ஜார்க்கண்டில் வனஉரிமை முக்கியத்துவ பகுதிகளில் 12 தொகுதிகள் இழந்த பாஜக
புதுடில்லி: ஜார்கண்டில் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா (பாஜக) தோல்வியடைந்த 12 இடங்கள் (2014 இல் 37 உடன் ஒப்பிடும்போது 2019 இல் 25 இடங்களை வென்றது) வன உரிமைச் சட்டம் (எஃப்ஆர்ஏ) பிரச்சினைகளால் பதற்றம் நிறைந்தவை என்று ஒரு சுயாதீன ஆராய்ச்சி குழுவின் புதிய பகுப்பாய்வு முடிவு தெரிவிக்கிறது. எஃப்.ஆர்.ஏ வனப்பகுதி மக்களின் நில உரிமைகளை முறையாக அங்கீகரிக்கிறது; ஏனெனில் இப்பகுதிகளில் அதிக பழங்குடி மக்கள் உள்ளனர்; அவர்களுக்கு எஃப்.ஆர்.ஏ ஒரு முக்கியமான பிரச்சினை ஆகும்.
ஒதுக்கப்பட்ட 28 பழங்குடி இடங்கள் "தெளிவான மாற்றத்தை" காட்டின - பாஜக , 2014 இல் 11 உடன் ஒப்பிடும்போது, 2019இல் இரண்டு இடங்களை மட்டுமே பெற்றது என்று, வன வள-கற்றல் மற்றும் ஆலோசனை - சி.எப்.ஆர்- எல்.ஏ. (CFR-LA) அமைப்புக்காக ஆய்வு மேற்கொண்ட என்ஜிஓ வலைபின்னல் சமூகத்தின் உறுப்பினர்கள் துஷார் டாஷ் மற்றும் சுஷ்மிதா வர்மா தெரிவித்தனர்; இவர்கள் சி.எப்.ஆர்- எல்.ஏ.க்கான ஆய்வு நடத்தினர்.
வனவாசிகளின் நில உரிமைகளை முறையாக அங்கீகரிப்பதை வழங்கும் எஃப்ஆரே அமல்படுத்துவதில் நிலவும் தாமதத்தால் ஏற்பட்ட பழங்குடியினரின் அதிருப்தி, ஜார்கண்ட் தேர்தலில் 81 சட்டமன்றத் தொகுதிகளில் 62 க்கும் மேற்பட்டவற்றில் (77% க்கும் அதிகமானவை) தீர்மானிக்கும் காரணியாக இருக்கலாம் என்று வாக்குப்பதிவுக்கு முன், நவம்பர் 23, 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.
ஜார்க்கண்ட் சட்டமன்றத்தேர்தல் முடிவுகள், டிசம்பர் 23, 2019 அன்று அறிவிக்கப்பட்டன. தற்போது பாஜக 25 இடங்களை பெற்றது; இது 2014 இல் பெற்ற 37-ஐ விட 32.43% குறைவாகும்; மேலும் 41 இடங்கள் என்ற பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்., 30 இடங்களை பெற்றது), காங்கிரஸ் (16) மற்றும் ராஷ்டிரிய ஜனதாதளம் (ஆர்.ஜே.டி, 1) கூட்டணி 47 இடங்களை பெற்றது; இது 2014 இல் 25 என்பதை விட 88% அதிகமாகும்.
ஜே.எம்.எம் கூட்டணி வனத்துறை சட்டத்தால் பதற்றம் ஏற்பட்ட பகுதிகளில் வெல்ல முடிய்யும்; "பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பிற ஓரங்கட்டப்பட்ட சமூகங்களின் நிலம் மற்றும் வன உரிமைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளை எழுப்புவதன் மூலம்" என்று பகுப்பாய்வு கூறியது.
இந்திய வனச்சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள், உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக பழங்குடியினரை வெளியேற்ற அச்சுறுத்தல், திட்டங்களுக்கு காடுகளை சட்டவிரோதமாக அனுமதித்தல், சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்துதல் போன்ற பாஜக அரசின் பழங்குடி எதிர்ப்பு நில மற்றும் வனக் கொள்கைகள் அத்துடன் மாநிலத்தில் எஃப்.ஆர்.ஏ செயல்படுத்தப்படாதது போன்றவை ஜே.எம்.எம் கூட்டணி அதன் அறிக்கையிலும் பிரச்சாரத்திலும் எழுப்பிய சில முக்கிய பிரச்சினைகள்.
