பெங்களூரு: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2017 சட்டசபை தேர்தலின் போது, 3,800 கிராமங்களில் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்காளர்களின் மொபைல்போனுக்கு பிரசார குறுஞ்செய்தி அனுப்பியதில், குற்றப்பின்னணி உள்ள வேட்பாளரின் வாக்குகள் 12% வீழ்ச்சி அடைந்து, அதன்மூலம் வாக்கு பங்கீடு 3% சரிந்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த வாக்கு பங்கீடு வீழ்ச்சி முக்கியமானது; ஏனெனில் 2017 உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தலில் 20% இடங்களில் வேட்பாளரின் வெற்றி தோல்வியை 3% வாக்கு வித்தியாசமே தீர்மானித்ததாக, குற்றப்பின்னணி அரசியல்வாதிகளுக்கு எதிராக வாக்காளர்களை ஒருங்கிணைத்தல்: இந்தியாவில் ஒரு மொபைல்போன் என்ற ஆய்வு குறித்து, 2018 நவம்பரில் வெளியான சான்றுகள் தெரிவிக்கின்றன.

சமாஜ்வாதி கட்சி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி போன்ற கட்சிகள் சார்பில் குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்கள் அதிகம் நிறுத்தப்படும் மாநிலமாக உத்தரப்பிரதேசம் உள்ளது என, 2017 மார்ச் 10ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து தேர்தலின் போது குறைந்தபட்சம் மூன்று முறையாவது தொலைக்காட்சி, நாளிதழ்களில் தெரியப்படுத்த வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் கட்டாயப்படுத்தி உள்ளதாக, 2018 அக்டோபர் 11ல் என்.டி.டி.வி. செய்தி தெரிவித்திருந்தது.

மொபைல்போன் குறுஞ்செய்தி பிரச்சாரங்கள், வாக்காளர்களுக்கு வேட்பாளரை பற்றிய தகவல்களை தெரியப்படுத்தி, அவர்களை தேர்வு செய்வதில் உதவும் சாத்தியக்கூறுகளை இந்த ஆய்வு காட்டுகிறது.

2017 உத்தரப்பிரதேச தேர்தல்களில், தீவிர குற்றவியல் வழக்குகளை கொண்ட வேட்பாளர்களின் விகிதம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி 15% எனவும், குற்ற வழக்கு உள்ள வேட்பாளர் விகிதம், முந்தைய 2012 தேர்தலுடன் ஒப்பிடும் போது ஒரு சதவீதம் குறைந்து 18 ஆகவும் இருந்ததாக, அரசுசாராத அமைப்பான, ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தி பேசும் வட மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகியவற்றில் 2018 சட்டமன்ற தேர்தலில் (இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில்) முறையே 9%, 11% மற்றும் 9% வேட்பாளர்களுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

தேர்தலுக்கு முன் உள்ள நான்கு வகையான செய்திகள்

தற்போதைய ஆய்வு, 3,800 கிராமங்களில் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளை நடத்தியது. கட்டுப்பாட்டு கிராமங்கள் எந்த செய்திகளையும் பெறவில்லை, அதே நேரம் குறுஞ்செய்திகளை அனுப்பிய கிராமங்களில், பெறுநர்கள் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மொத்தம் 4,50,000 பேர், தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன் ஒரு குரல் செய்தி மற்றும் ஒரு உரை செய்தி பெற்றனர்.

குறுஞ்செய்திகள் பின்வரும் நான்கு வகைகள்:

