உண்மையான வருமானம் மேம்பட்டதால், விவசாயிகளது குழந்தைகள் விவசாயம் மேற்கொள்ள வாய்ப்புகள் குறைவு
பெங்களூரு: நாடு முழுவதும் 2012 உடனான ஏழு ஆண்டுகளில், வருவாய் ஆதாரம் மேம்பட்டிருந்தாலும், மாநிலங்களுக்கு இடையிலான முன்னேற்றம் சமமற்று இருந்தது; அதே நேரம், குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட விவசாயத் துறையில் பணிபுரிய தந்தையர் மறுப்பதல, அதே தொழிலை தொடரும் வாய்ப்பு குழந்தைகளுக்கு குறைவாக உள்ளதாக, பொருளாதார இயக்கம் குறித்த ஜனவரி 2019 ஆய்வு கூறுகிறது.
விவசாயிகளின் குழந்தைகள், 2005 ஆம் ஆண்டை விட 2012இல் விவசாயத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்பு, 21.1% குறைவாக இருந்தது, அவர்களின் வாய்ப்பு 32.4% ஆக குறைந்தது; வேளாண் மற்றும் பிற தொழிலாளர்களின் குழந்தைகள் தங்களது தந்தையின் அதே தொழிலை தொடர்வது 4.1% புள்ளிகள் குறைவாக இருந்தன, வாய்ப்பு, 58.6% ஆகும் என்று, ஆய்வு குறிப்பிட்டது.
சுதந்திரத்திற்கு பின் முதல்முறையாக, விவசாயத்தில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை முழுமையாக வீழ்ச்சியடைந்ததால், விவசாயத்தில் இருந்து வேளாண்மை அல்லாத பிற துறைகளுக்கு உபரி தொழிலாளர்கள் மாறுவதை இந்தியா கண்டது என, ஆய்வின் இணை ஆசிரியரும், ஜஸ்ட்ஜாப்ஸ் நெட்வொர்க் அமைப்பின் ஆராய்ச்சி கூட்டாளியுமான திவ்யா பிரகாஷ், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். (இந்தியாவின் வேலையின்மை நெருக்கடி பற்றி மேலும் படிக்க: https://www.indiaspend.com/category/indias-job-crisis ).
விவசாயத்தில் வேலைவாய்ப்பு குறைந்ததால் இளைஞர்கள் பெரும்பாலும் கல்வியை பெறுகிறார்கள் என்று விளக்கப்படலாம்; அதோடு ஒரு சிறந்த வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது என, ஆய்வின் இணை ஆசிரியரும், ஜஸ்ட்ஜாப்ஸ் நெட்வொர்க் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான சபீனா திவான், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
வேலை தரம் மற்றும் பொருளாதார இயக்கம் பற்றிய சர்வதேச பேச்சுகளின் பரிணாமத்தை இது ஆய்வு செய்தது; வேலை தரம் குறித்த பேச்சு என்பது, “காணாமல் போன மூலப்பொருள்”.
இது, 2004-2005இல் 41,554 வீடுகளில் நடத்தப்பட்ட தேசிய பிரதிநிதித்துவ கணக்கெடுப்பான இந்திய மனித மேம்பாட்டு ஆய்வு (IHDS-I) மற்றும் அதே வீடுகளில் 83% பேரை மீண்டும் நேர்காணல் செய்த இந்திய மனித மேம்பாட்டு ஆய்வு -2 (IHDS-II) (2011-12) ஆகியவற்றை பயன்படுத்தியது.
"இந்த தரவுத்தொகுப்பு, 2005-2012 ஆம் ஆண்டுகளில் பொருளாதார இயக்கம் மேம்பட்டதா என்பதை படிக்க, தனித்துவமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது" என்று ஆய்வு குறிப்பிட்டது.
