சாமோலி மற்றும் அல்மோரா, உத்தரகண்ட்: புதுமணத் தம்பதி, கிராமத்தில் நீரூற்றுக்காக காட்டில் ஒரு மணி நேரம் மலையேறச் சொன்னார்கள். தற்போது, 60 வயதாகும் கமலா தேவி, அந்த நீரூற்றைக் காப்பாற்ற கடந்த இரண்டு வாரங்களாக அகழிகளையும் துளையிடும் குழிகளையும் தோண்டி வருகிறார்.

"நான் ஒரு காகர் (செப்பு பாத்திரத்தை) நீரூற்றுக்கு எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது, அதை நிரப்பி, கிராம பெரியவர்களுக்கு விநியோகிக்க அதை திரும்பப் பெற வேண்டும்" என்று, நீண்ட கை ரவிக்கையுடன் புடவை உடுத்தி, பல வண்ண பாரண்டா அல்லது தாவணி அணிந்திருந்த கமலா தேவி நினைவு கூர்ந்தார்.

சாமோலி மாவட்டத்தில் உள்ள பஜ்வாட் என்ற அவரது கிராமத்தைச் சேர்ந்த 35 குடும்பங்களில் 200க்கும் மேற்பட்டோர், அந்த ஒரு இயற்கை நீரூற்றைச் சார்ந்துள்ளனர், குறிப்பாக கோடை காலத்தில். ஆனால் கடந்த சில தசாப்தங்களாக, தவறான மேலாண்மை மற்றும் மாறிவரும் காலநிலை காரணமாக, கிராமத்தில் உள்ள நீரூற்றுகள் வறண்டு வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர் மற்றும் ஆராய்ச்சியும் இதை காட்டுகிறது. இதன் விளைவாக, உத்தரகண்ட் மாநிலத்தில் ஒரு காலத்தில் வளமான கர்வால் பகுதியை, தற்போது தண்ணீர் பற்றாக்குறையால் வாட்டி வதைக்கிறது.

இப்பகுதியானது, பனிப்பாறைகள் மற்றும் முக்கிய நதி பாய்ச்சல்களுக்கு தாயகமாக இருந்தாலும், இந்த ஓட்டங்கள் மக்கள்தொகை கொண்ட பகுதிகளுக்கு, பல நூறு மீட்டர் கீழே உள்ளன. 2018 நிதி ஆயோக் அறிக்கை, திட்டமிடப்படாத நகரமயமாக்கல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இப்பகுதியில் உள்ள வற்றாத நீரூற்றுகளில் கிட்டத்தட்ட பாதி வறண்டுவிட்டன அல்லது பருவகாலமாகிவிட்டன. இது பெண்களின் சுமையை அதிகரிக்கிறது, அவர்கள் பல மணிநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் மற்றும் குறைவாக கிடைக்கும் காலத்தில் நீரூற்றுகளில் இருந்து தண்ணீரை கையால் எடுத்துச் செல்கிறார்கள்.

தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருவதால், இந்த ஆண்டின் தொடக்கத்தில், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான பீப்பிள்ஸ் சயின்ஸ் இன்ஸ்டிடியூட் (PSI - பிஎஸ்ஐ) உடன், பஜ்வாட் கிராம மக்கள், நீரூற்றுகளை புத்துயிர் பெறச் செய்தனர்.

அருகேயுள்ள அல்மோரா மாவட்டத்தில், இதேபோன்ற முயற்சி உள்ளூர் மக்களுக்கு நன்மைகளை அளித்துள்ளது. சனோலி கிராமத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, லக்ஷ்மி ஆசிரமம் என்ற உள்ளூர் அமைப்போடு சேர்ந்து, குடியிருப்பாளர்கள் ஐந்து நீரூற்றுகளை புதுப்பித்துள்ளனர் - ஒன்று உயர் சாதியினரால் பயன்படுத்தப்பட்டது, மூன்று பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஒன்று தலித் சமூகம்.

