பெங்களூரு: இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது குறைவாக பயன்படுத்துவதற்கு, அதற்கு அதிக விருப்பம் இல்லாதது காரணமல்ல; "டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த விரும்பும் வாடிக்கையாளர்களின் குறைபாடு மற்றும் மொபைல்போன் வாயிலாக பணம் செலுத்துவதால் வரிச்சுமை அதிகரிக்கக்கூடும் என்ற கவலைகள்" போன்றவயே காரணம் என்று, 1,000-க்கும் மேற்பட்ட வணிகர்களிடம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியா ஸ்டேக்-ஐ உருவாக்குதல் போன்ற டிஜிட்டல் பணம் வழங்கலை ஏற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், இது பரிவர்த்தனைகளை மலிவாகவும் திறமையாகவும் செய்ய ஆதார் பயன்படுத்துகிறது; மற்றும் அரசாங்க ஆதரவு ஒருங்கிணைந்த கட்டண செலுத்துமுறை (UPI) "பணத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதம் ஏற்கனவே மே 2018 க்குள் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முந்தைய நிலைக்கு திரும்பியது," என்று, மார்ச் 2019 ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சிறு கடை வியாபாரிகளின் டிஜிட்டல் வர்த்தகம் குறித்து கவனம் செலுத்தியது. இது 1,003 நிலையான கடை வியாபாரிகளை (“வீட்டுக்கு வெளியே ஆனால் நிரந்தர கட்டமைப்புக்குள் நடக்கும் வணிக நடவடிக்கைகள்”) ஆகஸ்ட்-செப்டம்பர் 2017 இல் ஆய்வு செய்தது; அதை தொடர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியல் அடையாளம் காட்டிய ஜெய்ப்பூரில் 6,011 வீடுகள் மற்றும் நிறுவனங்களில் நடந்தது. இதில் சாலையோர வியாபாரிகள், வீட்டில் வியாபாரம் செய்வோர் இடம் பெறவில்லை.

எம்ஸ்டார் (mSTAR) அல்லது மொபைல் தீர்வுகள் தொழில்நுட்ப உதவி மற்றும் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ், சர்வதேச மேம்பாட்டுக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு முயற்சியான கேட்டலிஸ் (Catalyst), இந்தியாவில் டிஜிட்டல் பணம் செலுத்துதலை அதிகரிக்கிறது. இது, தரவுகளை சேகரித்தது.

டிஜிட்டல் பணப்பரிமாற்றம் செய்யும் நிறுவனங்கள் பணத்தை விடவும் அதிக பாதுகாப்பை வழங்குவதாக கூறுகிறார்கள்; பரிவர்த்தனைகளைக் கண்டுபிடிப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறார்கள். எனவே வரிவிதிப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகள் உள்ளிட்ட நிதிச் சேவைகளுக்கான அணுகலைப் பரப்புவதன் மூலம் நிதிச் சேர்க்கையை மேம்படுத்துகிறார்கள், குறிப்பாக பெண்கள் மத்தியில். இது, நாம் கீழே விவரித்துள்ளது போல் நவம்பர் 2016 பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகக் கூறப்பட்டது.

டிஜிட்டல் மயமாக்கலுக்கான அவசர நடவடிக்கை டிஜிட்டல் நுட்பம் தெரியாத ஏற்கனவே பின்தங்கியவர்களை விட்டுச்செல்லக்கூடும் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டினாலும், கொள்கை வகுப்பாளர்கள் பொருளாதார வளர்ச்சிக்கான டிஜிட்டல் பரிவர்த்தனை நன்மைகளுடன் ஒத்துப்போவதாகத் தெரிகிறது, மேலும் ரிசர்வ் வங்கியானது, ஆண்டு தனிநபர் டிஜிட்டல் பரிவர்த்தனையை, மார்ச் 2021 ஆம் ஆண்டுக்குள் 10 மடங்கில் இருந்து 220 வரை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மொத்த அளவு 2017-18 மற்றும் 2018-19 ஆம் ஆண்டுக்கு இடையில் 58.8% அதிகரித்து, 23.4 பில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளாக இருந்ததாக, ஜூன் 11, 2019 அன்று ரிசர்வ் வங்கி அறிக்கை குறிப்பிட்டது. பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகள் "நவீன பொருளாதாரத்தின் இதயம்" மற்றும் முழு பொருளாதாரத்திற்கும் சேமிப்பு மற்றும் முதலீடுகளை வழங்குவதற்கான உள்கட்டமைப்பை வழங்குவதாக அது மேலும் தெரிவித்தது.

