பெண்களை பாதிக்கும் மொபைல்போன் பயன்பாட்டில் உள்ள பாலின இடைவெளி
மும்பை: இந்தியாவின் மொபைல்போன் உரிமையாளர்களில் ஆண்-பெண் பாலின வேறுபாடு 33% புள்ளிகளாக இருப்பது, அதில் உள்ள சமத்துவமின்மையால் பெண்களின் வருவாய், நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் மற்றும் தகவல் அணுகுதல் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவதாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஜான் எப். கென்னடி கல்வி நிலைய புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
வலுவான சமூக நெறிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் தனிப்பட்ட நம்பிக்கைகள் ஆகியவை ஏற்கனவே "பொருளாதார சவால்களை" எதிர்கொள்ளும் பெண்களுக்கு இன்னும் தடைகளை உருவாக்குவதாக, கென்னடி பள்ளி ஆராய்ச்சி மையத்தின் கொள்கைக்கான வடிவமைப்பு (EPoD) புதிய ஆய்வு கூறுகிறது.
இந்தியாவில் 71% ஆண்கள் மொபைல்போன் வைத்திருக்கும் நிலையில், இதில் பெண்களின் எண்ணிக்கை 38% என்ற அளவில் உள்ளது. இந்த எண்ணிக்கை பல்வேறு சமூக- பொருளாதார குழுக்கள், மாநிலங்கள் வாரியாக வேறுபடுகிறது. மொபைல்போன் வைத்திருப்பதில் காணப்படும் பாலின வேறுபாடு "இந்திய சமுதாயம் முழுவதும் உள்ளது"; இதில் ஏழை, வறிய, குறைவாக படித்தவர்கள் என்ற குழுக்களோடு மட்டும் நின்றுவிடவில்லை.
உலகின் வளர்ந்த நாடுகளில் மொபைல்போன் வைத்திருப்போரின் பாலின இடைவெளி அதிகம் உள்ள நிலையில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற தெற்காசிய நாடுகளில் பாலின சமன்நிலை வெளிப்படையாக தொடர்கிறது.
"உதாரணமாக, பயன்பாடு மற்றும் உரிமையைப் பார்க்கும் போது புதிராக உள்ளது. உதாரணமாக சஹாரா ஆப்பிரிக்காவில் இருப்பதைவிட மொபைல்போன்கள் இங்கு மிக மலிவாக உள்ளது" என்று ஹாவார்ட் கென்னடி பள்ளி சர்வதேச அரசியல் பொருளாதார ரபிக் ஹரிரி பேராசிரியர் ரோகிணி பாண்டே இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.
"உழைப்பு சக்தி மற்றும் பெரும் பங்களிப்புக்கு அதிகமான பெண்களை நம்மால் இழுக்க முடிந்திருந்தால், வளங்களை அதிக அளவில் அணுகுவதற்கான வாய்ப்பாக இதை நாம் பார்க்க முடியும்”.
சந்தை விலை நிலவரம், வேலைவாய்ப்பு, சுகாதார அறிவுறுத்தல்கள், நிதிச்சேவைகளை ஒருங்கிணைக்கப்படாத சமூகங்கள் மத்தியில் மொபைல்போன் வாயிலாக வழங்குவதை மேம்படுத்த வேண்டும்.
நிலையான இடைவெளி
மொபைல்போன் உரிமை விவகாரத்தில் பெண்கள் தொடர்ந்து பின்தங்கியே உள்ளனர். பல்வேறு வகையை சேர்ந்தவர்களாக இருப்பினும் இதில், குறைந்தது 10% புள்ளிகள் இடைவெளி உள்ளது.
சமூகத்தில் உள்ள துணை மக்கள் குழுக்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், பெண்களின் உரிமைகளில் பெரும் தாக்கத்தை வழங்கும் சமூக - மக்கள்தொகை காரணிகளை உயர்த்திக் காட்டுகின்றன.
உதாரணத்துக்கு, நகர்ப்புற பகுதிகளில் விட கிராமப்புற பகுதிகளில் மொபைல்போன் உரிமையாளர்களின் எண்ணிக்கையில் அதிக இடைவெளி காணப்படுகிறது.
