அரிதாக ஒழுங்குபடுத்தப்பட்ட அனல் மின் நிலையங்கள் அனுமதித்ததை விட அதிக நீரை பயன்படுத்துகின்றன: ஆர்டிஐ தரவு
பெங்களூரு: காற்றை மாசுபடுத்துவதல், பூமியை வெப்பமயமாக்குவதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள அனல் மின் நிலையங்கள், பல சந்தர்ப்பங்களில் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதித்த வரம்புகளை மீறி, அதிகளவு தண்ணீரை பயன்படுத்துவது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் - ஆர்டிஐ (RTI) மூலம் பெறப்பட்ட தகவல்களில் தெரிய வருகிறது.
12 மாநிலங்களில் உள்ள 156 அனல் மின் நிலையங்களின் சுமார் 51%, இந்த ஆண்டு தொடக்கத்தில் தண்ணீர் தொடர்பான விதிமுறைகளுக்கு இணங்குவதாக அறிவித்தன; இவற்றின் தரவுகளை தான் அணுக முடிந்ததாக, இந்தியாவில் நீர் மற்றும் எரிசக்தி பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்யும் ஆராய்ச்சி மையமான மந்தன் ஆத்யாயன் கேந்திராவால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளது.
இந்த அதிகப்படியான தண்ணீர் நுகர்வு என்பது தண்ணீர் நெருக்கடியை எப்படி ஏற்படுத்துகிறது என்பதிய பின்னர் விளக்குகிறோம். இது, சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகள், விளை நிலங்கள்மற்றும் தொழில்களை, தாவரங்களை பாதிக்கிறது. இது அனல் மின் நிலையங்களை மூடுவதற்கும் காரணமாகிறது. உலக வள நிறுவனம் - டபிள்யு.ஆர்.ஐ. (WRI) ஆய்வின்படி, இந்தியாவில் 40% அனல் மின் நிலையங்கள், கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் அமைந்துள்ளன; இது, அப்பகுதி தண்ணீர் பிரச்சனையை மேலும் மோசமாக்குகிறது. இந்த பகுப்பாய்வில், டபிள்யு.ஆர்.ஐ.(WRI) ஆனது ‘அனல் மின் நிலையங்களை’ நீராவி உருவாக்கி தண்ணீர் குளிரூட்டல் தேவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நிலக்கரி, எண்ணெய், உயிரி மற்றும் அணு ஆகியன அடங்கும். மொத்தத்தில், இந்தியாவில் இதுபோன்ற 399 நிலையங்கள் உள்ளன.
சுமார் 60 கோடி இந்தியர்கள் “உயர் முதல் தீவிர தண்ணீர் நெருக்கடியுடன்” வாழ்கின்றனர்; இங்கு ஆண்டுதோறும் 40% க்கும் அதிகமான மேற்பரப்பு நீர் பயன்படுத்தப்படுகிறது என்று அரசு சார்ந்த அமைப்பான நிதி ஆயோக் நடத்திய 2018 ஆய்வை மேற்கோள்காட்டி, 2018 ஜூன் 25இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.
ஆர்.டி.ஐ. பதில்களின்படி, மீதமுள்ள 19% நிலையங்கள், தங்களை இணக்கமற்றவை என்று அறிவித்தன. மற்றவை எந்த தரவையும் வழங்கவில்லை அல்லது போதுமான தகவல்களை தரவில்லை. சில நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. மேலும், 14 மின் நிலையங்கள் கடல்நீரை பயன்படுத்துவதாக அறிவித்தன; அவற்றுக்கு தண்ணீர் விதிமுறைகளுக்கு இணங்குவதில் இருந்து விலக்கு தரப்பட்டுள்ளன.
