மும்பை: இந்தியாவில், மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்களின் (எம்.எல்.ஏ.) தொகுதிகளில், ஆண் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளைவிட கூடுதல் பொருளாதார வளர்ச்சி இருப்பது, பெண் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.

ஏனென்றால், பெண் சட்டமன்ற உறுப்பினர்களில் குற்றம்புரிவோர் மற்றும் லஞ்சம் பெறுவோர் குறைவாக இருப்பர். அதிக திறன் கொண்டிருப்பதோடு, சந்தர்ப்பவாத அரசியலிலோ, அதிகாரத்தில் இருக்கவோ (பெரும்பாலும் ஆண்கள்) முயற்சி செய்யாமல் இருப்பார்கள் என்று, ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகமான பொருளாதார ஆராய்ச்சி மேம்பாடுக்கான உலக நிறுவனத்தின் 2018 மே மாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலில் பெண்களின் பங்கெடுப்பு அதிகரிக்க தொடங்கியதில் இருந்து, அரசு நிதியை பயனுள்ளதாக செலவழிப்பதில் கணிசமான பலனை, பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளதாக, அறிக்கையில் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். ”அரசியலில் பெண்களின் பங்கெடுப்பு பொருளாதார வளர்ச்சிக்கு நல்லதா என்ற எங்களின் ஆய்வு முதல்முறையான பரிசோதனை” என்று அவர்கள் கூறினர்.

இந்த ஆய்வு, பெரும்பாலான மாநிலங்களில் நான்கு தேர்தல்கள் நடந்த 1992ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை, ’வலுவான பொருளாதார வளர்ச்சி’ நிலவிய சூழலில் 4,265 சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இக்காலகட்டத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற பெண்களின் விகிதமும் 4.5% இல் இருந்து 8% ஆக உயர்ந்தது.

பொருளாதார வளர்ச்சியில் ஒரு தலைவரின் பாலின செல்வாக்கை தனிமைப்படுத்தும் வகையில், குறுகிய விளிம்பில் ஆண் எம்.எல்.ஏ.க்களை பெண்கள் வென்ற தொகுதிகள்; நூலிழையில் பெண்கள் தோற்கடித்த ஆண் எம்.எம்.ஏ.க்களின் தொகுதிகளில் ஆய்வின்போது கவனம் செலுத்தப்பட்டது.

பாதைக்கு ஒளி தரும் பெண்கள்

பெண் எம்.எல்.ஏ.க்களை தேர்ந்தெடுப்பதால் ஏற்படும் பொருளாதார தாக்கங்களை கண்டறிய, நாசா வழங்கிய செயற்கோள் புகைப்பட உதவியோடு தேர்தல் புள்ளி விவரங்களை ஆய்வு செய்து, வளர்ச்சி அல்லது ஆண்டு சராசரியை கணக்கிட்டனர்.

பெண் சட்டமன்ற உறுப்பினரை கொண்டிருக்கும் தொகுதி, ஆண் எம்.எல்.ஏ.வின் தொகுதியை விட வளர்ச்சி 15.25% புள்ளிகள் அதிகமாக இருந்தது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1/85% வளர்ச்சியாகும்.

“ஆய்வுக்காலத்தின் போது இந்தியாவின் சராசரி வளர்ச்சி ஆண்டுக்கு 7% ஆக இருந்தது. சட்டமன்ற உறுப்பினர் பெண்ணாக இருந்த தொகுதிகளில் வளர்ச்சி 25%” என்று எங்களின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெண் எம்.எல்.ஏ.வை கொண்டுள்ள தொகுதிகளில் பொருளாதார வளர்ச்சி காணப்பட்ட நிலையில், அதில் குறைந்த தொகைக்கான வளர்ச்சியானது அருகில் உள்ள ஆண் எம்.எல்.ஏ. உள்ள தொகுதியில் இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வளரும் நாடுகளின் வளர்ச்சியில் தொடர்புடையவை என்பதாலேயே, பாலின வேறுபாடுகளால் ஏற்படும் ஊழல், திறன் (சாலை உட்கட்டமைப்புகளுக்கான கூட்டு நிதி) மற்றும் ஊக்கம் ஆகியவற்றை குழுவினர் ஆய்வு செய்தனர்.

