மும்பை: பாகிஸ்தான் விமானப்படையின் எப்.-16 ரக விமானத்தால் வீழ்த்தப்பட்ட, விமானப்படை அதிகாரி அபிநந்தன் வர்த்தமான் பறந்து கொண்டிருந்த, இந்தியாவின் மிக்-21 ரக விமானம் அதன் ஓய்வுக்கு பிறகும் பறந்து கொண்டிருக்கிறது; அது திரும்பத்திரும்ப மேம்படுத்தப்பட்டு, பயன்பாட்டு காலம் நீட்டிக்கப்படுவதாக வல்லுனர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான ரஷ்ய தயாரிப்பான மிக் 482 ரகங்கள், 1960ஆம் ஆண்டு மத்தியில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது; 1971 முதல் 2012 ஏப்ரல் வரை சராசரி ஆண்டுக்கு 12 மிக் விமானங்கள் விபத்துக்குள்ளாகி வந்துள்ளன. இவ்விமானங்கள் 1990களின் மத்தியில் ஓய்வு பெற்றவை; ஆனால், 1980களில் வேறு விமானங்கள் சேர்க்கப்பட்ட நிலையிலும் இவை, பைசன் தர நிலைக்கு மேம்படுத்தப்பட்டு திரும்பத்திரும்ப பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

“மிக்-21 ரக விமானங்களை இன்னமும் தீவிரமாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் கடைசி நாடு இந்தியா தான்” என்று வாயு ஏரோஸ்பேஸ் அண்ட் டிபன்ஸ் ரிவ்யூ இதழ் நிறுவன ஆசிரியர் புஷ்பேந்தர் சிங், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். “எப்.16 விமானத்திற்கு முன் ஈடுகொடுக்க முடியாமல், மிக் 21ல் பறந்த இளைஞர், தற்போது பாகிஸ்தானின் போர்க்கைதியாக பிடிபட்டுள்ளார்; 2019ஆம் ஆண்டிலும் இந்த விமானங்களை நாம் பயன்படுத்துவது, தேசிய அவமானம்” என்றார் அவர்.

விமானத்தின் வயது என்பது, அவற்றின் செயல்பாட்டு உபகரணங்கள் அல்லது அனுப்பு கூறுகளின் வயதை பொறுத்து அது தோல்விகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ஒரு விமானத்தின் சான்றளிக்கப்பட்ட காலத்தைவிட முறையை விட அமைப்பு கூறுகள் பெரும்பாலும் நீண்ட ஆயுளை கொண்டிருப்பதால், பிற அமைப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்தி, அந்த விமானங்களை மீண்டும் பயன்படுத்துவது அதிகரிக்கிறது.

ஒவ்வொரு விமானத்திற்கும் ஆயுட்காலம் என்பது உண்டு; மிக்-21 ரக விமானத்தின் ஆயுட்காலம் 20 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டதாக, சிங் தெரிவித்தார். அவ்வப்போது இதை மேம்படுத்தி தொடர்ந்து பயன்படுத்தி வரும் இந்தியா, 2022ஆம் ஆண்டு முதல் மிக்-21 போர் விமானத்துடன், மிக்-23 மற்றும் மிக்-27 ரக விமானங்களையும் வெளியேற்றும்.

ஆனால் அது விரைவில் போதுமானதாக இருக்காது.

மிக் ரக விமானங்கள், 1960 மற்றும்1970களின் தொழில் நுட்பங்களை கொண்டவை என, ஓய்வுபெற்ற விமானப்படை மேற்கு பகுதி முன்னாள் தலைவர் ஏர் மார்ஷல் பதம்ஜித் சிங் அலுவாலியா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "[நாம்] இப்போது 2020ஆம் ஆண்டை நெருங்கிவிட்டோம்; இந்திய விமானப்படையின் தனிச்சிறப்பு வாய்ந்ததாக, இன்றைய தேதி வரை அது பயன்படுத்தப்படுகிறது. இந்த விமானங்கள் எப்-16 ரக விமானங்களுடன் ஒப்பிடப்படவில்லை" என்றார் அவர்.