Source: Response to right to information requests, received by the Manthan Adhyayan Kendra
ஆகஸ்ட் 30, 2019 நிலவரப்படி, இந்தியாவில் 269 அனல் மின்உற்பத்தி நிலையங்கள் இருந்ததாக மத்திய மின்சார ஆணையம் மேற்கோள்கள் தெரிவித்துள்ளது. ஒன்றாக கணக்கிட்டால், இந்த ஆலைகள் தொழில் துறையால் நுகரப்படும் மொத்த நீரில் 87.8% பயன்படுத்துகின்றன என்று தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட்- டெரி (TERI) ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வேறு மாதியாக பார்த்தால், இத்தகைய நீரின் அளவானது நான்கு நகரங்களின் நீர் தேவைகளை இரண்டு நாட்களுக்கு பூர்த்தி செய்ய முடியும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அலகுகள் மிகக் குறைந்த நீர் நெருக்கடிகளை தான் ஏற்படுத்துகின்றன: எடுத்துக்காட்டாக, சூரிய மின் உற்பத்தி ஆலைகள், பயன்படுத்தப்படும் நீரின் ஒரு பகுதியை மட்டுமே எடுத்துக் கொள்கின்றன. இதுபற்றி பின்னர் நாங்கள் விளக்குகிறோம். மேலும் காற்றின் ஆற்றலுக்கு தண்ணீர் எதுவும் தேவையில்லை.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட விரிவான பதில் மற்றும் அதன் பகுப்பாய்வு, 2019 ஜூலை 1 மந்தன் வெளியிட்ட அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது. மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் இருந்து தகவல்களை மந்தன் பெறவில்லை.
தண்ணீர் நெருக்கடி, மின் பற்றாக்குறையின் இரு வழி பிரச்சினை
இந்தியாவில் அனல் மின் உற்பத்தி நிலையங்கள் குளிரூட்டும் செயல்பாடுகள் மற்றும் எரியும் செயல்முறைகளில் கிடைக்கும் சாம்பலை அகற்றுவதற்கும் தண்ணீரை பயன்படுத்துகின்றன.
"மின்சாரம் தயாரிக்க நிலக்கரியை எரிப்பது போன்ற வழக்கமான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படுகிறது" என்று மந்தன் ஆத்யாயன் கேந்திராவின் நிறுவனர் ஸ்ரீபாத் தர்மதிகாரி கூறினார். “இது முதல் பிரச்சினை. இரண்டாவதாக, இதை [வெப்ப சக்தியின் உற்பத்தி] திறமையற்ற முறையில் செய்கிறோம்” என்றார் அவர்.
இந்த அதிகப்படியான நீர் பயன்பாடு இரண்டு இணைக்கப்பட்ட சிக்கல்களை உருவாக்குகிறது: அனல் மின் உற்பத்தி நிலையங்கள் தண்ணீர் பாதுகாப்பை பாதிக்கின்றன; மேலும் தண்ணீர் கிடைக்காததால் அவையும் பாதிக்கப்படுகின்றன என்று, டெரியை சேர்ந்த ஸ்ரேஷ்ட் தயால் கூறினார். "தண்ணீர் பாதுகாப்பு இல்லாமல் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை அடைய முடியாது," என்று அவர் கூறினார்.
கடந்த 2013-17ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 61 நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டன. ஏனெனில், தண்ணீர் பற்றாக்குறையால், மணிக்கு 17,000 ஜிகாவாட் மின்சாரம் இழக்கப்படுகிறது என, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான நிதி மற்றும் பொருளாதார பிரச்சினைகள் குறித்து ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுகளை மேற்கொள்ளும் எரிசக்தி பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனம் (IEEFA) அறிக்கை தெரிவிக்கிறது. “மேற்கு வங்கத்தின் ஃபாரக்காவில் உள்ள தேசிய அனல் மின் கழகத்தின் சூப்பர் அனல் மின் நிலையம் மற்றும் உத்தரபிரதேசத்தில் ரிஹான்ட் சூப்பர் அனல் மின் திட்டம், மகாராஷ்டிராவில் உள்ள பராலி அனல் மின்நிலையம், கர்நாடகாவின் ராய்சூர் அனல் மின்நிலையம் மற்றும் தமிழ்நாட்டின் எண்ணூர் அனல் மின் நிலையம் அனைத்தும் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் அமைந்துள்ளன என்று, டபிள்யு.ஆர்.ஐ - இன் எரிசக்தி திட்டத்தின் மேலாளர் தீபக் கிருஷ்ணன் கூறினார். தண்ணீர் பற்றாக்குறையால் அவை மூடப்பட்டன.
