மும்பை: இந்தியா முழுவதும் கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மும்பையில் 85,000 வழக்குகள் பதிவான நிலையில், 5,000 பேர் இறந்துள்ளனர் - இது அனைத்து இந்திய நகரங்களிலும் மிக அதிகபட்சமாகும்.

கடந்த மூன்று மாதங்களாக இந்த நோய் குறித்த நமது புரிதல்கள் எவ்வாறு மாறி உள்ளன? பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறையின் ஆயத்த நிலை என்ன? மும்பை கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையின் குழந்தை மருத்துவம் மற்றும் தொற்று நோய்கள் துறை ஆலோசகர் டாக்டர் தனு சிங்கால் மற்றும் மும்பை குளோபல் மருத்துவமனையின் நெஞ்சக மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவு ஆலோசகர் டாக்டர் ஹரிஷ் சாஃப்லே ஆகியோருடன் இதுபற்றி பேசவிருக்கிறோம்.

திருத்தப்பட்ட பகுதிகள்:

டாக்டர் சிங்கால், கோவிட்-19 தொற்று பரவலில் கடந்த ஒரு மாதத்தில் நீங்கள் கண்ட மாற்றங்கள் மற்றும் புதிய போக்குகள் என்ன?

தனு சிங்கால்: வித்தியாசமான வெளிப்பாடுகளை இப்போது காண்கிறோம்; நாம் அவற்றை இப்போது அங்கீகரிக்கிறோம். எடுத்துக்காட்டாக, முடக்குவாதத்துடன் - அடிப்படையில் பக்கவாத பாதிப்புகளுடன் வயதானவர்கள் வருவதை பார்க்கிறோம். அதற்கான ஆபத்து காரணிகள் அவர்களிடம் இல்லை; அதேபோல் இளைஞர்களுக்கும் அபாயகரமான பக்கவாதம் ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் கோவிட் நேர்மறையாக மாறும் நோயாளிகளிடம் அதிகமான இரைப்பை குடல் சார்ந்த அறிகுறிகளை காண்கிறோம். நரம்பியல் சிக்கல்களும் சிலருக்கு வெளிப்படுகின்றன - வேறு எந்த தெளிவுமின்றி குழப்பமான வெளிப்பாடுகளுடன் நோயாளிகள் வருகிறார்கள்.

குழந்தைகள் இன்னமும் குறைந்தளவே பாதிக்கப்படும் நிலை தொடர்கிறது. இப்போது கூட, தீவிர நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அரிதாகவே பார்க்க முடிகிறது. பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும் குழந்தைகளின் இத்தகைய கவாசாகி போன்ற நோய்த்தன்மை பற்றி நாம் முன்பே பேசியிருந்தோம். மும்பையில் இப்போது அதிக காய்ச்சல், சிரங்கு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் கொண்ட குழந்தைகள் வருவதும் பின்னர் மிக வேகமாக மோசமடைவதும் என இரண்டு வழக்குகளையும் கண்டு வருகிறோம்.

நீங்கள் நரம்பியல் நிலை பற்றி பேசினீர்கள். இது கோவிட் தொற்றால் தூண்டப்பட்டதா?

தனு சிங்கால்: கோவிட் பரவலுக்கு முன்பே நரம்பியல் பிரச்சினைகள் இருந்த நோயாளிகள் எங்களிடம் உள்ளனர். ஆனால், கோவிட் தொற்றை தவிர வேறு எந்த அறிகுறியும் இல்லாமல், நரம்பியல் வெளிப்பாடுகளுடன் வருகிறார்கள். உதாரணத்திற்கு, கால் கை வலிப்பு தாக்கங்களுடன் - வலிப்பு நிலை - இளம்பெண் வந்துள்ளார்; அவருக்கு கோவிட் அறிகுறி தவிர வேறு எந்த காரணத்தையும் எங்களால் கண்டறிய முடியவில்லை.

