மும்பை:“கோவிட் பரவல் நிகழ்ந்து ஏழு மாதங்களுக்குள், நம்மிடம் 30 தடுப்பூசிகள்; அவை ஏற்கனவே மருத்துவ பரிசோதனைகளில் இருக்கின்றன. இது அறிவியலுக்கு அற்புதமானது”என்று வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரியின் (CMC- சி.எம்.சி.) பேராசிரியர் ககன்தீப் காங், இந்தியா ஸ்பெண்டிடம்தெரிவித்தார். இந்திய ரோட்டா வைரஸ் மற்றும் டைபாய்டு கண்காணிப்பு நெட்வொர்க்குகளை உருவாக்கிய விஞ்ஞானி மற்றும் மருத்துவரான காங், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடனும் பணியாற்றி இருக்கிறார்.

நியூயார்க் டைம்ஸ் கொரோனா வைரஸ் டிராக்கர்கூற்றுப்படி, 165 தடுப்பூசிகள் உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதில் 32 தடுப்பூசிகள், மனிதர்களுக்கு பரிசோதனை என்ற கட்டத்தில் உள்ளன; இரண்டு -ஒரு சீன மற்றும் ஒரு ரஷ்ய தடுப்பூசி -- அந்த நாடுகளில் ஆரம்ப அல்லது வரையறுக்கப்பட்ட பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

நமது நேர்காணலில், தடுப்பூசிகள் மற்றும் அவற்றின் செயல்திறன், மேலும் கோவிட் தொற்றை புரிந்துகொள்வது ஏன் முக்கியம், அது மக்களிடம் எவ்வாறு முன்னேறிச் செல்கிறது என்பது பற்றி காங் பேசினார்.

திருத்தப்பட்ட பகுதிகள்:

கோவிட்19 தொற்றுக்கான தடுப்பூசி கண்டறிவதில் நாம் தற்போது எந்தளவில் இருக்கிறோம்?

உலகளவில், இதுவரையில்லாத வகையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. எபோலாவில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். எபோலாவைப் பொறுத்தவரை, நம்மிடம் தடுப்பூசி என்பது ஃபிரீஸரில் இருந்தது, ஆனால் தடுப்பூசியின் மதிப்பீட்டைத் தொடங்க அனைத்து ஆவணங்களையும் பெற ஒன்பது மாதங்கள் பிடித்தன. அதன்பின் உலகம் ஒன்று கூடி, அவ்வாறு மீண்டும் நடக்க விடமாட்டோம் என்றனர். அதனால்தான், பரவல் ஏற்பட்டதை அங்கீகரித்த ஏழு மாதங்களுக்குள், ஏற்கனவே 30 தடுப்பூசிகள் மருத்துவப்பரிசோதனைகளில் இருக்கின்றன. இது அறிவியலுக்கு அற்புதமான தருணம். ஆனால், மிகவும் சவாலானது, ஏனென்றால் நாம் தடுப்பூசி வளர்ச்சியை நோக்கி மட்டுமே ஏராளமான வளங்களை செலுத்துகிறோம், மற்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் அல்ல. அதுதான் உலகளாவிய காட்சியும் கூட.

இந்தியாவில் நமது நிறுவனங்களால் உருவாக்கப்படும் நிறைய தடுப்பூசி பரிசோதனைக்கு நம்மிடம் பலர் உள்ளனர்; அவற்றில் பல உலகளாவிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளன, சில உள்நாட்டிலும் உருவாக்கப்படுகின்றன.

தடுப்பூசி வளர்ச்சிக்கு நாம் நிறைய வளங்களை ஒதுக்குகிறோம், ஆனால் அது கோவிட்-19ஐ கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அது ஏன் ஒரு தேர்வாக இருக்க வேண்டும்?

இது உண்மையில் ‘ஒன்று’ அல்லது ‘மற்றொன்று’ அல்ல. நல்லதொரு உலகில் முக்கியமான அனைத்து பொது சுகாதார உத்திகளையும் நோக்கிச் செல்ல - சோதனை, தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்துதல் - போன்றவற்றுக்கு உங்களுக்கு போதுமான ஆதாரங்கள் இருக்கும். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நமக்கு போதுமான ஆதாரங்கள் இருக்கும். புதிய மற்றும் எளிதான நோயறிதல்களை உருவாக்குவது, மருந்துகளை மறுபயன்பாடு செய்வது, புதிய மருந்துகளை வடிவமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் தடுப்பூசிகள் மூலம் தடுப்பதை காண்பீர்கள்.

