பெங்களூரு: 2018 ஆம் ஆண்டில், 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற டெல்லி அரசு பள்ளி மாணவர்கள் சதவீதம் 90.6% - இது தனியார் பள்ளிகளின் விகிதத்தை விட 2% புள்ளிகள் அதிகம். இது, முந்தைய ஆண்டுகளைவிட சதவிகித புள்ளி அதிகமாகவும், இரண்டாம் நிலை கல்வியின் தேசிய சராசரியை விட அதிகமாகவும் இருந்தது.

கடந்த 2015ஆம் ஆண்டில் இந்தியாவின் தலைநகரான டெல்லி சட்டசபையில் 70 இடங்களில் 67ஐ ஆம் ஆத் கட்சி வெற்றி பெற்றதில் இருந்து, உள்கட்டமைப்புகள் மற்றும் கல்வி முறைகள் சீரமைக்கப்பட்டுள்ளன (2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் டெல்லியில் போட்டியிட்டு, இது வெற்றி பெறவில்லை).

டெல்லி கல்வி அமைச்சரின் ஆலோசகரும், கிழக்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி (AAP) மக்களவை வேட்பாளருமான ஆதிஷி, 37 மட்டுமே 2019 மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்த பெண் வேட்பாளர் ஆவார்.

ஆதிஷி, தனது பெயரின் பின்பாதியான மார்லென என்பதை, அதாவது மார்க்ஸ்- லெனின் என்பதன் சுருக்கத்தை விட்டுவிட்டார். ஏனெனில், வாக்காளர்களுக்கு அவரை கிறிஸ்தவர் என்று அடையாளப்படுத்தலாம் என்பதால்; இவர் டெல்லி அரசு பள்ளிகளின் நிலையை மாற்றுவதில் ‘முக்கிய பங்கு’ வகித்தவர். குழந்தைகளின் கற்றல் நிலைகளை அடிப்படையாக கொண்டு, 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு கற்பித்தல் பயிற்சிகள், சீர்திருத்தங்களை செய்தார். இது 3ஆம் வகுப்புக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் கல்வி திட்டங்கள் பலவும் நாடு முழுவதும் பரவ செய்யக்கூடியவை என்று ஆதிஷி கூறினார். கல்வியின் பின்தங்கியுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் நிலைக்கேற்ப கல்வி புகட்டாவிட்டால், அவர்கள் பள்ளியில் இன்னும் பல ஆண்டுகள் பின்தங்கியே இருப்பார்கள் என்றார்.

அவரது அரசியல் தொடர்பானது, டெல்லியில் "1.6 மில்லியன் குழந்தைகளின் வாழ்க்கையைத் தொட" உதவியது; 2000ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு சமூக ஆர்வலர் என்ற முறையில் அவர் செய்ததைவிட இது அதிகம் என்றார் அவர்.

ஆதிஷி, இரண்டு முதுநிலை பட்டங்களை பெற்றுள்ளார்; இரண்டுமே இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து பெற்றவை. கல்வி ஆராய்ச்சிக்கான ரோட்ஸ் மாணவ அறிஞராகவும் அவர் உள்ளார். ஒரு சமூக ஆர்வலராக அவர், "முற்போக்கான கல்வி முறைகள்" என்பதற்காக மத்தியப் பிரதேச கிராமங்களில் பணியாற்றினார், இது மறக்கமுடியாத நினைவுகளை விட மதிப்பு மிக்க அனுபவத்தை தந்துள்ளது.

ஆதிஷி, இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த நேர்காணலில், முதல் முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிடும் நிலையில் தனது அரசியல் பார்வை, இந்தியாவின் தலைநகரத்திற்கு முழு மாநில அந்தஸ்து, கல்வி சீர்த்திருத்தங்கள் பற்றி விவரித்தார்.

ஒரு இளம் வேட்பாளராக, நாட்டின் மீதான உங்கள் பார்வை என்ன? அந்த பார்வையை, டெல்லி அரசுடன் உங்கள் பணி தாக்கத்தை ஏற்படுத்தியதா? சமூக ஆர்வலராக இருப்பதும், அரசியல்வாதியாக இருப்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன?

