கோவிட் 19: சுகாதாரத்துக்கான குறைந்த அணுகல், தடைபட்ட வசிப்பிடம், ரோஹிங்கியா அகதிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து
புதுடெல்லி: டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்.சி.ஆர்) ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள், கோவிட்19 தொற்றால் பாதிக்கப்படும் அதிக ஆபத்தில் உள்ளனர்; ஏனெனில் அவர்கள் நெரிசலான வாழ்விடங்களில் வாழ்கின்றனர். பொது சுகாதாரத்துக்கான அணுகல் என்பது, அவர்களுக்கு குறைவாகவே உள்ளது என்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்த மூன்று வாரங்களுக்கு பிறகு 14,000-க்கும் மேற்பட்டோருக்கு, கொடிய கோவிட் 19 தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. ரோஹிங்கியா அகதிகளை கண்காணிக்க அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதாக செய்திகள் கூறுகின்ற்ன; ஏனெனில் அவர்களில் சிலர், கடந்த மாதம் டெல்லியின் நிஜாமுதீனில் உள்ள தப்லிக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கலாம் என்பதால் தான்; இது, பின்னர் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்தது.
டெல்லி-என்.சி.ஆர் முழுவதும் உள்ள முகாம்களின் நிலைமை ஆபத்தானது என்று, இந்தியா முழுவதும் ரோஹிங்கியா நலனுக்காக பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனமான ரோஹிங்கியா மனித உரிமைகள் முயற்சி (ஆர் 4 ஆர்) அமைப்பு கூறுகிறது. "இதுவரை எந்தவொரு தொற்று வழக்குகளும் பதிவாகவில்லை; ஆனால் காளிந்தி கஞ்ச் மற்றும் மதான்பூர் காதர் முகாம்களில் காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற சில அறிகுறிகளை காண்கிறோம். ரோஹிங்கியாக்களை பொறுத்தவரை, சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்தல் என்பது அவர்களால் பெற இயலாத ஒன்று,” என்று ஆர் 4 ஆர் கூறுகிறது.
“மும்பையில் உள்ள தாராவியை பற்றி சிந்தியுங்கள். அங்குள்ள முகாம்கள் நடப்பது எவ்வளவு தடைபட்டுள்ளன. இரண்டு அறைகள் என்பதே, அங்கு ஆடம்பரமான ஒன்றாகும்; முழு குடும்பத்தையும் பாதிக்காமல் ஒருவரை அங்கு தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது,” என்று, சமூகத்துடன் இணைந்து செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனமான உபாய்ஸ் சைனுலப்தீன் அமைதி அறக்கட்டளையின் அர்ஷத் நிஹால் கூறினார். தாராவியின் குடிசைப்பகுதியில் வாழும் சூழல்கள், உண்மையில் கோவிட்19 ஹாட்ஸ்பாட்டை உருவாக்கியுள்ளன; இங்கு ஏப்ரல் 17, 2020 நிலவரப்படி 100 நோயாளிகள் மற்றும் 10 இறப்புகள் பதிவாகியுள்ளன.
ஃபரிதாபாத் மற்றும் ஹரியானாவின் நுஹ் மாவட்டம் போன்ற பிற ரோஹிங்கியா அகதிகள் முகாம்களும், இதிலிருந்து வேறுபட்டவையல்ல. தப்லித் ஜமாஅத் உறுப்பினர்கள், நுஹ் பகுதியில் உள்ள “இஜ்தேமா”வில் (சபை) கலந்து கொண்டதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த முகாம்களிலும் தொற்றுநோய் பரவக்கூடும் என்ற அச்சத்தை இது அதிகரிக்கும்.
நவம்பர் 2019 அன்று, டெல்லி-என்.சி.ஆர் பகுதி குப்பைக்கிடங்கில் காத்திருந்த ஒரு ரோஹிங்கியா அகதி.
இருப்பினும், டெல்லி, ஹரியானா மற்றும் ஜம்மு ஆகிய இடங்களில் நடந்த தப்லிக் நிகழ்வோடு தொடர்புடைய ரோஹிங்கியா அகதிகள், ஏற்கனவே 2020 மார்ச் மூன்றாம் வாரத்தில் கண்காணிக்கப்பட்டு தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்டதாக, டெல்லியில் உள்ள அந்த சமூக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். "ஜமாஅத் வழக்கு காரணமாக மார்ச் மாதம் கண்காணிக்கப்பட்டு 12 பேர் தனிமைப்படுத்தப்பட்டதை நாங்கள் அறிவோம்," என்று ஆர்4 ஆர்-இன் நிறுவனர் சப்பர் க்வே மின் கூறினார்.
