மும்பை: நீண்டகாலத்திற்குபிறகு வெளியான இந்தியாவின் வேலையின்மை குறித்த விவரம், இந்தியாவில் நிகழ்ந்த குற்றங்கள் மற்றும் விவசாயிகள் தற்கொலை ஆகியன, தரவுகளுக்கு இது ஒரு முக்கியமான ஆண்டாகும். வேலையின்மையை 45 ஆண்டுகளில் அதிகபட்சமாக 6.1% ஆக இருந்தது தெரியவந்தது; விவசாயிகள் 11,379 பேர் 2016இல் தற்கொலை செய்து கொண்டனர்; மேலும் 2015 முதல் 2017 வரை பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 9% அதிகரித்துள்ளன.

அதேநேரம், கடும் வெப்ப அலைகள், வெள்ளம் மற்றும் புயல் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கைகளை, காலநிலை தரவு காட்டியது. இந்திய வனப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களின் நில உரிமைகளுக்காக, பரவலான போராட்டங்கள் நடந்தன. இந்த ஐந்து குறித்த தகவல் வரைபடம் -2019 ஐ நீங்கள் கீழே காணலாம்.

காலநிலை மாற்றம்

இந்தியாவில், 2019 ஜூலை தான், இதுவரை பதிவானதில் வெப்பமானதாக இருந்தது; கோடை பருவமழை காலத்தில் 74% அதிக மழைப்பொழிவுகள் நிகழ்ந்தன; காட்டுத் தீ 113% அதிகரித்த நிலையில் தாக்கிய புயல்களின் எண்ணிக்கை ஏழு என்று, இந்தியா ஸ்பெண்ட்டிசம்பர் 18, 2019 கட்டுரை தெரிவித்துள்ளது.

தீவிர வானிலை நிகழ்வுகள் காரணமாக, காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய 181 நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில்இருந்தது. உலகளாவிய காலநிலை இடர் குறியீட்டு-2020 இல், இந்தியாவின் ஒட்டுமொத்த தரவரிசை 2017இல் 14வது இடத்தில் இருந்தது, ஒன்பது புள்ளிகள் சரிந்து 2018ஆம் ஆண்டில் 5வது இடம் என்ற நிலையில் இருந்தது. காலநிலை மாற்றத்தால் இந்தியா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஒரு யூனிட்டுக்கு ரூ.2.7 லட்சம் கோடி அல்லது 0.36% இழக்கும் என்று பான் சார்ந்த சிந்தனைக் குழுவான ஜெர்மன்வாட்ச்வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2040ஆம் ஆண்டு வாக்கில், 2.5 கோடி இந்தியர்கள் கடும் வெள்ள அபாயத்திற்கு ஆளாக நேரிடும்; இது 1971 மற்றும் 2004 க்கு இடையில் 37 லட்சம் என்பதைவிட ஆறு மடங்கு அதிகம். கார்பன் உமிழ்வு அதிகரிக்கும் போது, இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, சூரத், சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகள் நீருக்கடியிலோ அல்லது 2050ஆம் ஆண்டுக்குள் மீண்டும் மீண்டும் வெள்ளத்தால் அழியக்கூடும் என்று, இந்தியா ஸ்பெண்ட்2019 அக்டோபர் 31 கட்டுரைதெரிவித்துள்ளது.

உலகளாவிய சராசரி வெப்பநிலை அதிகரிப்பால் சுமார்60 கோடிஇந்தியர்கள் ஆபத்தில் உள்ளனர். புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த, பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை, உலகம் வெகுவாகக் குறைக்கவேண்டும்; ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இதன் உமிழ்வு ஆண்டுக்கு 1.5% என்ற விகிதத்தில் அதிகரித்து வந்துள்ளது. 2016 பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் அனைத்து நாடுகளும் தங்கள் கடமைகளை நிறைவேற்றினாலும், இந்த நூற்றாண்டில் வெப்பநிலை 3 - 3.2 டிகிரி செல்சியஸ் ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக 2019 நவம்பரில் வெளியான உமிழ்வு இடைவெளி அறிக்கைதெரிவித்துள்ளது.

விவசாய நெருக்கடி

தேசிய குற்றப்பதிவு பணியகம் (என்.சி.ஆர்.பி), நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, இந்தியாவில் 2015ஆம் ஆண்டிற்கான விபத்து இறப்புகள் மற்றும் தற்கொலை குறித்த அறிக்கையை வெளியிட்டது. கடைசியாக 2016 இல் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, தற்கொலை மற்றும் விபத்துக்கள், போக்குவரத்து விபத்துக்கள், தீ விபத்துக்கள், கட்டிடம் சரிந்தது போன்ற விபத்துக்கள் குறித்த நாடு தழுவிய தரவுகளை வழங்குகிறது.

