5 பரிந்துரைகளை இந்தியா பின்பற்றினால் 660 மில்லியன் இந்தியர்கள் நீண்ட ஆயுளோடு வாழ்வார்கள்
புதுடெல்லி: மாசுபாடு ஏற்படுத்துவோர் குறித்து மக்களுக்கு வழக்கமாக தகவல்களை அளிக்க வேண்டும்; சிறந்த நிறுவனங்கள் சட்ட வரம்புகளை மீறி மாசு படுத்துவதை தெரிவிக்க வேண்டும்.
சிகாகோ பல்கலைக்கழக எரிசக்தி கொள்கை நிறுவனம் (EPIC) மற்றும் பாஸ்டனில் உள்ள ஹார்டுவர்ட் கென்னடி நிறுவனத்தின் கொள்கை வடிவமைப்பு திட்ட (EPOD) ஆய்வாளர்களால் தயாரிக்கப்பட்ட 2018 கொள்கையின்படி, இந்தியா முழுவதும் காற்று மாசுபாட்டை தவிர்க்க, “ஆதார அடிப்படையில்” பரிந்துரைக்கப்பட்ட ஐந்து பரிந்துரைகளில், இரண்டு இவை.
மற்ற மூன்று: தாங்கள் வெளியேற்றும் புகை அளவை சோதிக்க, ஆய்வகங்களை தாங்களாகவே நிறுவனங்கள் தணிக்கை செய்வதை நிறுத்த வேண்டும். வெளியேற்றும் அளவு குறித்த உண்மையான புள்ளி விவரங்களை வழங்க வேண்டும்; கழிவுகளை விற்பனை செய்ய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி தர வேண்டும் என 2018, ஆக.16-ல் வெளியாக சுருக்கமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
660 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள், நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்தும், நாட்டின் நிலையான அளவான (ஆண்டுக்கு 40 μg / m3; 24 மணி நேரத்திற்கு 60 μg / m3) 2.5 பி.எம்.என்பதை விட 30 மடங்கு அதிக மாசு உள்ள பகுதிகளில் வசிக்கின்றனர்.
தேசிய காற்று தர நிலையை இந்தியா எட்டியிருந்தால், இந்தியர்கள் மேலும் பல ஆண்டுகள் வாழ முடியும்; உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்ணயித்த தர நிலை அளவை, அதாவது 10 μg/m3, அல்லது மூன்று முறை இறுக்கமாக இந்திய பின்பற்றியிருந்தால், இந்தியர்களின் ஆயுட்காலம் மேலும் 4 ஆண்டுகள் அதிகரிக்கும்.
“அவ்வாறு செய்தால், டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பெரு நகரங்கள் மிகப்பெரும் பலன்களை அடையும்” என்று தெரிவிக்கும் அந்த அறிக்கை, கங்கை கரையோர பகுதிகள், கிராமப்புறங்கள் இதேபோன்ற பலன்களை அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
“தேசிய தர நிலைக்கேற்ப காற்று மாசுபாடு இருப்பின், அப்பகுதி மக்களின் ஆயுள் மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிக்கும்”.
இந்தியாவில், உலக சுகாதார நிறுவனத்தின் தரநிலையான 10 μg/m3-ல் 2 முதல் 2.5 மடங்கு அளவுக்கு மிகாத பகுதிகளில், 1000 இந்தியர்களில் ஒருவர் மட்டுமே வாழ்வதாக, 2018 ஜனவரி 18-ல் இந்தியா ஸ்பெண்ட் தெரிவித்திருந்தது.
கடந்த 2015ல், இந்தியாவில் 1.09 மில்லியன் இறப்புக்களுக்கு பி.எம். 2.5 மாசுபாடு காரணமாக இருந்தது என்று, எங்களின் அறிக்கை தெரிவித்தது.
“காற்று மாசுபாடு இந்தியாவில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களை உடல் நலம் பாதிக்கவோ அல்லது உயிரிழப்புக்கோ காரணமாகிறது” என்று பல்கலைக்கழக கொள்கை விளக்கத்திற்கான இணை ஆசிரியர் மைகேல் கிரீன் ஸ்டோன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இவர், மில்டன் பிரைட்மேனில் பொருளாதார பேராசிரியராகவும், இ.பி.ஐ.சி.- சிகாகோ பல்கலைக்கழகத்தின் டாடா அபிவிருத்தி மைய இயக்குனர் ஆவார்.