நகர்ப்புறத்தில் உயர்கல்வி படித்த ஆண்- பெண்கள் மத்தியில் இந்த பாலின இடைவெளி 13% புள்ளிகள் என்று குறைந்த அளவிலும், கிராமப்புற பகுதிகளில் இது 23 % புள்ளிகள் என இரட்டிப்பாகவும் காணப்படுகிறது.
எந்தவொரு முறையான கல்வியும் பயிலாதவர்களிடம் இந்த போக்கில் ஒரு விதிவிலக்கு உள்ளது. கிராமப்புறங்களில் மொபைல்போன் உரிமையாளர் இடைவெளியானது 30% ஆகவும், நகரப்பகுதியில் இது 39% ஆகவும் உள்ளது.
Source: A Tough Call: Understanding barriers to and impacts of women’s mobile phone adoption in India
கல்வி அளவில் உள்ள வேறுபாடுகள், மொபைல்போன் உரிமைக்கான சாத்தியக்கூறுகளில் கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
ஆரம்ப மற்றும் மேல்நிலை அளவிலான கல்வி பயின்றவர்களிடையே நிலவும் பாலின வேறுபாடு இடைவெளி, முறையே 33 மற்றும் 29 % புள்ளிகளாக உள்ளன. இதில் உயர் கல்வி பயின்றவர்கள் மத்தியிலான இடைவெளி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து 16% புள்ளிகளாக உள்ளது.
வறுமைக்கோட்டுக்கு மேலே இருப்பவர்களுடன் ஒப்பிடும் போது வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்களிடம் பாலின வேறுபாடு அதிகம் உள்ளது (அதாவது, 34% மற்றும் 29% புள்ளிகள்).
இருப்பினும், மாநில வாரியான புள்ளி விவரங்களை பார்க்கும் போது அதிகரித்த செல்வ செழிப்பிற்கும், குறைவான பாலின வேறுபாடுக்கும் இடையே ஒரு மெல்லிய தொடர்பு இருப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது.
பொருளாதார ரீதியாக ஓரளவு வளர்ந்துள்ள மாநிலங்களில் மொபைல்போன் வைத்திருக்கும் ஆண்களிடையே, செல்வச்செழிப்பானது மொபைல்போன் வைத்திருப்பதை எளிதாக்குவதை காணலாம - ஆனால், தேசிய அளவில் தனிநபர் வருவாய் அதிகம் உள்ள சில மாநிலங்களில் கூட பாலின இடைவெளி அதிகரித்து காணப்படுகிறது.
Source: A Tough Call: Understanding barriers to and impacts of women’s mobile phone adoption in India
உதாரணத்துக்கு, முறையே ரூ.132,880 மற்றும் ரூ.114,561 என்று, அதிக தனிநபர் வருவாய் சமமாக கொண்டுள்ள கர்நாடகா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் (தேசிய தனிநபர் வருவாய் ரூ. 103,219 உடன் ஒப்பிடும் போது) பாலின இடைவெளி முறையே 37 மற்றும் 39 % ஆகும். இதேபோல் தனிநபர் வருவாய் அதிகமுள்ள மாநிலங்களான குஜராத் (28%) மற்றும் மகாராஷ்டிரா (29%) என்ற நிலை காணப்படுகிறது.
மிக குறைந்த பாலின இடைவெளியை, (19% புள்ளிகள் கூட்டாக) வடகிழக்கு மாநிலங்களில் கொண்டுள்ளன. அங்கு, ஆண் மற்றும் பெண் மொபைல்போன் உரிமையாளர்கள் இடையே வேறுபாடு டெல்லி மற்றும் கேரளாவுடன் (18% புள்ளிகள்) ஒப்பிடும் போது சற்று அதிகம்.
வடகிழக்கு மாநிலங்களும், கேரளாவும் பாரம்பரியம், மரபுசார்ந்த சமுதாயங்களை கொண்டுள்ளன - அங்கு பெண் வம்சாவளியினர் சொத்து / உரிமைகளை சுதந்தரமாக அனுபவித்துக் கொள்ளலாம். குறைந்த பாலின இடைவெளி கொண்டுள்ள இங்கு, தொழில்நுட்பத்தை அணுகுவதை அனுமதிக்கும் வகையில், சமூக பொருளாதார நெறிமுறைகளை விட சமூக மேம்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சிறப்பித்துக் காட்டுகிறது.
