடைவெளி போன்ற மருந்து அல்லாத தலையீடுகளை நீக்க முடியும், ஏனெனில் அவை கோவிட் -19 பரவலுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்காது என்று மேனன் கூறினார்.
நோய்த்தொற்றுகளை மட்டுமல்ல, அறிகுறிகளையும் கண்காணிக்க வேண்டும்
அறிகுறியற்ற கோவிட் -19 நோய்த்தொற்றின் ஆபத்து, குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் வேலை செய்யும் வயதுடைய பெரியவர்களுக்கு சமமாக இருக்கும், அதே நேரத்தில் முதியவர்கள் அல்லது நாள்பட்ட தொற்று உள்ளவர்களுக்கு ஆபத்து அதிகம் என்று, அக்டோபர் 19 முதல் நவம்பர் 5, 2020 வரை மதுரையில் ஒரு பெரிய அளவிலான சார்ஸ்-கோவ்-2 கண்காணிப்பு திட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் கோவிட் -19 இன் முதல் அலைக்கு பள்ளிகள் மூடப்பட்ட போதிலும் இது இருந்தது.
ஆனால் கோவிட் -19 நோய்த்தொற்றுகள் மற்றும் பள்ளிகளில் பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் மற்றும் ஆராய்ச்சி காட்டுகிறது. இவை பெற்றோரை கவலையடையச் செய்யவோ அல்லது பள்ளி மூடலுக்கு வழிவகுக்கவோ கூடாது என்று நிபுணர்கள் கூறினர்.
கடுமையான நோய்க்கான அறிகுறிகளுக்கு பெற்றோர்கள் அறிகுறிகளை மிக நெருக்கமாக கண்காணிக்க வேண்டும் என்றார் மேனன். "கோவிட் -19 தொற்று உள்ள பெரும்பாலான குழந்தைகளை வீட்டிலேயே எளிதாக நிர்வகிக்க முடியும்" என்று வால் கூறினார். கோவிட் -19 இன் ஒரு அரிய, ஆனால் அபாயகரமான விளைவு, குழந்தைகளில் பல்நோக்கு அழற்சி நோய்க்குறி ஆகும், மேலும் கோவிட் -19 இல் இருந்து குணமடைந்த பிறகு காய்ச்சல், வீக்கம் மற்றும் சொறி போன்ற எந்த அறிகுறிகளிலும் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மே 2021 இல் நாங்கள் கட்டுரை வெளியிட்டோம்.
ஒட்டுமொத்தமாக, குழந்தைகள் கடுமையான நோய் அல்லது கோவிட் -19 இலிருந்து இறக்கும் அபாயத்தில் உள்ளனர். உதாரணமாக, பதிவான கோவிட் -19 தொற்று பரவல்களில் இறப்பு விகிதம், ஐந்து வயது முதல் 17 வயது வரையிலான 0.05% என்று தொடங்கி, 85 வயது அல்லது அதற்கு மேல் வரை, 16.6% என்று இருந்ததாக , ஆகஸ்ட் 1, 2020 வரை தரவைப் பார்த்த ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் ஒரு ஆய்வு கண்டுபிடிக்கப்பட்டது. சீரோபோசிட்டிவிட்டி ஆய்வுகள் பரிசீலிக்கப்பட்டால், 15-19 வயதிற்குட்பட்ட இளம் பருவத்தினருக்கு தொற்று இறப்பு விகிதம் [மொத்த நோய்த்தொற்றுகளின் விகிதமாக இறப்புகள், வெறும் நோய்ப்பரவல்மட்டும் இல்லை] 0.001% ஆக உள்ளது, இது மதுரை ஆய்வின் அடிப்படையில் ஒவ்வொரு 100,000 இல் ஒன்றாகும் .
டெல்டா உருமாறிய வைரஸ், குழந்தைகளில் மிக கடுமையான நோயை ஏற்படுத்துகிறது என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை என்று மேனன் மற்றும் வால் கூறினார். அமெரிக்காவில், டெல்டா உருமாறிய வைரஸ் பரவியதால், முன்பை விட அதிகமான குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், தடுப்பூசி போடப்படாத இளம் பருவத்தினர், தடுப்பூசி போடப்பட்டவர்களை விட அதிக ஆபத்தில் இருப்பதாக, அமெரிக்க சிடிசி நடத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் அதிக மருத்துவமனை மற்றும் ஐசியு சேர்க்கை ஒரு 'கீழிலக்க பிரச்சனை' என்று வால் கூறினார். ஏனெனில் உருமாறிய டெல்டா வைரஸ், மிகவும் பரவக்கூடியது, இதனால் அதிக எண்ணிக்கையிலான மக்களை பாதிக்கிறது.
"தொற்று எதுவாக இருந்தாலும், ஜலதோஷம் கூட, குழந்தைகள் நோய்வாய்ப்பட்டிருப்பதை யாரும் விரும்பவில்லை, " என்று பரிக் கூறினார். பெரும்பான்மையான குழந்தைகளுக்கு லேசான கோவிட் -19 இருந்தாலும், மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர், 18 வயதுக்குக் குறைவானவர்களாக இருந்தாலும், தீவிர நோய்களின் குறைந்த நிகழ்வு கூட பெரிய எண்ணிக்கையிலான தீவிர வழக்குகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என்று , பரிக் கூறினார்.
இரண்டாவது அலையின் போது சுகாதார அமைப்பு எவ்வாறு தோல்வியடைந்தது என்பதை அறிவது இந்தியாவுக்கு சுகாதார வசதிகள் மற்றும் குழந்தை நல வசதிகளை அதிகரிக்க ஒரு வாய்ப்பாகும், இது கோவிட் -19 க்கு தேவைப்படும் என்பதால் அல்ல, ஆனால் நம் சுகாதார உள்கட்டமைப்பில் "இடைவெளி துளை" இருப்பதை நாம் அறிவதால் என்று, பரிக் கூறினார், குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் டெங்கு மற்றும் மலேரியா நோய்களின் போது மருத்துவமனை படுக்கைகள் பற்றாக்குறையை உதாரணமாகக் கூறலாம்.
அத்துடன், "டெல்டா அலைக்கு நடுவில் பள்ளிகளைத் திறப்பது, டெல்டா அலைக்குப் பல மாதங்களுக்குப் பிறகு பள்ளிகளைத் திறப்பதில் இருந்து மிகவும் வித்தியாசமானது. தங்கள் சொந்த உள்ளூர் தொற்றுநோய்களின் வெவ்வேறு நிலைகளைக் கையாளும் வெவ்வேறு அமைப்புகளில் நம்மால் ஒப்பீடு செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை," என்று வால் கூறினார்.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.