மும்பை: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை, ஆகஸ்ட் 5, 2019 அன்று, பாராளுமன்ற மக்களவை ரத்து செய்த அதே நாளில், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2019 - கிட்டத்தட்ட எந்த விவாதமும் இல்லாமல் - நிறைவேறி இருக்கிறது.

இந்த மசோதா - 2016 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் முதன்முதலில் வைக்கப்பட்டதில் இருந்து சில திருத்தங்களுக்குப் பிறகு - நிறைவேற்றப்பட்டு இருப்பது பாகுபாட்டைத் தடுப்பதற்கும், திருநங்கைகளின் வாழ்க்கையை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கும் ஆகும்; ஆனால் திருநங்கைகள்/ திருநம்பிகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆர்வலர்கள், இதை "பிற்போக்குத்தனம்" என்கின்றனர். மக்களவையால் இது அங்கீகரிக்கப்பட்ட நாள், "பாலின நீதி கொலை செய்யப்பட்ட நாள்" என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

"திருநங்கைகளின் மசோதா பிற்போக்குத்தனமானது மற்றும் அரை மனதுடன் உள்ளது" என, பாலின உரிமை ஆர்வலர் ஹரிஷ் ஐயர், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

ஆர்வலர்களின் முக்கிய சச்சரவுகள் இங்கே:

  • இந்தியாவின் திருநங்கைகள்/திருநம்பிகள் தங்களது பாலுணர்வைத் தீர்மானிக்கும் சுதந்திரத்திற்கு பதிலாக, இப்போது ஒரு அரசு அதிகாரி மற்றும் மருத்துவர் சான்றிதழ் இனி சமர்ப்பிக்க வேண்டும்.
  • திருநங்கைகள்/திருநம்பிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானால், அவர்கள் தாக்குபவர்களுக்கு, குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் என்பதற்கு எதிராக, அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
  • இளம் திருநங்கைகள் உடலுறவுக்கு இணங்க கட்டாயப்படுத்தப்படும் காரணமாக வீட்டை விட்டு வெளியேற விரும்பினால், அவர்கள் மீண்டும் திருநங்கைகள் சமூகத்தில் சேர முடியாது. அவர்கள் ஒரு நீதிமன்றத்திற்கு பதிலாக செல்ல வேண்டும்; அது அவர்களை "புனர்வாழ்வு மையத்திற்கு" அனுப்பும்.

திருநங்கைகள்/திருநம்பிகளுக்கு உணவு, சுகாதாரம், கல்வி வாய்ப்புகள், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்களை பெறுவதற்கு அடையாளச் சான்றிதழ் தேவைப்படலாம்.

ஆகஸ்ட் 6, 2019 அன்றுடன் முடிந்த நாடாளுமன்றத்தின் 17வது மக்களவையானது, சாதனை அளவாக 35 மசோதாக்களை நிறைவேற்றியது; 37 நாட்களில் 281 மணி நேரம் வேலை செய்தது. சராசரியாக, ஒவ்வொரு எட்டு மணி நேரத்திற்கும் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது; ஆனால் எதுவும் ஒரு குழுவிற்கு பரிந்துரைக்கப்படவில்லை; விமர்சகர்கள் பல அங்கீகரிக்கப்பட்ட மசோதாக்களில் குறைபாடுகள் இருப்பதாகவும், மேலும் விவாதம் தேவை என்றும் கூறினர். இந்த 35 மசோதாக்களில் மிக முக்கியமான சிலவற்றை ஆராயும் தொடரில், இது முதல் பகுதியாகும்.

திருநங்கைகளின் உரிமைகளுக்கான மத அடித்தளம்

இந்து மதக் கோட்பாட்டில் ‘அர்த்தநாரீஸ்வரர்’ - உடலில் சரிபாதி சிவனும் சக்தியும் கொண்ட ஆண் மற்றும் பெண் வடிவம் - என்ற கருத்து, இந்தியாவில் திருநங்கைகள்/திருநம்பிகளை ஏற்றுக்கொள்வதற்கான மத அடித்தளத்தை உருவாக்குகிறது. திருநங்கைகளின் வாழ்க்கையில், இந்த புனிதமான அடிப்படையானது, நவீன ஜனநாயகத்தின் முழு குடிமக்களாக கருதப்பட வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைகளை சமாளிக்கப்பட்டுவிட்டதாக, திருநங்கைகளின் பிரதிநிதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

"நாங்கள் ஒரு பாராளுமன்றக் குழுவின் முன் ஆஜரானபோது, அவர்களின் அறியாமைஅளவு அதிகமாக இருந்தது," என்று, சென்னையை சேர்ந்த திருநங்கைகள் உரிமை ஆர்வலர் கிரேஸ் பானு, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

"எனக்கு ஆண்குறி இருக்கிறதா என்று ஒருவர் என்னிடம் கேட்டார்," என்று பானு கூறினார்; இவர், ஆணாகப் பிறந்து, இப்போது ஒரு பெண்ணாக அடையாளம் கண்டு, அதற்கேற்ற ஆடைகளை அணிந்துள்ளார். "பாஜக [பாரதீய ஜனதா] எம்.பி.க்கள் [நாடாளுமன்ற உறுப்பினர்கள்], எங்களை அர்த்தநாரீஸ்வரர் என்று மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்கள்" என்றார் அவர்.