முன்பு நரம்பியல் பிரச்சினைகள் இருந்தவர்களையும் நாங்கள் காண்கிறோம்; அவர்களின் மனநிலையில் [மனச்செயல்பாடு] மாற்றங்கள் வந்துள்ளதற்கு வேறு எந்த காரணமும் இல்லை. சுவை மற்றும் வாசனை இழப்புடன் நிறைய நோயாளிகள் வருவதை காண்கிறோம். முன்பெல்லாம் இதை பொதுவாக கண்டதில்லை; இப்போது சுவை மற்றும் வாசனை நுகரும் திறனை இழந்துவிட்டதாக பலர் கூறுகிறார்கள்; அவர்களுக்கு முன்பு கோவிட் இருந்ததை அங்கீகரிப்பது இதற்காகத்தான்.

உடல் வலி மற்றும் தசைவலி உள்ள நிறைய பேரை பார்க்கிறோம். லேசான கோவிட் மற்றும் குணமடைந்து வீட்டிற்குச் சென்ற நோயாளிகள் கூட இரண்டு வாரங்களாக, கடும் உடல்வலி இருப்பதால் வேலைக்குச் செல்ல முடியவில்லை என்று கூறுகிறார்கள்.

டாக்டர் சாஃப்லே, மருத்துவமனையில் நோயாளிகள் தங்குவதற்கான சராசரி கால அளவு குறைந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இது எப்படி, ஏன் நடக்கிறது என்பதை விளக்க முடியுமா?

ஹரிஷ் சாஃப்லே: விடுவிக்க (டிஸ்சார்ஜ்) வேண்டும் என்ற நமது தீவிர கொள்கைகள் மற்றும் நோயைப்பற்றி நன்கு உணர்ந்து, நோயாளிகள் முன்பே பலவற்றையும் புரிந்து கொள்வதால் எங்களால் அவர்களுக்கு [சிறப்பாக] சிகிச்சை அளிக்க முடியும். அத்துடன் தற்போது கிடைக்கும் ரெம்டெசிவிர் மற்றும் இன்டர்லூகின்-6, டோசிலிசுமாப் போன்ற நோயெதிர்ப்பு மருந்துகளால் சிறப்பாகக் கட்டுப்படுத்த முடிகிறது. அதனால் தான் குளோபல் மருத்துவமனையில் ஏழு நாட்களே தங்கியிருப்பது என்பது போதுமானது என்றாகிவிட்டதாக கருதுகிறேன்; மற்ற ஐ.சி.யு-கள் மற்றும் பிற மருத்துவமனைகளிலும் இதுபோலவே இருப்பதாக நினைக்கிறேன்.

நோயாளிகள் அந்த [கடுமையாக] உடல்நிலையிலும் மோசமாகிவிடவில்லை. ஏனென்றால் இன்டர்லூகின் அவர்களை காப்பாற்றி வருகிறது; மற்றவற்றுக்கு நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தி பதிலளிக்கும். எனவே, இந்த மருந்துகளை நாம் சரியான நேரத்தில் பயன்படுத்தும்போது, நோயாளிகள் அதிகம் நோய்வாய்ப்படவில்லை; முன்னதாகவே டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்குச் செல்கிறார்கள்.

முன்னதாக நாம் பெரும்பாலும் நுரையீரல் அறிகுறிகளில் கவனம் செலுத்தி, சுவாசக்குழாய் தொடர்பை புரிந்துகொள்ள முயற்சித்தோம். இப்போது அது எவ்வாறு மாறியுள்ளது?

ஹரிஷ் சாஃப்லே: ஆரம்பத்தில் காய்ச்சல், தொண்டை வலி, இருமல் போன்ற சுவாசநோய் முக்கிய அறிகுறிகளாக இருந்தன. நோய் மேலும் பரவும் போது, அதன் நோயெதிர்ப்பு திறன் மாறுகிறது என்று நினைக்கிறேன்; வைரஸின் சக்தி மாறுகிறது. எனவே, லேசான வடிவம் கொண்ட மற்றவற்றில் ஈடுபாட்டை காட்ட வேண்டியுள்ளது. ஒருவருக்கு சுவை அல்லது வாசனை அறிய முடியாதது, தசைப்பிடிப்பு , தளர்ச்சி இழப்பு ஏற்பட்டால், அவர்கள் அவ்வளவு நோய்வாய்ப்பட்டவர்கள் அல்ல.

