பெங்களூரு: பருவநிலை மாற்றம் வாழ்வாதாரங்களை பாதித்து வரும் நிலையில், குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் விவசாயம், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிக்கப்படும் சூழலில், போராளி குழுக்கள், நக்சல் இயக்கங்களுக்கு அது உகந்ததாக இருக்கிறது என, புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

காலநிலை மாற்றம் இப்பகுதியில் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் ஏற்றத்தாழ்வை மோசமாக்கும் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. வரம்பற்ற வளங்களை யார் பெற வேண்டும், எவ்வளவு பெற வேண்டும் என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் தீர்மானிப்பதாக, ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) சார்பில் அறிக்கை தயாரித்த ஆராய்ச்சியாளர்கள் பெர்னிலா நார்ட்கொஸ்ட் மற்றும் புளோரியன் கிராம்பே தெரிவித்தனர்.

“ஏற்கனவே காலநிலை மாற்றம் மற்றும் வன்முறையால் பாதிப்பு, காலநிலை - மோதல் இணைப்பு முதன்மையாக சூழல்களில் வெளிப்படுகிறது; மற்றும் அங்கு வருமானம் தரக்கூடிய விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகியவற்றை சார்ந்திருக்கிறது” என்று நார்ட்கொஸ்ட் மின்னஞ்சல் வாயிலாக இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

தொழில்துறைக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது வெப்பநிலை 1.0 டிகிரி செல்ஷியல் அதிகரித்துள்ளதாக, பருவநிலை மாற்றத்துகான ஐக்கிய நாடுகள் அரசு குழு -ஐ.பி.சி.சி ((IPCC) சமீபத்திய அறிக்கையை மேற்கோள்காட்டி சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். 2030 ஆம் ஆண்டு அல்லது இந்த நூற்றாண்டின் மத்தியில் உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழ்மை விகிதம் கணிசமாக குறைந்து வரும் தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் 2.5 பில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இந்தியா போன்ற நாடுகள் பல ஆண்டுகளாக வலுவான பொருளாதார வளர்ச்சியை கண்டு வருவதற்க் நன்றி கூற வேண்டும். இருப்பினும் இப்பகுதிகள் காலநிலை மாற்றத்தால் இமயமலையில் பனிப்பாறைகள் உருகுவதால் கடல் மட்டம் அதிகரிப்பு, வெள்ளம், புயல், அனல்காற்று, வறட்சி போன்ற பாதிப்புகளை தீவு நாடுகள் தற்போது அடிக்கடி சந்திக்கின்றன; இது வருங்காலத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

காலநிலை மாற்றத்தின் தாக்கம் இப்பகுதியை மிகவும் பாதிக்கக்கூடியது; அண்மைக்கால அரசியல் வன்முறைகளை கொண்டிருக்கிறது” என, இந்தியா ஸ்பெண்டிடம் கிரம்பே தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் மற்றும் மோதல்களுக்கு இடையிலான தொடர்புகள் பற்றி பெர்னிலா நார்ட்கொஸ்ட் மற்றும் புளோரியன் கிராம்பே இருவரும் 2,000 கூராய்வுகளை மேற்கொண்டனர். இதில் மிகவும் அதிகாரபூர்வமான படைப்புகளில் 21 சுருக்கப்பட்டு, 2018 செப். மாதம் வெளியானது.

இந்தியாவில் அவர்கள் நடத்திய ஆய்வில், வறட்சி பாதித்த பகுதிகளில் அரசு படைக்கோ அல்லது போராளி குழுக்களுக்கோ ஆளெடுப்பது என்பது மிக எளிதாக இருப்பது தெரிய வந்தது.

புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியஸ் அதிகரிப்பதால் பருவநிலை மாற்றமடைந்து வாழ்வாதாரம், உணவு பாதுகாப்பு, சுகாதாரம், குடிநீர், மனித பாதுகாப்பு அபாயம் உள்ளது; இது 2 டிகிரி செல்ஷியஸ் எனில் இந்த அபாயம் மேலும் தீவிரமாகும் என்று, ஐ.பி.சி.சி. அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

நக்சலைட் மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, உள்நாட்டு மோதல்கள் தீவிரமடைகின்றன. வறட்சி அல்லது அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள பகுதிகளில் மக்களுக்கு வாழ்வாதாரம் அல்லது உணவு கொடுத்து அரசோ, கிளர்ச்சிக்குழுக்களோ தங்கள் இயக்கத்தில் அதிகம் பேரை சேர்க்கும் அபாயம் உள்ளது.