கடந்த 2014இல், மாநிலங்களவையில் திராவிட முன்னேற்ற கழக (திமுக) உறுப்பினர் திருச்சி சிவா அறிமுகப்படுத்திய திருநங்கைகளின் உரிமைகள் தொடர்பான முதல் மசோதா, அந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தேசிய சட்ட சேவைகள் ஆணையம்- நல்சா (NALSA) தீர்ப்பிற்கு இணங்க "ஒரு சிறந்த மசோதா" என்று ஹம்சாபர் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவரான அசோக் ரோகவி கூறினார். ஒரு தனி நபர் மசோதாவான இது, ஏப்ரல் 2015 இல் மாநிலங்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அடுத்ததாக ஆகஸ்ட் 2, 2016 அன்று மக்களவையில் திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2016 என்பது அறிமுகம் செய்யப்பட்டது. திருநங்கை யார் என்பதை தீர்மானிக்க “கண்காணிப்பு குழுக்கள்”, பிச்சை எடுப்பதை குற்றமாக்குவது போன்ற முன்மொழிவுகள் உள்ளிட்ட பல விஷயங்களில் இதில் எதிர்ப்புக்குள்ளானது.

"அரசு தன் தரப்பில், மசோதாவில் எங்களுக்கான நிறைய உள்ளீடுகளை எடுத்து, மசோதாவின் ஆரம்ப வரைவை மறுவரையறை செய்தனர்; அவை மிகவும் பிற்போக்குத்தனமானவை" என்று ஐயர் கூறினார். "முன்னதாக அவர்கள் திருநங்கைகளை 'முழு ஆண் அல்லது முழு பெண் அல்ல' என வரையறை செய்திருந்தனர்; இப்போது அதை அகற்றி, திருநங்கைகளின் சரியான வரையறையை செலுத்தினர்" என்றார் அவர்.

கண்காணிப்பு குழு என்பது அகற்றப்பட்ட போதும், திருநங்கைளுக்கு இன்னும் ஒரு அரசு மருத்துவர் மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட் சான்றிதழ் என்பது தேவை. "ஒரு திருநங்கை என்று நீங்கள் பதிவு செய்ய ஒரு குழு அல்லது மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பது முக்கிய அம்சமாகும்" என்று ஐயர் கூறினார். "ஒரு திருநங்கையிடம் பல துயருக்குள்ளாகும் கடினமான கேள்விகள் - பிறப்புறுப்பு உறுப்பு தொடர்பானவை - கேட்கப்படும்; இது உங்களிடமும் என்னிடமும் கேட்கப்படாது" என்று அவர் கூறினார்.

இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் மேலவை எனப்படும் ராஜ்ஜியசபா நிறைவேற்றி, அதன் பிறகு இந்திய குடியரசுத்தலைவர் ஒப்புதல் தந்த பிறகே சட்டமாக்க வேண்டும்.

திருநங்கைகள் பிரதிநிதிகள், கிட்டத்தட்ட 100 திருத்தங்களை முன்மொழிந்ததாக கூறினர்; ஆனால் டிசம்பர் 17, 2018 அன்று முதலில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் வெறும் 27 திருத்தங்களே இருந்தன. ஆன்லா, இது 2019 பொதுத் தேர்தலுக்கு முன்பு அவையை கலைத்ததன் மூலம் தோல்வியில் முடிந்தது. அந்த 27 திருத்தங்களும், சமீபத்திய மசோதா பதிப்பில் தங்கிவிட்டன; அது திருநங்கைகளின் அமைப்புகள் ஐந்து ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ள முன்னேற்றத்தை ரத்து செய்கின்றன என்று கூறுகின்றன.

உச்சநீதிமன்றத்தின் மைல் கல்லான தீர்ப்பு

கடந்த 2014இல், திருநங்கைகளை 'மூன்றாம் பாலினம்' என்று அங்கீகரித்தது, அரசியலமைப்பின் கீழ் அவர்களின் அடிப்படை உரிமைகளை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

இந்திய அரசுக்கும் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்திற்கும் (நல்சா) இடையிலான வழக்கில் -நால்சா வழக்கு என பிரபலமாக அறியப்படுகிறது - தீர்ப்பு திருநங்கைகளுக்கு ஆண், பெண் அல்லது மூன்றாம் பாலினமாக "சுய அடையாளம் காணும்" உரிமையை வழங்கியதுடன், கல்வி நிறுவனங்களிலும் பொது வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

திருநங்கைகள் புதிய மசோதா கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற “சேவைகளை” மறுப்பதன் மூலம் பாகுபாடு காண்பதைத் தடைசெய்கிறது, ஆனால் வேலைகளில் உறுதியான நடவடிக்கை குறித்த குறிப்பைத் தவிர்க்கிறது.