டாக்டர் சிங்கால், நீங்களும் இதேபோன்ற போக்குகளைப் பார்க்கிறீர்களா?

தனு சிங்கால்: [திருத்தப்பட்ட] மருத்துவமனை விடுவிப்பு (டிஸ்சார்ஜ்) கொள்கை, [அங்கு] நபர் மருத்துவ ரீதியாக குணமடைந்துவிட்டால், அறிகுறிகள் தோன்றியதில் இருந்து 10 நாட்களுக்கு அவரை [வீட்டிற்கு] அனுப்பலாம்; இதனால் நீங்கள் எதிர்மறையான பரிசோதனையைச் செய்யத் தேவையில்லை, வளங்களைச் சேமிப்பதிலும், மருத்துவமனையில் தங்குவதைக் குறைப்பதிலும் அது உண்மையில் உதவுகிறது.

இப்போது எங்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் இருப்பதாக டாக்டர் சாஃப்லே கூறுவதில் நான் உடன்படுகிறேன்; அவற்றை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே ஸ்டெராய்டுகள் மற்றும் டோசிலிசுமாப் போன்ற மருந்துகள் எங்களிடம் இருந்தபோதும் அவற்றைப் பயன்படுத்துவதில் நாங்கள் அவ்வளவு நிபுணத்துவம் பெறவில்லை. இப்போது, அவற்றை பயன்படுத்தப் பழகிவிட்டோம்; ரெமெடிசிவிர் சில மாறுபாட்டை காட்டி இருப்பதாக நான் உணர்கிறேன். கடந்த இரு வாரங்களாக எங்கள் நடைமுறையில் இதை பயன்படுத்தத் தொடங்கினோம், முன்பு இருந்ததைவிட வெண்டிலேட்டர் தேவைப்படும் நோயாளிகள் இப்போது குறைந்துள்ளனர்.

இருப்பினும், மாறுபட்ட அறிகுறி தென்படுபவர்களும் வேகமாக முன்னேறி வருவதை நாங்கள் கண்டிருக்கிறோம். நரம்பியல், இருதய பிரச்சினைகள் - திடீரென ஏற்படும் இருதய தசை அழற்சி - போன்றவற்றால் மிகவும் மோசமடைந்தவர்களை கண்டிருக்கிறோம். இரைப்பை குடல் அறிகுறியுடன் வந்த இரண்டு நோயாளிகள் உள்ளனர்; பின்னர் அவர்களுக்கு சுவாச அறிகுறிகளும் உருவாகின.

இப்போது நாம் காணும் மற்றொரு விஷயம், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்படும் அனைத்து நோயாளிகளையும் ஒரே மாதிரியாக மாற்றுவதற்கான இந்தக் கொள்கையால், பிற நோய்களுடன் வந்த பலர் கோவிட் நேர்மறையை பரிசோதிக்கிறார்கள், கோவிட் தொற்றை அவர்களின் பிற நோய்களுடன் இணைக்க முடியாது. அவர்களுக்கு எலும்பு முறிவு அல்லது சாலை விபத்து ஏற்பட்டிருக்கலாம்; அவை கோவிட் நேர்மறை வழக்காகும். மக்கள்தொகையில் அறிகுறியற்ற தொற்றுநோயும் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதை அது நமக்குச் சொல்கிறது.

டாக்டர் சாஃப்லே, படுக்கைகளை ஒதுக்கீடு செய்வதில் இன்று நீங்கள் எத்தகைய நெருக்கடிகளை, அழுத்தத்தைக் காண்கிறீர்கள்?