ஒரு சமூக ஆர்வலராகவோ அல்லது ஒரு அரசியல்வாதியா இருந்தாலும் பார்வை என்பது ஒன்றுதான். நாம் வாழ்கின்ற சமுதாயத்தில் அதிக சம உரிமைக்காக போராடுகிறோம். ஆனால் பிரச்சனை என்னவென்றால், ஒரு பெரிய சமூக ஆர்வலராக இருந்து ஒரு இலாப நோக்கமின்றி செயல்பட்டாலும், அதன் விளைவு வரம்புக்குட்பட்டது. நீங்கள் தேர்தல் அரசியலில் ஈடுபட்டிருந்தால், மாற்றத்தை ஒரு பெரிய அளவில் கொண்டு வர முடியும். இது டெல்லி அரசுக்கு ஆலோசகராக இருந்து நான் கண்ட அனுபவம். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஒரு பகுதியாக இருந்ததால், 1.6 மில்லியன் குழந்தைகளின் வாழ்க்கையை நான் தொட முடிந்தது. உண்மையில் அது அரசியலைக் கொண்டு வரக்கூடிய அளவு தான்.

கிழக்கு டில்லி தொகுதியில் 2014 இல் 67% வாக்காளர்கள் பெண்கள்; அங்கு நீங்கள் போட்டியிடுகிறீர்கள். உங்கள் கட்சியின் ஒரே பெண் வேட்பாளர் நீங்கள் தான். இது இங்கே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா? இந்தியாவின் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 12.6% ஆகும்; உலக சராசரி 24.3% என்பதை விட இது குறைவு. பெண்களை பிரதிநிதித்துவம் செய்ய உங்கள் முன்னுரிமை என்னவாக இருக்கும்?

டெல்லியில் பெண்களின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று பாதுகாப்பாகும். இது சமத்துவத்தை தடுக்கிறது. வீட்டிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக வெளியேற முடியாது என்றால், அது கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான அணுகலை குறைக்கிறது. ஆம் ஆத்மி அரசு மாநில அந்தஸ்து பிரச்சினையை எடுத்துக் கொண்டதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். டெல்லி போலீஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கீழ் வர வேண்டும். மத்தியில் எந்த கட்சியாக இருந்தாலும் பாதுகாப்பு மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு காஷ்மீர் பிரச்சினைகள் அல்லது வடகிழக்கு கிளர்ச்சி அல்லது சத்தீஸ்கர் [இடதுசாரி தீவிரவாதம்] போன்ற மாநிலங்களில் உள்ள பிரச்சினைகளும், டெல்லி உள்ளூர் சட்ட ஒழுங்கு பிரச்சினையும் ஒன்றல்ல. காவல்துறை பொறுப்பேற்க வேண்டும் என்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கீழ் அது வர வேண்டும்.

அரசியல் கட்சிகளில் இன்னும் அதிகமான பெண்கள் தேவைப்படுகிறது என்று நீங்கள் கூறுவீர்களா?

ஆம், 100%. எந்தவொரு சமூக குழுவும் பிரதிநிதித்துவம் பெறும் போது பிரச்சினைகள் பெரிய அளவில் எடுத்துக்கொள்ளப்படும்.

ஐந்தாம் வகுப்பு பள்ளியில் படித்த பிறகு, 10-11 வயது இந்திய மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (51%) தான், இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தை நிலை உரையை படிக்க முடிகிறது என்று, 2018 வருடாந்திர கல்வி அறிக்கை தெரிவிக்கிறது. டெல்லியில் அரசு பள்ளிகளின் கல்வி மற்றும் பள்ளி உள்கட்டமைப்பு மாற்றங்களை செய்தவர் நீங்கள். நீங்கள் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், தேசிய கல்விக் கொள்கைகளில் உங்கள் பங்களிப்பு, தலையீடு இருக்குமா?

