புதுடெல்லி: ஏழு மாநிலங்களில் கணக்கெடுக்கப்பட்ட பெண்களில், கால்வாசிக்கும் அதிகமானோர் தாங்கள் குடும்ப வன்முறையை அனுபவித்ததாக, சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (NFHS) முதல் கட்டத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்பது மாநிலங்களில், குழந்தைகளாக இருந்தபோது பாலியல் வன்முறையை எதிர்கொண்டந்ததாகக் கூறும் பெண்களின் எண்ணிக்கையில் அதிகரித்த நிலையில், எட்டு மாநிலங்கள் தங்கள் பாலியல் விகிதங்களில் சரிவைக் கண்டன. ஓரளவு அதிகளவு பெண்கள், தாங்கள் கடந்தாண்டில் பணிபுரிந்ததாகவும், அதற்கு ரொக்கமாக பணம் பெற்றதாகவும் கூறினர், ஆனால் எண்ணிக்கை தவறாக இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு என்பது தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் 400,000 க்கும் மேற்பட்ட வீடுகளை உள்ளடக்கிய வீட்டு கணக்கெடுப்பாகும். இது திருமணம், கருவுறுதல், தடுப்பூசிகள் மற்றும் சுகாதார நிலை போன்றவற்றைக் கேட்கிறது. கணக்கெடுப்பின் இந்த பதிப்பானது, பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெண்களுக்கு ஏற்றத்தாழ்வான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்கூட்டிய நாளில் மேற்கொள்ளப்பட்டது.

கணக்கெடுப்பின் முதல் கட்டத்தின் தரவுகளால் சுட்டிக்காட்டப்பட்ட ஆரம்ப போக்குகள், அடுத்தடுத்த கட்டங்களுக்குள்ளும் வைத்திருந்தால், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு தொடர்பாக சமீபத்திய காலங்களில் செய்யப்பட்ட பல ஆதாயங்கள், டிசம்பர் 13 அன்று நாங்கள் தெரிவித்தபடி, தலைகீழாக மாறக்கூடும்.

கடந்த 12 மாதங்களில் அதிகமான பெண்கள் பணிபுரிந்ததாக தகவல்

ஊதியத்திற்கு வேலை செய்ததாகக்கூறும் பெண்களின் சதவீதத்தில் ஓரளவு அதிகரிப்பு இருப்பதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு தெரிவிக்கையில், இது 2018 பொருளாதார கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, இந்தியாவின் ஏற்கனவே குறைந்த பெண் தொழிலாளர் பங்களிப்பு (FLFP) 24% மீது, தொற்றுநோய் தாக்கத்தை ஏற்படுத்தாது.

நவம்பர் 2020 க்கான இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (CMIE) வெளியிட்ட வேலைவாய்ப்பு தகவல்கள் சுட்டிக்காட்டுவது போல், ஒரு வருடத்திற்கு முன்பு 13% குறைவான பெண்கள் பணிபுரிந்தனர் அல்லது வேலை தேடுகிறார்கள் என்பதை, டிசம்பர் 15 இந்தியாஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. 2011 முதல், இந்தியாவில் 2.5 கோடிக்கும் அதிகமான பெண்கள் தொழிலாளர் வரைபடத்தில் இருந்து சரிவை சந்தித்த நிலையில், சி.எம்.ஐ.இ தகவலின்படி, நவம்பர் வரை, கூடுதலாக 67 லட்சம் பெண்கள் தொற்றுநோயின் தொடக்க காலத்தில் இருந்து வேலையில்லாமல் உள்ளனர்.

எவ்வாறாயினும், 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 17, 2015-16ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019-20 ஆம் ஆண்டில் பெண்களுக்கான ஊதிய வேலைகளில் அதிகரிப்பு காட்டுவதாக, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

கடந்த 12 மாதங்களில், தாங்கள் பணிபுரிந்ததாகவும், பணமாக வழங்கப்பட்டதாகவும் கூறிய பெண்களில் தெலுங்கானாவில் (2015-16ல் 44.7% என்பதுடன் ஒப்பிடும் போது, 45.1% என அதிகரிப்பு) அதிக சதவீதம் உள்ளது, அதைத் தொடர்ந்து மணிப்பூர் (40.9% இல் இருந்து 42.1%) மற்றும் ஆந்திரா (42.1%, கடந்த முறையை போலவே) உள்ளது.


இருப்பினும், "தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு பதிவுசெய்த வேலைவாய்ப்பில் கிடைக்கும் லாபங்கள், குறிப்பாக கடைசி தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு மற்றும் இதற்கிடையில் ஐந்தாண்டு கால தாமதத்தை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது, கணக்கிட முடியாத அளவிற்கு மிகக்குறைவு, " என்று பொருளாதார நிபுணர் மிதாலி நிகோர் கூறினார்.