விபத்துகளின் வரலாறு

கடந்த 2012 ஏப்ரல் முதல், 2016 மார்ச் வரை இந்திய விமானப்படை விமானங்கள் 28 முறை விபத்துக்குள்ளாகி இருக்கின்றன. இதில் நான்கிற்கும் (எட்டு) மேல் மிக்-21 ரகத்திய தொடர்புடையவை; ஆறு மேம்படுத்தப்பட்ட மிக்-21 பைசன் ரக விமானங்கள் என்று 2016 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்தது.

MIG-21 Crashes & Indian Air Force Personnel Killed, 2012-13 To 2015-16
Year Type ofAircraft IAF Personnel killed
2012-13 MiG-21 BISON 0
2013-14 2 MiG-21 BISON, MiG-21 T-69 1
2014-15 2 MiG-21 BISON, 1 MiG-21 T-75 1
2015-16 (upto 08.03.2016) MiG-21 BISON 0
Total 6 MiG-21 BISON, 1 MiG-21 T-69, 1 MiG-21 T-75 2*

Source: Lok Sabha
*Both killed in MiG BISON aircraft

கடந்த 1971 முதல் 2012 ஏப்ரல் வரை 482 மிக் ரக விமானங்கள் விபத்துக்கு உள்ளாகின; இதில் 171 விமானிகள், 39 பொதுமக்கள், எட்டு சேவையாளர் மற்றும் ஒரு விமானி கொல்லப்பட்டதாக, 2012 மே மாதம் நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்தது.

பொதுவாக, மிக்-21 ரக விமானங்களே அதிகபட்ச விபத்துக்களை சந்தித்ததாக, ஏர் மார்ஷல் அலுவாலியா கூறினார். "இவ்விமானங்கள் பறப்பதற்கு கடினமானவை - அதனால் அதிக விபத்து உண்டாகிறது" என்றார் அவர்.

கடந்த 1993 முதல் 2013 ஆண்டு வரை 198 மிக்-21 போர் விமானங்கள், குறிப்பாக விமானிகளின் பறக்கும் சவப்பெட்டி எனப்படும் இவை - பல்வேறு விபத்துகளில் 151 விமானிகளை பலி கொண்டுள்ளதாக, ராணுவ விமான ஆர்வலர்களின் இணையதளம் பாரத் ரக்ஷக், அரசு புள்ளி விவரங்களை மேற்கோள்காட்டி தெரிவிக்கிறது. இந்த விவரங்களை இந்தியா ஸ்பெண்டால் சரிபார்க்க இயலவில்லை.

மிக்- 21 vs எப்.16

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய விமானப்படை (IAF), ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட மிக்-21 ரக போர் விமானங்களை பயன்படுத்தி வருகிறது; பறக்கும் போது இதன் செயல்பாடு, மிக பழமையானது. “நாம் இன்னமும் பழைய ரக போர் விமானங்களையே கொண்டிருக்கிறோம்” என்று, மேற்கு பிராந்திய விமான கமாண்டர் ஏர் மார்ஷல் வி.கே.ஜிம்மி பாட்டியா (ஓய்வு), இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "பத்து ஆண்டுகளுக்கு மேலாக நாம் புதிய மேம்பட்ட மற்றும் புதிய திறன்களை உள்ளடக்கிய ரேடர்களை உள்ளடக்கிய பைசன் தரநிலைகளை மேம்படுத்துகிறோம்" என்றார் அவர்.

மிக் போர் விமானங்கள் “தரம் அடிப்படையில் வழங்கப்பட்டது - நேரத்திற்கேற்ற தொழில்நுட்பம் உள்ள இந்த சூப்பர்சோனிக் போர் விமானங்கள் -கடந்த நாற்பது ஆண்டுகளில் ஏராளமானவை நமக்கு சேவை புரிந்துள்ளது” என்று, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். இருப்பினும், ஒவ்வொரு விமானமும் அதன் ஆயுளை கொண்டிருக்கும்; அவ்வகையில் 20 ஆண்டுகளுக்கு முன் மிக்-21 போர் விமானங்களின் ஆயுள் முடிந்தது. வரும் 2022ஆம் ஆண்டுக்குள் ஆயுள் முடிந்திருக்கும் என்பதால் மிக்-21 போர் விமானத்துடன், மிக்-23, மிக்-27 ரக விமானங்கள் வெளியேற்றப்படும்.