கிராமத்தைச் சேர்ந்தவரும், லக்ஷ்மி ஆசிரமத்தின் களப்பணியாளருமான மாயா வர்மா, புத்துணர்ச்சி திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர், ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சொந்த நீரூற்றுகளை மீட்டெடுக்கும் என்றும், இந்த அமைப்பு செயல்பாட்டில் வழிகாட்டும் என்றும் விளக்கினார். இருப்பினும், "தலித் சமூகத்தால் பயன்படுத்தப்படும் நீரூற்றுகளுக்கு புத்துயிர் கொடுப்பதில் உயர் சாதியினரையோ அல்லது பொது சாதியினரையோ (ஓபிசியைக் குறிக்கும் சொல்) அவர்களால் ஒருபோதும் பெற முடியாது" என்று அவர் கூறினார்.

உத்தரகண்ட் மாநிலத்தின் கர்வால் பகுதியில் நாங்கள் சென்ற பல கிராமங்களில், நீரூற்றுகளை புத்துயிர் பெறவும், நிர்வகிக்கவும் பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர். இருப்பினும், வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களைக் கொண்ட கிராமங்களில், நீரூற்று புதுப்பிப்பு மற்றும் மேலாண்மை, பெண்களால் வழிநடத்தப்பட்டாலும், சாதியால் பிரிக்கப்படுகிறது.


சாமோலியில் உள்ள பஜ்வாத் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான கமலா தேவி, மழைக்காலத்தில் தண்ணீர் வடியும் மற்றும் தனது கிராமத்தின் இயற்கை நீரூற்றுக்கு நீர் சேமிப்பு அகழிகளைத் தோண்டுகிறார்.

இமயமலை நீர் பிரச்சனை

உத்தரகாண்டின் சாமோலி மாவட்டத்தில் கல்பகங்கா, ரிஷிகங்கா, தௌலிகங்கா, அலக்நந்தா, நந்தாகினி மற்றும் சரஸ்வதி ஆகிய முக்கியமான நதிகள் பாய்கின்றன. ஆனால் சாமோலியின் ஜோஷிமத் ஒன்றியத்தில் உள்ள பௌனி தேவியின் கிராமமான சால்னா, இந்த ஆறுகள் பாயும் இடத்தில் இருந்து சில நூறு மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

"அருகிலுள்ள நதி கல்பகங்கா ஆகும், இதற்கு குறைந்தது மூன்று மணிநேரம் நடந்து செல்ல வேண்டும்" என்று, ஆற்றை அடைந்து திரும்பி வரும் காலத்தை, வருன் தேவி கூறினார். 13 வயது மணப்பெண்ணாக, அவள் தினமும் மலையேற்றத்தை செய்ய வேண்டியிருந்தது, சில நாட்களில் இரண்டு முறை கூட இருக்கும்.

ஆறுகளில் இருந்து தொலைவில் உள்ள மலை கிராமங்களில், இயற்கை நீரூற்றுகள் மட்டுமே பெரும்பாலும் நீர் ஆதாரமாக இருக்கும். ஒருங்கிணைந்த மலை வளர்ச்சிக்கான சர்வதேச மையத்தின் அறிக்கை போன்ற ஆய்வுகள், காலநிலை மாற்றம் அத்தகைய குடிநீர் ஆதாரங்களின் கிடைக்கும் தன்மை, தரம் மற்றும் அணுகல் ஆகியவற்றை பாதித்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், இந்து குஷ் ஹிமாலயன் (HKH) பகுதியில் அமைந்துள்ள 13 நகரங்களில் 10 ஆய்வுகளின் தொடர், சர்வதேச சக மதிப்பாய்வு செய்யப்பட்ட வாட்டர் பாலிசி (Water Policy) இதழால் வெளியிடப்பட்டது. முசோரி, டார்ஜிலிங் மற்றும் காத்மாண்டு போன்ற புகழ்பெற்ற மலைத்தொடர்கள் உட்பட இந்த நகரங்களில் பல, ஏற்கனவே 70% வரையிலான தேவை-வழங்கல் இடைவெளியை எதிர்கொள்கின்றன என்று ஆய்வு குறிப்பிட்டது.