கடந்த 2006 இல் நடைமுறைக்கு வந்த எஃப்.ஆர்.ஏ, குறைந்தது 38 லட்சம் பட்டியலின சாதியினர் மற்றும் பட்டியலின பழங்குடியினரின் - அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவில் மிகவும் பின்தங்கிய சமூக-பொருளாதார குழுக்கள் - வாழ்வாதாரத்திற்கு முக்கியமானது; இவர்கள், ஜார்க்கண்டின் மொத்த வாக்காளர்கள் 73 லட்சம் பேரில் 52% என 2014 வாக்களிப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எஸ்சி-எஸ்டி வாக்காளர்களில், 75% (29 லட்சம் பேர்) பட்டியல் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள்; இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியினருக்கான அரசியலமைப்புச் சொல்.
எஃப்ஆர்ஏ பதற்றமான பகுதிகளில் மாற்றம்
ஜார்க்கண்டில் பாஜக இழந்த 12 இடங்கள் ‘மோசமான’, ‘உயர்’ மற்றும் ‘நல்ல’ மதிப்புடைய இடங்கள் என முழுவதும் பரவியிருந்தன; இது எஃப்.ஆர்.ஏ செல்வாக்கின் அளவிற்கு எதிராக மொத்த இடங்களின் எண்ணிக்கையை உடைக்க ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தும் வகைப்பாடு ஆகும். ‘மோசமான’ என்ற வகைப்படுத்தப்பட்ட தொகுதிகளில், அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் எஃப்.ஆர்.ஏவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; மக்கள் தொகையில் அதிகமானோர் பழங்குடியினர் மற்றும் ஒரு பெரிய பகுதி காடுகளின் கீழ் வந்தது. ‘நல்லது’ என்பதன் கீழ் வகைப்படுத்தப்பட்டவர்கள் பழங்குடியின மக்களின் ஒப்பீட்டளவில் குறைந்த மக்கள்தொகை மற்றும் காடுகளின் கீழ் உள்ள பகுதியைக் கொண்டுள்ளனர்.
‘மோசமான’ மற்றும் ‘உயர்’ மதிப்புத்தொகுதிகளில், ஜே.எம்.எம் ஏழு இடங்களையும், காங்கிரஸ் ஐந்து இடங்களையும், பாஜக ஆறு இடங்களையும் பெற்றது என்று பகுப்பாய்வு கூறுகிறது.
மொத்தத்தில், இந்த மூன்று பிரிவுகளும் 81 சட்டமன்றத் தொகுதிகளில் 62 (77% க்கும் அதிகமானவை). 2014இல் இந்த 62 இடங்களில் 26 இடங்களை பாஜக வென்றது. இந்த 62 இடங்களில் 31 இடங்களை வென்ற ஜே.எம்.எம் 63% அதிக லாபங்களை பதிவு செய்தது. காங்கிரஸ் 2019இல் 10 இடங்களை வென்றது, இது, 2014 ல் 3 இடங்களை விட அதிகம்.
பழங்குடியினரின் தனித் தொகுதிகளில் தேர்தல் முடிவுகள்
பழங்குடியினத்தவர்களுக்கான 28 தனித்தொகுதிகளில் பாஜக ஒன்பது இடங்களை இழந்தது; 2014ஆம் ஆண்டில் 11இல் இருந்து 2019 ஆம் ஆண்டில் இரண்டு இடங்களை இழந்தது.
மறுபுறம், ஜே.எம்.எம், 2019 தேர்தலில் ஏழு இடங்களைப் பெற்று மொத்தம் 28 பழங்குடியினருக்கான தனித் தொகுதிகளில் 20 இடங்களை வென்றது; 2014 இல் 13 இடங்களுடன் இருந்தது. காங்கிரஸ் ஆறு இடங்களை பெற்றது; இது கடந்த தேர்தலில் பூஜ்ஜியம் என்ற எண்ணிக்கையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜார்கண்ட் இப்போது சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவின் பிற முக்கிய மாநிலங்களுடன் இணைகிறது, அங்கு நிலம் மற்றும் வன உரிமைகள் மற்றும் விவசாய துயரங்கள் பிரச்சினைகள் 2018-19 மாநிலத் தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தியது மற்றும் ஆளும் கட்சிக்கு எதிராக பெரும் எழுச்சிக்கு வழிவகுத்தது என்று பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.
கடந்த 2019 அக்டோபரில் தேர்தல் நடந்த மகாராஷ்டிராவில், தற்போதைய பாஜக சுமார் 22% எஃப்ஆர்ஏ பதற்றம் மிகுந்த இடங்களை இழந்தது; இதனால் அரசு அமைக்க பெரும்பான்மையை வெல்ல முடியவில்லை என, இந்தியா ஸ்பெண்ட் 2019 நவம்பர் 23 கட்டுரை தெரிவித்தது.
இதேபோல், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் 2018 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததற்கு ஓரளவு எஃப்ஆர்ஏ காரணம் எறு சிஎஃப்ஆர்-லாவின் சட்டமன்றத் தேர்தல் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.