மும்பை: நிர்பயா வழக்கு என அழைக்கப்படும் 2012 டெல்லி கூட்டு பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு பிறகு, பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் தாக்குதல்கள் பற்றி புகாரளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன; ஆனால் கைது மற்றும் தண்டனை விகிதங்களில் சிறிதளவும் தாக்கம் உண்டாகவில்லை என்று பிப்ரவரி 2019 இல் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 2011 வரையிலான பத்து ஆண்டு சராசரியுடன் ஒப்பிடும்போது, 2015 வரையிலான இரண்டு ஆண்டுகளில், டெல்லியில் கற்பழிப்பு வழக்குகளின் ஆண்டு சராசரி பதிவு 23% அதிகமாகும் என்று ஆய்வு காட்டுகிறது. நிர்பயா வழக்குக்கு முந்தைய ஆண்டு சராசரியுடன் ஒப்பிடும்போது, 2013-2015 ஆம் ஆண்டில் சராசரி வருடாந்திர தொல்லை மற்றும் பாலியல் துன்புறுத்தல் அறிக்கை 40% அதிகமாகும்.

கடந்த 2019 டிசம்பர் 16 அன்று, ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த, 23 வயது பெண் மாணவி, தெற்கு டெல்லி சுற்றுப்புறத்தை கடந்து செல்லும் பேருந்தில், ஆறு ஆண்களால் தாக்கப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மிருகத்தனமான தாக்குதலுக்கு பிறகு, 13 நாட்கள் கழித்து, பலத்த காயங்களுடன் அவர் சாலையோரம் தூக்கி எறியப்பட்டார். இந்த குற்றம் வெளியே தெரிய ஆரம்பித்த பிறகு, பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களைதூண்டியது மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்த இந்திய சட்டம் தடை செய்துள்ளதால், அவர் ‘நிர்பயா’ - அதாவது அச்சமற்றவர் - என அழைக்கப்பட்டார்.

"நிர்பயா வழக்கு மற்றும் அதை தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் ஒரு வெளிப்புற அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன," என்று, எழுத்தாளர்கள் அக்‌ஷய் பட்னாகர், அபர்ணா மாத்தூர், அப்துல் முனாசிப் மற்றும் தேவேஷ் ராய் ஆகியோர் திஸ் ஐடியாஸ் பார் இந்தியா என்ற தலையில் ஏப்ரல் 29, 2019 முதல் கட்டுரை எழுதினர். "முன்பே திட்டமிட்டப்படாத வகையில் செய்தி ஊடகம் தந்த முக்கியத்துவம், பாதிக்கப்பட்டவர் மீதான பரவலான அனுதாபம் மற்றும் இந்த கொடூரமான குற்றத்திற்கு பிறகு காணப்பட்ட பொதுமக்களின் ஆவேச அளவு மற்றும் தீவிரம், பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன்வந்து நீதி கோருவதற்கு தைரியம் கொடுத்திருக்கலாம்" என்றனர்.

இந்த வழக்கு மற்றும் அதன் விளைவுகள் குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான மீடு (#MeToo) இயக்கத்திற்கு ஒப்பானதாகும்; பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனால் பாலியல் அத்துமீறல் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளான பல பெண்கள் அதுபற்றி பேசிய பிறகு, அக்டோபர் 2017 இல் உலகளவில் மீடு பிரபலமானது.

"நிர்பயா வழக்கு இந்தியாவில் மீ டூ இயக்கத்திற்கு தீப்பொறி போன்றது என்பது எங்கள் கருத்து," என, அமெரிக்கன் எண்டர்பிரைஸ் நிறுவன ஆராய்ச்சியாளர் அபர்ணா மாத்தூர், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "இந்தியா ஒரு மாற்றத்தை மேற்கொண்டு வருவதாக நான் நினைக்கிறேன்; இதில் பெண்கள் பேசுவதற்கு அதிக தைரியம், அவர்களுக்கு எதிரான குற்றங்களை புகாரளிக்க அதிக வாய்ப்புகள் மற்றும் நீதி கோருவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்றார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான கைது, தண்டனையில் நிர்பயா தாக்கம் ஏற்படுத்தவில்லை

நிர்பயா பலாத்கார வழக்கு மீதான சீற்றம் சட்ட மற்றும் நிர்வாக கொள்கை மாற்றங்களையும் தூண்டியது என்றாலும், டெல்லியில் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றுக்கான கைதுகள் மற்றும் தண்டனைகளில் இது சிறிதும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

"பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை விகிதங்களில் சிறிதளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன; இது காவல் துறை மற்றும் பிற மாற்றங்கள் பதிவு ஆவதை தாண்டிய விளைவுகளை பாதிக்காது என்பதை கூறுகின்றன" என அவர்கள் எழுதினர்.

உண்மையில், பாலியல் குற்றங்களுக்கான தண்டனை விகிதம் 2007 முதல் சீராக சரிவில் இருந்து வருகிறது; இது 2006இல் 27% ஆக இருந்தது, 2016ஆம் ஆண்டில் 18.9% என்ற குறைந்த அளவை எட்டியுள்ளது.

