மும்பை: பீகாரில் ஜூன் 21, 2019ன்படி மூளைக்காய்ச்சலால் 128 குழந்தைகள் இறந்த நிலையில், புதிய ஆய்வு ஒன்றில் மாநிலத்தின் கிராமப்புற மக்கள் பொது சுகாதாரத்துக்கான அரசு முதலீட்டையும், சாலைகள், வேலைகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் என்ற வரிசைப்படி விரும்பம் உள்ளது தெரிய வந்துள்ளது.

அமெரிக்க ஆராய்ச்சி குழுவான ப்ரூக்கிங்ஸ் நிறுவனம், பீகாரின் நிர்வாகத் பகுதியில், 3,800 பேரிடம் - ஏழைகள், குறைந்த படித்தவர்கள் மற்றும்பின்தங்கிய சாதி குழுக்கள் உள்ளவர்கள் - ஆய்வு நடத்தியது. அவர்களிடம், தங்களது பகுதிக்கு அதிகரிக்கக்கூடிய (மற்றும் கற்பனையான ) பட்ஜெட்டிற்கு நேரடி பணப் பரிமாற்றங்கள் -டி.சி.டி(DCT) மாற்றப்படுவது அல்லது நலத்திட்ட பணிக்கு நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்ய கேட்டுக் கொள்ளப்ப்ட்டனர்.

இதில், 13% மட்டுமே டி.சி.டி வழியாக நிதி வர வேண்டும் என்று விரும்பினர். பெரும்பான்மையானவர்கள் (86%) , பொது சுகாதாரத்துறையில் முதலீடு செய்யப்பட வேண்டும் என்று விரும்பினர் (மீதமுள்ள 1% பேர் எந்த கருத்தையும் கொண்டிருக்கவில்லை). ஏறக்குறைய பதிலளித்தவர்கள் 63% பேர், டி.சி.டி திட்டத்தை விட, புதிய சாலைகளில் பட்ஜெட்டை செலவிட விரும்பியது, ஆய்வில் தெரிய வந்தது.

பதிலளித்தவர்களில், வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களுக்கு பொது சுகாதாரத்திலும் மற்றும் சாலை அமைத்தலில் முதலீடு செய்ய முறையே, 73% மற்றும் 79% பேர் விருப்பம் தெரிவித்தனர்.

"இந்த பதில்களில் இருந்து தெரிய வருவது, இந்தியாவின் மிகவும் பொருளாதார வளர்ச்சியடையாத பகுதியான பீகாரில் வசிக்கும் ஏழை குடிமக்களில் பலர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்கள் மற்றும் சாலைகள் பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றனர்; கடைசியாக பணம் இடம் பெருகிறது” என்று, ஆய்வின் இணை ஆசிரியரும், உலக வங்கியின் மேம்பாட்டு ஆராய்ச்சி குழுவில் உள்ள மூத்த பொருளாதார நிபுணருமான ஸ்டுட்டி கெமானி தெரிவித்தார்.

மூன்றாவது அதிகபட்ச ஏழைகளை கொண்ட பீகாரில் பரிமாற்ற நிதிக்கு 1% ஆதரவே உள்ளது

மத்திய அரசு, ஜனவரி 1, 2013இல் நேரடி பயன் பரிமாற்றம் (டிபிடி) திட்டத்தை அறிமுகப்படுத்தியது; “தகவல் / நிதியை எளிதாக்குதல் மற்றும் விரைவாக்குதல்; நலத்திட்டங்களில் தற்போதுள்ள செயல்முறையை மறுவடிவமைப்பு செய்வதன் மூலம் அரசு விநியோக முறையை சீர்திருத்துவது மற்றும் மற்றும் பயனாளிகளின் துல்லியமான இலக்கை உறுதி செய்தல், நகல் மற்றும் மோசடியைக் குறைத்தல்” இதன் நோக்கமாகும்.

பொதுமக்களுக்கான இந்த நிதி ஓட்டம் (டி.சி.டி) இரு முறைகள் மூலம் அல்லது வகையாக நடைபெறுகிறது. 2018-19 ஆம் ஆண்டில், நாட்டில் சுமார் 59 கோடி பயனாளிகளுக்கு ரூ. 2,14,092 கோடி (30.7 பில்லியன்) மாற்றப்பட்டது மற்றும் மத்திய அரசு வழங்கிய மொத்த டிபிடியில் 65% ஆகும்.

பீகார் 1,627 கோடி ரூபாய் (233 மில்லியன் டாலர்) ஒட்டுமொத்த பண பலனைப் பெற்றது; இது அகில இந்திய எண்ணிக்கையில் 1% க்கும் குறைவானது என்பதை தரவுகள் காட்டுகின்றன. இது இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் பத்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

இது தவிர, ஆராய்ச்சியாளர்களால் "இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்று" என்று பீகார் அடையாளம் காணப்பட்டது; தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி (என்.எஸ்.டி.பி) ரூ.28,485 மட்டுமே - இது, அனைத்து 29 மாநிலங்கள் மத்தியில் மிகக்குறைவானது; மற்றும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மத்திய ஆப்ரிக்க குடியரசின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமானது.