தப்லிக் மாநாட்டு நிகழ்வுக்கு பிறகு ஜம்முவிற்கு திரும்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளும், ஏற்கனவே கண்காணிக்கப்பட்டுள்ளதாக, ஆர்4ஆர் அமைப்பின் ஜம்மு பிரிவை சேர்ந்தவரும், யு.என்.எச்.சி.ஆர் கூட்டுடன் செயல்படுத்தும் சேவ் தி சில்ட்ரன் அமைப்பில் பணிபுரிபவருமான அப்துல் ரோஹிம் தெரிவித்தார். "ஜம்முவில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுகு கோவிட் 19 நோயின் எந்த அறிகுறிகளையும் தென்படவில்லை. இதுவரை, ஜம்முவில் உள்ள மற்ற சமூக உறுப்பினர்களிடையே எந்த அறிகுறிகளையும் நாங்கள் பார்க்கவில்லை” என்றார்.
அரசின் கண்காணிப்பு ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், இத்தகைய செயல்பாடு அல்லது பிரச்சினையை வைத்து, அதை வகுப்புவாதமாக்குவார்கள் என்று அகதிகள் அஞ்சுகிறார்கள். "எந்தவொரு அகதிக்கும் இந்நோய் வந்தால், ரோஹிங்கியா அகதிகள் வைரஸை கொண்டு வந்தார்கள் என்று கூறுவார்களோ என்று நான் பயப்படுகிறேன்," என்று சபர் கூறினார். இந்திய அரசால் அகதிகளாக முறையாக அங்கீகரிக்கப்படாத ரோஹிங்கியாக்கள், தங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை குடிமக்களாக அங்கீகரிக்காத மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகி வரும் மியான்மருக்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.
சுகாதாரத்துக்கான சிறிய அணுகல்
ரோஹிங்கியா அகதிகள், அவர்களது நிலையற்ற வாழ்வு காரணமாக, சாதாரண சூழ்நிலைகளில் கூட அடிப்படை சுகாதார சேவையை அணுக போராடுகிறார்கள். நுஹ் பகுதியில், முகாம் குடியிருப்பாளர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு குறைந்த அளவிலேயே கவனிப்பை பெற்றதாகவும், 2016 ஆம் ஆண்டில் 17% பிரசவங்கள் முகாமிலேயே நடந்ததாகவும் கூறினார்.
ஃபரிதாபாத்தில் (புடேனா காவ்ன் மற்றும் மிர்சாபூர்) அமைந்துள்ள முகாம்களில், இக்கதை ஒத்துப்போகிறது. அங்கு உள்ளூரை சேர்ந்த பாட்ஷாகான் மருத்துவமனையால் பரிந்துரைக்கப்பட்டும், ஊரடங்கால் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அகதிகள் செல்ல வழியில்லை. இங்கே, அனைத்து பிரசவங்களும் முகாமிலேயே நடைபெறுகின்றன.
காளிந்தி கஞ்ச் பகுதியில், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான தூதரகத்தால் (யு.என்.எச்.சி.ஆர்) அவ்வப்போது மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, சஃப்தர்ஜங் மருத்துவமனை அளிக்கும் ஆலோசனைக்கும் நிதியுதவி அளிக்கப்பட்டுகிறது என்று, குடியிருப்பாளர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். இருப்பினும், ஊரடங்கு காரணமாக பெரும்பாலும் அதிக கட்டணம் பெறப்பட்டும் தனியார் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற, அவர்கள் தூண்டப்படுகிறார்கள். குடியிருப்பாளர்கள் பெரும்பாலும் அருகிலுள்ள ஜாமியா ஹம்டார்ட் மற்றும் அல்ஷிஃபா மருத்துவமனைகளால் வழங்கப்படும் மருத்துவ பொருட்களை சார்ந்துள்ளார்கள்.
சுகாதாரத்துக்கான அணுகல் இதேபோல் நுஹ் பகுதியிலும் உள்ளது - இங்குள்ள குடியிருப்பாளர்கள் ஒரு உள்ளூர் பள்ளிக்கு பரிசோதனைகள், நோய்கள் மற்றும் தடுப்பூசிகளுக்குச் செல்கிறார்கள், இருப்பினும் இந்த வசதி ஒரு மருந்தகம், அங்கன்வாடி அல்லது ஆரம்ப சுகாதார மையம் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. கடைசியாக இங்கு 2016இல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வசிக்கும் அகதிகள் தங்கள் அழைப்புகளுக்கு ஆம்புலன்ஸ் ஒருபோதும் வருவதில்லை என்று புகார் கூறினர். அவசரநிலைகளுக்காக அவர்கள் பார்வையிட்ட இரண்டு மருத்துவமனைகள் (நல்ஹார் மற்றும் நுஹ் மருத்துவக்கல்லூரி) பெரும்பாலும் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ளன.