நீர் நுகர்வு வரம்புகள் உயர்வு
2015 டிசம்பர் வரை, அனல் மின் நிலையங்களின் தண்ணீர் பயன்பாட்டைக் கண்காணிக்க எந்த விதிமுறைகளும் இருந்ததில்லை. பின்னர், டிசம்பர் 7, 2015 அன்று, சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் (MoEFCC) ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, இது பழைய மின் நிலையங்கள், மணிக்கு ஒரு மெகாவாட் 3.5 கன மீட்டர் தண்ணீரைப் பயன்படுத்தலாம் என்றும்; ஜனவரி 1, 2017 க்குப் பிறகு நிறுவப்பட்டவை 2.5 கன அடி பயன்படுத்தலாம் என்றும் அறிவித்தது.
ஜனவரி 1, 2017 அன்று அல்லது அதற்கு பிறகு செயல்படத் தொடங்கிய மின் நிலையங்களுக்கு நீர் நுகர்வு விதிமுறைகளை, அக்டோபர் 2017 இல் அரசு தளர்த்தியது - அவை இப்போது அனுமதிக்கப்பட்டதை விட 20% அதிக தண்ணீரை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) விதிகள் -1986 இல் திருத்தம் செய்து நிறைவேற்றப்பட்ட புதிய விதிகள், மின் நிலையங்கள் மணிக்கு ஒரு மெகாவாட் 3 கன மீட்டர் வரை பயன்படுத்த அனுமதிக்கின்றன. இந்த கூடுதல் தண்ணீரானது, ஆண்டுக்கு 700 ஹெக்டேர் நிலத்திற்கு பாசனம் செய்ய போதுமானது.
குளிரூட்டும் கோபுரங்களைக் கொண்ட நிலக்கரி அடிப்படையிலான மின் நிலையங்களின் சராசரி தண்ணீர் தேவை, மணிக்கு ஒரு மெகாவாட்என சுமார் 5-7 கன மீட்டர் நீர் என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. "நிறுவப்பட்ட திறன் மற்றும் உற்பத்தி செய்யப்படும், மணிக்கு ஒரு மெகாவாட் என்ற மின்சாரம் ஆகியவற்றைப் பொறுத்தவரை, அனல் மின் நிலையங்களை விட நிலக்கரி நிலையங்களே அதிக தண்ணீரை நுகர்கின்றன" என்று தர்மதிகாரி விளக்கினார்.
"தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உலர்ந்த குளிரூட்டும் முறைகள் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன, அவை, நீர் செயல்திறனை மேம்படுத்த பயன்படுத்தப்படலாம்" என்று தயாள் கூறினார். "இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் மின் நிலையங்கள் உற்பத்தி செய்யும் ஒரு யூனிட் மின்சாரம் ஒன்றுக்கு 0.5 முதல் 1 கன மீட்டர் வரை குறைவாகவே தண்ணீர் பயன்படுத்துகின்றன. ஆனால் இன்னொரு கவனிக்கத்தக்கது, உலர்ந்த குளிரூட்டல் மின்சார உற்பத்தியைப் பொறுத்தவரை நிலையத்தின் செயல்திறனை குறைக்கிறது. எனவே, மின்சாரத்திற்கும் நீர் செயல்திறனுக்கும் இடையில் சமநிலையை நாம் ஏற்படுத்த வேண்டும்” என்றார் அவர்.
உள்ளூர் சமூகங்கள் மீதான விளைவு
அனல் மின் உற்பத்தி நிலையங்கள் பிற நீர் நுகர்வோரை - வீடுகள், விவசாய சமூகங்கள் மற்றும் அப்பகுதியில் அமைந்துள்ள பிற தொழில்கள் - போன்றவற்றை ஆபத்துக்குள்ளாக்குவதால், திறமையான மாற்றுகளும் முக்கியமானவை.
உள்ளூர் அனல் மின் நிலையங்கள் அல்லது திட்டமிடப்பட்டுள்ள அனல் மின் உற்பத்தி திட்டங்களால், உள்ளூர் சமூகங்கள் அல்லது வீட்டு உபயோகத்திற்கு அல்லது விவசாயத்திற்காக போதுமான தண்ணீரை இழக்க நேரிடும் அபாயத்தில் குறைந்தது நான்கு வழக்குகள் உள்ளதாக, 2017ஆம் ஆண்டு முதல் நிலமோதல்களை கண்காணிக்கும் அமைப்பான லேண்ட் கான்பிளிக்ட் வாட்ச் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. அனல் மின்நிலையங்களால் நீர் மாசுபடுவதாக கவலை தெரிவிக்கப்பட்ட மற்ற நான்கு வழக்குகளும் உள்ளன.