பொது சேவைகளின் செலவில் பண சலுகைகள்?

நாங்கள் முன்பு குறிப்பிட்டது போல, கணக்கெடுப்பு பதிலளித்தவர்களுக்கு டி.சி.டி மற்றும் அரசாங்கத்தின் இரண்டு சமூக கடமைகள் - பொது சுகாதாரம் மற்றும் புதிய சாலைகள் ஆகியவற்றுக்கு இடையேயான வர்த்தக பரிமாற்றங்களை ஒரு கற்பனையான பட்ஜெட்டால் நிதியளிக்க வேண்டும்.

முன்னேற்றத்தை மேம்படுத்த, இரண்டாவது வர்த்தக பரிமாற்றங்கள் வழங்கப்பட்டன: பொது சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்கள், மற்றும் பொது சுகாதாரம் மற்றும் புதிய சாலைகள்.

கற்பனை செய்யப்பட்ட வர்த்தகத்திற்கு பயனாளிகளின் பதிலை பெறுவது ஏன் முக்கியமானது?

ஆராய்ச்சியாளர்கள் "ஏழைகள் நம்பக்கூடிய பிற வகையான பொதுப் பொருட்கள் மற்றும் சேவைகள் பணப் பரிமாற்றத் திட்டத்தின் நேரடி விளைவாக எவ்வாறு பாதிக்கப்படும் என்பதைக் காட்ட விரும்பினர் - இவை இரண்டும் இந்தியாவில் மாநில அரசு திட்டத்தின் நிதி செலவு மற்றும் வரையறுக்கப்பட்ட செயல்படுத்தல் திறன் காரணம்” என, மற்றொரு 2019 உலக வங்கி அறிக்கையை விளக்கி, கெமானி தெரிவித்தார்.

"ஏழை நாடுகளில் பணப் பரிமாற்றம் போன்ற இலக்கு வைக்கப்பட்ட தனியார் சலுகைகளை வழங்கும் கொள்கைகள், பொது சுகாதாரத்தைப் போன்ற பரந்த பொது சேவைகளின் இழப்பில் அந்த ஆட்டத்தை தூண்டுவதன் மூலம் கவனக்குறைவான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்" என்று கெமானி, வலைப்பதிவில் எழுதியுள்ளார்.

முன்னுரிமைகள் அதிகமாக உள்ள மேம்பட்ட பொது சுகாதார வசதிகள்

நாங்கள் சொன்னது போல், பங்கேற்பாளர்களுக்கு நிதி பயன்பாட்டிற்கான மாற்று வழிகள் வழங்கப்பட்டபோது, டிபிடி மூலம் பணத்திற்கான மிகக் குறைந்த விருப்பத்தையே அவர்கள் காட்டினர் - சாலைகள் மற்றும் சுகாதாரம், சாலை கட்டுமானம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய இரண்டையும் தேர்வு செய்துள்ளனர்.

"மக்களின் விருப்பத்தேர்வுகள், குறைந்தபட்சம், கடந்த காலங்களில் அரசு எவ்வாறு செயல்பட்டது என்பது குறித்த அவர்களின் கருத்துக்களைப் பொறுத்தது" என்று கெமானி கூறினார். "எடுத்துக்காட்டாக, கடந்த காலங்களில் பெரிய, இலக்கு வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு சிறப்பாக செயல்படவில்லை என்பதால், மக்கள் இப்போது பொது சுகாதாரம் போன்ற பரந்த வகையான பொது சேவைகளுக்கு ஆதரவை வெளிப்படுத்துகின்றனர்" என்றார் அவர்.

போதிய நிதி (2018-19 இடைக்கால பட்ஜெட் திட்டத்தின் 2%) இந்தியாவின் பொது சுகாதாரத் துறையை மோசமான நிலையில் வைத்திருக்கிறது; இதனால் நோயாளிகள் தனியார் சுகாதார வசதிகளை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாக்கெட்டில் இருந்து செல்விடுவது 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுக்கு இடையில் 16% அதிகரித்துள்ளது என்ற உலக சுகாதார அமைப்பின் தரவுகளை மேற்கோள்காட்டி, 2019 ஜனவரியில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

2011-12 ஆம் ஆண்டில், 5.5 கோடி இந்தியர்கள் சுகாதார செலவினங்களால் வறுமையில் தள்ளப்பட்டதாக, இந்த 2018 ஜூலையில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. மூன்றாம் நிலை பராமரிப்பு செலவில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சுகாதாரத்துக்கான ஆதார வள ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வாய்ப்புள்ளது என, 2019இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