பழமைவாத எண்ணங்களில் ஊறிப்போயுள்ள வடமாநிலங்களான ராஜஸ்தான் (45%), ஹரியானா (43%), உத்திரப்பிரதேசம் (40%) ஆகிய மாநிலங்களில் உயர்ந்த பாலின இடைவெளிகள் காணப்படுகின்றன.
மேலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதில் பெரிய வேறுபாடுகள் உள்ளன, பயன்படுத்துவதில் சிக்கலான தன்மை மற்றும் மொபைல்போன் வாங்கவோ அல்லது சொந்தமாக்கவோ வைத்திருப்பதில் இது வெளிப்படுகிறது.
பெண்களில் 47% பேர் மொபைல்போன் உரிமையாளர்களாக இல்லாமல், அதை இரவலாக வாங்கி பயன்படுத்துபவர்களாக உள்ளனர். இதை ஆண்களோடு ஒப்பிடும் போது 16% ஆகும் என்று, இண்டர்மீடியா பைனான்ஷியல் இன்க்லூஷன் இன்சைட்ஸ் (FII) அமைப்பின் 2015- 2016 புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு மொபைல்போனை சொந்தமாக வைத்திருப்பதை காட்டிலும் அதை இரவலாக பயன்படுத்துவது என்பது, சுதந்திரத்திலும் நடைமுறையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அதேபோல் மொபைல்போனில் அழைப்பை ஏற்பது, அல்லது அழைப்பது போன்றவற்றை பெண்கள் செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. இதில், 15-20% பாலின இடைவெளி காணப்படுகிறது. குறுஞ்செய்தி அனுப்புவதில் ஆண்- பெண் இடைவெளி 51% ஆகவும், சமூகவலைதள செயல்பாட்டில், அதிக அளவாக 70% என்றும் இடைவெளி நிலவுகிறது.
Source: A Tough Call: Understanding barriers to and impacts of women’s mobile phone adoption in India
முதன்மை சமூக விதிமுறைகள்
சமுதாயத்தின் அனைத்து பிரிவு பெண்களின் வாழ்க்கை முறை, மொபைல்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் உள்ள குறைந்த விகிதத்திற்கு, "பாலின இடைவெளிக்கு முக்கிய காரணம்" என எந்த புள்ளி விவரமும் தெரிவிக்கவில்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது.
மாறாக, சமூக நெறிகள் மற்றும் அதிகாரங்கள் அளவு போன்ற காரணிகள், மொபைல்போன் உரிமையாளர்களில் "மிகவும் நியாயமான துணைப் பகுதியினருக்கு" ஏன் இடைவெளியை ஏற்படுத்துகிறது என்பதை விளக்குகின்றன.
வயது 10-ஐ எட்டும் போது 20% பெண்கள் மொபைல்போனை பயன்படுத்துகின்றனர்; இந்த எண்ணிக்கை அதே வயது ஆண்களில் 27% ஆக உள்ளதாக, 2012ல் நடத்தப்பட்ட இந்திய மனிதவள மேம்பாட்டு ஆய்வு (IHDS) புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இளம் பருவத்தினர் பருவத்தை எட்டும் போது, பாலின இடைவெளியில் ஆச்சரியத்தக்க இடைவெளி விரிவடைகிறது. 18 வயதுக்குள் இந்த இடைவெளி, 21 சதவீத புள்ளிகள் வரை உயர்த்துள்ளது. மீதமுள்ளது பெண்ணின் வாழ்நாள் இடத்தில் இருக்கிறது.
Source: A Tough Call: Understanding barriers to and impacts of women’s mobile phone adoption in India
நன்மதிப்புக்கு பாதிப்பு, வீட்டு பராமரிப்பு போன்ற கடமைகளில் இருந்து தவறுதல், கீழ்படிய மறுத்தல் மற்றும் ஆணாதிக்க போக்கு போன்றவை மொபைல்போனை பெண்கள் எளிதாக அணுக, அல்லது அனுமதி மறுக்கப்படுவதற்கான காரணங்கள் என ஆய்வு தெரிவிக்கிறது.
மொபைல்போன்களை பயன்படுத்த பெண்களை அனுமதிக்கலாம் என்ற யோசனைக்கு, அதனால் அவர்களின் (குறிப்பாக திருமணமாகாத இளம் பெண்களின் கவுரவம் கெடும் என்ற காரணம் முக்கிய தடையாக உள்ளதாக, ஐந்து மாநிலங்களை சேர்ந்த 65 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்முகத்தில் தெரிய வந்துள்ளது.