முன்நிபந்தனை சந்திக்கும் வணிகர்கள்; ஆனால் தயங்குகின்றனர்

பதிலளித்த 1,003 பேரில், 582 டிஜிட்டல் பணம் செலுத்துதலை ஏற்காததற்கு முதல் மூன்று காரணங்கள் வாடிக்கையாளர் தேவை இல்லாமை (54.7%), விழிப்புணர்வு இல்லாமை (41.7%) மற்றும் ஏமாற்றப்படும் என்ற பயம் (41.7%).

ஏற்றுக் கொள்வதற்கான காரணங்களாக, 421 பதிலளித்தவர்களின் கூற்றுப்படி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை (73.8%), வாடிக்கையாளர் தேவை (62.9%)மற்றும் பயன்பாட்டின் எளிமை (37.2%).

இதை ஏற்றுக் கொண்டவர்கள் மற்றும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் இரு தரப்பினருமே, வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஒரு முக்கிய காரணமாகக் கூறினர். " ஏற்றுக் கொண்டவர்கள் (அல்லது குறைந்தபட்சம் அவை இருப்பதாக நம்புகிறார்கள்) டிஜிட்டல் பணம் செலுத்தக் கோரும் வாடிக்கையாளர்கள், ஏற்றுக் கொள்ளாதவர்களைவிட கூடுதலாக இருக்கலாம் என்பதை இது அதைக் குறிக்கிறது, ”என்று ஆய்வு குறிப்பிட்டது.

டிஜிட்டல் கட்டண முறைகளின் செலவுகள் மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்பு போன்ற “விநியோக தரப்பு தடைகள்” குறைந்தளவு ஏற்புக்கான காரணங்களாக பட்டியலிடப்படவில்லை. பதிலளித்தவர்களில் ஏறத்தாழ 98.6% "வருங்காலத்தில் டிஜிட்டலில் பணம் செலுத்தும் பயனாளர்களாகும் சாத்தியங்கள் உள்ளன; அதற்கு அவசியமான ஆவணங்கள், வணிக வருவாய் மற்றும் கல்வியறிவும் உள்ளது. அதனால் அவர்கள் தேர்வுசெய்தால் டிஜிட்டல் கட்டணம் செலுத்துவதற்கான அனைத்து முன்நிபந்தனைகளையும் அவர்கள் பூர்த்தி செய்ய முடியும்,” என்று ஆய்வு குறிப்பிட்டது.

மாதிரி வணிகர்களில் கிட்டத்தட்ட 54.2% அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தனர்: 97% வணிகர்கள் வங்கிக் கணக்கு வைத்திருந்தனர், 79% இணைய அணுகல் சாதனம் இருந்தது, 55% இணைய அணுகல் இருந்தது, 100% க்கும் குறைவானவர்களால், தொடர்புடைய பயன்பாட்டுக் கட்டணங்களை வாங்க முடியும் மற்றும் 96% தொழில்நுட்ப ரீதியாக கல்வியறிவு பெற்றவர்கள்.ஆயினும் 42% பேர் மட்டுமே டிஜிட்டல் பணம் செலுத்துதலை ஏற்றுக்கொண்டனர்.

தற்போதைய டிஜிட்டல் கட்டண பயனர்களில், "பயன்பாடு குறைவாக உள்ளது, வாடிக்கையாளர்களுடனான பரிவர்த்தனைகளில் 80% இன்னும் பணமாகவே பரிவர்த்தனை செய்யப்படுகின்றன," என்று அறிக்கை மேலும் தெரிவித்தது.

அதை ஏற்பதற்கான செலவு (பொருந்தும் கட்டணங்கள்) போன்ற குறைந்த ஏற்பு “முக்கியமாக பிற தேவை பக்க காரணிகளை சார்ந்தது” என்று ஆய்வு குறிப்பிட்டது. டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும் என்ற வாடிக்கையாளர் கோரிக்கை பற்றிய நம்பிக்கைகள் மற்றும் டிஜிட்டல் பணம் செலுத்துதல் தொடர்புடைய வரிக்கடன்கள் அதிகரித்தல் ஆகியன டிஜிட்டல் பரிவர்த்தனையை ஏற்றுக் கொள்வதற்கான வணிகர்களின் முடிவுகளில் முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவதாக, ஆய்வு கூறுகிறது.