நடப்பு 2019 ஜூன் தொடக்கத்தில் இருந்து பீகார் குழந்தைகள் மத்தியில் பரவி வரும் மூளைக்காய்ச்சல் என்ற அபாயகரமான தாக்குதலுக்கு, பீகார் அரசின் தாமதமான மற்றும் போதிய நடவடிக்கையின்மை, மாநிலத்தின் சுகாதார உள்கட்டமைப்பின் சிதைவை காட்டுகிறது; பொதுமக்களின் கவலையை விளக்குகிறது. மூளைக்காய்ச்சல் (என்செபலிடிஸ்) முதன்முதலில் முசாபர்பூரில் 1995 இல் அடையாளம் காணப்பட்டது; தற்போது நகரத்தை "கடிகாரச்சுற்றில்" துல்லியமாக தாக்குவதாக, தி வயர் செய்தி தெரிவித்துள்ளது. இதுபோல் இருந்தும், ஆண்டு சுகாதார அச்சுறுத்தல்களை மாநிலத்தால் சமாளிக்க முடியவில்லை.

வங்கியியல் பொது சுகாதார அமைப்பு இல்லாத நிலையில் பணப் பரிமாற்றங்களை பயன்படுத்த ஏழைகளுக்கு கடினமாக உள்ளது என்பது, கெமானியின் பார்வையாகும். "அவர்கள் கர்ப்ப காலத்தில் மற்றும் அவர்களின் இளம் குழந்தைகளுக்கான தடுப்பு பராமரிப்பு மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு அரசு நிதியளிக்கும் சமூக சுகாதார ஊழியர்களை நம்பியுள்ளனர்," என்று அவர் கூறினார். "ஆனால் இந்த சமூக சுகாதார ஊழியர்கள் ஆதாரவளம் இல்லாதவர்களாக தெரிகின்றனர்; பதிலளித்தவர்கள் ஏன் கூடுதல் பட்ஜெட் திட்டம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று விளக்கம் தந்துள்ளனர்" என்றார்.

பீகாரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் (MGNREGS) - உலகில் மிகப்பெரிய கிராமப்புற வேலை உத்தரவாத முன்முயற்சி -ஒப்பீட்டளவில் "தோல்விக்கு" சுகாதாரத்துக்கு எதிரான வேலைகளுக்கு குறைந்த விருப்பமே காரணம் என்று கெமானி குறிப்பிட்டார். மாநிலத்தில் இத்திட்டத்தில் 21% கிராமப்புற குடும்பங்கள் மட்டுமே பயனடைய முடிந்தது. இது அகில இந்திய சராசரியான 66% ஐ விட குறைவாக இருந்தது என, 2018 ஆய்வு தெரிவிக்கிறது.

பரிமாற்றங்கள் மீது உள்ளூர் தலைவர்களுக்கும் ஆர்வமில்லை

வட்டார அளவிலான தலைவர்கள் மத்தியிலும் பணப்பரிமாற்றத்திற்கான குறிப்பிடத்தக்க கோரிக்கையும், இந்த ஆய்வில் காணப்படவில்லை. சுமார் 35% கிராம அளவிலான அரசியல்வாதிகளில் - பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், கிராமத் தலைவர்கள் (முக்ய) மற்றும் முக்ய பதவிக்கான முன்னாள் வேட்பாளர்கள் - மேற்கொள்காட்டியது, "சமூக நல்லிணக்கத்தை பராமரிப்பது" அவர்கள் சமாளிக்க வேண்டிய மிக முக்கியமான பிரச்சினை என்பது தான்.

"ஒருவேளை, இந்த சூழலில் பணத்தை செலுத்துவது சமூக மோதலைத் தூண்டுவதன் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்" என்று கெமானி கூறினார்.

பட்டியலிடப்பட்ட விருப்பங்களில், ஒதுக்கப்பட்ட பிரிவுகளில் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் எனப்படும் பட்டியலின மக்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் - கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு மூலம் உறுதிப்படுத்தும் நடவடிக்கைக்கு தகுதியானவர்) மற்றும் பொதுப்பிரிவில் பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை.

ஏழைகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்களைத் திட்டமிடும்போது பல கொள்கை வகுப்பாளர்கள் செய்வது போல பணத்தை ஒரு "வறுமைக் கொல்லும்" என்று கருதக்கூடாது என்று, தனது வலைப்பதிவில் கெமானி முடித்திருக்கிறார். "பணத்தை செலுத்துவது காய்ச்சலின் அறிகுறிகளுக்கு உதவ, டைலெனால் கொடுப்பதற்கு ஈடாக இருக்கலாம்," என்று அவர் கூறினார். "இது உதவக்கூடும், ஆனால் எச்சரிக்கையாகவும் கட்டுப்படுத்தப்பட்ட அளவிலும் நிர்வகிக்கப்பட வேண்டும்" என்றார் அவர்.

(சஹா, புனே சிம்பியோசிஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் எம்.எஸ்.சி. மாணவர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.