தற்கொலை செய்து கொண்ட நில உரிமையாளர்களின் எண்ணிக்கை 2016இல் குறைந்துவிட்டாலும், 2015ஆம் ஆண்டை விட 2016இல் அதிகமான விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர். 2016 ஆம் ஆண்டில், 6,270 விவசாயிகள் அல்லது சாகுபடியாளர்கள் மற்றும் 5,109 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர்; இது 2015 ஆம் ஆண்டில் முறையே 8,007 மற்றும் 4,595 ஆகும்.

நடப்பு 2019-20 பட்ஜெட், விவசாய அமைச்சகத்திற்கு ரூ.1.4 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது; இது 2018-19 பட்ஜெட் மதிப்பீடான ரூ.57,600 கோடி என்பதைவிட 141% உயர்வு. ஆனால் இந்தியாவில் பரவலான விவசாய போராட்டங்களுக்கு வழிவகுத்த, விவசாய சிக்கல்களுக்கான காரணமான நிதி அதிகரிப்பு போதுமானதாக இருக்காது என்று இந்தியா ஸ்பெண்ட்2019 பிப்ரவரி 12 கட்டுரை தெரிவித்தது.

உலகளாவிய சராசரி வெப்பநிலை 3 - 3.2 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரிக்கும் நிலையில், விவசாய நெருக்கடி இன்னமும் மோசமடைகிறது. வெப்பநிலையில் 1 ° செல்சியஸ் அதிகரிக்கும் போது, விவசாயிகளின் வருமானம் காரீஃப் (குளிர்கால) பருவத்தில் 6.2% ஆகவும், நீர்ப்பாசனம் செய்யப்படாத மாவட்டங்களில் ரபி(பருவமழை) பருவத்தில் 6% ஆகவும் குறைக்கிறது என்று இந்தியா ஸ்பெண்ட் மார்ச் 22, 2018 கட்டுரைதெரிவித்துள்ளது.

பருவம் தவறிய ஒழுங்கற்ற மழை மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளும், பயிர் விளைச்சலை பாதிக்கின்றன. இந்தியாவின் நிலப்பரப்பில் சுமார் 42%ஏப்ரல் 2019 இல் வறட்சியை எதிர்கொண்டது; இது விவசாய நெருக்கடியை மோசமாக்கியது. ஆந்திரா, பீகார், குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, வடகிழக்கின் சில பகுதிகள், ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. தெற்கு மற்றும் உள்கர்நாடகாவின் காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள மாவட்டங்களில், இந்த ஒழுங்கற்ற மழையால் 25% காரீப்பயிர்கள் சேதமடைந்தன. இங்குள்ள விவசாயிகள் பயிர்கள் விதைப்பதை ஆகஸ்டுக்கு ஒத்திவைத்திருந்தனர்; ஏனெனில் பாரம்பரிய விதைப்பு மாதங்களான ஜூன் மற்றும் ஜூலையில் மிகக் குறைந்த மழையையே பெற்றன. ஆனால் ஆகஸ்டில் பெய்த மழையால், இளம் மற்றும் முதிர்ந்த பயிர்களில் கால்பகுதி சேதம் அடைந்ததாக, இந்தியா ஸ்பெண்ட்2019 ஏப்ரல் கட்டுரைதெரிவித்துள்ளது.

வன உரிமைகள்

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சீரழிந்த நிலத்தை 2.1 கோடி ஹெக்டேரில் இருந்து 2.6 கோடி ஹெக்டேர் என, மீட்டெடுக்கும் இலக்கை இந்தியா உயர்த்துவதாக பிரதமர் நரேந்திர மோடி 2019 செப்டம்பரில் அறிவிப்புசெய்தார். நாட்டின் 32.872 கோடி ஹெக்டேர் பரப்பளவில், சுமார் 9.64 கோடி ஹெக்டேர்(30%) அல்லது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவற்றின் பரப்பளவுக்கு சீரழிந்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்னர், நிலம் மீட்கும் பணியில் பங்கேற்குமாறு தனியார் துறைகளுக்கு அரசுஅழைத்ததாகவும், அதன் மூலம் “வருவாய் ஈட்டலாம்” என்று இந்தியா ஸ்பெண்ட்2019 அக்டோபர் 5 கட்டுரை தெரிவித்தது. உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்தாமல் தனியார் நிறுவனங்களின் ஈடுபாடும், வன வளங்கள் மீதான சமூகங்களின் காலவரையறை உரிமைகளை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதும் நில மோதல்களைத் தூண்டக்கூடும் என்று ஆர்வலர்கள் எச்சரித்தனர்.