சல்னா கிராமத்தில் வசிக்கும் லக்ஷ்மண் சிங் நேகி, - ஜந்தேஷ் - என்ற ஒரு உள்ளூர் அமைப்பை நடத்தி வருகிறார்; சமோலியில் உள்ள ஜோஷிமத் ஒன்றியத்தில் காலநிலை சீர்குலைவு மற்றும் தவறான நிர்வாகத்தை விவரித்தார். "சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, நாங்கள் குறைந்தது நான்கு அடி பனியைப் பெறுவோம், இப்போது அது ஒரு அடி மட்டுமே" என்றார். மேலும் மழையும் ஒழுங்கற்றதாகிவிட்டது. "ஒவ்வொரு ஜனவரி மற்றும் பிப்ரவரியில் மழை பெய்யும், ஆனால் இந்த ஆண்டு இல்லை" என்றார் அவர்.

"1980களில் சிப்கோ அந்தோலன் (மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க கிராமப் பெண்களால் நடத்தப்பட்ட மரம் சார்ந்த இயக்கம்) நடைபெற்ற கிராமங்களில் சால்னாவும் ஒன்று." ஆனால் காடழிப்பு, குறிப்பாக ஓக் மரங்களின் வேர்கள் அதிக நீரைத் தக்கவைக்கும் திறன் கொண்டவை, கடந்த இரண்டு தசாப்தங்களாக பரவலாக உள்ளது என்று அவர் கூறுகிறார்.

இப்பகுதியும் பெருமளவில் அணைக்கட்டப்பட்டுள்ளது, இதன் விளைவாக 2013 கேதார்நாத் வெள்ளம் மற்றும் 2021 சாமோலி பேரழிவின் போது இப்பகுதியின் கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அணைகள் மற்றும் அதன் விளைவாக மீண்டும் வரும் வெள்ளப்பெருக்கு ஆகியன, இப்பகுதியின் நுட்பமான புவியியலை பாதித்துள்ளது, அதாவது பாறைகளின் துணை மேற்பரப்பு அமைப்பு (எங்கள் வீடியோவை பாருங்கள்) இதன் மூலம் நீரூற்றுகள் ரீசார்ஜ் செய்யப்படுகின்றன. எனவே அதிக நீர் வெளியேற்றம், நீர்நிலைகளில் சிறிய ஊடுருவல் மற்றும் சிறிய ரீசார்ஜ் உள்ளது என்று, நேகி விளக்கினார்.

பல ஆண்டுகளாக சமூக புறக்கணிப்பு மற்றும் தவறான நிர்வாகமும் பிரச்சினைக்கு பங்களித்துள்ளது. நீரூற்று மறுமலர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதை மேற்பார்வையிடும் பிப்புள் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த சிவில் இன்ஜினியர் திக்ஷா உபாதயாய் கூறுகையில், பல கிராமங்களில் மக்கள் இந்த நீரூற்றுகளில் சிமென்ட் அல்லது கட்டியுள்ளனர். மற்ற இடங்களில், இந்த நிலத்தடி நீர் சேமிப்பு வணிக நோக்கங்களுக்காக விற்றுள்ளனர், இதன் விளைவாக அவர்களின் அணுகல் துண்டிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஹர் கர் ஜல் திட்டத்தின் கீழ் அரசு, நீர் வழங்கல் அமைப்புகளை வழங்கியிருந்தாலும், தண்ணீர் கிராமங்களை சென்றடையவில்லை அல்லது வழங்கப்பட்ட இடங்களில் விநியோகம் நம்பகத்தன்மையற்றதாக உள்ளது, உள்கட்டமைப்பு மோசமாக பராமரிக்கப்படுகிறது மற்றும்/அல்லது பல நீர் தேவைகளுக்கு பொருத்தமற்றதாக கருதப்படுகிறது என்று, ஜூன் 2022 இல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் கிராமவாசிகள் இந்தியா ஸ்பெண்டிடம் கூறியுள்ளனர்.