முழுமையாக புரிந்து கொள்ளப்படாத காரணங்களுக்காக, தடுப்பூசிகள் எல்லாவற்றையும் ஒரு பீதியாக உலகம் நினைப்பது போல் தெரிகிறது. நமக்கு தடுப்பூசி கிடைத்தவுடன், பிரச்சினை தீர்க்கப்படும். நான் தடுப்பூசிகளை பெரியளவில் ஆதரிக்கும் போது, தொற்று நோய்களைக் கையாளும் திறனின் ஒரு பகுதி மட்டுமே தடுப்பூசிகள் என்பதையும் நான் அறிவேன். எனவே தடுப்பூசிகளில் கவனம் செலுத்துவதும் நல்லது, ஆனால் நாம் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

வெளிவந்துள்ள தடுப்பூசிகளின் செயல்திறனைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

இந்த தருணத்தில் எந்தவொரு தடுப்பூசியின் செயல்திறனைப் பற்றியும் எங்களுக்கு முழுவதுமாக தெரியாது. அதனால்தான் தடுப்பூசி போடப்படாதவர்களைக் காட்டிலும் தடுப்பூசி போடப்பட்டவர்கள் குறைவான நோயை உருவாக்குகிறார்களா என்பதை அறிய, மூன்றாம் கட்ட ஆய்வுகள், செயல்பாடுகளை ஆய்வுகள் செய்கிறோம். நாங்கள் இப்போது பல தயாரிப்புகளுடன் 3ம் கட்ட சோதனைகளில் இருக்கிறோம், அந்த சோதனைகளின் இடைக்கால மற்றும் இறுதி முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும், பிறகே இதற்கான பதில்கள் கிடைக்கும்.

ஆனால் இது ஒரு வைரஸ் என்பதால், நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம், சில குரங்குகளிடம் நடந்த ஆய்வுகளில் இருந்து நம்மிடம் உள்ள தரவுகளைப் பொறுத்தவரை, அடுத்த ஆறு முதல் 12 மாதங்களில் வெற்றிகரமான தடுப்பூசி பெறுவதற்கான மிக உயர்ந்த வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். வெற்றிகரமான தடுப்பூசி வைத்திருப்பது முதல்படி மட்டுமே என்பதை நினைவில் கொள்வது அவசியம். இந்த தடுப்பூசிகள் முதலில் இளம் மற்றும் ஆரோக்கியமானவர்களிடம் பரிசோதித்து பார்க்கப்படுகிறது. அதிகம் பாதிக்கப்படுபவர்கள் வயதானவர்கள். இந்த தடுப்பூசி வயதானவர்களுக்கு வேலை செய்யுமா என்பது தெரியாது. ஆக்ஸ்போர்டு சோதனையில் குறைந்த எண்ணிக்கையிலான முதியவர்கள் உள்ளனர், ஆனால் நமக்கு செயல்பாட்டு தரவை வழங்க இது போதுமானதாக இருக்காது.

ஒரு தடுப்பூசி என்ன செய்யும், கோவிட்19 விஷயத்தில் இது எவ்வாறு செயல்படும்?

ஒரு சிறந்த தடுப்பூசி என்பது என்னவென்று பார்த்தால் - இது ஒரு நாசி தெளிப்பாக இருப்பது இன்னமும் சிறப்பு, அதனால் நான் ஷாட் கூட எடுக்க வேண்டியதில்லை - மேலும், வாழ்வதற்கான நான் தொற்றுநோயில் இருந்து பாதுகாக்கப்படுகிறேன். நான் ஒருபோதும் மற்றொரு உந்துகலனை பயன்படுத்தத் தேவையில்லை, நான் பாதுகாப்பாக வெளியே செல்ல முடியும், இந்த நோய்த்தொற்றை நான் ஒருபோதும் பெறமாட்டேன் என்பதும் எனக்குத் தெரியும். துரதிர்ஷ்டவசமாக, அந்த தடுப்பூசிகள் அரிதானவை; நீங்கள் பெயரிட விரும்பும் எந்தவொரு நோய்க்கும் நம்மிடம் இல்லை. உங்களுக்கு பல ஊசிகள் தேவை, உங்களுக்கு உந்துகலன் தேவைப்படலாம். இது எல்லோருக்கும் வேலை செய்யாமல் போகலாம். நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு இது நிச்சயமாக வேலை செய்யாது.