பீகாரில், 12.6% பெண்கள் மட்டுமே தங்களுக்கு வேலைக்கு ஊதியம் வழங்கப்பட்டதாகக் கூறினர், அஸ்ஸாமில் இது 19% மற்றும் இமாச்சல பிரதேசத்தில் 20.2% ஆகும்.

சி.எம்.ஐ.இ.யின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மகேஷ் வியாஸ், தொழிலாளர் பங்களிப்புக்கான குறிகாட்டியாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் 'வேலை' என்ற வரையறை குறித்து கேள்வி எழுப்பினார். "ரொக்க பட்டுவாடாமை மட்டுமே பார்ப்பது மிகவும் வரையறைக்குட்படுத்தக்கூடியது மற்றும் பெண் தொழிலாளர் பங்களிப்பை குறைத்து மதிப்பிடும்" என்று அவர் கூறினார்.

ஆனால் இந்தியாவில் பெண்கள் வேலைவாய்ப்புக்கான பரந்த போக்குகளுக்கு தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு பயனுள்ளதாக இருக்கும். தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள், வட மாநிலங்களை விட மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளன, இது பெண்களின் வேலைவாய்ப்பு தொடர்பான அணுகுமுறைகளை பிரதிபலிக்கிறது என்று நிகோர் கூறினார். "தென் மாநிலங்களில் பெண்களின் கல்வியில் குறைந்தளவே நடமாட கட்டுப்பாடு மற்றும் அதிக மதிப்பு உள்ளது" என்று அவர் கூறினார்.

இதேபோல் வடகிழக்கில், மணிப்பூர், மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகியன தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் யோசனையை அதிகம் வரவேற்கின்றன என்று அவர் கூறினார். "ஒட்டுமொத்தமாக, அடிவரிசை ஒன்றுதான். பெண்கள் சமூக அணுகுமுறைகளின் காரணமாக தொழிலாளர் வரைபடத்தில் சரிவை சந்திக்கிறார்கள்" என்றார்.

கர்நாடகாவில், ஒவ்வொரு இரண்டாவது பெண்ணும் குடும்ப வன்முறையை எதிர்கொள்கிறார்

கோவிட்-19 தொற்றுநோய், தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் மற்றொரு முக்கியமான பாலின தரவு புள்ளியை தேவையற்றதாக ஆக்கியிருக்கலாம்: பாலின அடிப்படையிலான வன்முறை. செயற்பாட்டாளர்கள் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் (NCW) கூட தொற்றுநோய்களின் போது - குறிப்பாக ஊரடங்கு காலத்தில் வீட்டு வன்முறைகளில் அதிவேகமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.

தொற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பே, வாழ்க்கைத் துணையிடம் இருந்து உடல் ரீதியான அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொண்டதாகக் கூறப்படும் திருமணமான பெண்களின் சதவீதம், கர்நாடகாவில் இரு மடங்காக அதாவது - ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 20.6% என்றிருந்தது, 2019-20ம் ஆண்டில் 44.4% ஆக அதிகரித்துள்ளதாக, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு தரவு காட்டுகிறது. மற்ற 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மோசமான வன்முறைகளில் சரிவை பதிவு செய்துள்ளன, 22 மாநிலங்களில் கணக்கெடுக்கப்பட்ட பெண்களில் கால்வாசிக்கும் மேற்பட்டோர் ஏழு இடங்களில் இத்தகைய வன்முறையை எதிர்கொண்டுள்ளனர்.

பீகாரில், 2015-16 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 43.7% ஆகக் குறைந்துவிட்டாலும், 40% பெண்கள் தொடர்ந்து வன்முறைக்கு ஆளாகியுள்ளனர்.


ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 10% க்கும் குறைவான பெண்கள் இத்தகைய வன்முறையை எதிர்கொள்கின்றனர்.

"தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு என்பது அரசின் சொந்த தரவு மற்றும் புள்ளிவிவரங்கள் மிகவும் தொற்றுநோய்க்கு முந்தையதாக இருந்தால், அது தொற்றுநோய்க்கு பிந்தையது என்னவாக இருக்கும் என்று யோசிக்க வைக்கிறது," என்று, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக செயல்படும் மகளிர் உரிமைகள் அமைப்பான பிரேக்ரட் இந்தியாவின் சோஹினி பட்டாச்சார்யா கூறினார்.