நீரூற்று புதுப்பிப்பு திட்டங்கள்

பஜ்வாத்தின் நீரூற்று தாரா வகை ஆகும், அதாவது நீரூற்று போல வற்றாத நீர் வெளியேறும் நீர்நிலைகளாகும். சல்னா, ஹஸ்கோடி அல்லது சனோலி கிராமத்தில், நாவுலாக்கள், குறுகிய திறப்புகள், சிறிய சிறிய கூரைகள் மற்றும் பெண்கள் கீழே உள்ள நீர் ஆதாரத்தை அடைவதற்கு படிக்கட்டுகளை கொண்ட சிறிய கட்டமைப்புகளைக் காணலாம்.


இமயமலை கிராமங்களில் நீரூற்றுகள், தாரா (இடது புற படம்) அல்லது நௌலா (வலது படம்) வடிவத்தில் இருக்கலாம். தாராஸ் அவற்றில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறுகிறது, அதேசமயம் நௌலாஸ் தண்ணீர் சேமிக்கும் அமைப்புடன் கிணறை கொண்டுள்ளது.

கர்வால் பகுதியில் உள்ள ஒன்பது கிராமங்களில் 10 நீரூற்றுகளை புதுப்பிக்க, பீப்பிள்ஸ் சயின்ஸ் இன்ஸ்டிடியூட் (PSI) பணி புரிந்து வருகிறது. கடந்த காலத்தில், அவர்கள் இமயமலைப் பகுதி முழுவதும் 400 நீரூற்றுகளின் புதுப்பிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த பாரம்பரிய நீரூற்றுகளுக்கு புத்துயிர் அளிக்க, இமயமலையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமூகங்களுடன் பல நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின்றன. ஜூலை 29 அன்று, மாநிலம் முழுவதும் நீர் விநியோகத்தைக் கவனிக்க, அரசால் உருவாக்கப்பட்ட உத்தரகாண்ட் ஜல் சன்ஸ்தானை நாங்கள் தொடர்பு கொண்டோம். அவர்களிடம் இருந்து பதில் கிடைத்ததும் இக்கட்டுரையை புதுப்பிப்போம்.

நீரூற்று சேமிப்பு அமைப்பில் ஒரு பகுதியின் மழைப்பொழிவு முறை மற்றும் செறிவூட்டப்பட்ட மண்டலத்தின் பண்புகள் இரண்டையும் சார்ந்துள்ளது. மலைப்பாங்கான நிலப்பரப்பில், 15%-க்கும் குறைவான மழைநீர் கீழே ஊடுருவி, நீரூற்றுகளை செறிவூட்ட போதுமானதாக இல்லை. எனவே, இந்த அமைப்புகள் கிராமவாசிகளுக்கு அகழிகளை தோண்டி ஓடுவதை நிறுத்தவும், ஊடுருவலை அதிகரிக்கவும் உதவுகின்றன.

"நீரூற்று புதுப்பிப்பு வேலையில், முதலில் செறிவூட்டப்பட்ட பகுதியை அடையாளம் காண்பது அடங்கும், இது நீர் நிலத்தில் ஊடுருவக்கூடிய இடமாகும்" என்று உபாதே கூறினார். "இவை பொதுவாக மலைச்சரிவுகளில் இருக்கும், ஆனால் சாய்வின் சாய்வு மிகவும் செங்குத்தானதாக இருக்கக்கூடாது" என்றார்.

செறியூட்டப்பட்ட பகுதி அடையாளம் காணப்பட்டவுடன், ஏழு அடி நீளம், 1.5 அடி அகலம் மற்றும் 1.5 அடி ஆழம் கொண்ட அகழிகளை தோண்டி, செடிகளை வளர்த்து, கட்டமைப்புகளுக்குள் மண் செல்வதைத் தடுக்கும் வகையில் புல் போடப்படுகிறது.