மீட்டெடுப்பதாக அரசு உறுதியளித்த 2.6 கோடி ஹெக்டேர்களில் 2.1 கோடி ஹெக்டேர் (81%) வன நிலம். இந்தியா முழுவதும் நில மோதல் தொடர்பான 38 வழக்குகள் உள்ளதாக, லேண்ட் காண்பிளிக்ட் வாட்ச்அமைப்பு ஆவணப்படுத்தி உள்ளது. இதில் பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள், வன நிலங்களை திசை திரும்பும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எட்டு மாநிலங்களில் பரவியிருக்கும் இந்த மோதல்கள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பாதிக்கின்றன.

வன உரிமைகள் சட்டம் (எஃப்ஆர்ஏ)- 2006இன் படி, பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் அனுமதியின்றி, அவர்களின் பாரம்பரிய உரிமைகளை அங்கீகரிக்காமல் வனப்பகுதியை வனமற்ற பயன்பாட்டிற்கு திருப்பிவிட முடியாது. ஆயினும்கூட, இந்தியா முழுவதும், 19 லட்சம் பேர் அல்லது 46% வன உரிமை கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. வன காவலர்களை சட்டவிரோதமாக உரிமைகோரல்களை தீர்மானிக்க அனுமதிப்பதன் மூலம், பல்வேறு மாநில அரசுகள் சட்டத்தை மீறியுள்ளன. செயற்கைக்கோள் படங்கள் மற்றும் இல்லாத, 75 ஆண்டுகள் பழமையான ஆவணப் பதிவுகளை வழங்குமாறு பழங்குடியினரை கேட்டுக் கொண்டதாக, இந்தியா ஸ்பெண்ட்2019 மார்ச் 2 கட்டுரைதெரிவித்தது.

வன உரிமைகள் சட்டம்-2006 இன் கீழ், கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட சுமார் 95 லட்சம் வனவாசிகளை வெளியேற்ற உச்சநீதிமன்றம் பிப்ரவரி 13, 2019 அன்று உத்தரவிட்டது. பரவலான விமர்சனங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மத்திய அரசின் மனுஆகியவற்றுக்கு பிறகு, உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை தற்காலிகமாக பிப்ரவரி 28, 2019இல் நிறுத்திவைத்தது. மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியன காலாவதியான சட்டங்களைப் பயன்படுத்திஉள்ளன; நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சமீபத்திய மத்திய சட்டத்தை அவை தவிர்த்துவிட்டன. கையகப்படுத்துவதற்கு நில உரிமையாளர்களின் ஒப்புதல், மாநில சட்டங்களுக்கு தேவையில்லை என்றாலும், மத்திய சட்டம் -- 2013 ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் (LARR) சட்டம்-- 70% நில உரிமையாளர்களின் ஒப்புதல் தேவை என்கிறது.

வேலையின்மை

வேலையின்மை விவரங்களை குறிப்பிட்டஅந்த கசிந்ததேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ) அறிக்கை ‘வேலைவாய்ப்பு குறித்த ஒரு சிதைந்த படத்தை வரைந்தது’ ; பின்னர், அரசு இதே அறிக்கையை2019 மே மாதம் வெளியிட்டது. இந்தியாவில் வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச விகிதமாக, 6.1% என்ற அதிகரிப்பை காட்டியதாக, பீரியாடிக் லேபர் போர்ஸ் சர்வே 2017-18(பி.எல்.எஃப்.எஸ்) அறிக்கை தெரிவித்துள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய, உழைக்கும் வயதுள்ள, 68.8 கோடி மக்கள்தொகை மற்றும் சார்ந்துள்ளவர்களை (15 வயதுக்குக் குறைவான மற்றும் 64 வயதுக்கு மேற்பட்டவர்கள்) விட, அதிக உழைக்கும் வயது மக்கள்தொகையை (15 முதல் 59 வயதுடையவர்கள்) கொண்டிருக்கிறது. இது குறைந்த சார்புடைய காலம் என்று அழைக்கப்படுகிறது. இக்காலகட்டத்தில் இந்தியா வளர்ச்சியை துரிதப்படுத்தக்கூடும்; சரியான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் இப்போதே அமல்படுத்தப்பட்டுள்ளன என இந்தியா ஸ்பெண்ட்2019 ஆகஸ்ட் 23 கட்டுரை தெரிவித்துள்ளது.

மற்ற நாடுகள் குறைந்த சார்புடைய காலகட்டத்தில் அதிக பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளன என்று அறிக்கை கூறியுள்ளது. உதாரணமாக, 1985 தொடங்கி 10 ஆண்டு காலப்பகுதியில், சீனாவின் சார்பு விகிதம் இன்று இந்தியாவிற்கு ஒத்ததாக இருந்தபோது, சீனா ஆண்டுக்கு சராசரியாக 9.16% வீதத்தில் வளர்ந்தது என்று உலக வங்கியின் தரவு காட்டுகிறது. இதேபோல், தென் கொரியா தனது மக்கள்தொகை பயணத்தில் இதேபோன்ற 10 ஆண்டு காலத்தில் சராசரியாக 9.2% வளர்ச்சியடைந்தது.