தற்போதைய மோதலில் தங்களின் அதிகாரத்தை நாட்டுவதற்கு நக்சலைட்டுகள் பருவநிலை தொடர்பான நிகழ்வுகளை பயன்படுத்தலாம்; தங்கள் குழுக்களின் உணவு, வாழ்வாதாரத்திற்காக பொதுமக்கள் மீதான வன்முறையை அதிகரிக்க செய்யும் அபாயம் உள்ளது என்று, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

”நக்சலைட்டுகள் தங்களது சொந்த பயன்பாட்டுக்காக விவசாயிகளை அவர்களது நிலங்களில் வலுகட்டாயமாக வெளியேற்றுகின்றனர். இது, அரசு கட்டுப்பாடு குறைவாக உள்ள கிராமப்பகுதிகளில் அதிகம் நடைபெறுகிறது. அங்குள்ள கிராம மக்கள் தங்கள் பாதுகாப்பு, வாழ்வுக்கு அரசு அல்லது போராளிக்குழுவினரை நம்பியே இருக்க வேண்டியுள்ளது” என்று நார்ட்கொஸ்ட் கூறுகிறார்.

பருவநிலை மாற்றம் குடிபெயர்வுகளை அதிகரித்து, வாழ்வாதார வளத்தை கைப்பற்றுவதில் கிராமங்களில் மோதலுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளதாக, அந்த அறிக்கை தெரிவிக்கிறது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமங்களில் இந்தகைய போக்கு காணப்படுவதாக, அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

“பருவநிலை மாற்றத்தால் அண்டை நாடுகளுக்குள்ளும் பிரச்சனை நிலவுகிறது. உதாரணத்துக்கு, மூன்று நாடுகள் வழியாக செல்லும் பிரம்மபுத்திராவில் அடிக்கடி வெள்ள பாதிப்பு உண்டாகிறது. இதுபோன்ற சூழலை நாடுகள் கூட்டாக எதிர்கொள்ள முன்வருவதில்லை; குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை இணைந்து பணியாற்ற வைப்பது கடினம்” என்று கிராம்பே கூறுகிறார்.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளின் உறவுகள், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மோதல்கள் குறித்து சில ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மரில் பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் சிறுபுரிதல் உள்ளதாக, அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவின் மற்ற இடங்களில், குறிப்பாக இந்தோனேஷியா போன்ற கடல் வளம் சார்ந்த நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு கடல் திருட்டு போன்ற சம்பவங்கள் தலைதூக்க வழி வகுக்கிறது.

ஆனால், அதன் தாக்கம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

உதாரணத்துக்கு, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது அங்குள்ள ஜமாத்-உத்- தாவா (JUD) நிவாரணப் பணிகளில் பங்கேற்றதன் மூலம், அங்கு தனது வலிமையை பெருக்கிக் கொண்டது.

பருவநிலை மாற்றம் காரணமாக விவசாயிகளும், மீன்பிடி தொழிலை நம்பியுள்ள கடலோர பகுதி மக்களும் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள்; இதன்மூலம் ஏழ்மை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஐ.பி.சி.சி. அறிக்கை எச்சரிக்கிறது.

”எனினும், பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் ஒவ்வொருவருமே போராளிக்குழுக்களில் இணைவார்கள் என்று கருதமுடியாது; பேரழிவின் போது அரசின் நடவடிக்கை தோல்வி அடையாமல் இருப்பதில் இது உள்ளது” என்கிறார் கிராம்பே.

அதேநேரம் பருவநிலை மாற்றத்தால் எல்லா இடங்களிலுமே மோதல் ஏற்பட வாய்ப்பில்லை.சில இடங்களில் இயற்கை பேரிடரின் போது, அதிக ஒத்துழைப்பை பார்க்கலாம். இத்தகைய பிராந்திய செயல்பாடுகள், அதன் வரையறைகளை பொறுத்து தெளிவாகிறது.

“தெற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் பருவநிலை மாற்றம் தொடர்பான மதிப்பீடு அவசர அவசியமாகிறது; நமக்கு இப்போது அதன் ஆபத்துகள் எளிதாக தெரியாது” என்று கிராம்பே கூறுகிறார்.

(திஷா ஷெட்டி, கொலம்பியா இதழியல் கல்வி நிறுவனத்தை சார்ந்தவர்; இந்தியா ஸ்பெண்ட்டில் பருவநிலை மாற்றம் குறித்த செய்திகளை வழங்குகிறார்.)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.