தற்போதைய ஊரடங்கு காரணமாக, அதை அணுக முடியாது.
டெல்லி-என்.சி.ஆர் முழுவதும் முகாம்களில் வசிக்கும் ரோஹிங்கியாக்கள் எதிர்கொள்ளும் சுகாதார ஆபத்து, இந்த அகதிகள் ஈடுபடும் தொழிலால் அதிகரிக்கிறது. கலிண்டி கஞ்ச் முகாமில் வசிக்கும் சிலர், அபாயகர உயிரி மருத்துவக்கழிவுகளை பிரித்தெடுப்பதில் ஈடுபட்டுள்ளனர்; இது, ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய சமூகத்திற்கு தொற்று அபாயத்தை அதிகரிக்கின்றனர். ஃபரிதாபாத்தில் உள்ள ரோஹிங்கியா சமூகத்தவரை ஆதரித்து வரும் உபாய்ஸ் சைனுலப்தீன் அமைதி அறக்கட்டளை (யுஎஸ்பிஎஃப்), அங்கும் இதே போன்ற கவலைகளை வெளிப்படுத்தியது.
"தற்போது டெல்லி-என்.சி.ஆர் முழுவதும் பல்வேறு முகாம்களுக்குள் சமூகத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்; இது அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறது, அவர்களுக்கு உதவ முயற்சிகள் நடந்து வருகின்றன" என்று யுஎஸ்பிஎஃப் நிஹால் கூறினார். "ஊரடங்கின் போது அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வது எங்களுக்கு உள்ள முக்கிய சவால். அவர்கள் தரம் பிரிக்கும் எந்தவொரு அறுவை சிகிச்சை மற்றும் உயிரி கழிவுகளையும் அவர்கள் வெளிப்படுத்துவது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். ஃபரிதாபாத்தின் உறவினர் தனிமை ஒரு நன்மை, ஆனால் முகாம் அல்லாத பகுதிகளில் வசிக்கும் ரோஹிங்கியாக்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள்” என்றார்.
"நாங்கள் 70 குடும்பங்கள் கஜோரி காஸில் வாடகைக்கு தங்கியுள்ளோம். எங்களிடம் இப்போது உணவுப்பொருட்கள் உள்ளன; ஆனால் வருமானம் இல்லை, நாங்கள் எப்படி வாடகை செலுத்துவோம்? ஏற்கனவே சில குடும்பங்கள் வாடகை செலுத்தாமல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன, ” என்று கஜோரி காஸில் வசிக்கும் ரோஹிங்கியா குடியிருப்பாளர் ஷாஃபி மொஹமட்* கூறினார்.
அரசின் அலட்சியம்
அகதிகள் மத்தியில் கோவிட்19 பரவல் குறித்து எழும் அச்சத்தால், குடியிருப்பாளர்களுக்கு அச்சுறுத்தலின் தீவிரத்தை வெளிப்படுத்த, சமூக உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் புதிய வழிகளை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.
"நாங்கள் அவர்களின் தாய்மொழியில் (ரோஹிங்கியா) சில எச்சரிக்கை வீடியோக்களை உருவாக்கியுள்ளோம், அவை முகாமில் வசிப்பவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கிறோம். அத்தியாவசிய பொருட்களையும் விநியோகிக்கிறோம், ”என்று யுஎஸ்பிஎஃப் நிஹால் கூறினார். அத்துடன் ஃபரிதாபாத், கலிண்டி கஞ்ச், ஷாஹீன் பாக் மற்றும் கஜோரி காஸ் ஆகிய பகுதி முகாம்களில் உணவு, முகக்கவசங்கள், சானிடிசர்கள் மற்றும் சோப்பை ஒரு குறிப்பிட்ட திறனில், ஆர் 4 ஆர் விநியோகித்து வருகிறது. "நாங்கள் உணவுப்பொருட்களை அனுப்பியுள்ளோம், ஆனால் மருந்து பொருட்களை விநியோகிக்க எங்களுக்கு கூடுதல் நிதி உதவி தேவை" என்று சபர் கூறினார்.
இந்தியாவில் உள்ள யு.என்.எச்.சி.ஆர் மற்றும் அதன் செயல்படுத்தும் பங்களிப்பாளர்கள் (சமூக அக்கறை மற்றும் ஒத்துழைப்புக்கான போஸ்கோ அமைப்பு, மேம்பாடு மற்றும் நீதி முயற்சி, சேவ் சில்ரன்ஸ் மற்றும் பிறர்) உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய அரசிடம் இருந்து பெறும் நம்பகமான தகவல்களை எட்டு வெவ்வேறு மொழிகளில் பரப்புகின்றனர். அகதிகளை சென்றடையும் வகையில் யு.என்.எச்.சி.ஆர் கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் ஏற்படுத்தியுள்ளது என்று, அதன் டெல்லி அலுவலகம் 2020 மார்ச் 27 அன்று இந்தியா ஸ்பெண்டிற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2020 நிலவரப்படி, அவர்கள் முகாம்களில் உணவுப் பொருட்கள், சோப்பு மற்றும் சானிடிசர் ஆகியவற்றையும் விநியோகித்து வருகின்றனர்.
