ஜெய்ப்பூர்: இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6% கல்விக்காக செலவிட வேண்டும் என்று, 1968ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேசிய கல்வி கொள்கையும் (NEP) கூறி வந்துள்ளது. 52 ஆண்டுகளாக அந்த பரிந்துரை உள்ள நிலையில், 2019-20 ஆம் ஆண்டில் இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.1% மட்டுமே கல்விக்காக செலவழித்ததாக, 2019-20 பொருளாதார ஆய்வு காட்டுகிறது.

பொதுக்கல்வி மீதான இந்த குறைவான மதிப்பீட்டின் ஒரு முடிவு என்னவென்றால், இந்தியாவின் கிட்டத்தட்ட 24.8 கோடி குழந்தைகள் படிக்கும் பாதிக்கும் மேற்பட்ட (52%), 10 லட்சத்திற்கும் அதிகமான அரசுப் பள்ளிகளுக்கு மோசமாக நிதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கற்றல் முடிவுகள் மிகவும் மோசமாக இருப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பட்ஜெட்டுக்கு முந்தைய இந்த விளக்க கட்டுரையில், அரசால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு எவ்வாறு நிதி ஒதுக்கப்படுகிறது, பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது, மேலும் இந்தத் துறையின் திறமையான நிதியுதவிக்கு இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் கோடிட்டுக் காட்டுகிறோம். (கல்வி பட்ஜெட்டானது பள்ளி மற்றும் உயர் கல்வி என்று பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விளக்கமளிப்பது என்பது, ஆரம்பக் கல்வி மற்றும் பள்ளி கல்வியில் கவனம் செலுத்துகிறது, இது கற்றலின் மிக முக்கியமான கட்டமாகவும் அதிக வருமானம் மற்றும் பிற்கால வாழ்க்கையில் சிறந்த ஆரோக்கியத்திற்கான திறவுகோலாகவும் கருதப்படுகிறது).


அரசு என்ன செலவிடுகிறது

இந்தியாவில், பள்ளிக் கல்விக்கான அரசு செலவினங்கள் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளுக்கானது (10 லட்சத்திற்கும் அதிகமானவை) மற்றும் ஒரு சிறிய விகிதம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு (84,623) செல்கிறது. தனியார் பள்ளிகள் (326,228) அரசு நிதியுதவியை பெறவில்லை, ஆனால் பொருளாதார ரீதியாக பலவீனமான குடும்பத்தைச் சேர்ந்த, முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் --இது, பின்தங்கியவர்களுக்கு தனியார் பள்ளிகள் 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது -- நிதி பெறுகிறார்கள்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டுமே கல்விக்காக நிதியை செலவிடுகின்றன.

முழுமையாக மற்றும் பகுதியாக செலவிடும் மத்திய அரசு

கல்விக்கு இரண்டு வழிகளில் மத்திய அரசு பங்களிக்கிறது: மத்திய நிதியுதவி திட்டங்கள் மற்றும் மத்தியத்துறை திட்டங்கள் மூலம். முதல் பிரிவில், பள்ளி கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கான மத்திய அரசு திட்டமான சமாக்ரிக் சிக்‌ஷா அபியான் போன்ற திட்டங்கள் அடங்கும், அவை பெரும்பாலும் மத்திய மற்றும் மாநிலங்களால், 60:40 என்ற விகிதத்தில் நிதியளிக்கப்படுகின்றன. வடகிழக்கு மாநிலங்களில், மத்திய நிதியுதவி திட்டங்களுக்கான, 90% நிதி மத்திய அரசிடம் இருந்து வருகிறது.

மத்திய துறை திட்டங்கள் -- பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான உதவித்தொகை, கிராமப்புறங்களில் விதிவிலக்காக திறமையான குழந்தைகளுக்கான நவோதயா பள்ளி வலையமைப்பு மற்றும் அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் -- மத்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்படுகின்றன. ஆனால் இவை, இந்தியாவின் கல்வி நிதியில் ஒரு சிறிய விகிதத்தை (1-2%) உருவாக்குகின்றன என்று டெல்லியை சேர்ந்த அக்கவுண்டபிளிட்டி இனிஷியேடிவ் மூத்த ஆராய்ச்சியாளர் மிருதுஸ்மிதா போர்டோலோய் கூறுகிறார். பாடநூல்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சிகளை வடிவமைத்து வெளியிடுவதற்கு பொறுப்பான அரசு அமைப்பான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கும், மத்திய அரசு நிதியளிக்கிறது.