பீப்பிள்ஸ் சயின்ஸ் இன்ஸ்டிடியூட், நீரூற்று மற்றும் செறியூட்டப்பட்ட பகுதியை ஆய்வு செய்வதற்கான தொழில்நுட்ப பங்களிப்புடன் செயல்படுகிறது. இவ்வாறு செயல்படுத்துவதற்கு, நீரூற்றுகளைப் பயன்படுத்துபவர்களின் ஈடுபாடு மற்றும் உரிமையை உறுதி செய்ய, சமூகங்களுடன் பணிபுரியும் உள்ளூர் அமைப்புகளுடன் இது ஒத்துழைக்கிறது. சால்னாவில், ஜந்தேஷ் என்பது கிராம மக்களால் உருவாக்கப்பட்ட உள்ளூர் அமைப்பாகும்.

"எங்களுடையது ஒரு பங்கேற்பு திட்டம்" என்று உபாத்யாய் விளக்கினார். "நிதி மூலம், பணியை மேற்கொள்பவர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலியை எங்களால் வழங்க முடிகிறது. ஆனால் நீரூற்று புதுப்பிக்கப்பட்டதும் கிராம மக்கள் உரிமையை எடுத்து அதன் நிர்வாகத்தில் ஈடுபடுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்" என்றார்.

நீரூற்று புதுப்பிப்பு மற்றும் நிர்வாகத்தில் பெண்கள்

பௌனி தேவியின் பெயரானது, கர்வாலி வார்த்தையான "பவுன்" என்பதில் இருந்து வந்தது, அதாவது வனம். அவர் பிறந்தபோது, ​சேகரிக்க காட்டுக்குச் செல்லும்போது அவரது அம்மா இடுப்பில் சுமந்து செல்வார். தன் குழந்தையைப் பார்த்துக் கொண்டு, வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்புகளை ஒருபோதும் கைவிடாததற்காக அவருடைய தாய்க்கு அவரது பெயர் அங்கீகாரமாக வழங்கப்பட்டது.


67 வயதான பௌனி தேவி, 1980களில் சாமோலி மாவட்டத்தில் உள்ள தனது கிராமமான சால்னாவில் சிப்கோ அந்தோலனுக்கு தலைமை வகித்தார். அவரது பெயர் பௌனி என்பது, வனத்திற்கான கர்வாலி வார்த்தையில் இருந்து பெறப்பட்டது; எனவே வனங்களை பாதுகாப்பதே தனது முதன்மையான நோக்கமாகும் என்று அவர் சுருக்கமாகக் கூறுகிறார்.

தண்ணீர், தீவனம் மற்றும் விறகு சேகரித்தல், வயல்களில் பயிரிடுதல், விலங்குகளின் சாணத்தை வயல்களில் தினமும் வைப்பது, சமைத்தல், கழுவுதல், வீட்டைச் சுத்தம் செய்தல், கால்நடைகள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் குழந்தைகள், நோய்வாய்ப்பட்டவர்களை பராமரித்தல் போன்ற சமூக ரீதியாக, ஒரு பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகள்,பெரும்பாலும் மலை கிராமங்களில் திருமணத்தின் மூலம் இது உறுதிப்படுத்தப்படுகிறது. புலம்பெயர்ந்த ஆண்களைப் போலல்லாமல், பெண்கள் வாழ்வதற்கான போராட்டத்தின் சுமைகளைச் சுமக்கிறார்கள்.

பௌனி தேவியைப் பொறுத்தவரை, அவரது பெயர் அவரது நோக்கத்தை நன்றாகச் சுருக்கமாகக் கூறுகிறது. அவரது பெரும்பாலான பொறுப்புகள் காடு, நிலம் மற்றும் நீர் தொடர்பானவை, இது அவர் உயிர்வாழ்வதற்கும் அவருடைய குடும்பம் உயிர் வாழ்வதற்கும் மையமாக இருக்கிறது.