விவசாயிகளின் குழந்தைகளுக்கு குறைந்தளவே விவசாயம் மீது ஈடுபாடு
குழந்தைகள் தங்கள் தந்தையின் அதே தொழிலை பின்தொடர்வதற்கான வாய்ப்பை அளவிடும் இடைநிலை இயக்கம் குறியீடு, விவசாயம் மற்றும் பிற தொழிலாளர்களின் வாய்ப்பு 62.7% இல் இருந்து 58.6% ஆகவும், விவசாயிகளுக்கு 53.5% இல் இருந்து 32.4% ஆகவும் குறைந்துள்ளதை காட்டுகிறது.
“சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் [2005-2012] முதன்முறையாக இந்தியா ஒரு லூசியன் கட்டமைப்பு மாற்றத்தைக் கண்டது - உபரி விவசாயத் தொழிலாளர்கள் வேளாண் அல்லாத பிற துறைக்கு மாறுவது - விவசாயத்துறையில் வேலைவாய்ப்பு முழு எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்தது, ”என்றார் பிரகாஷ். “தந்தையின் அடிச்சுவடுகளை பின்பற்றும் குழந்தைகளின் பங்கில் சரிவு ஏற்பட்டுள்ளது; பலர், விவசாயத்தை விட்டு வெளியேறினர் அல்லது பிற கிராமப்புற தொழிலாளர்கள், வேளாண்மை அல்லாத துறைக்கு நகர்கின்றன” என்றார்.
இதன் பொருள், குழந்தைகள் விவசாயத்தில் இருந்து வேளாண்மை அல்லாத பிற துறைகளுக்கு, குறிப்பாக அதிக ஊதியத்திற்காக கட்டுமானத்துறைக்கு மாறினர். ஒன்றிணைந்த வருமான இயக்கம் இருந்தபோதிலும், குழந்தைகள் - தந்தையர் இரு தொழில் குழுக்களுக்கான முன்னேற்ற தொழில்சார் இயக்கத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் கூறினார்.
எழுபத்தாறு சதவிகித விவசாயிகள், வேளாண்மை தவிர வேறு சில வேலைகளை செய்ய விரும்புகின்றனர்; 61% பேர் சிறந்த கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு வழிகள் காரணமாக, நகரங்களில் வேலை செய்ய விரும்புகிறார்கள் என, வளரும் சங்கங்களின் ஆய்வு மையம் வழங்கிய கணக்கெடுப்பு அறிக்கையின் அடிப்படையில், மார்ச் 12, 2018 டவுன் டூ எர்த் கட்டுரை தெரிவித்தது.
மொபைல் செயலி அடிப்படையில், வாகனத்தில் உணவு விநியோகத்தை உள்ளடக்கிய சேவை, இந்தியாவின் வேகமாக விரிவடைந்து வரும் பிரம்மாண்ட பொருளாதார துறைகள், கிராமப்புற அல்லது பகுதி நகர்ப்புற வீடுகளைச் சேர்ந்த பல தொழிலாளர்களை பயன்படுத்துகிறது; அவர்களில் பலர் விவசாயிகள் அல்லது விவசாயிகளின் குழந்தைகள் என்று, ஜூன் 4, 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.
தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, 2004-05 மற்றும் 2011-12 க்கு இடையில், கிராமப்புறங்களில் விவசாயிகளின் எண்ணிக்கை 1.9 கோடி குறைந்து 14.1 கோடியாக இருந்தது; நிலமற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை 19% குறைந்து 6.9 கோடியாக இருந்தது என்று பிரகாஷ் மேலும் கூறினார்.
தொழில் வல்லுநர்கள் (விஞ்ஞானிகள், பொருளாதார வல்லுநர்கள், ஆசிரியர்கள், நீதிபதிகள், முதலியன) பணிபுரியும் நபர்களின் தந்தையர், திறன் குறைந்த தொழிலாளர்களாக (சலவை செய்பவர்கள், தச்சர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், ஓவியர்கள் போன்றவை) இருந்த போதும் கூட 8% குறைந்துள்ளது; அதே நேரத்தில் திறன் குறைந்த தொழில்களில் அவர்களின் பங்கு அதே அளவு அதிகரித்துள்ளது.