"நீங்கள் மத்திய பட்ஜெட்டை மட்டுமே பார்த்தால், இந்தியாவில் கல்வி கதை முழுமையடையாது" என்று போர்டோலோய் கூறினார்,

அரசு பள்ளிகளுக்கான பெரும்பான்மையான நிதி மாநில அரசுகளிடம் இருந்து வருகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஆசிரியர் பயிற்சி மற்றும் மதிய உணவு போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு ஓரளவு பங்களிக்கிறது.


மாநில நிதி

மாநிலங்கள் அதிக கல்வி நிதியை வழங்குகின்றன. உதாரணமாக, மகாராஷ்டிரா போன்ற ஒரு மாநிலம், அதன் பள்ளி கல்விச் செலவுகளில் சுமார் 7-10% மட்டுமே மத்திய வங்கிகள் தருகின்றன. ஆனால் பீகார் அதன் கல்வி நிதியில் 40-50% மத்திய அரசிடம் இருந்து பெறுவதாக, அக்கவுண்டபிளிட்டி இனிஷியேடிவ் (Accountability Initiative) அமைப்பின் போர்டோலோய் கூறினார்.

மத்திய நிதியுதவி திட்டங்களுக்கு பங்களிப்பதைத் தவிர, மாநிலங்கள் தங்கள் சொந்த திட்டங்களைக் கொண்டுள்ளன, அதாவது பீகார் மேல்நிலைப் பள்ளி சிறுமியருக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது. பல முறை, பழங்குடியினர் அமைச்சகம் போன்ற மாநிலங்களின் பிற துறைகளும் பங்களிப்பு செய்கின்றன.

கல்விக்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதில் மாநிலங்கள் பெரிதும் வேறுபடுகின்றன. 2017-18 ஆம் ஆண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) ஒரு பங்காக, பீகாரில் 4.3% முதல், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் 1.8% வரை செலவழிக்கப்பட்டதாக, அக்கவுண்டபிளிட்டி இனிஷியேடிவ் 2020 மாநிலங்களில் ஜூன் 2020, எட்டு மாநிலங்களில் பகுப்பாய்வு கண்டறிந்தது.

மொத்த மாநில அரசு செலவினங்களின் விகிதமாக மேற்கு வங்கத்தில் 12% மற்றும் பீகார், மகாராஷ்டிரா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் 15% என மாறுபடுவதாக, பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. கல்வி செலவினம், மொத்த அரசு செலவினங்களின் சதவீதமாக, ஆறு மாநிலங்களில் -- கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசம்-- ஆகியவற்றில், 2014-15 ஆம் ஆண்டில் இருந்து 2019-20 வரை குறைந்துள்ளதாக, பட்ஜெட் ஆவணங்களை இந்தியா ஸ்பெண்ட் 2019 செப்டம்பர் கட்டுரை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாணவனுக்கான செலவினங்களும், ஒரு மாநிலத்தின் கல்விச் செலவின் மிகவும் துல்லியமான நடவடிக்கையில் மாறுபடும் என்பதை கீழே உள்ள புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.


சமமாக இருந்த செலவினம்

கல்விக்கான செலவு 2014-15 முதல் முழுமையான வகையில் அதிகரித்துள்ளது, இது மொத்த அரசின் பட்ஜெட்டில் சுமார் 10.5% தேக்க நிலையில் உள்ளது மற்றும் 2014-15 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8% இல் இருந்து 2019-20 ஆம் ஆண்டில் 3.1%, அதிகரித்துள்ளதாக, அரசின் 2019-20 பொருளாதார கணக்கெடுப்பு தெரிவித்தது.