சில பகுதிகளில், (மத்திய பிரதேசத்தின் கிராமப்புற பகுதிகள், மகாராஷ்டிராவின் நகர்ப்புற பகுதிகள்) மொபைல்போன் பயன்பாடும், பெண்களின் ஒழுக்கமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாநிலங்களில் (தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம்) மொபைல்போன் பயன்பாட்டால் பெண்களுக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக தொல்லைகள் ஏற்படக்கூடும் என்ற கவலையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மொபைல்போன் உரிமையாளராவதால் ஏற்படும் கவலைகள், ஆண்களைவிட பெண்கள் மீதே அதிகம் காட்டப்படுகிறது. ஒரு பெண்ணிற்கு முடிக்க வேண்டிய திருமணம் போன்ற - ‘பிரிக்கமுடியாதவாறு’ அவளின் பெருமையோடு - தொடர்பு கொண்டுள்ள காரணி என்பதே, இத்தகைய் ஆணாதிக்க போக்கிற்கு காரணம்; இது, ஆண் ஒருவரைவிட பலவீனமாக கருதுகின்றனர்.
மகளின் பாதுகாப்பு கருதும் பெற்றோர், கவுரவத்தை காக்கும் நடவடிக்கையாக திருமணத்திற்கு முன்பு வரை மொபைல்போன் பயன்படுத்த பெண்களுக்கு தடை அல்லது கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். (உதாரணத்துக்கு, சமூக வலைதளங்களில் புகைப்படம் பதிவேற்ற, அல்லது வீட்டுக்கு வெளியே செல்லும் போது மொபைல்போன் கொண்டு செல்ல கட்டுப்பாடு) . இது, மொபைல்போன் வைத்துக் கொள்வதில் திருமணத்துக்கு முன்பான ஆண்- பெண் பாலின வேறுபாடு அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது.
“ஒரு பெண் மொபைல்போனில் பேசினால், எதிர்முனையில் இருப்பவர் ஆணாக இருக்க வேண்டுமென்று தான் பலரும் நினைக்கிறார்கள். தனது பள்ளி பாடம் தொடர்பாக சக மாணவியோடு பேசுவாள் என்று ஏன் யாருமே புரிந்து கொள்வதில்லை” என்று மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் ஒருவர் நம்மிடம் கேள்வி எழுப்பினார்.
திருமணத்திற்கு பின் கடமை முடிந்துவிட்டதாக கருதும் பெற்றோர், மகள் தனது புதிய வீட்டிற்கு சென்ற பின், அவளது மொபைல்போன் உரையாடல்களை நியாயமானதாக கருதுகின்றனர். புதிதாக திருமணமான பெண் தனது பெற்றோர், குடும்பத்தாருடன் பேச, மொபைல்போன் தேவை என்பதால், நடைமுறையில் விரும்பத்தக்க திருமணப் பரிசாக மொபைல்போன் வழங்கப்படுவதை காண முடிகிறது.
ஒரு வீட்டில் பெண்ணை மொபைல்போன் பயன்படுத்த அனுமதிக்க மறுப்பதும், மற்றொரு வீட்டிற்கு செல்லும் போது அதை அவசிமான ஒன்றாக கருதும் போக்கானது, மொபைல்போனை பெண்கள் அணுகுவதில் உள்ள தடைகளை குறைகிறது. மாறாக புகுந்த வீட்டில் இருந்து அவளுக்கு பிறந்த வீட்டுக்கு தரப்படும் அழுத்தமாக அது மாறியுள்ளது.
ஒரு வீட்டை கவனித்துக் கொள்ளும் பொறுப்பில் உள்ள பெண், மொபைல்போனில் அதிக நேரம் செலவிடக்கூடாது; ”சமூகம் ஏற்கத்தக்க” வகையில், பயனுள்ள வகையில் அதை பயன்படுத்த வேண்டும்; அவள் தனது குடும்பம், வீடு சார்ந்த அடிப்படை பொறுப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற போக்கு பலரிடம் இருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதிகாரம் மற்றும் முன்னோக்கி செல்வதற்கான வழி
வருவாய், பெண்களின் அதிகாரம் போன்றவை, பாலின வேறுபாட்டை குறைப்பதற்கான இயக்கிகள், “விளக்கம் தரக்கூடிய சக்தி’. மொபைல்போன் பயன்பாட்டை தீர்மானிக்கக் கூடியவை.
