மும்பை: பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) இந்தி மொழி பேசும் மூன்று மாநிலங்களில் --மத்திய பிரதேசம் (ம.பி.), ராஜஸ்தான், சத்தீஸ்கர் -- சந்தித்த தேர்தல் தோல்வியால், பா.ஜ.க. ஆளுகைக்கு உட்பட்ட மக்கள் தொகையின் எண்ணிக்கை, 2017ஆம் ஆண்டில் 888 மில்லியன் (மக்கள் தொகையில் 71%) என்பதில் இருந்து, 254 குறைந்து, 634 மில்லியன் (51%) என, 2018 டிசம்பர் 2018-ல் உள்ளது.

இப்போது பா.ஜ.க. அரசு -அல்லது அது கூட்டணியில் இடம் பெற்றுள்ள அரசுகளின் மாநிலங்களின் எண்ணிக்கை தற்போது, 16 ஆக உள்ளது. இது, 2014 மே 24-ல் பா.ஜ.க. அரசு மத்தியில் பதவிக்கு வந்த போது இருந்த ஏழு மாநிலங்கள் என்பதைவிட அதிகம். அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், கோவா, குஜராத் , ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேசம் ஆகியவை பா.ஜ.க. அணி தரப்பில் உள்ளன.

எனினும், பா.ஜ.க. (அல்லது அதன் கூட்டணி அரசில் அங்கம்) வசம் 21 மாநிலங்கள் இருந்தன.

நேற்றைய தேர்தல் முடிவுக்கு பிறகு, காங்கிரஸ் அரசு அல்லது கூட்டணியில் அது இடம் பெற்றுள்ள மாநிலங்களின் எண்ணிக்கை - பஞ்சாப், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் என, ஐந்தாகியுள்ளது. கடந்த 2017-ல் மொத்த மக்கள் தொகையில் 7% கொண்டுள்ள இரு மாநிலங்களில் ஆட்சியில் இருந்த நிலை மாறி, 21% மக்கள் தொகை கொண்ட ஐந்து மாநிலங்கள் காங்கிரஸ் அணியில் கீழ் வந்துள்ளன.

அதேநேரம், 40 இடங்களை கொண்ட மிஜோரமில், 26 இடங்களில் வெற்றி பெற்று மிஜோ தேசிய முன்னணி வெற்றி பெற்றதால், காங்கிரஸ் அங்கு ஆட்சியை இழந்துள்ளது. அதேபோல், 119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி 88 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.

ஆந்திரா, கேரளா, ஒடிசா, மிசோரம், தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய ஏழு மாநிலங்களில் மற்ற கட்சிகள் அதிகாரத்தில் உள்ளன. ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் ஆட்சியின் கீழ் உள்ளது.

ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் 678 இடங்களில் -- இது இந்திய மக்கள் தொகையில் ஆறாமிடம் அல்லது 15.2%-- காங்கிரஸ் கட்சி 305 தொகுதிகளையும்; பா.ஜ.க. 199 இடங்களில் வெற்றி பெற்றதாக, தேர்தல் ஆணைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2013 தேர்தலில், ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்ற இடங்களில் 180 இடங்களை பா.ஜ.க. இழந்துள்ளது; காங்கிரஸ் கட்சிக்கு 162 இடங்கள் கிடைத்துள்ளதாக, 2011 டிச. 11-ல் வெளியான தேர்தல் முடிவை பகுப்பாய்வு செய்து, 2018 டிச. 12-ல் இந்தியா ஸ்பெண்ட் வெளியிட்ட கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இந்தி பேசும் இம்மூன்று மாநிலங்களில் 2013 தேர்தலில் பா.ஜ.க. 377 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 118 இடங்களையும் வென்றது. 2013 தேர்தலில் மிஜோராமில் பா.ஜ.க.வுக்கு எந்த இடமும் இல்லை; 2014-ல் தோற்றுவிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் இப்போது தான் முதல்முறையாக தேர்தல் நடைபெற்றுள்ளது. அதாவது, பா.ஜ.க. 48% இடங்களை இழந்துள்ளது; காங்கிரஸ் 137% இடங்களை பெற்றுள்ளது என்று நாங்கள் கூறியிருந்தோம்.

மத்தியப்பிரதேசத்தில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பெற்ற வாக்கு விகிதம் முறையே 41% மற்றும் 40.9 ஆகும். கடந்த 2013 தேர்தலில் இது முறையே 45% மற்றும் 36% என்றிருந்தது என, 2018 டிச. 12-ல் நாங்கள் செய்தி வெளியிட்டிருந்தோம்.

ராஜஸ்தானில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வாக்கு விகிதங்கள் முறையே 38.8% மற்றும் 39.3%; இது 2013 சட்டமன்ற தேர்தலில் முறையே 45% மற்றும் 33% என்று இருந்தது.

சத்தீஸ்கரில் இம்முறை பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றில் வாக்கு விகிதங்கள் 33% மற்றும் 43% ஆகும். 2013 தேர்தலில் பா.ஜ.க. 41%, காங்கிரஸ் 40% வாக்கு விகிதங்களை பெற்றிருந்தன.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.