Conflicts Over Water Scarcity-Related Issues | ||||
---|---|---|---|---|
Conflict | Location | Description | Area affected | People affected |
People Allege Bajaj Power Plant Did Not Fulfill Promises After Taking the Land | Burogaon, Uttar Pradesh | The project came under the radar of National Green Tribunal (NGT) in 2015, when a petition was filed against the plant for unlawfully using the water from the dam on which thousands of farmers depend for irrigation. NGT ordered an inquiry into the matter. | 1,600 acre | 4,000 people |
Thermal Power Plant in Paras | Maharashtra | Construction of a 250-megawatt coal power plant by Mahagenco has witnessed strong resistance from the residents of Paras village in Akola district of Maharashtra. People question the need for a new power plant. Also, the plant will use a huge quantum of the water that farmers need for irrigation, they say. | 110 acre | 89 households |
Sahara power plant | Titilagarh, Odisha | The company has urged the state to expedite final water allocation for the power plant. Sahara has received assurance letter for supply of 53 cusecs from Tel river. Even though the proposed thermal power plant is yet to come up, people have started raising their voice against it by holding rallies and demonstrations. As this region is close to a river, people produce a lot of paddy, mung, horse gram and crops, besides vegetables. | 812.25 acre | 10,000 people |
Welspun Thermal Power Plant in Katni | Bujbuja village, Madhya Pradesh | Welspun Energy Madhya Pradesh Limited has proposed to set up 1,980-megawatt thermal power plants at Bujbuja in Barhi tehsil of Katni district. About 60 MCM water will be drawn for the purpose from the confluence of Son and Mahanadi rivers. About 350 farmers will lose their fertile land once the company acquires it. They threaten to immolate themselves if they are removed from the land. Every day they sit on funeral pyres with kerosene and matchsticks within arms reach. | 1,400 acre | 350 people |
Source: Land Conflict Watch
Conflicts Over Water Contamination Concerns | ||||
---|---|---|---|---|
Conflict | Location | Description | Area affected | People affected |
Villagers appeal in US Supreme Court against Mundra Power Plant | Mundra, Gujarat | The complaint raised issues related to the projects social and environmental impact on fishing communities, decline of water quality and fish populations, blocked access to fishing and drying sites, forced displacement of fishermen, community health impacts due to air emissions, and devastation of natural habitats, particularly mangroves. | 1,242 ha | 10,000 people |
OPGC Faces Conflict Over Land for Expansion of Thermal Plant | Tilia, Odisha | The expansion will cause serious health issues to people as the OPGC plans to set up its ash pond in the region. "The ash pond will lead to public health hazard by polluting the air and water of the river Mahanadi, Odisha's biggest river system, and people in the area will have to bear the brunt of it," the Sarpanch of Tilia GP, Thana Sundar Sahu, told the Land Conflict Watch | 357 acre | 1,300 people |
Fisherfolk Struggle to Protect Ennore Creek | Ennore, Tamil Nadu | Fisherfolk and residents in and around Ennore in Chennai have been protesting against pollution of the Ennore creek and encroachment of land by various Industries and the government. | 2,000 acre | 10,000 people |
KSK Mahanadi Power Company Ltd. | Nariyara, Chhattisgarh | The KSK Mahanadi Power Project is located in Janjgir-Champa district of Chhattisgarh. Although Janjgir-Champa is the least forested area of Chhattisgarh, lacks coal, and has widespread agriculture, it has been identified for construction of at least 34 power plants. As a result, the entire district faces issues of land acquisition and ecology due to the disposal of various industrial effluents in the land, air and water. | 830 ha | 1,842 households |
Source: Land Conflict Watch
டபிள்யு.ஆர்.ஐ. ஆய்வறிக்கையின் படி, அனல் மின் உற்பத்தி நிலையங்கள் தண்ணீரைப் பறிக்கும் விகிதம் வரும் ஆண்டுகளில் அதிகரிக்க மட்டுமே செய்யும். விளை நிலங்கள், வீடுகள் மற்றும் பிற தொழில்கள் போன்றவற்றுடன் அதே பகுதியில் அமைந்துள்ள அனல் மின் நிலையங்களும் தண்ணீர் நுகர்வுக்காக போட்டியிடுவார்கள் என்று அது கணித்துள்ளது.