"பிற நாடுகளில் இம்முறையை ஏற்பதில் பெரும் வேறுபாடுகள் உள்ளன," என்று, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியரும், ஆய்வின் இணை ஆசிரியருமான ஈதன் லிகான், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கிரெடி மற்றும் டெபிட் கார்டு முறைகள் மேலாதிக்கம் செலுத்துகின்றன. இது ஏற்கனவே பெரும்பாலான சில்லறை பரிவர்த்தனைகளில் ரொக்கத்தை அகற்றி, சிறுமதிப்பு-நபர் பரிவர்த்தனைகளில் சேமிக்கப்படுகிறது" என்றார். இது அமெரிக்காவில் காணப்படுகிறது, இதில் 10%-க்கும் குறைவான பண பரிவர்த்தனைகளின் மூலம் கணக்குகள் மற்றும் பெரிய நகரங்களில் சில்லறை விற்பனையாளர்கள் அனைவருக்கும் ரொக்கத்தை ஏற்கத் தேவையில்லை.

இந்தியாவில், கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளின் ஊடுருவல் மிகவும் குறைவாகவே உள்ளது, ஆனால் பணத்தை கொண்டு செல்வதால் ஏற்படும் ஆபத்துகள் வேறு சில குறைந்த வருமானம் கொண்ட நாடுகளை விட இங்கு மிகக் குறைவு என்று அவர் மேலும் கூறினார். இதன் பொருள் மொபைல் பணம் அமெரிக்கா அல்லது ஐரோப்பாவைப் போல கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளுக்கு எதிராக போட்டியிடுவதில்லை. இது பணத்துடன் போட்டியிடுகிறது.

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பத்து மடங்கு அதிகரித்து, 22 தனிநபர் பரிமாற்றங்கள் என்றுள்ளன. ஆனால் மற்ற பிரிக்ஸ் நாடுகளை விட இது குறைவாகவே இருக்கிறது: சீனா (97), பிரேசில் (149), ரஷ்யா (179) மற்றும் தென்னாப்பிரிக்கா (79) என, மே 2019 ரிசர்வ் வங்கி (RBI) அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

சரியான நடவடிக்கைகளுடன், தனிநபர் பரிவர்த்தனைகள் மூன்று ஆண்டுகளில் 10 என்ற காரணியாக வளர்ந்து மார்ச் 2021 க்குள் 220 ஐ எட்டக்கூடும் என்று ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது; இது, இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையத்தின் (UIDAI அல்லது ஆதார்) வடிவமைத்த நந்தன் நிலேகனி தலைமையிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரிக்கும் குழுவால் எழுதப்பட்டது.

ஆபிரிக்காவில் டிஜிட்டல் பணம் வழங்கல் மிகவும் பரவலாக உள்ளன; கென்யாவில் 97% பெரியவர்கள் 2017 ஆம் ஆண்டில் டிஜிட்டல் கட்டணத்தையும், தென்னாப்பிரிக்காவில் 60% பேரும் செலுத்தியுள்ளனர், இது இந்தியாவில் ஒப்பிடும் போது 29% என்று, 2018 மே 17, இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. 80% இந்தியர்களிடம் வங்கிக் கணக்கு உள்ளது. அதே விகிதத்தில் மொபைல் போன் இருந்தது, ஆனால் நிதி சேர்க்கும் அளவுகள் இன்னும் உலகின் மோசமானவையாக இருக்கின்றன என்று நாங்கள் தெரிவித்திருந்தோம்.

புவியியல் பரப்பளவில் இந்தியாவின் ஏடிஎம்-ளின் அடர்த்தி (1,000 சதுர கிமீக்கு 69 ஏடிஎம்கள்) என்று,முக்கிய வளர்ந்து வரும் சந்தைகளில், சீனாவுக்கு (100 ஏடிஎம்கள் ) அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது; ஆயினும் இந்தியாவின் அதிக மக்கள்தொகை அடர்த்தியுடன் ஒப்பிடும் போது இது போதாது என, அக்டோபர் 23, 2018 இல் லைவ்மிண்ட் செய்தி தெரிவித்தது.

பண மதிப்பிழப்பு தூண்டுதல் போதாது

கடந்த 2016 நவம்பரில், மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை (அதிக மதிப்புள்ள ரூபாயை திரும்பப் பெறுதல்; இதன் மதிப்பின் அடிப்படையில் புழக்கத்தில் இருந்த 86% ரூபாய் நோட்டுகள்) அறிவித்தது. அதன் நோக்கங்கள் "மிகவும் கணிசமாக" நிறைவேறியது என, பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் கூறியதை, தி எகனாமிக் டைம்ஸ் இதழ், 2018 ஆகஸ்ட் 29இல் செய்தி வெளியிட்டிருந்தது.