எனவே ஒரு தடுப்பூசி என்ன செய்கிறது என்பதை பார்த்தால், தடுப்பூசி எவ்வாறு செயல்படும் என்பதைப் பார்ப்பதற்கான ஒரு வழி இன்ஃப்ளூயன்ஸாவை பார்ப்பது. இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய தடுப்பூசி தயாரிக்க வேண்டும், ஏனெனில் அதில் விகாரங்கள் மாறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நாம் தடுப்பூசி எடுக்க வேண்டும், ஏனெனில் குறுகிய கால பாதுகாப்பு மற்றும் ஓரளவு [நோயெதிர்ப்பு அமைப்பு] நினைவகம் உள்ளது, ஆனால் அது பெரிதாக இல்லை. சில ஆண்டுகளில் தடுப்பூசி இயங்காமலும் போகும்.

கொரோனா வைரஸ்களுடன் அந்த வகையான மாறுபாட்டை நாம் காண முடியாது. நமக்கு நோயெதிர்ப்பு திறன் இருக்கும் என்று நினைக்கிறேன்; ஆனால் மக்கள் எந்த காலத்திற்கு பாதுகாக்கப்படுவார்கள் என்பதும் அந்த பாதுகாப்பு கடுமையான நோய் அல்லது தொற்றுநோயில் இருந்து வருமா என்பதும் தெரியாது. ஏராளமான மக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள், ஆனால் எல்லோரும் நோயுற்றிருக்க மாட்டார்கள். எனவே இது நோயைத் தடுக்க வேண்டும் என்பதே நமது குறைந்தபட்ச தடுப்பாகும். எஃப்.டி.ஏ [உணவு மற்றும் மருந்து நிர்வாகம்], அமெரிக்க கட்டுப்பாட்டாளர் மற்றும் உலக சுகாதார அமைப்பு [WHO] பரிந்துரைத்ததை பார்த்தால், ஒரு புள்ளி மதிப்பீடாக 50% செயல்திறனைக் கொண்ட தடுப்பூசிகளுக்கு உரிமம் தருவதாக அவர்கள் கூறியுள்ளனர் - அதாவது தடுப்பூசி, சோதனையில், உறுதிப்படுத்தப்பட்ட நோய்களில் குறைந்தது 50% ஐ தடுக்க வேண்டும். இது தொற்று பற்றியது அல்ல.

கோவிட்-19 ஐ கட்டுப்படுத்துவதில் உள்ள மற்ற ஒன்று குணமாகுதல். சிகிச்சைமுறை இப்போது கருத்தியல் ரீதியாக மிகத்தொலைவில் தோன்றுகிறதா; நாம் நமது முட்டைகள் அனைத்தையும் எவ்வாறு தடுப்பூசி என்ற கூடையில் வைக்கப் போகிறோம்?

ஒரு சிகிச்சை என்பது ஒரு வைரஸ் எதிர்ப்பு என்று நினைக்கிறேன். இந்த விஷயத்தில், நோய் வேகமாக முன்னேறும்போது, அதற்கு வெவ்வேறு கட்டங்களில் பல்வேறு வகையான மருந்துகள் தேவை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆரம்ப கட்டங்களில், வைரஸ் தடுப்பு என்பது நிச்சயம் நல்ல ஒரு யோசனையாக இருக்கும். ஆனால் கோவிட் 19 காரணமாக நாம் காணும் நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு ஆகியன வைரஸ் காரணமாக மட்டுமே இல்லை. இது உண்மையில் நோயெதிர்ப்பு அமைப்பை எடுத்துக்கொண்டது, மற்றும் அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. வைரஸை அகற்ற முயற்சிக்கும்போது, அது பல விளைவுகளை ஏற்படுத்தும், அதன் பிறகு கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும். எனவே வைரஸ் பற்றி புரிந்துகொள்வதும், கடும் நோய்வாய்ப்பட்டவர்களிடம் அதன் செயல்முறையை புரிந்து கொள்வதும் மிக முக்கியம்.