பொருளாதார கணக்கெடுப்பின்படி, 2019-20 ஆம் ஆண்டில், இந்தியா கல்விக்காக ரூ.6.43 லட்சம் கோடி (88 பில்லியன் டாலர்) பொது நிதியை ஒதுக்கியது. இதில், மத்திய அரசு பள்ளி கல்விக்கு ரூ. 56,537 கோடி (7.74 பில்லியன் டாலர்) - 60% - மற்றும் உயர் கல்விக்கு ரூ.38,317 கோடி (5.25 பில்லியன் டாலர்) ஒதுக்கியது. கல்விச் செலவுகளில் 15% மத்திய அரசிடம் உள்ளது. மீதமுள்ளவை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வந்தவை.

இந்த ஆண்டு பட்ஜெட் ஏன் முக்கியமானது

மார்ச் 24, 2020ஆம் தேதியில் இருந்து, இந்தியா முழுவதும் பள்ளிகள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன, ஆன்லைன் கல்வி என்பது ஒருசில மாணவர்களையே அடைகிறது. அக்டோபர் 15 க்குப் பிறகு படிப்படியாக மீண்டும் திறக்க அரசு அனுமதித்தது, ஆனால் பெரும்பாலான மாநிலங்கள் ஒன்பது மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு மட்டுமே பாடங்களை தொடங்கின. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, 2020 புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த அரசு முயற்சிக்கையில், இந்தியா அதிக செலவு செய்ய வேண்டும், மேலும் அது எவ்வாறு நிதி செலவழிக்கிறது என்பதை மறு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்துள்ளனர்.

உதாரணமாக, கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, அரசுப் பள்ளிகள் டிஜிட்டல் கற்றல் முறையை சேர்க்க வேண்டியிருக்கிறது, 2018-19 ஆம் ஆண்டில் சவாலாக 28% அரசுப் பள்ளிகளில் மட்டுமே கணினிகள் இருந்தன, 12% பள்ளிகளில் மட்டுமே இணைய இணைப்பு இருந்தது.

மேலும், இந்தியாவில் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை உயரக்கூடும், ஏனெனில் கோவிட்-19 குடும்ப வருமானத்தை குறைத்துவிட்டது என்பதை, இந்தியாஸ்பெண்ட் டிசம்பர் கட்டுரை தெரிவித்துள்ளது, எனவே, பொது அரசு பள்ளி நெட்வொர்க்குகளில் அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கோவிட்-19 மாநில பட்ஜெட்டுகளையும், மத்திய அரசு கல்வி நிதிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு (UT) விடுவிப்பதையும் பாதித்தது. 2020-21 ஆம் ஆண்டில், 16 பெரிய மாநிலங்களில் கல்வி பட்ஜெட் திட்டங்கள் சரிவுற்றதாக, அக்கவுண்டபிளிட்டி இனிஷியேடிவ் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. நவம்பர் 24 ஆம் வரை, மத்திய அரசு சமாக்ரிக்ஷா பட்ஜெட்டில் 29%ஐ மட்டுமே மாநிலங்களுக்கு விடுவித்தது; அக்டோபர் 31 வரைக்குள் மாநிலங்கள் மொத்த ஒப்புதல் பட்ஜெட்டில் 26% மட்டுமே செலவிட்டன.

அத்துடன், தேசிய கல்வி கொள்கை அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வியை வலியுறுத்துகிறது, ஆரம்ப ஆண்டுகளில் அடித்தள எண் மற்றும் கல்வி அறிவில் கவனம் செலுத்துவதற்கான பாடத்திட்டத்தின் மறுசீரமைப்பு, குருட்டு மனப்பாட கற்றலில் இருந்து விலகி, மனப்பாடம் செய்வதை விட திறன்களையும் கற்றலையும் அளவிடும் புதிய மதிப்பீட்டு முறை ஆகும். இதற்கு அதிக தொகை தேவைப்படும், ஆனால் கிடைக்கக்கூடிய நிதிகள் மறு ஒதுக்கீடு செய்யப்பட்டு மிகத்திறமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றாலும் பணம் எங்கிருந்து வரும் என்பதில் தெளிவு இல்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கிட்டத்தட்ட போதாது

"இந்திய கல்வியில் அனைத்து பகுதிகளும்நிதியுதவி செய்யப்படுகின்றன ... எங்கள் முழு கல்வி பட்ஜெட் பை மிகவும் சிறியது மற்றும் பல ஆண்டுகளாக தேக்க நிலையில் உள்ளது," என்று, பட்ஜெட் மற்றும் ஆளுமை பொறுப்புக்கூறல் மையத்தின் (சிபிஜிஏ) ஆராய்ச்சியாளரான புரோட்டிவா குந்து கூறினார். உதாரணமாக, ஆசிரியர் சம்பளம் மாநிலங்களில் கல்வி செலவினங்களின் மிகப்பெரிய விகிதமாகும்; இன்னும் காலி பணியிடங்களை நிரப்ப, நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க மாநிலங்களுக்கு நிதி இல்லை.