டெல்லி எதிர்கொண்ட நிலைமை இதுதான். டெல்லி அரசு பள்ளிகளில் 75% குழந்தைகள் தங்கள் பாடப்புத்தகங்களை படிக்க முடியவில்லை என்று நாங்கள் கண்டோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் போராடி வருகின்ற பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. கற்றல் நிலைகளை மேம்படுத்த உதவுதல் மற்றும் குறுக்கீடுகள் பல தேசிய அளவில் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று உணரக்கூடிய தலையீடுகள் உள்ளன என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

நாங்கள் எடுத்துக் கொண்டவற்றில் ஒன்று, நிலை அளவிலான குழுக்கள் முறை ஆகும்.ஒரு வகுப்பில் வேறுபட்ட கற்றல் நிலைகளை கொண்ட குழந்தைகள் உள்ளனர்; ஆசிரியரின் கற்பித்தலில் முதல் வரிசையில் உள்ள குழந்தைகள் "பிரகாசமான" கற்பதை கண்டறிந்தோம். பின்னால் உள்ள குழந்தைகள் ஆண்டு முழுவதும் பின்தங்கியே இருக்கிறார்கள். குழந்தைகள் தங்களாக சுயமாக கற்றல் நிலையை எட்டும் வரை, அவர்களை வேகமாக முன்னேற்ற முடியாது.

ஐந்து ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி. ) 6% நிதியை கல்விக்கு ஒதுக்கீடு செய்வதாக காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. கல்வித்துறை அனுபவம் உள்ள நீங்கள், இந்த தேர்தல் வாக்குறுதியை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுவீர்கள்?

இதை நம்புவது கடினம். அவர்கள் பல காலம் பதவியில் இருந்தார்கள்; இதுவரை எதுவும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சியின் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் பதவிக்கு வந்தது. இப்போது தன அரசு பள்ளிகளின் நிலைமையில் முன்னேற்றத்தை காண்கிறோம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% ஒரு நல்ல தொடக்க புள்ளியாகும். இது பட்ஜெட்டின் ஒரு கேள்வி மட்டுமல்ல, அதுவொரு நோக்கம். அரசுகள் கல்விக்கு பணம் செலவழிக்கவில்லை என்பதல்ல இது. நிதி செலவழிக்கப்பட்டும் சரியான செயல்முறை இல்லை. அரசு வேலை செய்ய வேண்டும் என்பது, அரசியல் நோக்கம்.

டெல்லி முழு மாநில அந்தஸ்து கொடுத்தால் உங்கள் அரசு புதிய கல்லூரிகளை திறக்கும்; அதில் "85% இடங்களை தில்லி குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்" என்று நீங்கள் சொன்னீர்கள். பள்ளிக்கல்வி அளவில் மாற்றங்கள் செய்து நீங்கள் வெற்றி பெற்ற போதிலும், நீங்கள் இப்போது என்ன பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்கள்?

டெல்லி பல்கலைக்கழக சட்டம் (1922) டெல்லியில் எந்தவொரு கல்லூரி, பல்கலைக்கழகம் திறக்க தடை விதிக்கிறது. மாநில அரசு புதிய கல்லூரிகளை திறக்க முடியாது.உயர் கல்விக் கல்வியை விரிவுபடுத்துவதற்கான விரைவான வழி கல்லூரி, பல்கலைக்கழகங்கள் தான். ஆனால் தற்போதைய நாடாளுமன்ற விதிகள் புதியவற்றை தடுக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும், டெல்லியில் 4,50,000 குழந்தைகள் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று வெளியேறுகின்றனர். ஆனால், டெல்லியில் இருப்பதோ 1,00,000 இடங்கள் தான்; அதையும் டெல்லியை சேராத மாணவர்கள் எடுத்துக் கொள்கின்றனர். டெல்லி அரசு பள்ளிகளில் இருந்து வெளியேறும் பெரும்பாலான குழந்தைகள் தபால் மூலம் தங்கள் பட்டப்படிப்பை படிக்கின்றனர். நாம் பணம் மற்றும் நோக்கம் இருந்தாலும் டெல்லியில் புதிய பல்கலைக்கழகங்களை திறக்க முடியாது.