பாகிஸ்தான் விமானப்படை பயன்படுத்தும் எப் -16 ரக போர் விமானங்கள், அமெரிக்காவின் தயாரிப்புகள், “அழகிய மேம்பட்ட ரேடர்களை கொண்டவை; பிற திறன்களை கொண்டுள்ள இவை, மிக்-21 விமானங்களை விட சிறந்தவை” என்று ஏர்மார்ஷல் பாட்டியா தெரிவித்தார். பாகிஸ்தான், 40 ஆண்டுக்கும் குறைவாகவே எப்-16 ரக விமானங்களை பயன்படுத்தி வருகிறது; 10 ஆண்டுகளுக்கு முன் பிளாக்-50 ரக விமான தொகுதிகளை அது பெற்றது.

எனினும் எப் -16 ரக விமானங்களை மிக்-21 ரக விமானங்களால் எதிர்க்க முடியும் என்று ஏர்மார்ஷல் பாட்டியா தெரிவித்தார். “மிக்-21 ரக போர் விமானங்கள் ரஷ்ய ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்க வல்லவை; அந்த வகையில் பார்த்தால் எப்.16ஐ விட இது தரம் தாழ்ந்தது என்று கூற முடியாது. அவற்றை இன்னமும் ஒப்பிடலாம். ஆனால் உண்மையில் அதன் முடிவு நெருங்கி கொண்டிருக்கிறது - அவற்றிற்கு மிகச்சிறிய எஞ்சிய வாழ்வே இருக்கிறது” என்று அவர் கூறினார்.

கடந்த 1983ஆம் ஆண்டில், மீண்டும் புதிய தொழில்நுட்பம் கொண்ட விமானங்கள் தயாரித்து உருவாக்கப்பட வேண்டும் என்று அரசு ஒப்புக் கொண்டது என்ற சிங், "ஆனால் அந்த நேரத்தில் அவற்றை வாங்க முடியாததால், நாம் இலகு ரக எதிர்ப்பு விமானம் (LCA) தேஜஸை உருவாக்கியுள்ளோம். உண்மையில், 35 ஆண்டுகளுக்கு பிறகு அத்திட்டத்தை இன்னும் எடுக்க வேண்டும்" என்றார்.

இன்றுள்ள போர் ஜெட் விமானங்களை எதிர்த்து சமாளிக்கக்கூடிய வகையில் மேம்பட்ட வான் இயற்பியல் மற்றும் ரேடார், அதிக ஆயுதங்களிய சுமைக்கும் திறன், தொழில்நுட்பம், மின்னணு போர் திறன், துல்லியமான ஆயுதங்கள் என நவீன தொழில்நுட்பத்துடன் போர் விமானங்கள் தேவை; அத்துடன் மிக்-21ல் இல்லாத அம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்று, பத்மஜித் சிங் அலுவாலியா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். “ஒரு போர் விமானமாக, மிக்-21 ரகம், வழக்கமான சோதனைக்குட்பட்ட வழக்கமான விமானம் தான்.அது துல்லிய தாக்குதலோ, ஆயுதங்களோ , அல்லது நம்பகமான கருவிகளோ இல்லை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மிக்-21 பைசன் ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு, விங்க் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட பிறகு, இந்திய விமானப்படை வட்டாரங்கள் மிக்-21 ரக விமான பயன்பாட்டுக்கு ஆதரவாகவும், அதன் நடவடிக்கைகள், நேரம், அச்சுறுத்தல் பொறுத்து சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது என்றதாக, 2019, பிப்.27ல் தி பிரிண்ட் தெரிவித்திருந்தது.

தேவை, புதிய விமானம்

முதல்முறையாக தேஜஸ் போர் விமானம், 2016 ஜூலையில் இந்திய விமானப்படையில் இல் இணைக்கப்பட்டது. கடந்த 2019 பிப்ரவரி 20 ஆம் தேதி, அதாவது புல்வாமா தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு பின், இந்திய விமானப்படை தேஜஸ் எம்.கே-1 இறுதி இயக்கத்திற்கான அனுமதியை அல்லது 'சேவையை விடுவித்தல்' ஆவணங்களை பெற்றது.

“கடந்த 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது நாங்கள் மிராஜ்-2000 ரக போர் விமானங்களில் நேர்த்தியாக வேலை பார்த்தோம் "என்றார் சிங்.மிக் ரக விமானங்களுக்கு பதிலாக பல்திறன்களை கொண்டு இவ்விமானங்களை வாங்க விமானப்படையின் மூன்று தலைவர்கள் கடும் முயற்சி மேற்கொண்டனர்.