மேலும், ஆசிரியர் பயிற்சிக்காக சிறிய பணம் செலவிடப்படுகிறது, இது வகுப்பறை கற்பித்தல் மற்றும் தாக்கக் கற்றலை மேம்படுத்த உதவும். இந்தியாவில் கற்றல் முடிவுகள் பல ஆண்டுகளாக மோசமாக உள்ளன, குழந்தைகளுக்கு நாம் முன்பு கூறியது போல் அவர்களின் தர அளவில் உரையை படிக்கவோ அல்லது முழுமையான செயல்பாடுகளை படிக்கவோ முடியவில்லை. பயிற்சியளிப்பதற்கும் தயார் செய்வதற்கும் போதுமான ஆதாரங்கள் இல்லாவிட்டால், குறைந்த கற்றல் விளைவுகளுக்கு ஆசிரியர்களை நீங்கள் குறை கூற முடியாது, "குந்து கூறினார்.

கல்விச் செலவினத்தின் பிற முக்கிய கூறுகள், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள், பகல் உணவு, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு மற்றும் சலுகைகள் போன்ற உரிமைகள் அடங்கும்.

கீழே உள்ள புள்ளிவிவரங்கள் காட்டுவது போல, இவை மாநிலங்களில் பரவலாக வேறுபடுகின்றன.


ஆசிரியர் பயிற்சியுடன், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகியன, இந்தியாவின் பட்ஜெட்டில் குறைவாகவே உள்ளதாக, நிபுணர்கள் தெரிவித்தனர். கோவிட்-19 தொற்றுக்கு பின்னர், ஆன்லைன் கல்வி முறை மிக முக்கியமாக்கியமான நிலையில், ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு நல்ல மடிக்கணினி மற்றும் இணையதள இணைப்பை வைத்திருப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது, குந்து கூறினார்.

"நீங்கள் எல்லாவற்றை செய்தாலும், பள்ளிகளில் கற்பித்தல் மற்றும் கற்றலை தவறாமல் கண்காணித்தால் மட்டுமின்றி, கற்பித்தல் விளைவுகளில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது", என்றும், ஏனெனில் பல்வேறு தலையீடுகளின் தாக்கத்தை மதிப்பிடுவது கடினம், போர்டோலோய் சுட்டிக்காட்டினார்.

கல்விக்கான நிதி குறைவாகவே இருந்தாலும், மாநிலங்கள் பெரும்பாலும் தங்கள் நிதியை முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. மத்திய அரசால் மாநிலங்களுக்கு தாமதமாக பணம் செலுத்துவது, ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் செலவழிக்கத் தேவையில்லாத பொருட்களுக்கு அரசு நிபந்தனை ஒதுக்கீடு செய்வது உட்பட பல காரணங்களால், இது நேரிடலாம். உதாரணமாக, ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கு பெயிண்டிங் செய்ய வேண்டுமா என்று குந்து கேட்கிறார். புதிய உள்கட்டமைப்பு அல்லது பராமரிப்பு போன்ற குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், அந்தச் செயல்பாட்டின் முழுமையான செலவை ஈடுசெய்ய, அது போதுமானதாக இல்லாவிட்டால், பள்ளிகள் அந்தச் செயல்பாட்டை முழுவதுமாக மேற்கொள்வதைத் தவிர்க்கக்கூடும். எனவே நிதி பயன்படுத்தப்படாமல் இருக்கும் என்று குந்து மேலும் தெரிவித்தார்.

(ஷிவானி பதக், இந்தியாஸ்பெண்ட் பயிற்சியாளர், இக்கட்டுரைக்கு பங்களித்துள்ளார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.