பணமதிப்பிழப்பின் குறிக்கோள்களான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல், கறுப்புப் பணத்தை கண்டறிதல், பயங்கரவாதத்திற்கான நிதி மற்றும் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை அகற்றுதல் உள்ளிட்டவை அடுத்து வந்த நாட்களில் மாறியதாக தெரிவிக்கப்பட்டது. பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ .500 மற்றும் ரூ .1,000 நோட்டுகளில் 99% க்கும் அதிகமானவை திருப்பி பெறப்பட்டன; அதே நேரம், ரூ .11,000 கோடி திரும்ப வரவில்லை.

ஜெய்ப்பூரில் உள்ள வணிகர்களுக்கு, பண மதிப்பிழப்பிற்கு பிறகு, டிஜிட்டல் முறையில் செலுத்தக் கோரிய வாடிக்கையாளர்களின் சதவீதம் அதிகரித்தது. "அடுத்தடுத்த காலகட்டத்தில் அதன் தேவை குறைந்தது; (பண மதிப்பிழப்புக்கு முந்தைய நிலைகளுக்கு எல்லா வழிகளிலும் இல்லை என்றாலும்),” என்று ஆய்வு கூறியது.

"பணமதிப்பிழப்பு, நுகர்வோரின் பணத்தைப் பயன்படுத்துவதற்கான திறனை தற்காலிகமாக குறைத்தது; மேலும் இந்தியா மரபுவழியாக இதை கொண்டிருக்கவில்லை (சில சிக்கல்கள் இருந்தாலும்); டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைக்கு இது ஒரு பெரிய ஊக்கம் தந்ததாக நான் நம்புகிறேன்," என்று, ஆய்வின் இணை ஆசிரியர் ஈதன் லிகான், இந்தியா ஸ்பெண்டிற்கு தெரிவித்தார். "இதில் முக்கியமானது என்னவென்றால், மறுபரிசீலனை செய்யாமல் அரசும் பொருளாதாரத்திற்கு கடும் நெருக்கடியை கொடுத்திருக்கும்" என்றார் அவர்.

இதை ஏற்றுக் கொண்டவர்கள் மற்றும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் இடையிலான ஒப்பீடு காட்டுகிறது, “பண மதிப்பிழப்புக்கு முன், டிஜிட்டல் பணம் செலுத்துதலை ஏற்றுக் கொண்டவர்களது வாடிக்கையாளர்களில் 6.65% மற்றும் ஏற்காதவர்களின் 2.88% வாடிக்கையாளர்கள், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துமாறு கோரினர். பண மதிப்பிழப்பிற்கு பிறகு இந்த விகிதம் முறையே 26.09% மற்றும் 12.36% என்று இருந்தன; மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நேரத்தில் இது 15.10% மற்றும் 5.22% ஆக இருந்தது".

"டிஜிட்டல் முறை பணம் செலுத்துவதில், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு எழுச்சி ஏற்பட்டிருக்கலாம்; ஏனென்றால், போதிய பணமின்மையாக இருந்தது. பணப்புழக்கம் இயல்பானதும் மீண்டும் டிஜிட்டல் முறை பணம் செலுத்துதல் குறைந்தளவு விருப்பத்தையே கொண்டிருக்கிறது” என்று, வளர்ந்து வரும் பொருளாதார நிபுணரான ரீதிகா கெரா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "சொல்லாட்சிக்கு மாறாக, டிஜிட்டல் கொடுப்பனவுகளை நாம் எந்த அளவிற்கு கொண்டாட வேண்டும் என்பது பற்றி ஒரு விவாதம் உள்ளது" என்றார் அவர்.

டிஜிட்டல் கட்டண முறைகளில் நடந்துள்ள கட்டண மோசடி இந்தியாவில் பதிவாகியுள்ளது மற்றும் டிஜிட்டல் பணம் வழங்கலை தவிர்ப்பது "மக்களின் அறிவுசார்ந்த" காரணமாக இருக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.

"பரிவர்த்தனைகளில் பணத்தைப் பயன்படுத்த விரும்பும் நபர்களுக்கும், நிலம், தானியங்கள் அல்லது தங்கம் போன்ற சொத்துக்கள், செல்வத்தை சேமித்து வைக்கும் நபர்களுக்கும், வங்கி கணக்குகள் முக்கியமல்ல" என்று லிகான் கூறினார். "இந்தியாவைப் போலவே, நிதித் துறையையோ அல்லது அதைக் கட்டுப்படுத்துவதில் இவ்வளவு பெரிய பங்கைக் கொண்டுள்ள அரசாங்கத்தையோ ஒருவர் நம்பவில்லை என்றால் அவரது பணம் மற்றும் சொத்துக்களுக்கான விருப்பம் அர்த்தமுள்ளதாக இருக்கும்" என்றார் அவர்.