வெளிப்படைத்தன்மை, பொறுப்புப்பேற்றல் இல்லாமை
இன்றுவரை, இணக்கங்கள் - அல்லது அதன் பற்றாக்குறை - நீர் நுகர்வு விதிமுறைகளுடன் தனிப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களால் சுயமாக அறிவிக்கப்படுகின்றன.
"உண்மையான கண்காணிப்பு எதுவும் இல்லை" என்று தர்மதிகாரி கூறினார். " மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் [SPCB] மின் உற்பத்தி நிலையங்களால் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளை மட்டுமே பெறுகின்றன". நீர் நுகர்வு விதிமுறைகளை கண்காணிக்கும் பொறுப்பு, அது அழிக்கப்படும் தாவரங்களின் விஷயத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் (MoEFCC) மீதும் உள்ளது. "அனுமதி வழங்கப்பட்ட நிபந்தனைகளை அமைச்சக பிராந்திய அலுவலகங்கள் கண்காணிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
முந்தைய ஆண்டில் நுகரப்படும் தண்ணீர் போன்ற அடிப்படை தகவல்களைச் சேர்க்க சுய வெளிப்பாடுகள் மேலும் வலுவானவை. வெளிப்படுத்தல்களை ஆதரிக்கவும் உறுதிப்படுத்தவும் சரிபார்க்கக்கூடிய சான்றுகள் (எடுத்துக்காட்டாக தண்ணீருக்கான பில்) வழங்கிய பிற தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க இந்தத் தகவல் பயன்படுத்தப்படலாம் என, டபிள்யு.ஆர்.ஐ. பரிந்துரை செய்தது.
நாம் முன்பு குறிப்பிட்டது போல, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களுக்கு மாறுவது மிகவும் ஆரோக்கியமான தீர்வாகும்.
சூரிய சக்தி என்பது, ஒரு நீர் சேமிப்புக்கான மாற்று. இதைக் கவனியுங்கள்: ஒரு வருடத்திற்கு முழுத்திறன் கொண்ட 1 மெகாவாட் (MW) அனல் மின் நிலையம் மணிக்கு 8,760 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்;அதே நேரத்தில் 22,688 கனமீட்டர் தண்ணீரை உட்கொள்ளும் [அனுமானம் அல்லது மணிக்கு ஒரு மெகாவாட் என, 2.59 கன மீட்டர் நீர்] என்று கிருஷ்ணன் விளக்கினார். ஆனால் 1 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து சூரிய ஆலைகள், 20% திறன் பயன்பாட்டு காரணியில் இயங்குகின்றன, ஒரு மெகாவாட்-மணி நேரத்திற்கு 876 கன மீட்டர் தண்ணீரை ஒரு மணி நேரத்திற்கு 8,760 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்.
"குளிரூட்டும் தொழில்நுட்ப முன்னேற்றம் அல்லது மின் நிலைய செயல்திறன் மேம்பாட்டுடன் ஒப்பிடுகையில், அதிக சூரியஒளி மின்னழுத்தத்திற்கு மாறுதல் [குறைக்கடத்திகளைப் பயன்படுத்தி சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றும் தொழில்நுட்பம்] மற்றும் காற்றின் உற்பத்தி மட்டுமே மின்சாரம் வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளுதல் தான், தண்ணீர் திரும்பப் பெறுதல் மற்றும் நுகர்வு இரண்டையும் குறைக்கக் கூடிய மின் தலைமுறையின் ஒரே பாதையாகும்” என்று, டபிள்யு.ஆர்.ஐ. அறிக்கை கடந்தாண்டு கூறியது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில் மற்றும் தண்ணீர் நுகர்வு விதிமுறைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால், மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் (MoEFCC) மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, கடந்த 10 நாட்களில் நாங்கள் நான்கு முறை மின்னஞ்சல் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். அவர்களின் பதில்கள் பெறப்பட்டால், இந்த கட்டுரை புதுப்பிக்கப்படும்.
(பர்திகர், பெங்களூரைச் சேர்ந்த ஒரு ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.