இந்தியாவின் தொழில் பொருளாதாரத்தை பாதிக்காதவாறு, தொழிற்சாலைகள் வெளியேற்றும் மாசுபாடுகளை கட்டுப்படுத்தி, காற்றின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது பரிந்துரைகளின் முக்கிய அம்சமாகும்.
எனினும் கணினி ஆற்றலை கொண்ட புதிய சகாப்தத்தில் நாம் இருக்கிறோம். இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி, அவசர இலக்குகளை பாதிக்காமல், காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகளை ஏற்படுத்தும் புள்ளி விவரங்களுடன் கூடிய புதிய வாய்ப்புகள் உள்ளன,” என்கிறார் கிரீன்ஸ்டோன்.
பரிந்துரைகள் பற்றிய பகுப்பாய்வு இங்கே:
சுதந்திரமான தணிக்கை மூலம் வெளியேற்ற கண்காணிப்பை மேம்படுத்துதல்
காற்று மாசு தர நிலைகள், ஒழுங்குமுறைகளை தொழிற்சாலைகள் பின்பற்றுகின்றனவா என்பதை சரிபார்க்க, மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் (CPCB), பல்வேறு மாநில கட்டுப்பாட்டு வாரியங்கள் (SPCBs) தொழிற்சாலை அடுக்குகளை (புகைபோக்கி) ஆய்வு செய்கின்றன. பல நேரங்களில் தொழிற்சாலைகள் அங்கீகாரம் பெற்ற ஆய்வுக்கூடங்களை (ஆய்வகங்கள்) தங்களின் மாசுபாட்டை கண்டறிய பயன்படுத்துகின்றன.
இந்த நடைமுறையானது ஒருசார்புள்ள முடிவுகளையே தரும் என்று, அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
குஜராத்தில் “அங்கீகாரம் பெற்ற மூன்றாம் நபர்களால் தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கைகள் ஒருசார்பாக இருந்தது தெரிய வந்தது” என்று அது கூறுகிறது. ஆய்வில் 29% தொழிற்சாலைகள் பொய்யான அறிக்கைகளை தந்திருந்தன. தொழிற்சாலைகள், சுற்றுச்சூழல் ஆய்வகங்களுக்கு தொகை தருவதால், அவையும் தங்களுக்குள்ளான “மோதல் நலன்” சார்ந்து, இத்தகைய ஒரு சார்பான அறிக்கைகளை தருகின்றன.
தொழிற்சாலை மாசுபாடுகளை கண்காணிக்க, கணக்காளர்கள் ஒதுக்கப்பட வேண்டும். தொழிற்சாலை ஆய்வுக்கான அவர்களின் தொகை, தன்னாட்சி அமைப்பு மூலம் வழங்கப்பட வேண்டும். சுதந்திரமான மறு ஆய்வுகள மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்களின் அறிக்கை ஒரு சார்பானதாக இருப்பின், அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, தொழிற்சாலைகளின் போலி அறிக்கைகள் 80% குறைந்திருந்ததாக, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாசு வெளியேற்ற உண்மை விவரங்களை ஒழுங்குபடுத்துவோருக்கு தர வேண்டும்
தொழிற்துறை மாசுபாடுகள் குறித்த தரமான புள்ளி விவரங்கள் இல்லாதது மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீதான கட்டுப்பாட்டுக்கு தடையாக உள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டில், அதிக மாசு ஏற்படுத்தும் 17 வகையான தொழிற்சாலைகளில், “தொடர் வெளியேற்ற கண்காணிப்பு முறை” (CEMS) அதாவது மாசு வெளியேற்றத்தின் உண்மை தன்மையை கண்காணிக்க ஏதுவாக நிறுவுவதற்கு மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் (CPCB) உத்தரவு பிறப்பித்திருந்தது.
எனினும், புள்ளி விவரங்களை ஆராய்ந்து நடைமுறைப்படுத்த ஏதுவாக “கணிசமான திறனை உருவாக்கும் முயற்சி” தேவை என்று பல்வேறு மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியங்கள் (SPCB) தெரிவித்தன.
“உதாரணத்துக்கு, வெளியேற்றத்தை அளவிட இன்னும் “தொடர் வெளியேற்ற கண்காணிப்பு முறை” (CEMS) தேவை” என்று கூறும் அறிக்கை, நிகழ்நேர கண்காணிப்பில் பயன்படுத்தப்படும் அளவீட்டு கருவிகளின் துல்லியத்தன்மை மற்றும் மதிப்பீடு செய்து சரிசெய்யும் செயல்முறையை பற்றியும் குறிப்பிடுகிறது.