சிகிச்சை அல்லது சிகிச்சையின் கூறுகள் இப்போது வேலை செய்வதால் என்னவாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

ஆரம்பகட்டத்தில் நாம் நோய் தடுப்பு மருந்தை தேடுவோம், இதனால் தொடக்கத்தில் கடும் நோய்க்கு ஆளாக மாட்டோம். நீங்கள் கடுமையான நோய்க்கு ஆளானதும், வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்படும் பாதைகளை தேடுவோம்; அதுதொடர்பாக என்ன செய்ய முடியும் என்பதையும் ஆராய்வோம். எடுத்துக்காட்டாக, ரெமெடிவிர் ஒரு வைரஸ் தடுப்பு மற்றும் நோய்க்கு முந்தைய மற்றும் அதற்கு முந்தையதை பயன்படுத்த வேண்டுமா என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். டெக்ஸாமெதாசோன் ஒரு ஸ்டீராய்டு, தீவிர நோய் கட்டுப்படுத்துவதில் அதன் பங்கை நாம் மதிப்பீடு செய்ய வேண்டும். எனவே, நோய்த்தொற்றின் போக்கில் நாம் எதைப் பார்த்தாலும், லேசான மற்றும் கடுமையான நோயை மாற்றியமைப்பதற்கான வெவ்வேறு அணுகுமுறைகளை மதிப்பீடு செய்வதையே பார்க்க வேண்டும்.

நமக்கு தெரிந்தவற்றில் இருந்து பார்த்தால், இந்நோய் சில சந்தர்ப்பங்களில் ஆபத்தானது. நிர்வகிக்கப்படும் மருந்துகள் கூட சிலவற்றில் வேலை செய்கின்றன, மற்றவற்றில் வேலை செய்யாது. நீங்கள் அதை விளக்கும் போது, நோய் உடலுக்குள் ஒரு குறிப்பிட்ட முனையைத் தாண்டி, நோயெதிர்ப்பு அமைப்பு மோசமாக செயல்படும் சூழ்நிலைகளில், எந்த மருந்தும் உண்மையில் செயல்படாது. எனவே கோவிட்19 ஐ தாண்டி, நமக்குத் தெரியாத சில நோய் நிலைமைகளுக்கு அது ஒன்றுபோல் இருக்கிறதா?

இதில் பார்க்க வேண்டிய பல கூறுகள் உள்ளன. ஒன்று நுரையீரலில் ஏற்படும் விளைவு. கோவிட்19 தொற்றுள்ள நுரையீரல் மற்ற வகையான நிமோனியாவில் காணும் நுரையீரலை போன்றதல்ல என்பதை அறிவோம். மக்கள் விவரிக்கும் பிறவகை ஹைப்போக்ஸியா (ஆக்ஸிஜன் செறிவு ஒருவருக்கு அசவுகர்யமாகவோ அல்லது மூச்சுத்திணறலுடனோ அவசியமின்றி குறைவது) மற்ற நோய்களில் நாம் காணாத ஒன்று என்று தோன்றுகிறது. இதற்காக நாம் கண்டறிந்த சிகிச்சையில் ஒன்று, முன்னர் அறியப்பட்ட ஒன்று ஆனால் பரவலாக பயன்படுத்தப்படவில்லை. நுரையீரலின் ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கும் திறன் இதுதான், முதுகில் இருப்பதை விட வயிற்றில் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம். அது வெறும் அறை காற்றோட்டத்துடன் இயங்குகிறது, மேலும் நாசி உபகரணம் அல்லது முகக்கவசம் மூலம் கூடுதல் ஆக்ஸிஜனை வழங்கும்போது இது செயல்படும். நுரையீரல் காற்றோட்டம் முக்கியமானது.

பார்க்க வேண்டிய இரண்டாவது கூறு, பெருகுவதை கட்டுப்படுத்துவதாகும், இதை டெக்ஸாமெதாசோன் செய்கிறது, மூன்றாவது கூறு இரத்த நாளங்களில் என்ன நடக்கிறது என்பதுதான். இதுதான் நுரையீரலை மட்டுமல்லாமல் உடலில் உள்ள பல உறுப்பு அமைப்புகளையும் பாதிக்கிறது. குறைந்த மூலக்கூறு-ரத்தம் உறைதல் தடுப்பானின் எடை [ஒரு ஆன்டிகோகுலண்ட் அல்லது பிளட் தின்னர்] உதவக்கூடும் என்பதை இப்போது நாம் அறிவோம். ஆகவே, ஆன்டிகோகுலேஷன் மற்றும் அது பயன்படுத்தப்பட வேண்டிய இடம் ஆகியன கடந்த சில மாதங்களில் மட்டுமே சோதனை செய்யப்பட்டு முயற்சிக்கப்பட்டவை. இதுபோன்ற பரிசோதனைகள் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன், இது நோயாளி உயிர் பிழைக்க சிறப்பாக வழிவகுக்கும்.