அடிப்படை கல்வியறிவு மற்றும் நவீன வங்கி முறையை பயன்படுத்துவதற்கான அணுகல் எளிதானது என்ற போது, டிஜிட்டல் முறை பணம் செலுத்துதல் ஏன் குறைவாக உள்ளன; இந்தியாவின் முன்னுரிமையானது, ஒரு வலுவான, நம்பகமான மற்றும் நட்புரீதியான வங்கி முறை, மக்கள் எளிதில் அணுகுவதை உறுதி செய்வதாக இருக்க வேண்டும் என்று கெரா மேலும் கூறினார்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஊக்கம் தருகிறது?

டிஜிட்டல் முறை பணம் செலுத்துதல், "வணிக வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கின்றன, ஏனெனில் அவை நிறுவனங்களுக்கான அதிகாரப்பூர்வ பரிவர்த்தனை பதிவை உருவாக்க உதவுகின்றன", என்று ஆய்வு குறிப்பிட்டது. டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைகளைப் பின்பற்றியவர்களில் கிட்டத்தட்ட 74% பேர் சரக்கு மற்றும் சேவை வரிக்கு (ஜி.எஸ்.டி.) பதிவு செய்திருந்தனர்; டிஜிட்டல் பரிவர்த்தனை ஏற்காதவர்களில் 48% பேர் மட்டுமே தங்களிடம் ஜி.எஸ்.டி. இருப்பதாக கூறினர்.

ஜி.எஸ்.டி. பதிவு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக புகார் செய்த வணிகர் துணைக்குழுவில், 78.4% ஏற்றுக் கொண்டவர்கள் மற்றும் 60.63% ஏற்காதவர்கள். "டிஜிட்டல் கட்டண பயனர்கள் அவர்கள் ஏற்கனவே ஜிஎஸ்டி செலுத்த பதிவு செய்துள்ளதாக புகாரளிக்க அதிக வாய்ப்புள்ளது," என்பதை இது காட்டுவதாக, அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.

டிஜிட்டல் கட்டண முறைகளை நோக்கி நகர்த்துவதில் மக்களுக்கு தயக்கம் காட்டுவதில், மரபுவழி முறை ஆதிக்கம் செலுத்துவதாக, லீகன் சந்தேகம் கொண்டுள்ள்ளார். முக்கிய வேறுபாடு "ரொக்கம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகள் வெளியிட விரும்பாதவை ஆகும். மேலும் இதில் வெளிப்படைத்தன்மை மிகவும் குறைவானது " என்று லீகன் கூறினார். "இந்த ரகசியத்தன்மையை மதிக்கும் மக்கள் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாதவர்கள் எப்பொழுதும் ரொக்க பரிமாற்றத்தை விரும்புவதற்கு காரணமாக இருக்கலாம்" என்றார் அவர்.

எவ்வாறு ஆனாலும், டிஜிட்டல் கட்டண முறை ஏற்பு என்பது வரி முறையால் வழங்கப்படும் சலுகைகளைப் பொறுத்தது; டிஜிட்டல் கட்டண தளத்தின் பண்புகள் அல்லது செலவுகளால் அல்ல என்று, லிகான் மேலும் தெரிவித்தார்.

"புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும்போது, அவை விரும்பிய விளைவை அடைகின்றனவா என்பதை கவனமான, சுயாதீனமான மதிப்பீட்டின் அடிப்படையில் ஆராய்ந்து, தற்போதுள்ளவற்றை மெதுவாக வெளியேற்றப்பட வேண்டும். எனினும், அது நடக்கவில்லை,” என்று, அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நாராயணன் கூறினார். மக்கள் ஒப்புதல் பெறாமல் புதிய தளங்களுக்கு அவர்கள் இடம் பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக கிராமப்புற வங்கிகளில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லது நூறு நாள் வேலைதிட்ட பணியாளர்களின் (MGNREGS) வங்கி கணக்குகள் அவர்களது சம்மதமின்றி ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டது. தொழிலாளர்களின் பணம் ஏர்டெல் வேலட் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கணக்குகளுக்கு திருப்பி விடப்பட்டதாக அவர் தெரிவித்தார். "இதுபோன்ற அனுபவங்கள் மக்களின் சந்தேகங்களை அதிகரிக்க மட்டுமே உதவுகின்றன" என்றார் அவர்.

(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.