வெளிப்புற அமைப்புகளின் மீதான இந்த சார்பு, குறிப்பாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது, சாதாரண சூழ்நிலைகளில் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன, இது நீண்டகால ஊரடங்கின் போது குறைந்துவிட்டது. டெல்லி-என்.சி.ஆரை சுற்றியுள்ள ‘ஹாட்ஸ்பாட்களை’ டெல்லி அரசு சீல் வைத்துள்ளதால், அவர்களின் செயல்பாடுகள் மேலும் தடை செய்யப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே சுகாதார மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான அணுகல் துண்டிக்கப்படலாம். வெளியே நடமாடுவதற்கான பாஸ், ஆர் 4 ஆர் அமைப்பால் பெற முடிந்தது என்பதை இந்தியா ஸ்பெண்ட் உறுதிப்படுத்தியது, ஆனால் அவர்களின் விநியோகம் மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பணிகள், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளன.
ரோஹிங்கியா சமூகமும், அதன் குடியேற்றங்களும் பெரியளவில் கோவிட் 19 தொற்றுக்கு காரணியாகின்றனவா என்பது குறித்து மத்திய அல்லது மாநில அரசுகளிடம் இருந்து சிறிய அறிகுறிகள் உள்ளன. ரோஹிங்கியாக்களை கண்காணிப்பதற்கான சமீபத்திய உத்தரவு, இந்தியா முழுவதும் உள்ள தப்லித் ஜமாஅத் நிகழ்வுகளில் ரோஹிங்கியாக்கள் பங்கேற்பதை பற்றிய கவலைகளை எழுப்பியது; ஆனால், நிரம்பி வழியும் முகாம்களின் சுகாதார நிலைமைகள் அல்ல.
மதன்பூர் காதர் முகாமில், குடியிருப்பாளர்கள் கோவிட் 19 போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ரோஹிங்கியாக்களின் சுகாதாரத்துக்கான வரம்புடன் கூடிய அணுகல் மற்றும் டெல்லியில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் புறநோய் பிரிவுகள் மூடப்பட்டிருப்பதால் யு.என்.எச்.சி.ஆரின் விழிப்புணர்வு மற்றும் தயாரிப்பு முயற்சிகள் பயனற்றவை என்பதை நிரூபிக்கக்கூடும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனான உரையாடல்கள் இதுவரை ரோஹிங்கியா முகாம்களில் முறையாக எந்த நோயாளிகளும் கண்டறியப்படவில்லை என்பதையே காட்டுகின்றன.
மார்ச் 24, 2020 அன்று இந்தியா முழுவதும் மொத்தமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்தும், அதன் பிறகு 2020 மே 3 வரை நீட்டிக்கப்பட்டதில் இருந்தும், பல்வேறு மாநில அரசுகள் ஏழைகளுக்கும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் உதவிகளை அறிவித்துள்ளன. டெல்லி அரசு தங்குமிடம் மற்றும் அரசு பள்ளிகளில் தங்கியிருப்பவர்களுக்கு இலவச உணவை அறிவித்துள்ளது, மேலும் தலைநகரில் குடியேறும் புலம்பெயர்ந்தவர்களை கவனிக்கும் நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இருப்பினும், இந்த முயற்சிகள் ரோஹிங்கியா அகதி சமூகங்களுக்கு பயனளிக்கவில்லை என்று ஆர்4ஆர்- இன் சபர் கூறினார். சமீபத்திய உத்தரவை தவிர, மியான்மரில் இருந்து 18,914 பேர் குடிபெயர்ந்த சமூகத்திற்கான நடவடிக்கைகள், கொள்கை அறிவிப்புகள் எதுவும் இந்தியாவில் வெளியிடப்படவில்லை. யு.என்.எச்.சி.ஆரால் 2,09,234 பேர் "கவலைகொள்ளத்தக்க மக்கள்" - அகதிகள் மற்றும் நாட்டில் புகலிடம் கோருவோர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
(மித்ரா, மும்பையை சேர்ந்த இந்தியா மிக்ரேஷன் நவ் என்ற இடம்பெயர்வு ஆராய்ச்சி அமைப்பின் ஆராய்ச்சியாளர். சீனிவாசன், ஒரு இடம்பெயர்வு கொள்கை ஆய்வாளர், ஐ.எம்.என்- இன் முன்னாள் ஆராய்ச்சியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.