இருப்பினும், அதிக வேலையின்மை காரணமாக இந்தியா இந்த வாய்ப்பை இழக்கக்கூடும். நகர்ப்புற இளம் வயது பெண் (27.2%), படித்த நகர்ப்புற பெண்கள் (19.8%), கிராமப்புற ஆண் இளைஞர்கள் (17.4%) மற்றும் படித்த கிராமப்புற பெண்கள் (17.3%) ஆகியவற்றினர் மத்தியில் வேலையின்மை அதிகமாக இருப்பதாக பி.எல்.எஃப்.எஸ் அறிக்கை காட்டுகிறது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்திய பின்னர் வேலை இழப்புக்கள் தொடர்பான தேசிய சர்ச்சைகளுக்கு, ஒரு முன்னோட்ட கட்டுரை வழங்கும் பொருட்டு, இந்தியா ஸ்பெண்ட்நாடு முழுவதும் 11 தொழிலாளர் மையங்களில் இருந்து திறமையற்ற மற்றும் பகுதி திறமையுள்ள தொழிலாளர்களை பேட்டிகண்டது. இந்த மையங்களில் வேலைவாய்ப்பு எவ்வாறு குறைந்து வருகின்றன என்பதையும், தற்போதுள்ள வேலைகளுக்கான ஊதியங்கள் குறைவாக இருப்பதையும் எங்கள் அறிக்கைகள் காட்டின.

கடந்த 1991 ஆம் ஆண்டில் பொருளாதார தாராளமயமாக்கல் தொடங்கிய 22 ஆண்டுகளில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட சுமார் 6.1 கோடி வேலைகளில், 92% அமைப்புசாரா பணிகள் என்று, 2011-12 ஆம் ஆண்டிற்கான என்எஸ்எஸ்ஓ தரவு குறித்த இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வுகூறுகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றம்

கடந்த 2017 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை (359,849) 2015 ஐ விட 9% அதிகம் என்று என்சிஆர்பி 2019 தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்குகளில் மிக அதிகபட்ச (29%) காரணம் 'கணவர் / அவரது உறவினர்களால் கொடுமை' என்ற பிரிவின் கீழ் பதிவாகி உள்ளது. இதை தொடர்ந்து 'பெண்களின் அடக்கத்தை சீற்றப்படுத்தும் நோக்கில் அவர்கள் மீது தாக்குதல்' (23.9%) மற்றும் 'பெண்களை கடத்தல்' (18.4%) என்ற அளவில் உள்ளது.

இதில், 32,559 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பெண்களுக்கு எதிரான மொத்த குற்றங்களில் 9.6% ஆகும். மேலும், இந்தியாவில் 15 முதல் 49 வயதிற்குட்பட்ட திருமணமான மூன்று பெண்களில் ஒருவர் உடல் ரீதியான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்(2015-16) தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2012 டிசம்பரில், 23 வயதான மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் ஆறு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். நிர்பயாவழக்கு என்று அழைக்கப்படும் இந்த விவகாரம், பரவலான மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியதுடன், சர்வதேச கவனத்தையும் ஈர்த்தது. நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு 2013 இல் நிர்பயா நிதிஎன்ற ஒன்றை ஏற்படுத்தியது.

இந்த நிதிக்காக உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட ரூ.1,672 கோடியில் -- இது ஒற்றுமைச்சிலை எனப்படும் படேல் சிலை கட்டுவதற்கு செலவிடப்பட்ட தொகையில் கிட்டத்தட்ட பாதி- 91% பயன்படுத்தப்படாமல் உள்ளது என்று பேக்ட்செக்கர்.இன்(FactChecker.in) டிசம்பர் 7, 2019 கட்டுரை தெரிவித்தது. இந்த நிதி உள்துறை அமைச்சகம், மகளிர் நல அமைச்சகம் மற்றும் நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களில் இருந்து பணம் பெறப்படுகிறது. நீதித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முற்றிலும் பயன்படுத்தப்படாத நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சத்திற்கானது 20% நிதி பயன்படுத்தப்பட்டது.

நிர்பயாவழக்குக்கு பின்னர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் பதிவாகியுள்ள போதிலும், டெல்லியில் கைது மற்றும் தண்டனை விகிதங்களில் சிறிதளவு தாக்கத்தையும் ஏற்படவில்லை என்று இந்தியா ஸ்பெண்ட்2019 ஆகஸ்ட் 3கட்டுரை தெரிவித்துள்ளது. டெல்லியில் பலாத்கார குற்றங்களுக்கான தண்டனை விகிதம் 2007 முதல் சீரான சரிவில் இருந்து வருகிறது; இது 2006 ல் 27% ஆக இருந்த 2016 ல் 18.9% என்ற வரலாற்றில் குறைந்த அளவை எட்டியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.