ஹரிஷ் சாஃப்லே: ஆரம்பத்தில், இந்தியாவில் தொற்றுநோய் பரவத் தொடங்கியபோது, நோயாளிகளை நாம் நேரடியாக அழைத்துச் சென்றோம். இப்போது, விதிமுறைகள் மாறிவிட்டன. நோயாளிகள் ஒரு வேறொரு காவல் அறை வழியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் - நோயாளி [காவல் அறையை] அழைத்து அறிகுறிகளைக் கூற வேண்டும், அதுதான் [மருத்துவமனை அனுமதி] நெறிப்படுத்தப்படுகிறது.

ஆரம்பத்தில், அனைத்து தனியார் மருத்துவமனைகளும் நோயாளிகளைத் தாங்களே அனுமதித்தன; இப்போது 80:20 கொள்கை என்ற முடிவை அரசு எடுத்துள்ள நிலையில், 80% நோயாளிகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் கண்காணிப்பு அறைகளில் இருந்து நேரடியாக வருகிறார்கள், 20% பேர் நேரடியாக செல்கிறார்கள். விபத்து அல்லது அவசர சிகிச்சைப்பிரிவில் [ஆரம்ப கட்டத்தில்] நோயாளிகளின் பரிசோதனையானது எந்த நோயாளி எங்கு செல்ல வேண்டும் என்பதை அறிய உதவுகிறது; சேர்க்கை செயல்முறை நெறிப்படுத்தப்படுகிறது.

சிகிச்சைக்கு தங்கும் கால அளவு சராசரி ஏழு நாட்களாகிவிட்டதாக கூறியுள்ளீர்கள். படுக்கைகள் ஒட்டு மொத்தமாக கிடைப்பதில் இது ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா?

ஹரிஷ் சாஃப்லே: இந்நாளில் படுக்கை கிடைப்பது எளிதாகிவிட்டது. மருத்துவமனையில் தங்குவதற்கான காலநேரமும் குறைந்துவிட்டது, நோயாளிகள் வந்து செல்வது அதிகமாக உள்ளது; நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள்; அந்த இடத்திற்கு புதிய நோயாளிகள் வருகின்றனர். டாக்டர் சிங்கால் சரியாகச் சொன்னது போல, ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு மறுபரிசீலனை செய்வது அவசியம் என்ற அம்சத்தை நீக்கி, நம் அனைவருக்கும் அரசு உதவியுள்ளது.

டாக்டர் சிங்கால், நீங்கள் கண்ட இறப்பு நிகழ்வுகளில், பரந்த கண்டுபிடிப்புகள் மற்றும் புரிதல் என்ன?

தனு சிங்கால்: நான் சொல்ல வருவது- குறைந்தபட்சம் எங்கள் மருத்துவமனையில் - தீவிர கோவிட் நோயாளிகள் இருந்தால், அவர்களில் இறப்பு விகிதம் 25-30% வரை இருக்கும். இத்தகைய அதிக இறப்புக்கான ஒரு காரணம் என்னவென்றால், பல உறவினர்கள் “கவனிப்பை தீவிரமாக்க வேண்டாம்” [ஆர்டர்], ஏனென்றால் தீவிர கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட பலர் வயதானவர்கள்; அவர்களுக்கு மேலும் பல கொமொர்பிடிட்டிகள் உள்ளன. இதனால் உறவினர்கள், இனி தீவிர கவனிப்பு என்பதை அதிகரிக்க வேண்டாம் என்ற இம்முடிவுக்கு வந்துவிடுகின்றனர்; இது, இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுக்கிறது.

ஆனால் பொதுவாக வயதான நோயாளிகளில், பிற பிரச்சினைகள் உள்ளவர்கள் இறப்பதைக் கண்டோம். இதில் சிறுநீரக நோய் மிகப்பெரிய ஆபத்து காரணியாக வெளிப்பட்டுள்ளது: டயாலிசிஸ் நோயாளிகளுக்கு கோவிட் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது. அவர்கள் கோவிட் தொற்று இருப்பின், அவர்களுக்கு அது ஒரு மோசமான நேரமாகும். ரெம்டெசிவிர் போன்ற மருந்துகளை நீங்கள் அவர்களுக்கு தர இயலாது; அத்தகையவர்களில் பலர் இறந்துவிடுகின்றனர்.