  1. அடிப்படை தகவல் குறுஞ்செய்தி: இந்த குறுஞ்செய்தியை பெறுபவர்கள் தங்களது வேட்பாளர் பற்றி நன்கு யோசிக்கவும், வாக்களிக்கும் முன் நன்கு சிந்திக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். பிரதான கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கு எதிராக குற்றப்பின்னணி இருப்பின், அதுபற்றிய விவரங்களும் இதில் கூடுதலாக வழங்கப்பட்டன.
  2. தகவல் மற்றும் ஒருங்கிணைப்பு குறுஞ்செய்தி: இதில், அடிப்படை தகவல் குறுஞ்செய்தியில் உள்ள தகவல்களுடன், அப்பகுதியின் பிற குடியிருப்போர், வாக்காளர்களுக்கும் இது அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிப்பட்டிருந்தது.
  3. தகவலுடன் இனம் சார்ந்த வாக்களிப்பு குறுஞ்செய்தி: இதில் வாக்காளர்களின் குற்றப்பின்னணி சார்ந்த தகவல்களை வழங்கியதோடு, ஜாதி அடிப்படையில் வாக்களிக்கும் வழக்கத்தை தகர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.
  4. பெண்கள் அணிதிரட்டல் குறுஞ்செய்தி: இதுவும் தங்களது வேட்பாளர் பற்றி நன்கு சிந்தித்து, வாக்களிக்கும் முன் நன்கு யோசித்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆர்வமுடன் பெண்கள் வாக்களிக்க வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
Message Sent Through Service Provider Under Each Type
Type Message
Basic Information “This message is from an unbiased, non-political NGO, Center for Governance and Development. Get to know your candidates correctly, and on Election Day, give your vote only after thinking carefully! In your area: 1. Madhusudan Kushwaha from BSP (elephant party) has 1 criminal case, with attempt to murder charges. 2. Prakash Dwivedi from BJP (lotus party) has no criminal cases. 3. Vivek Kumar Singh from Congress (hand party) has 3 criminal cases, but has no violent charges.”
Information plus coordination message “This message is from an unbiased non-political NGO, Center for Governance and Development, and many people in your area have already received it. Get to know your candidates correctly, and on Election Day, give your vote only after thinking carefully! In your area: <>. Now you can elect the right candidate with the people in your area.”
Information plus ethnic voting message “This message is from an unbiased, non-political NGO, Center for Governance and Development. Don’t follow your old habits and vote only on the basis of caste or religion. Get to know your candidates correctly, and on Election Day, give your vote only after thinking carefully! In your area: << Criminality Information of Candidates>>.”
Women’s mobilization message “This message is from an unbiased, non-political NGO, Center for Governance and Development. Women across the country are voting in record numbers. When all household members vote, your family’s power increases. So definitely encourage all women to vote! Get to know your candidates correctly, and on Election Day, give your vote only after thinking carefully!”

Source: Coordinating Voters against Criminal Politicians: Evidence from a Mobile Experiment in India (November, 2018)

இந்த ஆய்வுக்கு, 150க்கும் மேல் 5,150க்கும் கீழ் மக்கள் தொகை உள்ள கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. "வோடபோன் + ஐடியா சந்தாதாரர்கள் (தோராயமாக 10.6% விகிதம் அல்லது குறைவானது), மக்கள்தொகை விகிதத்தில் குறைவாக உள்ள கிராமங்கள் இதிலிருந்து விலக்கப்பட்டவை".

இந்த ஆய்வு ஜே- பால் (J-PAL) ஆளுமைத் திட்டம், பொருளாதார பயன்பாடுகள் மற்றும் கொள்கைக்கான ஹார்வர்ட் ஆய்வகம் மற்றும் சர்வதேச மற்றும் பொது விவகாரங்களுக்கான வாட்சன் நிறுவனம் ஆகியவற்றின் ஆதரவுடம் நடந்தது. ஐடியா, வோடபோன் மற்றும் ஏர்டெல் ஆகிய மூன்று இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இதில் பங்கேற்றன.

கொலைக்குற்ற வழக்குள்ள வேட்பாளர்கள் வாக்கு விகிதத்தை இழந்தனர்

இந்த ஆய்வில், கொலை குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான வேட்பாளர்களுக்கு ஒட்டுமொத்தமாக 12% வாக்குகள் குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் கொலை முயற்சி வழக்கு உள்ள வேட்பாளர்களின் வாக்கு சதவீதமும் 5% சரிந்துள்ளது. கொலைக்குற்றம் அல்லாத வழக்கு உள்ள வேட்பாளரின் வாக்கு சதவீதத்தில் எந்த வேறுபாடும் இல்லை.