இந்த "மேல்நோக்கி இயக்கம் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு, [அவர்களுக்கு] பின்தங்கிய இயக்கத்தினருக்கு மிக அதிகம்" என்று பிரகாஷ் கூறினார். உயர் சாதிகள் மற்றும் நகர்ப்புறங்களைச் சேர்ந்த நபர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் அதற்கு நேர்மாறாக முன்னேற அதிக நிகழ்தகவு கொண்டுள்ளனர்.
இதனிடையே, தங்களது தந்தையின் தொழில்கள் மற்றும் குறைந்த திறன் தொழில்களை பின்தொடர்ந்தவர்களின் எண்ணிக்கை முறையே 3.1% புள்ளிகள் மற்றும் 8.1% புள்ளிகள் அதிகரித்துள்ளன.
2005 மற்றும் 2012 இடையே உண்மையான வருமானத்தில் முன்னேற்றம்
வருமான மாற்றத்தின் அளவை அளவிடும் திசையற்ற வருமான இயக்கம் குறியீடு, ஒட்டுமொத்த இந்தியாவுக்கு 1.165 ஆகும்; 2004-05 முதல் 2011-12 வரையிலான காலத்தில் திசை இயக்கம் குறியீடு 0.949 ஆகும். திசை இயக்கம் குறித்த நேர்மறையான குறியீட்டு மதிப்பு உண்மையான வருமானம் அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கிறது, இது மேம்பட்ட பொருளாதார நல்வாழ்வை காட்டுகிறது.
மாற்றம் “சமமற்றது” என்ற போதும், இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் நேர்மறையான வருமான நடமாட்டத்தைக் கண்டன என்று அந்த ஆய்வு குறிப்பிட்டது. அந்த வரிசையில், தமிழகம் மற்றும் மேகாலயா ஆகியவை அதிக வருமானம் ஈட்டியுள்ளன.
மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்கு (மிசோரம், சிக்கிம், திரிபுரா) வருமான இயக்கம் சாதகமாக இருந்தது, ஆனால் அளவு குறைவாக இருந்தது. இங்குள்ள குடும்பங்களின் ஒட்டுமொத்த வீட்டு வருமான வீழ்ச்சியைக் கண்ட குடும்பங்களின் விகிதத்தை விட அதிகமாக இருந்தது, பிரகாஷ் கூறினார், இதனால்தான் ஒட்டுமொத்த வருமான இயக்கம் சமமற்றதாக இருந்தது. இந்த மூன்று மாநிலங்களின் ஒட்டுமொத்த வீட்டு வருமானம் 2005 உடன் ஒப்பிடும்போது 2012 ல் சற்றே அதிகமாக இருந்தது என்று பிரகாஷ் கூறினார்.
குறியீடுகளுக்கு இடையேயான வேறுபாடு (0.216), உண்மையான வருமானத்தை - பணவீக்கத்தின் விளைவுகளைக் கருத்தில் கொண்ட வருமானம் - கண்ட பல வீடுகளில் அது குறைந்துள்ளன என்பதை காட்டுகிறது.
சமூக குழுக்களில், வருமானத்தில் மேல்நோக்கி செல்வது இதர பிற்படுத்தப்பட்டோர் -ஓபிசி (OBC) குடும்பங்களில் மிக உயர்ந்தது; அதை தொடர்ந்து பிராமணர் போன்ற முன்னேறிய சாதியினர், தாழ்த்தப்பட்ட இனத்தவர் -எஸ்.சி. (SC) மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்- எஸ்.சி. (ST) உள்ளனர்.
எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி போன்ற விளிம்புநிலை சாதிக் குழுக்கள் தேசிய வீட்டு வருமானத்தை விட மிகக்குறைவாகவே சம்பாதிக்கின்றன என்று 2019 ஜனவரி 14 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.
ஆயினும்கூட, இந்த சமூகக் குழுக்கள் 2012 உடனான ஏழு ஆண்டுகளில் தங்கள் வருமான அளவில் முன்னேற்றத்தைக் கண்டன; ஏற்றத்தாழ்வு பரவலாக இருந்தாலும், அந்த இடைவெளி மூடப்படுவதை இது காட்டுகிறது என்று திவான் கூறினார்.
(பல்லியாத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.