”நலன் சார்ந்த மோதல்கள் அகற்றத்தை மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியங்கள் (SPCB) உறுதி செய்து கொள்ள வேண்டும் மற்றும் புள்ளி விவர முறைகேடுகளை தடுக்க அதற்கான நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்”
மாசு ஏற்படுத்துவோர் விவரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்
மாசு வெளியேற்றும் தொழிற்சாலைகள், அதன் மீதான ஆய்வு முடிவுகளை, ஒழுங்குபடுத்தும் அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஆய்வு அறிக்கைகளை மக்களுக்கு தெரிவிக்காதது சமுதாயக்குழுக்களிடம் இருந்து அழுத்தம் ஏற்படுத்தவே செய்யும். அதேபோல் முதலீட்டாளர்கள், சக தொழில் நிறுவனங்களிடம் இருந்து உண்டாகும் அழுத்தம், மாசுபடுத்துவோரை நன்நடத்தைக்கு மாற்றும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
எனினும், மாசு வெளியேற்றம் குறித்த புள்ளி விவரங்களை மக்கள் புரிந்து கொள்வது கடினமாக இருக்கலாம். ஆனால், மகாராஷ்டிரா மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (MPCB), சிகாகோ பல்கலைக்கழக எரிசக்தி கொள்கை நிறுவனம் (EPIC) மற்றும் பாஸ்டனில் உள்ள ஹார்டுவர்ட் கென்னடி நிறுவனத்தின் கொள்கை வடிவமைப்பு திட்ட (EPOD) ஆய்வாளர்களுடன் இணைந்து, ஒரு வழியை காட்டுகிறது.
அதன்படி, நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளுக்கு, கழிவு வெளியேற்றத்தின் அடிப்படையில் 1 முதல் 5 வரை நட்சத்திர அடிப்படையில் தர மதிப்பீடு வழங்குவதே இத்திட்டம் என்று, 2017 ஜூன் 26-ல் இந்தியா ஸ்பெண்ட் செய்தி வெளியிட்டிருந்தது.
அதன்படி, சிறப்பாக செயல்படும் தொழிற்சாலை, 5 நட்சத்திரங்கள் தர மதிப்பீட்டை பெறும். அதிக மாசுபாடு கழிவுகளை வெளியேற்றும் ஆலை, ஒரு நட்சத்திர மதிப்பீட்டையே பெறும். அதேபோல், எம்.பி.சி.பி. இணையதளம் வாயிலாக தொழில்துறையினர், அரசு மற்றும் பொதுமக்கள், தொழிற்சாலைகளின் மாசு வெளியேற்றம் தொடர்பான புள்ளி விவரங்களை பார்வையிடலாம்.
“இதில், 5 நட்சத்திர தர மதிப்பீடு பெறும் நிறுவனங்களுக்கு, மாசுபாடு அளவை தொடர்ந்து கட்டுக்குள் வைக்க ஊக்கமளிக்கும் வகையில் மானிய உதவி தரப்படுகிறது என்று, அறிக்கை கூறுகிறது.
“மகாராஷ்டிராவில் எங்களின் நட்சத்திர தர மதிப்பீடு பணியின் ஒரு நல்ல பகுதியாகும். இது புரிந்து கொள்ள கடினமானவற்றை எடுத்து, புரிய வைக்கிறது" என, ஹார்வர்ட் கென்னடி பள்ளியின் சர்வதேச அரசியல் பொருளாதாரத்துறை பேராசிரியரும், இ.பி.ஓ.டி. இயக்குனருமான ரோஹிணி பாண்டே இந்தியா ஸ்பெண்ட்டிடம் தெரிவித்தார்.
நட்சத்திர தரமதிப்பீட்டை தாண்டி, எம்.பி.சி.பி. தனது இணையதளத்தில் மாசுபாடு குறித்த விவரங்களை வண்ண வரைபடங்களுடன், தொழிற்சாலையின் வகை, இருப்பிடம் குறித்த வரைபடம், தொழில் நிறுவனங்களும் காணும் வகையில் பின்னூட்ட கருத்து தெரிவிக்கும் வசதி உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது.
“இப்பணிகள் எல்லாம் செலவு மிகுந்தவை; அதற்கப்பால் இதையெல்லாம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செய்ய வேண்டும்” என்கிறார் பாண்டே. நிதிநிலை அறிக்கையை சாராமல் பணியாற்ற, எதிர்காலத்தில் வெளிப்படைத்தன்மை தேவை.சமூகமும், ஊடகங்களும் இதுகுறித்த புள்ளி விவரங்களை மொழி பெயர்த்து மக்கள் முன் வைக்க வேண்டும்.