சிறுமியராக இருந்தபோது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகக் கூறிய இளம் பெண்களின் எண்ணிக்கையும், ஒன்பது மாநிலங்களில் அதிகரித்துள்ளது. ஆனால் இது, பாலியல் துஷ்பிரயோகங்களைப் பற்றி பேசுவதற்கும் தெரிவிப்பதற்கும் பெண்கள் அதிக விருப்பம் காட்டுவதாக பட்டாச்சார்யா கூறினார். "முன்பு இருந்ததை விட மிகக் குறைவான பழிச்சொல் உள்ளது," என்று அவர் கூறினார்.


17 மாநிலங்களில் மோசமான பாலின விகிதமுள்ள குஜராத்

எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், பாலின விகிதத்தில் - ஒவ்வொரு 1,000 ஆண்களுக்கும் பெண்களின் எண்ணிக்கையில் சரிவைக் கண்டதாக, தரவு காட்டுகிறது. குஜராத் 1,000 ஆண்களுக்கு 965 பெண்கள் என்ற மிகக் குறைந்த விகிதத்தைப் பதிவு செய்த மாநிலமாகும்.


தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2019-20 இன் முதல் கட்டத்திற்காக கணக்கெடுக்கப்பட்ட 17 மாநிலங்களில், கோவா கடந்த ஐந்து ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளுக்கு, மிக மோசமான பாலின விகிதத்தை பதிவு செய்துள்ளது - ஒவ்வொரு 1,000 ஆண்களுக்கும் வெறும் 838 பெண்கள் - 2015-16ம் ஆண்டில் இருந்த 966 என்பதைவிட சரிவாகும்.

பீகாரில், பிறக்கும் போது பாலின விகிதம் 2015-16ம் ஆண்டில் 934 என்ரு இருந்தது, 908 ஆக குறைந்தது; மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கான பாலின விகிதம் 1,062இல் இருந்து 1,090 ஆக இருந்தது.

கடந்த 2015-16 ஆம் ஆண்டில் ஒவ்வொரு 1,000 சிறுவர்களுக்கும் 1,047 சிறுமிகள் பிறக்கும் போது நேர்மறையான பாலின விகிதத்தைக் கொண்டிருப்பதாக பாராட்டப்பட்ட கேரளா, 951 என சரிவுடன் பின்னடைவை சந்தித்துள்ளது.

கடந்த 2015-16 ஆம் ஆண்டில், 1,009 என்ற பிறக்கும் போது நேர்மறை பாலின விகிதத்தைக் கொண்ட மற்றொரு மாநிலமான மேகாலயா, இப்போது 1,000 சிறுவர்களுக்கு 989 சிறுமியர் என்ற விகிதத்தை கொண்டுள்ளது. வடகிழக்கில், நாகாலாந்திலும் பிறக்கும் போது பாலின விகிதம் 2015-16ம் ஆண்டில் 953 ஆக இருந்து 2019-20ம் ஆண்டில் 945 ஆக குறைந்துள்ளது.


மகாராஷ்டிராவில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் பாலின விகிதம், இதே காலகட்டத்தில் 924 முதல் 913 வரை சரிந்தது.

நாட்டின் மிக மோசமான பாலின விகிதத்தை பதிவுசெய்த பஞ்சாப் (2015-16 தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, ஐந்து வயதுக்குட்பட்ட பிரிவில் பாலின விகிதம் 860) மற்றும் ஹரியானா (836) போன்ற மாநிலங்களுக்கான தரவு, 2015 ஜனவரியில் பேட்டி பச்சாவ் பேட்டி பதாவோ என்ற முதன்மை திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஜனவரியில் தொடங்கப்பட்ட இடத்தில், தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2019-20 இன் முதல் கட்ட தரவு கிடைக்கவில்லை.

இரண்டு அளவுருக்கள் தனித்துவமான, வியத்தகு முன்னேற்றங்களைக் கண்டன. முதலாவது பெண்களால் நேரடியாக இயக்கப்படும் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை. பீகார், மணிப்பூர் போன்ற மாநிலங்கள் முறையே 26.4% முதல் 76.7%, 34.8% முதல் 74% வரை அதிகரித்துள்ளன.

இரண்டாவது, 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாதவிடாய் காலத்தில் சுகாதார முறைகளின் இளம் பெண்கள் மத்தியில் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மிசோரமில் மட்டும் இந்த எண்ணிக்கை 93.4% முதல் 89.8% வரை குறைந்துவிட்டன. 90% க்கும் அதிகமான பெண்கள் மாதவிடாயின் சுகாதாரமான முறைகளைப் பயன்படுத்தும் மாநிலங்களில் கோவா (96.8%), கேரளா (93%), தெலுங்கானா (92.1%) மற்றும் இமாச்சலப் பிரதேசம் (91.5%) ஆகியன அடங்கும்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.