எனவே, வயதானவர்கள், டயாலிசிஸில் இருப்பவர்கள், குறிப்பாக மாற்று அறுவை சிகிச்சைக்குப்பின் வரும் நோயாளிகள் - மூன்று அல்லது நான்கு சிறுநீரக மற்றும் கல்லீரல் மாற்று நோயாளிகளை இழந்துவிட்டோம். தலசீமியா நோயாளி இருந்தார்; அவரும் இறந்துவிட்டார்.

மொத்தத்தில், 50 வயதிற்கு குறைவான, இல்லையெனில் ஆரோக்கிய உள்ளவராக, அதிக எடை இல்லாதவராக இருப்பின், கோவிட் தொற்றில் இருந்து இறக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்று கூறுவேன். நாம் இந்த வகைப்பாட்டில் இரண்டொரு மரணங்களை சந்தித்திருக்கலாம்.

உறவினர்கள் அதிக கவனிப்பு மீது நாட்டம் காட்டவில்லை என்று நீங்கள் கூறினீர்கள். அதுபோன்ற நோயாளியை ஐ.சி.யு.வில் நீண்ட காலம் வைத்திருப்பதாக நீங்கள் சொல்கிறீர்களா?

தனு சிங்கால்: இல்லை, நோயாளி தீவிர சிகிச்சை பிரிவை விட்டு வெளியேற முடியாது, ஏனெனில் அவர் கோவிட் நேர்மறை உள்ளவர். ஆனால் அவர்கள் கூறுகிறார்கள், “இந்த நோயாளி மோசமடைந்துவிட்டால், டோசிலிசுமாப் அல்லது ரெமெடிவிர் போன்ற பல மருந்துகளை பயன்படுத்த வேண்டாம். அவர்களுக்கு ஆதரவான பராமரிப்பை மட்டும் கொடுங்கள்” என்றனர்.

இப்போது நாம் காணும் மற்ற விஷயம், ஐ.சி.யு-வில் நீண்டகாலமாக இருக்கும் நோயாளிகளின் ஒரே வயதுள்ள குழுக்கள். முன்னதாக, நீங்கள் இறந்த நோயாளிகளை கொண்டிருப்பீர்கள் அல்லது அவர்கள் குணமடைவார்கள். இப்போது, அவர்கள் மூன்று முதல் நான்கு வாரங்கள் ஐ.சி.யுவில் இருப்பார்கள்; அவர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட பிரச்சினைகள். நோய்த்தொற்றுகள் நுரையீரலில் அழற்சி உள்ளது; எனவே, அவர்கள் வென்டிலேட்டர் இல்லாமல் இருப்பது கடினம்.

நாங்கள் இப்போது மருத்துவமனையில் மீண்டும் மறுசேர்க்கைகளை (அட்மிட்) பார்க்கிறோம் - அதாவது கோவிட் உடன் டிஸ்சார்ஜ் ஆன நோயாளிகள் இப்போது மற்ற பிரச்சினைகளுக்காக மீண்டும் உள்ளே வருகிறார்கள். கோவிட் தொற்று, உங்கள் உடலை அழகாக விட்டுவிடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்; கோவிட் தொற்று இருந்து நீங்கள் குணமடைந்தாலும், உங்கள் நுரையீரல் சேதமடைகிறது. பல நோயாளிகள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு புதிய நோய்த்தொற்றுகள் அல்லது மோசமான நிலையில் திரும்பி வருகிறார்கள்.

ஒரு கட்டத்திற்கு மேல் நோய் தீவிரமடைந்துள்ள நிலையில், தொற்று தீவிரமாக உள்ள நோயாளிகள் பற்றி நீங்கள் இதை குறிப்பிடுகிறீர்கள்?