மொபைல்போன் பயன்பாடு, பெண்களின் அதிகாரத்தின் முதலாவது ஆளுமை மற்றும் கடைசி ஆளுமைக்கு இடையே (அதிகரிப்பு வரிசையில் 10 சம பாகங்களாக பிரிக்கப்பட்டது) 10.6% அதிகரித்துள்ளது என, ’அதிகார குறியீடு’ குறித்து பெண்களிடம் ஆய்வு நடத்திய ஐ.ஹெச்.டி.எஸ். புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
பொருளாதார முக்கியத்துவம், முடிவெடுத்தல், இயக்கம் மற்றும் சமூக மனப்பான்மைகள் ஆகிய நான்கு முக்கிய கருப்பொருள்களுடன் தொடர்புடைய கேள்விகளுக்கு கிடைத்த பதில்களின் சராசரியை எடுத்துக் கொண்டு, அதிகாரத்திற்கான அளவுகள் கணக்கிடப்பட்டன.
ஒரு சமூகத்தில் குறிப்பிடப்பட்ட விதிகளை அளவிடுவதற்கு மிக அதிகமான துல்லியமான வழிமுறையானது, அதிகாரமளித்தல் குறியீடாகும், ஏனெனில் பெண்கள் தங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி புகார் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்கள். பெண்கள் தங்கள் சமூகத்தில் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிவிக்க வேண்டும் என்று கருதுவதாக, ஆய்வு தெரிவிக்கிறது.
அதிகாரம் அதிகரித்தல் என்பது, வருவாய் ஆளுமை குழுக்களிடையே கண்டுபிடிக்கப்பட்டதை போலவே காணப்படுகிறது. இது முதம் மற்றும் கடைசி ஆளுமை குழுக்களிடையே 9% புள்ளி வேறுபாட்டை கொண்டிருக்கிறது. இவ்விரு காரணிகளும் மொபைல்போன் உரிமை மீது இதேபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை குறிக்கிறது.
அதிகாரமளித்தல் மற்றும் வருமானம் இரண்டும் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அணுகல் தடைகளை அகற்ற முயற்சிக்கும் போது கொள்கை வகுப்பாளர்கள் அதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று, இந்த ஆய்வு அறிவுறுத்துகிறது.
தடையாக இருக்கக்கூடிய சமூக நெறிமுறைகளை கருத்தில் கொள்ளாமல், ஒரு மொபைல்போன் வாங்கும் மற்றும் இயங்கும் பொருளாதார சவால்களை மட்டுமே குறிவைத்து செயல்படுவது, பயன் அளிப்பதாக இருக்காது.
பொருளாதார மற்றும் ஒழுங்குமுறை அம்சங்களை பிரதிபலிக்கத்தக்க அளவீடு அணுகுமுறைகள் வெற்றிகரமானவை. இந்தியாவில், சமூக கட்டுப்பாடுகளை தளர்த்தும் நோக்கில் தரப்படும் பொருளாதார ஊக்கத்தொகை, பெண்களுக்கான இட ஒதுக்கீடு, குழந்தை திருமணத்தை தடுக்க நிதியுதவி போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.
பெண்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு, சமூக அணுகுமுறையை மாற்றும் என்ற அச்சுறுத்தலை "அதிகரிக்கும் வழிமுறைகள்" என்ற கோணத்தில் மொபைல்போன் பயன்பாட்டை கருதினால், அத்தகைய சமுதாய மனப்பான்மை மாற்றப்பட வேண்டிய ஒன்று என்று ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
”மிக முக்கியமான விஷயம் என்றவென்றால், மொபைல்போன் போன்ற சிறிய தகவல் தொடர்பு சாதனத்துடன் சமூகம் பிணைய வேண்டும்; அந்த சாதனம் தான் பெண்களுக்கு வேலைவாய்ப்பையும், வீட்டை விட்டு வெளியே எங்கிருந்தாலும் பாதுகாப்பையும் தருகிறது” என்று கூறிய பாண்டே, “தகவல்களை தெரிவிக்க, ஆதாரள வளங்களை பரிமாறிக் கொள்ள மொபைல்போன் மிக அத்தியாவசியமானது“ என்றார்.
(சங்கேரா, எழுத்தாளர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் ஆராய்ச்சியாளர்)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.