இருண்ட பக்கம் செல்லும் ஆண்கள்

எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்தபோது, ஆண் எம்.எல்.ஏல்.க்கள் பலரின் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இது, பெண் எம்.எல்.ஏ.க்களுடன் ஒப்பிடும் போது இது குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும்.

பெண் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆண் உறுப்பினர்களுடன் ஒப்பிடும் போது சராசரியாக வயது குறைந்தவர்களாக இருந்தனர்.

வழக்கு நிலுவையில் உள்ள பெண் எம்.எல்.ஏ.க்களின் விகிதம்10%; இதில், ஆண் எம்.எல்.ஏ.க்களின் விகிதம் 32% ஆக உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டது. குற்றச்சாட்டுக்கு ஆளான இருபாலின எம்.எல்.ஏ.க்களின் பின்னணியை ஆய்வு செய்தபோது ஆண் எம்.எல்.ஏ.க்களை விட பெண்களின் மீதான குற்றச்சாட்டுகள் குறைவாகவே இருந்தன.

”இது, ஆண் - பெண் உறுப்பினர்களை கொண்ட தொகுதிகளின் வளர்ச்சியில் ஒன்றில் கால் பங்கு வேறுபாடு இருப்பதை இது காட்டுகிறது” என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களின் கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவாக, மேலும் உறுதிப்படுத்தும் வகையில், 2014ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுடன் பரிசோதித்தனர். முறைகேடு புரிவதில் உள்ள பாலின வேறுபாட்டை காண, எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படும் முன்பு இருந்த சொத்துக்களின் மதிப்பு, அவரது பிரமாண பத்திரம் மூலம் பெறப்பட்டது; பதவிக்கு வந்த பின் அவர் சேர்த்த சொத்துக்களின் மதிப்பு, அடுத்த தேர்தலில் அவர் அளித்த பிரமாண புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஒப்பிடப்பட்டுள்ளன.

பெண்கள் பொறுப்பு வகித்த போது சேர்க்கும் சொத்துக்களின் ஆண்டு சராசரி, ஆண் எம்.எல்.ஏ.க்கள் சேர்த்து வைத்த சொத்து மதிப்புகளுடன் ஒப்பிடும் போது 10% புள்ளிகள் குறைவு.

பெண்கள் மேலும் நியாயமிக்கவர்கள்; ஆபத்தானவர்கள், ஆண்களோடு ஒப்பிடும் போது குற்றச்செயல்களிலோ, பிற விவகாரங்களிலோ ஈடுபடுவதற்கான வாய்ப்பு குறைவு என்ற கருத்தோடு 2001, 2008 மற்றும் 2010 ஆய்வு முடிவுகளும் ஆதாரபூர்வமாக ஒத்துப் போனதால், ஆய்வு மேற்கொண்டவர்கள் இம்முடிவுக்கு வந்தனர். இது, ஊழல் தொகையை பொருளாதாரத்திற்கான பங்களிப்பாக மாற்றச்செய்து பெண் எம்.எல்.ஏ.க்களுக்கு சாதமாகிறது” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பை ஏற்படுத்துவதில் திறமை காட்டும் பெண்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் செயல்திறனில் பாலின வேறுபாட்டை மதிப்பிடுவதற்காக, சாலை மேம்பாட்டு பணிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. வளர்ச்சிப்பணிக்கான மத்திய அரசின் நிதியை பெறுவதில் ஆண், பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்வம் காட்டினாலும், பணிகளை செய்து முடிப்பதில் பெண்களே முந்துவதாக, ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

தொகுதிகளில் சாலை திட்டங்களின் பங்கு, ஆண் எம்.எல்.ஏ.க்கள் உள்ள தொகுதிகளுடன் ஒப்பிடும் போது, பெண் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் 22% புள்ளிகளை கூடுதலாக பெற்றுள்ளதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் அளவு அல்லது செலவில் எந்த குறிப்பிடத்தக்க வித்தியாசமும் இல்லாத நிலையில், திட்டங்களை செய்து முடிப்பதில் பெண்கள் திறம்பட செயல்பட்டதாகவும், வளர்ச்சிக்கான கட்டமைப்புக்கு துணை புரிந்துள்ளது.