தனு சிங்கால்: ஆமாம், பெரும்பாலும் இது தீவிரமாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகள்; ஆனால் மிதமாக நோய்வாய்ப்பட்ட சில நோயாளிகளும் மறு அனுமதிக்கு வருகிறார்கள், ஒருவேளை சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று அல்லது பாக்டீரியா நிமோனியா இருக்கலாம்; அல்லது முன்பு அனுமதிக்கப்பட்ட போது நுரையீரலில் கண்டுபிடிக்கப்படாத பாதிப்புகள் இப்போது வெளிப்பட்டிருக்கலாம்.

டாக்டர் சாஃப்லே, கை சுத்தம் செய்தல், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி என்ற பொதுவான பரிந்துரைகளைத் தவிர, இந்நேரத்தில் மக்களுக்கு வேறு என்ன சொல்ல வேண்டும், எதில் கவனமாக இருக்க வேண்டும்

ஹரிஷ் சாஃப்லே: இந்த நோய் அனைவருக்கும் நிறைய மோசமான நினைவுகளை தந்துள்ளது. கை சுத்தம் செய்வது என்ற அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதோடு, சமூக இடைவெளியை பராமரித்தல், அனைவரும் அதிக புரதம் உள்ள நன்கு சமைக்கப்பட்ட உணவு, சரியான நீர் உட்கொள்ளுதல் மற்றும் நேர்மறையுடன் இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் அறிவுறுத்துகிறேன். ஏனெனில் இந்த நோயால் நிறைய பேர் மன அழுத்தத்திற்கு ஆளாவதை கண்டிருக்கிறேன். குடும்பத்திலோ அல்லது அருகில் உள்ள ஒருவர் பாதிக்கப்பட்டாலோ என, எல்லா இடங்களிலும் குழப்பம் நிலவுகிறது.

எனவே, பீதியை ஏற்படுத்த வேண்டாம். இந்த நோய் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மிகக்கடுமையானதல்ல. 60 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளின் ஒரு குழு மட்டுமே கொமொர்பிடிட்டிஸ் மற்றும் பிற நோய்கள் கூடுதலாக இருப்பதால் எளிதில் நோய்வாய்ப்படுகிறார்கள். அதுதவிர மற்றவர்கள், தாமாகவே அவர்கள் குணமடைந்துவிடுவார்கள். எனவே, ஒரு தார்மீக ஊக்கத்தையும், நேர்மறையான அணுகுமுறையையும், நல்ல நோய் எதிர்ப்பு சக்தியையும் வைத்திருப்பது நிச்சயமாக நம் அனைவருக்கும் இந்த போரில் எதிர்த்து போராட உதவும்.

டாக்டர் சிங்கால், கடந்த சில மாதங்களாக நீங்கள் பார்த்ததை வைத்து மக்களுக்கும், அவர்களுடன் தொடர்பில் இருப்பதாக உணரக் கூடியவர்கள் அல்லது நேர்மறை கண்டறியப்படுபவர்களுக்கு உங்களது ஆலோசனை என்ன?

தனு சிங்கால்: முதலில், தேவையில்லாமல் வெளியே நடமாட வேண்டாம். ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அவசியத்தேவை இருந்தால் மட்டுமே வெளியே வரவும். இரண்டாவதாக, பரிசோதனை செய்ய பயப்பட வேண்டாம். சோதனை செய்வதால் பழிச்சொல்லுக்கு ஆளாவோமோ என்ற பயம் உள்ளது; ஏனெனில், நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர்களுக்கு காய்ச்சல் உள்ளதாக கருதுகிறார்கள். அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நேர்மறையாக மாறினால், அவர்களின் வீடுகள் சீல் வைக்கப்படும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

ஆனால், இது சரியான அணுகுமுறையல்ல என்று நினைக்கிறேன். அந்த நபர் வயதானவராக, நோய்வாய்ப்பட்டவராக இருந்தால் பரிசோதனை செய்யலாம். ஏனெனில் நோயின் ஆரம்பப்பகுதியில் பரிசோதனை முடிவு நேர்மறை என்று வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்; நேர்மறையானவர் என்று தெரிந்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். இதில் பயப்பட ஒன்றுமில்லை, எனவே, தயவுசெய்து பரிசோதனைக்கு தயங்க வேண்டாம்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.