"[ஆனால்] குற்றச்சாட்டுகள் பதிவாகி நடைமுறைக்கு வர நீண்ட நேரம் ஆகக்கூடும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்," என்று மாத்தூர் கூறினார்; அதிகரித்த பதிவாகுதல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அழுத்தத்தை உருவாக்கும். "குடும்ப வன்முறை வழக்குகளில் 2% க்கும் குறைவானவையே காவல்துறையினருக்கு புகாரளிக்கப்படுகின்றன; ஆனால் இந்தியாவில் இவ்வகையான மீ டூ ( #MeToo) இயக்கம் மூலம், அந்த அறிக்கையிடல் விகிதங்களும் உயரத் தொடங்கலாம்; இது அதிக கைதுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் முன்னோக்கிச் செல்ல வழிவகுக்கும்" என்றார் அவர்.

ஆய்வு எவ்வாறு நடத்தப்பட்டது

தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் - என்.சி.ஆர்.பி (NCRB) தரவை பயன்படுத்தி, டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை புகார் அளிப்பதில் 2012 நிர்பயா விவகாரம் ஏற்படுத்திய தாக்கத்தைப் புரிந்துகொள்ள, ஆராய்ச்சியாளர்கள் “செயற்கை கட்டுப்பாட்டு முறை சோதனை” ஒன்றை நடத்தினர்.

இதில், நிர்பயா வழக்கு நடந்த டெல்லி, ஒரு 'சிகிச்சை' பிரிவாக கருதப்படுகிறது. சிறந்த பதிலடி -உண்மை "கட்டுப்பாட்டு" அலகுக்கு, மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பலமான சராசரி தரவுகளின் உதவியுடன் டெல்லியில் ஒரு மாதிரி ஏற்படுத்தப்பட்டது. ஒரு செயற்கை டெல்லியின் இந்த மாதிரி பொருளாதார, புள்ளிவிவர, அரசியல் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு பண்புகள் தலைநகரை நெருக்கமாக ஒத்திருக்கின்றன.

அவர்களின் கண்டுபிடிப்புகளின் வலுவான தன்மையை சரிபார்க்க - அதிகரித்த புகார்கள், வெறுமனே குற்றங்களின் பொதுவான உயர்வு காரணமாக இல்லை என்பதற்கான சாத்தியக்கூறுகளுக்கு இடமளிக்கிறது - ஆராய்ச்சியாளர்கள் நிர்பயா வழக்கின் கொலை மற்றும் குற்றவாளி படுகொலை ஆகியவற்றின் தாக்கத்தை சோதித்தனர்; ஆனால், எந்தவிதமான தாக்கத்தையும் காணவில்லை.

அவர்கள் பொய்த்தகவல் வாய்ப்புக்கான சோதனையையும் மேற்கொண்டனர் - ஒரு கருதுகோள், சோதிக்கப்படுவதில் இருந்து வேறுபட்டது மற்றும் தொடர்புடையதாக இருக்க வாய்ப்பில்லை - இது ஒரு பாதுகாப்பாக சோதிக்கப்படுகிறது. இதற்காக, சாலை விபத்துக்கள் குறித்து புகார் அளிப்பதில் நிர்பயா வழக்கின் சாத்தியமற்ற விளைவை அவர்கள் சோதித்தனர்; எந்த விளைவையும் காணவில்லை. இதனால் அவர்களின் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

முத்திரை குத்தப்படுவது, சிக்கலான பதிவிடுதலில் அதிக எளிமை

இந்தியாவில், சமூக மற்றும் அமைப்பு கூறுகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை புகாரளிப்பதை அடக்குவதோடு ஒத்துப்போகின்றன; குறிப்பாக அவை வலுவானவை மற்றும் நெகிழக்கூடியவை என்று ஆய்வு கூறுகிறது.

"சட்ட அமலாக்க அதிகாரிகள் களங்கம் உண்டாக்கும் போக்கு, அக்கறையின்மை, சட்ட கெடுபிடி மற்றும் பழிவாங்கப்படலாம் என்ற பாதிக்கப்பட்டவர்களின் பயம் போன்ற காரணங்களால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து குறைவான புகார் உள்ளது" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களை கெட்டவர்கள் மற்றும் தூய்மையற்றவர்கள் அல்லது "சேதமடைந்த பொருள்" என்று கருதும் கலாச்சார தீர்ப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் குற்ற உணர்வுகளை எதிர்கொள்வதாக, ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை புகாரளிப்பது ஒரு முக்கியமான மாற்றமாகும், ஏனெனில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தீர்ப்பதில் புகார் செய்வதில் உள்ள பற்றாக்குறை மிக அடிப்படையான மற்றும் பொதுவான தடையாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

"இது ஒரு அற்புதமான மாற்றம் மற்றும் ஒரு அற்புதமான வாய்ப்பு" என்று மாத்தூர் கூறினார். "இது சட்டம் மற்றும் ஒழுங்கு, காவல்துறை, நீதிமன்ற அமைப்பு போன்றவற்றில் பெரிய நிறுவன மாற்றங்களைதூண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இதனால் ஒரு குற்றத்தை புகாரளிப்பது எளிதானது மட்டுமின்றி குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுப்பதும் எளிதாகிறது" என்றார்.

(சல்தான்ஹா, இந்தியா ஸ்பெண்ட் இணை ஆசிரியர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.