”இந்தியாவில் சாலை மேம்பாட்டு பணிகளில் பெண்களை விட ஆண்களுக்கு வேலைவாய்ப்பு மூலம் வருவாய் ஈட்டித்தரக்கூடியது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. நமது ஆய்வில், பெண் எம்.எல்.ஏ.க்கள் பெண்களின் நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், இதுபோன்ற திட்டங்களால் ஆண்கள் நலனிலும் கரிசனம் கொண்டிருப்பது தெரிய வந்தது” என்று அவர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

ஊக்கத்துடன் பெண் எம்.எல்.ஏ.க்கள்; சந்தர்ப்பவாத ஆண் எம்.எல்.ஏ.க்கள்

தங்களது சட்டமன்ற தொகுதிக்கு பணியாற்றுவதில் ஆண், பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே உள்ள வேறுபாட்டை ஆராய, இந்த ஆய்வானது ”ஸ்விங்” - அதாவது தொடர்ந்து இரு தேர்தலில் வெற்றிக்கான வித்தியாசம் 5%-க்கும் குறைவாக உள்ள தொகுதிகள் - மற்றும் “முக்கிய’ தொகுதிகள் என வகைப்படுத்தப்பட்டன. தொடர்ந்து அடிக்கடி நடைபெற்ற தேர்தல்கள், கடும் போட்டி, தேர்தல் உற்சாகம் போன்றவை எம்.எல்.ஏ.க்களை தொடர்ந்து கடினமாக பணியாற்ற தூண்டுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’ஸ்விங்’ என்று வகைப்படுத்தப்பட்ட குறைந்த வித்தியாசத்தில் எம்.எல்.ஏ. வெற்றி பெற்ற தொகுதிகளில், வளர்ச்சிப்பணிகள் நடைபெறுவது ஆண், பெண் என்ற பாலின பாகுபாட்டை சார்ந்திருக்கவில்லை; ஆண், பெண் எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகளிலும் பெரிய வித்தியாசத்தை பார்க்க முடியவில்லை.

அதேநேரம், ’ஸ்விங்’ அல்லாத மற்ற முக்கிய தொகுதிகளில், பெண் எம்.எல்.ஏ.க்களை கொண்ட தொகுதிகளின் வளர்ச்சி, ஆண் எம்.எல்.ஏ.வின் தொகுதியைவிட குறிப்பிடத்த முன்னேற்றத்தை கொண்டிருந்ததாக, ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

”இதற்கு ஒரு விளக்கமாக, பெண் எம்.எல்.ஏ.க்களின் சந்தர்ப்பவாத செயல்பாடுகள் குறைவாகவும், ஊக்கம் தரும் செயல்பாடுகளை கொண்டவர்களாகவும் இருந்தனர்” என்று ஆய்வு குறித்து கட்டுரையாளர்கள் எழுதியுள்ளனர்.

இந்தியாவில் 9% எம்.எல்.ஏக்கள் பெண்கள்

மக்கள் தொகையில், 48.5% பெண்களை கொண்ட இந்தியாவில் தற்போது 4,118 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில், 9% மட்டுமே பெண் எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக, 2018ஆம் ஆண்டுக்கான இந்திய பொருளாதார ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னுரிமை தந்து நிறைவேற்றுவதில் ஆண்- பெண் எம்.எல்.ஏ.க்களிடையே வேறுபாடு உள்ளது. இதில், சிறந்த பொருளாதார திறன்களை தீர்மானிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

“உலக அளவில் அரசியலில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான முக்கிய ஆதாரங்களை நாங்கள் வழங்கியுள்ளோம்” என்று ஆய்வு ஏற்பாட்டாளர்கள் எழுதியுள்ளனர். மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2008, இந்திய நாடாளுமன்ற ஒப்புதலுக்கு காத்திருப்பதை, ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டசபை இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடத்தை பெண்களுக்கு வழங்க, மகளிர் இடஒதுக்கீடு மசோதா வழிவகை செய்கிறது.

”அரசியல் பெண்கள்மயமாகி வருவது என்பது, மிகுந்த அற்புதமான அரசியல் நேர நிகழ்வு” என்று, ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளனர். “எனினும், வளர்ச்சிக்கானது என்னவென்பதை நாம் அறிந்திருக்கவில்லை, அது அனைத்து படகுகளையும் உயர்த்த நினைக்கும் அலை என்பதையும் தான்”.

(சல்தன்ஹா, இந்தியா ஸ்பெண்ட் துணை ஆசிரியர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.