நீங்கள் எபோலாவைக் குறிப்பிட்டிருந்தீர்கள். கோவிட்19 தொற்றை எபோலாவில் இருந்து வேறுபடுத்தும் இரண்டு அல்லது மூன்று விஷயங்கள் யாவை?

பொதுசுகாதாரத்தின் பார்வையில், நோய்களை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியவை: நோய் பரவுதல் எப்படி? யாரிடம் இருந்து அதை யார் பெறுகிறார்கள்? எபோலாவில், இது ஒருவருக்கு இன்னொருவர் மூலம் பரவுவதை மிகத்தெளிவாக அறிந்திருந்தோம், எபோலா தொற்று ஏற்பட, நோயாளியுடன் தொடர்பில் இருந்திருக்க வேண்டும். எனவே, எபோலாவின் இனப்பெருக்க எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது. அதனால்தான் பரவலின் போது மிகப்பெரிய அளவில் 30,000 வழக்குகள் இருந்தன.

கோவிட்19-ஐ ஏற்படுத்தும் சார்ஸ்-கோவ்- 2 வைரஸை பொறுத்தவரை, நாம் பார்ப்பது சுவாசப்பாதை வழியாக பரகிறது. அதாவது தொற்றுநோய் பரவ, நீங்கள் அந்நபருடன் நேரடியாக தொடர்பு கொள்ளத் தேவையில்லை. மற்ற பெரிய வித்தியாசம் என்னவென்றால், ஒரு நபர் அறிகுறியற்ற அல்லது முன் அறிகுறியாக இருக்கும்போது அது பரவுகிறது. இதுதான் நாம் இங்கு காணும் நோய்த்தொற்றுகளின் உயர்விகிதங்களின் விளைவாகும். எனவே ஒரு பொது சுகாதார பார்வையில், நாம் எந்த வகையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையில் இருந்து, இவை இரண்டு வேறுபட்ட நோய் நிலைமைகள். பின்னர் நீங்கள் மருத்துவம் சார்ந்து பார்த்தால், ஒவ்வொரு நோயும் அந்த சூழலில் நிச்சயம் வேறுபட்டது.

மும்பை, டெல்லி மற்றும் சமீபத்தில் புனேவுக்கான நோய் பரவல் தன்மை குறித்த கணக்கெடுப்புகளை நாம் பார்த்துள்ளோம்; கணக்கெடுக்கப்பட்டவர்களில் 50% பேரிடம் நோயெதிர்ப்பு இருப்பதைக் கண்டறிந்தோம். இது, எதை குறிக்கிறது?

மாதிரிகள் எடுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் எவ்வகையில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இது கூறுகிறது. எனவே ஆன்டிபாடிகளின் இருப்பு என்பது கடந்த காலங்களில் நீங்கள் ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதோடு உங்கள் உடல் அதற்கு பதிலளித்தது. ஒன்று, இந்த பகுதிகளில், வழக்குகளை கணக்கிடுவது போதுமானதாக இல்லை என்று அது நமக்கு சொல்கிறது. வழக்குகளின் எண்ணிக்கையில் நாம் எந்த காரணியாக இருந்தோம் என்பதை இது சொல்ல முடியும்.

எதிர்காலத்தில், நோயெதிர்ப்பு நடவடிக்கைகள் உண்மையில் எதைக் குறிக்கின்றன என்பது பற்றி நாம் நன்கு புரிந்துகொள்ளும்போது, தொற்றுநோயில் இருந்து நாம் எவ்வளவு காலம் பாதுகாக்கப்படலாம் என்பதை அது நமக்குத் தெரிவிக்கும். அவை இன்னும் நம்மிடம் இல்லை, ஆனால் தொற்றுநோயைக் கண்காணிக்க செரோ ஆய்வுகள் பயனுள்ளதாக இருக்கும், அடுத்தடுத்த தொற்றுகளில் இருந்து மக்கள் பாதுகாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளாக இருக்கும்.