குறைந்தபட்சம் ஒரு வேட்பாளர் கொலை குற்றச்சாட்டுடன் உள்ள தொகுதிகளில், குற்றப்பின்னணி இல்லாத மற்ற வேட்பாளர்களின் வாக்கு விகிதம் சராசரியாக 6.7% அதிகரித்தும், கொலை வழக்குள்ள வேட்பாளருக்கு 7.7% சரிந்திருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. "இந்த விளைவுகள், கொலை குற்றச்சாட்டுகளோடு தொடர்பு இல்லாத வேட்பாளர்களின் வாக்கு புள்ளிகளில் முக்கியத்துவம் வாய்ந்த 1.6% வாக்குகளை மொத்தமாக அதிகரித்துள்ளது" என்று அந்த ஆய்வு கூறுகிறது.

கொலைக்குற்ற பின்னணி இல்லாத வாக்குச்சாவடிகளில் "தூய்மையான" வேட்பாளர்களுக்கான வாக்குகளில் நேர்மறையான தாக்கம் என்பது காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது. இதன்மூலம், “குற்றம்சாராத வேட்பாளர்களின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க, குற்றப்பின்னணி வேட்பாளர்கள் குறித்த தகவல்கள் தேவைப்படுகிறது” என்பதை ஆய்வுகள் காட்டுகிறது.

இந்தியாவில், குற்ற வழக்குள்ள எந்த நபரும் தேர்தலில் போட்டியிட எந்த தடையும் இல்லை. குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடும் விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், அப்பொறுப்பை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட்டதாக, 2018 செப். 25-ல் லைவ்மிண்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த 2017 நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்குமாறு கேட்டிருந்தது என, 2017 டிசம்பர் 14ஆம் தேதி லைவ்லா செய்தி வெளியிட்டிருந்தது. அரசியல்வாதிகளுக்கு எதிராக நிலுவையில் உள்ள 1,581 குற்ற வழக்குகளை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் அரசு தெரிவித்ததாக, அந்த செய்தி மேலும் தெரிவித்தது.

ஒருங்கிணைப்பின் தாக்கம்

"தூய்மையான" வேட்பாளர்களின் மீதான தாக்கம், அடிப்படை தகவலுடன் தொடர்புடைய ஒரு ஒருங்கிணைந்த செய்தியுடன் மாறுபட்டது. கொலை சம்பந்தமான குற்றச்சாட்டுக்களுடன் வேட்பாளர்களின் வாக்கு பங்குகளில், வாக்குச்சாவடிகளில் 0.8% புள்ளி சரிவு ஏற்பட்டது. அந்த அடிப்படை தகவல் பெற்றது, மற்றும் இன-வாக்களிப்பு செய்தியை பெற்றுள்ள வாக்குச்சாவடிகளில் 1.5% புள்ளி சரிவை சந்தித்ததாக, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறுஞ்செய்தி பெறப்பட்ட வாக்குச்சாவடிகளில் வேட்பாளர்களின் வாக்கு பங்களிப்பு 2.5% புள்ளிகள் குறைந்துவிட்டன.

மொத்தத்தில் கொலை வழக்குள்ள வேட்பாளர்கள், தாங்கள் பெற்ற மொத்த வாக்குகளில் 12% சரிவை கண்டுள்ளனர்; இது, 3% புள்ளிகள் வாகு பங்கீட்டில் சரிவை ஏற்படுத்தியுள்ளது. "இத்தகைய பிரச்சாரத்தை இலக்காகக் கொண்ட தேர்தல் வெற்றியின் அளவை நாம் கருத்தில் கொள்ளும்போது, இது ஒரு சிறிய அளவிலான அற்புதம். 2017ல் உத்தரப்பிரதேசத்தில் நடந்த 403 தொகுதிகளில் 20% இடங்களில் வேட்பாளரின் வெற்றி தோல்வியை 3% வாக்கு வித்தியாசமே தீர்மானித்தது” என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.