வேறு பிரச்சினை என்னவெனில் டெல்லி குழந்தைகள் பிற மாநிலங்களுக்குச் செல்லும் போது, அவர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களுக்கு மட்டுமே போட்டியிடமுடிகிறது. ஏனெனில் குறிப்பிட்ட மாநிலத்தில் இருந்துள்ள மாணவர்களுக்காக அங்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் டெல்லியில் பிற நாடுகளில் இருந்து வரும் மாணவர்கள் படிக்கிறார்கள். அப்படி என்றால் டெல்லி குழந்தைகள் உயர் கல்விக்கு எங்கே செல்வார்கள்? நாங்கள் வெளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு எதிராக இல்லை, ஆனால் இங்கே உள்ளவர்களுக்கு உரிய ஏற்பாடுகள் இருக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் சட்டம் என்பது ஒரு பிரச்சினையாகும், இதை நாடாளுமன்ற அளவில் மட்டுமே சரி செய்யப்பட முடியும்.

ஆம் ஆத்மி கட்சியின் கோஷமாக "பூர்ணா ராஜோ பானோ ஜாதூ கா பட்டன் டாபவ் (முழு மாநில அந்தஸ்து பெற, விளக்குமாறு சின்னத்தில் பொத்தானை அழுத்தவும்") என்ற முழக்கத்துடன் தேர்தலில் போட்டியிடுகிறது. உங்கள் அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவை கொண்டு இந்த நோக்கத்தை எவ்வாறு அடைவீர்கள்?

நாம் இதைச் சொல்வதால், ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம். மோடி அரசு மீணுட்ம் ஆட்சிக்கு வந்தால், அவர்கள் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து தர மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அவ்வாறு செய்ய விரும்பியதில்லை.

நாங்கள் பிற பிராந்தியக் கட்சிகளின் ஆதரவை கோருவோம். பாராளுமன்றத்திற்கு எங்கள் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்கள் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியும் என்பது எங்கள் அணுகுமுறை அல்ல. தெலுங்கானா அல்லது சத்தீஸ்கர் விஷயங்களை போன்றே இவ்விஷத்தில் நாம் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். முழு மாநில அந்தஸ்து பெறுவதற்கு நாங்கள் வேலை செய்வோம் என்று முதல்வர் [அரவிந்த் கெஜ்ரிவால்] கூட சொன்னார்.

கடந்த 2014இல் கிழக்கு டெல்லியில் இருந்து ஆம் ஆத்மி சார்பில் நின்ற ராஜ்மோகன் காந்தி இரண்டாமிடம் பெற்றார். தலித் மற்றும் முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தும் கலப்பு சமூகம் உள்ள சூழலில் வேறு என்ன செய்ய நீங்கள் திட்டமிட்டுள்ளீர்கள்? நீங்கள் ஒரு எதிர்ப்பு அலையை பார்க்கிறீர்களா?

இங்கே பெரும்பாலான மக்களுக்கு அவர்களது எம்.எல்.ஏ அல்லது கவுன்சிலர் தெரிந்த அளவுக்கு துரதிருஷ்டவசமாக, அவர்களது எம்.பி. யார் என்றே தெரியாது. இங்கு தலித்துகள் மற்றும் முஸ்லிம்களில் கணிசமான மக்கள் உள்ளனர்; அவர்கள் அங்கீகரிக்கப்படாத காலனி வாக்காளர்கள். அவர்கள் தண்ணீர் குழாய் வசதி, கழிவு நீர் வசதி என்று எங்களது மாநில அரசின் திட்டங்களால் பலனடைந்தவர்கள். இதற்கு முன் கட்சிகள், காலனிகள் சட்டவிரோதமானவை; அவற்றுக்கு செலவழிக்க முடியாது என்று கட்சிகள் கூறலாம். டெல்லி முழுவதும் அங்கீகரிக்கப்படாத காலனிகளுக்கு என, எங்கள் அரசு தனிப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தை அமைத்தது; அங்கு, 10,000 புதிய தெருக்கள் அமைக்கப்படுகிறது. 400 க்கும் அதிகமான குடியேற்ற பகுதிகளுக்கு குழாய் குடிநீர் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