அதிகமான மக்கள் உண்மையில் வைரஸால் தொடர்பு கொண்டிருந்தாலும், அதனால் அவர்கள் பெரியளவில் பாதிக்கப்படவில்லை என்பது உங்களுக்கு ஆறுதலளிக்கிறதா?

ஆமாம். இதுபற்றி சிந்திக்க ஒரு வழி என்னவென்றால், உண்மையில் புனே மற்றும் மும்பையில் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அங்கு அதிகளவு நோய்கள் இருந்தன; அந்த இடங்களில் இருந்து இடைநிலை வழக்குகள் பதிவாகின்றன. மக்கள் தொகையில் 10% பாதிக்கப்படுவார்கள் என்று நாம் எதிர்பார்த்தோம்; அது உண்மையில் 50% ஆகும்.

இது ஒரு நல்ல விஷயம், நாம் நினைத்ததை விட உண்மையில் நோய் எதிர்ப்பு சக்தியுடன் நெருக்கமாக இருக்கக்கூடும் என்று இது கூறுகிறது, ஆனால் வேறு என்ன இருக்கிறது என்பதை நீங்கள் அதை எதிர்மறையாகவும் பார்க்கலாம்; எதிர்காலத்தில் ஒரு சிறந்த பிடிமானத்தை பெற முயற்சிக்க வேண்டும் என்பதை நாம் தவறவிட்டோம்.

இந்நோயை கையாளுவதில் உங்கள் கவனமும் உந்துதலும் என்னவாக இருக்க வேண்டும்?

நமது கொள்கைகள் தொடக்கத்தில் இருந்ததைப் போலவே உள்ளன. முடிந்தவரை பரவலாகவும் அடிக்கடி சோதிக்கவும் வாய்ப்பு இருக்க வேண்டும். சோதனைகளின் முடிவுகளின்படி துரிதமாக செயல்பட வேண்டும். இன்று சோதனை செய்து, மூன்று அல்லது ஐந்து நாட்கள் அல்லது ஒரு வாரத்தில் முடிவைப் பெறுவதால் எந்த பயனும் இல்லை. உங்களுக்கு செயல்படும் திறன் இல்லை என்றால் அது பயனுள்ளதாக இருக்காது. நீங்கள் செய்ய முயற்சிப்பது பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பரவுவதைத் தடுப்பதாகும், இதனால் சமூகத்தில் ஒட்டுமொத்த எண்ணிக்கை குறையும். நாம் சோதித்தால் அதை தடுக்கலாம்; விரைவாக தனிமைப்படுத்தப்படுவதை உறுதிசெய்கிறோம். சமூகத்தில் வைரஸ் பரவலை குறைக்க, தொடர்பு கொண்டவர்களை வெளிப்படையாகக் கண்டுபிடித்து சோதிக்க வேண்டும். இது சாத்தியமானது, ஆனால் நிறைய வளங்கள் தேவை என்பதை உலகம் முழுவதும் இருந்து பல உதாரணங்களில் இருந்து பார்த்தோம்.எனவே நடைமுறையை இலக்காக கொண்டு சமப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் கோவிட்19 வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை இதே போக்கில் இருக்கும் என்று நினைக்கிறீர்களா, அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களில் குறையத்தொடங்குமா? நாம் எப்போது, எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியா அதன் மக்கள்தொகையைப் பொறுத்து மிகப்பெரிய நாடு. நம்மிடம் மக்கள் அடர்த்தி வரம்பும் உள்ளது. நாம் பார்த்தது, அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகள் முதலில் பாதிக்கப்பட்டுள்ளன, இப்போது நாம் 2ம் அடுக்கு நகரங்களில் பாதிப்பை சந்தித்து வருகிறோம். நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. ஒட்டுமொத்த எண்ணிக்கை முறை மாறப்போகிறது என்று நான் நினைக்கவில்லை, ஆனால் நோய் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவுவதால் வடிவங்கள் வெளியேறும் இடத்தில் மாறும். நாம் இதே எண்ணிக்கையில் இருப்பதாக சொல்வது மிகவும் கடினம்; நாம் சமமானதாக இல்லை; ஆனால் சில இடங்களில் எண்ணிக்கை கீழ்நோக்கி செல்கிறது, நாம் மற்றவர்களுடன் முன்னேறுகிறோம்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.