31 வயதான நளினி தேவி, சமோலியில் உள்ள ஹஸ்கோடி கிராமத்தின் அனைத்து பெண்களும் கொண்ட பஞ்சாயத்தின் கிராம சபைத் தலைவராக உள்ளார். பெரும்பாலான ஆண்கள் நீரூற்றைப் பார்ப்பது அல்லது வீட்டுத் தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதைத் தெரிந்து கொள்வது, திருமணச் சடங்குகளின் போது, ​​முதன்முதலாக அவர்கள் தங்கள் மனைவியுடன் நீரூற்றுக்குச் செல்லும்போதுதான் என்று அவர் கூறினார். நளினியின் அருகில் அமர்ந்திருந்த அம்பி தேவி, 50, சிரித்தார். சமைப்பதற்கும் குடிப்பதற்கும் தண்ணீருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதால், பெண்கள் சுகாதாரத்தில் சமரசம் செய்ய வேண்டிய நேரங்கள் இருக்கும் என்று அவர் கூறினார். "நாங்கள் வாரத்திற்கு ஒரு முறை குளிக்க வேண்டியிருந்தது" என்றார்.

பஜ்வாட் கிராமத்தைச் சேர்ந்த கமலா தேவி, திருமணச் சடங்குகளின் முக்கியத்துவத்தை விளக்கினார். மணமகள் வீட்டின் லட்சுமி, மிகுதியான தெய்வம் என்று அவர் சொன்னாள். "சம்பிரதாயம், அவர் கடவுளிடம் ஏராளமான தண்ணீரைக் கேட்பதைக் குறிக்கிறது, அவர் வீட்டை நடத்துவதற்கான மிக விலைமதிப்பற்ற வளமாகும்" என்றார்.

"நாங்கள் இதுவரை நடத்திய அனைத்து திட்டங்களிலும், தண்ணீர் அவர்களின் பாரம்பரிய பாத்திரங்களுடன் இணைக்கப்பட்டதால் பெண்கள் முன்வருவதை மட்டுமே நாங்கள் பார்த்துள்ளோம்" என்று உபாதயாய் கூறினார்.

சால்னாவில் புதுப்பிப்பு பணியின் போது, ​​பெண்களே பள்ளங்கள் மற்றும் துளையிடும் குழிகளை தோண்டினார்கள். 60 வயதான நாராயணி தேவி மற்றும் அவரது இரண்டு மருமகள்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒவ்வொரு நாளும் வேன் பஞ்சாயத்து நிலத்திற்கு பள்ளம் தோண்டுவதற்காக மலையேற்றம் சென்றனர். "என் கை இன்னும் வலிக்கிறது," என்று அவர் கூறுகிறார், ஒவ்வொரு நாளும் அவர்கள் செய்ய வேண்டிய வேலையின் அளவை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்காக தனது கால்களை காட்டுகிறார். அவர்கள் 27 பேர் கொண்ட குழுவில் அங்கம் வகித்தனர், பெரும்பாலும் 20-70 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் சுமார் மூன்று அல்லது நான்கு ஆண்கள்.

இதேபோல், பஜ்வாட் கிராமத்தில், வேலை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, ஒவ்வொரு நாளும் 45 பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் கொண்ட குழு ஒன்று கூடுகிறது. மொத்தத்தில், அவர்கள் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் 500-600 பள்ளங்களை தோண்ட வேண்டும்.

நீரூற்றுகள் புத்துயிர் பெற்ற கிராமங்களில், அவற்றை நிர்வகிக்க பெண்கள் முன்வந்துள்ளனர். சால்னா மற்றும் ஹஸ்கோடியில், பெண்கள் மகிளா மங்கள் தளங்களை உருவாக்கியுள்ளனர், அதன் முதன்மைப் பொறுப்பு இயற்கை வளங்களைப் பாதுகாப்பதாகும். அவர்கள் மாதம் ஒருமுறை கூடி அகழிகள் மற்றும் குழிகளை சுத்தம் செய்து செறிவூட்டுதல் பகுதிக்கு அருகில் நடவு செய்கிறார்கள், இதனால் தண்ணீர் வடியும் மற்றும் சேறு ஓடாது. இந்தப் பொறுப்புகளைத் தவிர, மகிளா மங்கள் தளம் கிராமத்துப் பெண்களுக்கான சுய உதவிக் குழுவைப் போன்றது.