எனவே, எங்கள் அரசு அதிகாரத்திற்கு வரும் முன் இருந்த புள்ளிவிவரங்கள் வெளியேறிவிட்டன. எனவே, குறைந்த பொருளாதார வகுப்பினர் மத்தியில் எங்களுக்கு ஒரு வலுவான ஆதரவு உள்ளது. மேலும், டெல்லி அரசு பள்ளிகளிள், மொஹல்லா [அண்டை] கிளினிக்குகளால் பயனடைந்தவர்கள் தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள். இதனை பற்றிக் கூறும்போது, இங்கே ஆட்சியாளர்களுக்கு எதிரான அலை இருக்கிறது என்று நான் கூறுவேன்.

உங்கள் தொகுதி வழியாக பாயும் யமுனா நதி நீரில், ஒரு மில்லியனில், 16 மில்லியனுக்கும் அதிகமான பைனல் கோலிபார்ம் பாகங்களை கொண்டுள்ளது (பாதுகாப்பான நிலை 500 பி.டி.எம்.); மேலும் கடுமையாக மாசடைந்துள்ளது. இந்த நீரின் தர நெருக்கடியை சமாளிக்க நீங்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

டெல்லி முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள குடிநீர் வாரியம், யமுனை அதிகளவு மாசுபடும் பகுதியான, வாஜிராபாத் தொழிற்பேட்டையில் மிகப்பெரிய குடிநீர் சுத்திகரிப்பு மையத்திற்கான பணிகளை செய்கிறது. அது தயாரானதும் ஆற்று தண்ணீரின் தரத்தை நிச்சயம் அது மேம்படுத்தும். இது நேரம் சார்ந்த விஷயம். நாங்கள் டெல்லி ஏரிகளை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

நீங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு கூட்டாக இருக்கும்போது, 2019 ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் மொத்தம் ரூ. 1,716 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் தேர்தல் பத்திரங்களைப் பயன்படுத்தும் வளர்ச்சியை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள்?

அரசியல் கட்சிகளுக்கு நிதி நேர்வழியில் பெறப்பட வேண்டும் என்பதற்கு தொடக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி முன்னோடியாக உள்ளது. 2013இல் எங்கள் முதல் தேர்தலில் வலைத்தளத்தின் மூலம் நிதி திரட்டி, ரூ.20 கோடி பெறப்பட்டது. தேர்தலில் சாதாரண மக்களால் நிதியளிக்கப்பட்டால், நீங்கள் இன்னும் சிறப்பாக பணியாற்றுவீர்கள் என்று நாங்கள் எப்போதும் நம்பியிருக்கிறோம். தனியார் பள்ளிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்பதையும் நாங்கள் உறுதி செய்கின்றோம்; நான்கு ஆண்டுகளில் அதே விகிதத்தில் நிர்வகிக்கப்படும் மின் கட்டண விகிதங்கள் என்ற எங்கள் அணுகுமுறையை நீங்கள் காணலாம். கட்சியின் தூய்மையான பணத்தால் நிதியளிக்கப்பட்டால் மட்டுமே, வாக்காளர்களின் நலன்களை நிறைவேற்ற முடியும்.

அதே கொள்கையை பின்பற்றியிருக்கிறோம். மேலும், கடந்த சில மாதங்களில் ரூ. 53 லட்சம் திரட்ட முடிந்தது; பங்களிப்புகளில் பெரும்பாலானவை ரூ.100 முதல் ரூ 500 வரை என்றளவில் உள்ளன. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசியல் ஊழலின் மிக மோசமான வடிவம்; நாங்கள் எப்போதும் சந்தேகிக்கப்படும் விஷயங்களில் வெளிப்படையாக இருக்கிறோம்; வெளிப்படைத்தன்மை இல்லாத போது ஒன்று மற்றொன்றின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பா.ஜ.க. இத்தகைய செயல்முறையின் மூலம் 95% நிதியை பெற்றுள்ளது; நிதி தந்த நபர்கள் அல்லது நிறுவனங்கள் பற்றிய எவ்வித தகவலும் எங்களிடம் இல்லை.

(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.