இதற்கு பதிலாக, 2017ல் காங்கிரஸ் தலைமையிலான அரசு, நடுத்தர பல்நோக்கு போர் விமானங்களை (MRCA) வாங்க முயற்சி எடுத்தது. இதற்காக ஆறு போர் விமான விற்பனை நிறுவனங்கள் -- ரஷ்ய விமானக் கழகம், ஸ்வீடன் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஸாப், பிரான்சின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் எஸ்.ஏ., அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் கார்ப்பரேஷன் அண்ட் போயிங் மற்றும் பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தலிய நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டன. முதல் 18 விமானங்கள் 'பறக்கும் நிலையில்' விற்கப்பட்டன; மீதமுள்ள 108 பரிமாற்ற-தொழில்நுட்ப உடன்படிக்கைகளின் கீழ் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கடந்த 2018 ஏப்ரலில் பிரதமர் நரேந்திர மோடி, எம்.ஆர்.சி.ஏ. டெண்டர் பெறுவதற்கு மூன்று ஆண்டு பேச்சு நடந்த நிலையில் பிரெஞ்சு அரசுடன் நேரடி ஒப்பந்தம் செய்து, 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதாக அறிவித்தார், பின்னர் 2018 ஜூலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நாடாளுமன்றத்தில், 126 எம்.ஆர்.சி.ஏ. போர் விமானங்களுக்கு பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை திரும்பப் பெறுவதாக செய்வதாக கூறினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது; தற்போது எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ், இதில் ஆளும் பாரதிய ஜனதா அரசு வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியது; மேலும் இந்த ஒப்பந்தம் ‘மேக் இன் இந்தியா” திட்டத்தின் பெரிய தோல்வி என்று குற்றம்சாட்டின.

"அதிநவீன உயர்ரக ரபேல் ஜெட் விமானங்கள், மிக்-21 ரகங்களை மாற்றுவதற்கு நேர்மையானதாக இல்லை" என்று இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்த சிங் "முன்வரிசைக்கு சிறிய இலகுவான மற்றும் எளிதான போர் ஜெட் விமானங்களே தேவை" என்றார்.

இந்திய விமானப்படைக்கு கூடுதல் ஜெட் விமானங்கள் தேவை

இந்திய விமானப்படையிடம் 42 ஜெட் போர் விமானங்களுக்கு அனுமதி உள்ள நிலையில் தற்போது 31 மட்டுமே உள்ளன. இந்த இடைவெளிக்கு, புதிய போர் விமானங்களை வாங்குவதில் உள்ள மந்தநிலையே காரணம். தற்போதைய விமானங்கள், அவற்றின் தொழில்நுட்பங்கள், ஆயுள் விரைவில் முடிந்து ஓய்வு பெறவுள்ளதாக, 2017 நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த பத்தாண்டுகளில் மிக் 21, 27 மற்றும் 29 ரக போர் விமானங்கள் 14, இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெறவுள்ளன; 2027ல் 19 போர் விமானங்களும், 2032ல் 16 போர் விமானங்களும் இருக்கும். சுகோய்-20, தேஜஸ் இலகுரக போர் விமானம் மற்றும் ரபேல் ஜெட் விமானங்கள் சேர்க்கப்படும் என்று, நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

"அச்சுறுத்தல்களையும் சவால்களையும் நாம் எதிர்கொண்டு சமாளிக்க ஒரு குறிப்பிடத்தக்க வலிமை நமக்கு வேண்டும். தற்போது நாம் கடும் சிதைவில் உள்ளோம்” ஏர் மார்ஷல் பாட்டியா தெரிவித்தார். "நமது தேவைகளை பூர்த்தி செய்ய 400 புதிய போர் விமானங்கள் தேவை. நாமோ ஒப்பந்தங்களுக்கு பூட்டு போடுகிறோம்; அதிகமான போர் விமானங்களை சேர்க்க வேண்டும்ராளிகளை கடற்படையினுள் ஈடுபடுத்த வேண்டும்; அதற்கான ர்மானங்களை எடுக்க வேண்டும், "என்று அவர் மேலும் கூறினார்.

(சல்தானா, இந்தியா ஸ்பெண்ட் துணை ஆசிரியர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.