பெண்கள் பல கிராமங்களில் நீரூற்று புதுப்பிப்பு மற்றும் மேலாண்மை நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றனர். படத்தில் இடதுபுறம், மகிளா மங்கல் தளம் அல்லது சால்னா கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் குழு மற்றும் வலதுபுறம், பஜ்வாட் கிராமத்தைச் சேர்ந்த பெண்களும் சில ஆண்களும் நீரூற்றுகளை புதுப்பிக்கும் வகையில் அகழிகளை தோண்டுவதற்காக கூடியுள்ளனர்.

அல்மோராவின் சனோலி கிராமத்தில், இயற்கை நீரூற்றுகளுக்கு அருகில் பெண்கள் நாற்றங்கால்களை அமைத்துள்ளனர், மேலும் அவர்கள் வனப்பகுதியில் தோட்ட நோக்கங்களுக்காக வனத்துறையினருக்கு தாவரங்களையும் வழங்குகிறார்கள். "ஒவ்வொரு மாதமும் 30 ஆம் தேதி பெண்கள் கூடுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தேதியாகும்," என்று சனோலியைச் சேர்ந்த வர்மா, தனது கிராமத்தில் மகிளா மங்கள் தள கூட்டங்களைப் பற்றி கூறினார்.

நீரூற்றுகளின் புதுப்பித்தல், வீட்டு வேலைகளுக்குத் தண்ணீர் எடுப்பதில் மணிக்கணக்கில் செலவழித்த பெண்களின் அதிர்ஷ்டத்தை மாற்றியிருக்கிறது. தண்ணீருக்கான சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட பாத்திரங்களின் சமத்துவமின்மையைக் குறைக்க இது மிகக் குறைவாகவே செய்துள்ளது என்று, தீபா ஜோஷி தண்ணீரில் பாலினம் குறித்த ஆய்வில் குறிப்பிட்டார். வீட்டில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பை இன்னும் பெண்கள் சுமக்கிறார்கள்.

கிராமங்களில் ஜாதியால் பிரிக்கப்பட்ட நீரூற்றுகள்

சால்னா, ஹஸ்கோடி மற்றும் பஜ்வாட் ஆகியவை உயர் சாதி கிராமங்கள். இவை போல் அல்லாமல், அல்மோரா மாவட்டத்தின் சோமேஷ்வர் தொகுதியில் உள்ள சனோலி கிராமம் பல்வேறு சாதிக் குழுக்கள் மற்றும் மதங்களின் தாயகமாக இருந்து வருகிறது.

மாயா வர்மாவின் வீட்டிற்குப் பின்னால் சில முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன. "ஒரு கிறிஸ்தவக் குடும்பம் உள்ளது," என்று அவர் மேலும் கூறுகிறார். மேலும் கிராமத்தின் பிற பகுதிகளில் தலித் குடும்பங்கள் உள்ளன.

இந்து சமூகத்தில் உள்ள பழமையான சமூகப் படிநிலை, வரலாற்று ரீதியாக தலித்துகளை நிரந்தரமாக மாசுபடுத்தியவர்களாக கருதி இருப்பதால், புனித நீர் ஆதாரங்கள் மாசுபடுத்தும் வாய்ப்பு உள்ளது என்ற கருகின்றனர். சாதிய படிநிலையானது, விருப்பமான நீர் ஆதாரங்களுக்கான ஒப்பீட்டு அணுகல் மற்றும் அந்த ஆதாரங்களின் போதுமான தன்மை ஆகியவற்றுடன் நெருக்கமாக இணைகிறது. பல உயர் சாதிக் குடும்பங்கள் தங்கள் கொல்லைப்புறத்தில் சொந்த நீரூற்றுகளைக் கொண்டுள்ளன, மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்று நீரூற்றுகளை அணுகலாம். ஆனால் தலித்துகளுக்கு ஒரே ஒரு நீரூற்று மிகவும் மோசமான இடத்தில் உள்ளது.