மகாராஷ்டிராவை தொடர்ந்து, ஒடிசா மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியமும் (OSPCB) இதேபோல் நட்சத்திர தரமதிப்பீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. ஓ.எஸ்.பி.சி.பி.யின் நட்சத்திர தர மதிப்பீடு என்பது, ஒவ்வொரு மாதம் புதுப்பிக்கப்படும் சி.இ.எம்.எஸ். புள்ளி விவரங்களின் அடிப்படையில் இருக்கும்.
"இந்தியா முழுவதும் இதே போன்ற வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களுக்கு தகவல்களை தெரிவிக்கும் செயல்முறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், தொழில்துறையினரால் ஏற்படும் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியில் நல்ல மாற்றகளில் தீவிர மாற்றத்தை ஏற்படுத்தும்" என்று சுருக்கமாகக் குறிப்பிட்டது.
அதிக மாசு வெளிப்படுத்தும் அபராதம் விதிக்கலாம்
அதிக மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு இந்தியா அபராதம் விதிக்க வேண்டும். “(இது) நெகிழ்தன்மையை அதிகரிக்க செய்து, சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகளை மீறுவோருக்கு கட்டுப்பாட்டை உண்டாக்கும். மாசு ஏற்படுத்துவோர் தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய சுற்றுச்சூழல் சட்டங்கள், விதிமீறும் ஆலைகளுக்கு அபராதம் விதிப்பது முதலீடுகளை நிறுத்தி வைப்பது, ஆலைகளை மூட உத்தரவிடுவது போன்றவற்றையே நம்பியுள்ளன. இத்தகைய நெகிழக்கூடிய ஒழுங்குமுறைகள், அதிக விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது பாயலாம்; அதேநேரம் விதிமீறும் மேலும் பலர் தப்பித்துவிடலாம் என, அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே எழும் கேள்வி: விதிமீறும் நிறுவனங்கள் அபராதத்தை எளிதாக செலுத்திவிட்டு தப்ப முடியுமா?
நேர்மறையான அல்லது எதிர்மறையான நடவடிக்கைகளில் இறங்கினால் ”விரும்பத்தகாத செயல்”களில் இருந்து தொழிற்சாலைகள் விலகலாம். ஆனால், ”இந்தியாவின் கொள்கையின் இவ்வாறு முற்றிலும் இல்லை” என்கிறார் பாண்டே.
மேலும், விரிவான மாசுபாடு குறித்த விவரங்கள் அதிக அபராதங்களுக்கும், நேரடி விதிமீறல்களுக்கும் வழிவகுக்கும் மற்றும் “சிறிய மீறல்கள்” என்பது “மலிவு” ஆகிவிடும் என்கிறார் பாண்டே.
“அதே அளவீடுகள், தர அளவீட்டுக்கு கீழே மாசு வெளியேற்றும் ஆலைகளுக்கு வெகுமதி வழங்க, எங்களுக்கு உதவுகிறது” என்கிறார் அவர்.
மாசு கழிவு விற்பனையை அனுமதிக்கலாம்
தொழிற்சாலைகள், தாங்கள் வெளியேற்றும் மாசு கழிவுகளை மாற்றுப் பயன்பாட்டுக்கு விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். இதற்கென தொழில் குழுக்களை ஏற்படுத்தி வர்த்தக சந்தைகளை நிறுவ வேண்டும்.
தொழிற்சாலை கழிவு விற்பனை திட்டத்தில், ஒழுங்குபடுத்தப்பட்ட தொழிற்சாலைகளில் அதன் கழிவுகள் ஓரிடத்தில் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு ஒவ்வொரு அலகு ஏற்படுத்தவும் அனுமதி தேவை. பாதிப்பு ஏற்படாதவாறு மூடி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் கழிவுகளை நிறுவனங்கள் விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என்று, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய கழிவு விற்பனை திட்டம் என்பது, தொழிற்சாலைகள் தங்களின் மாசு அளவை குறைப்பதோடு, அதன் விற்பனைக்கு அனுமதி வாங்குதல் என்ற சமநிலையை ஏற்படுத்துகிறது.
பழமையான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளின் கீழ், “தவிர்க்கப்பட்ட செலவு” என்ற ரீதியில் தண்டனை, குறிப்பாக ”குறைப்பு செலவுகள்” அதிகமாக்கி, மாசு ஏற்படுத்துபவர்கள் தங்களுக்கான ஆபத்தில் இருந்து தப்ப முனைவதாக, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.