பணியை மேற்பார்வையிட்ட வர்மா, ஆழமாக வேரூன்றியிருக்கும் சாதிய படிநிலையை கருத்தில் கொண்டு, அவர்கள் வித்தியாசமாக நீரூற்றுகளை உருவாக்கத் தொடங்கினார்கள். அவர்கள் "படி ஜாதி (உயர் சாதி)க்கு எதிராக சாமான்ய ஜாதி (ஓபிசி) உடன் தொடங்கினார்கள்" என்று அவர் மேலும் கூறினார். தலித் சமூகங்களைச் சேர்ந்த நீரூற்று வந்தபோது, ​​"இது ஒரு போராட்டம்" என்று அவர் கூறினார். "அவர்களின் நீரூற்று கழிப்பறைக்கு அருகில் அமைந்திருந்தது, இதன் காரணமாக நீர் மிக நீண்ட காலமாக அசுத்தமாகவும், குடிக்க முடியாததாகவும் இருந்தது." இருப்பினும், கூடுதல் தோண்டியதன் மூலம், அவர்கள் தரையில் இருந்து சுத்தமான தண்ணீரை வெளியே கொண்டு வர முடிந்தது.


பல இமயமலை கிராமங்களில் உயர் சாதியினர் உள்ளனர். வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த சமூகங்களைக் கொண்ட கிராமங்களில், பயன்பாட்டிற்காக நீரூற்றுகள் பிரிக்கப்படுகின்றன. பச்சை நிறத்தில் உள்ள நீரூற்று தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது, வெள்ளை நிறத்தில் உள்ள ஒன்று உயர் சாதியினருக்கு சொந்தமானது, அதேசமயம் மஞ்சள் நிறத்தில் உள்ள மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சொந்தமானது, இவை அனைத்தும் அல்மோராவின் சனோலி கிராமத்தில் அமைந்துள்ளன.

ஐந்து நீரூற்றுகளின் புதுப்பிப்பு, 2017ஆம் ஆண்டில் நடந்தது; ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சனோலியில் உள்ள நீரூற்றுகள் திட்டத்திற்கு ஒரு வெற்றிகரமான எடுத்துக்காட்டு. இந்த நீரூற்றுகளின் மேலாண்மையும் வித்தியாசமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த நீரூற்றுகளில் பல வாயில்களைக் கொண்டுள்ளன, மேலும் எப்போது தண்ணீர் எடுக்க முடியும் என்பதற்கான நிலையான நேரங்களும் உள்ளன.

தீபா ஜோஷி தனது பாலினம், சாதி மற்றும் நீர் பற்றிய கட்டுரையில், எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தும் போது சாதி மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகளை பெருக்கும் போது " மௌனம் ஒலிக்கிறது" என்று எழுதுகிறார்.

சனோலியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உத்ரௌரா குர்தூரா கிராமம் உள்ளது, இங்கு தலித்துகள் 80% க்கும் அதிகமானோர் உள்ளனர். இப்பகுதிக்கு கிராமத்தில் எந்த நீர் நிலைக்கும் அணுகல் இல்லை, இதன் விளைவாக அவர்கள் நீரூற்றுகளில் இருந்து நீரைப் பெறுவதற்கு அருகாமையில் உள்ள லோத் கிராமத்தை சார்ந்து இருக்க வேண்டும். லோத்தின் நீரூற்றுகள் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டன, மேலும் கிராமத்தின் பெண்கள் அவர்களுக்கும், உத்ரௌரா குர்தூரா கிராமவாசிகள் நீரூற்றுகளை அணுகுவதற்கும் வெவ்வேறு நேரங்களை அமைத்துள்ளனர்.

ஜாதி, பாலினம் மற்றும் ஒதுக்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்பது சமத்துவமற்ற சமூக உறவுகளையும், அவற்றை நியாயப்படுத்தும் நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களையும் குறிவைப்பதை உள்ளடக்கியது என்று, ஜோஷி எழுதுகிறார், இன்னும் பெரும்பாலும் பாலினம் என்பது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, தண்ணீர் திட்டங்களில் 'பெண்களின் அதிகரித்த பங்கேற்பு' என்று நடைமுறைப்படுத்தப்படுகிறது, மேலும் சமூகங்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் பின்தங்கப்படுகிறார்கள்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.