ஒரு திருநங்கையை “ஒரு நபர் பிறப்பால் ஒரு பாலினமாக இருந்து பின்னர் தன்னை வேறொரு பாலினமாக கருதி, அவ்வாறு மாறிக் கொள்ளும் நபர் திருநங்கை ஆண் அல்லது திருநங்கை பெண் (அத்தகைய நபர் பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை அல்லது லேசர் சிகிச்சை அல்லது வேறு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டாரா இல்லையா) என்று இந்த மசோதா வரையறுக்கிறது. இன்டர்செக்ஸ் வேறுபாடுகள் கொண்ட நபர், பாலினத்தவர் மற்றும் கின்னர், ஹிஜ்ரா, அரவாணி மற்றும் ஜோக்தா [திருநங்கைகளுக்கு இந்திய மொழிகளில் பயன்படுத்தப்படும் சொற்கள்] போன்ற சமூக-கலாச்சார அடையாளங்கள் கொண்ட நபர் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளின் ஓரங்கட்டப்பட்ட நிலையை நீதிபதி கே எஸ் ராதாகிருஷ்ணன் அங்கீகரித்தார், அவர் நல்சா வழக்கில் கூறினார்: "நம் சமூகம் பெரும்பாலும் திருநங்கைகளை கேலி செய்கிறது, துஷ்பிரயோகம் செய்கிறது. ரயில் நிலையம், பேருந்து நிலையம், பள்ளிகள், பணியிடங்கள், மால்கள், தியேட்டர்கள், மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களில், அவர்கள் ஓரங்கட்டப்பட்டு தீண்டத்தகாதவர்களாக கருதப்படுகின்றன. தார்மீக தோல்வி நம் சமூகத்தில் தான் உள்ளது என்ற உண்மையை மறந்து விடுகிறோம். வெவ்வேறு பாலின அடையாளங்களையும் வெளிப்பாடுகளையும் கொண்டிருக்கவோ அல்லது ஏற்றுக் கொள்ள விரும்பாதது, மாறாத, மாற்றப்பட வேண்டிய நம் மனநிலையை காட்டுகிறது ”.

ரத்து செய்யப்பட்ட அங்கீகாரம்

2019 மசோதாவில் திருநங்கைகளுக்கு சுய அடையாளம் காட்டப்படுவது, நல்சா தீர்ப்பால் சாத்தியமானது; ஆனால் ஒரு மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் ஒரு அரசு மருத்துவர், திருநங்கையா என்பதை மருத்துவ ரீதியாக தகுதியை தீர்மானிக்க வேண்டும் என்கிறது.

பாகுபாடு காட்டப்படும் ஒரு சமூகத்திற்கு, இவை தீர்க்கமுடியாத தடைகளாக இருக்கலாம் என்று திருநங்கைகளின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

“திருநங்கைகள் சமூகம் குறித்த முழு முறையான அணுகுமுறையிலும் ஏதோ தவறு இருக்கிறது; இந்த மசோதாவில் அது திருத்தப்பட வேண்டும்," என்று கவி கூறினார். "முழு செயல்முறை, பொது சுகாதாரம் மற்றும் பயனாளி அமைப்புக்கு சேர்க்கப்பட வேண்டும், அது காணவில்லை."

முதல் மற்றும் இரண்டாவது வரைவுகள் “முற்றிலும் பிற்போக்குத்தனமானவை” என்ற கவி, "இது ஒரு சரியான மசோதா அல்ல; மேலும்பல திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் தேவை" என்றார்.

அடையாளம் காணும் செயல்முறை

இந்த மசோதா, திருநங்கைகள் மாவட்ட மாஜிஸ்திரேட் (டி.எம்) இடம் "அடையாள சான்றிதழ் விண்ணப்பம்" தாக்கல் செய்ய வேண்டும், பின்னர் அவர் "அடையாள சான்றிதழ்" வழங்குவார்.

இந்த சான்றிதழ் ஒரு திருநங்கை நபரின் “அடையாளத்தை” “உரிமைகளை வழங்கும் மற்றும் அங்கீகாரத்திற்கான சான்றாக இருக்கும்”.

சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு, “ஒரு திருநங்கை ஆண் அல்லது பெண்ணாக பாலினத்தை மாற்ற அறுவை சிகிச்சை செய்தால், அந்த நபர்“ திருத்தப்பட்ட சான்றிதழ்” பெறுவதற்கு, மாவட்ட மாஸ்திரேட்டிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று மசோதா கூறுகிறது.

மாஜிஸ்திரேட், “மருத்துவ கண்காணிப்பாளர் அல்லது தலைமை மருத்துவ அதிகாரி வழங்கிய சான்றிதழுடன் விண்ணப்பம்மற்றும் அத்தகைய சான்றிதழின் சரியான தன்மையில் திருப்தி அடைந்தால், பாலின மாற்றத்தைக் குறிக்கும் சான்றிதழை வழங்குவார்” என்கிறது மசோதா.

"எனவே கண்காணிப்பு குழு என்பது இன்னும் உள்ளது; ஆனால் [புதிய மசோதாவில்] அந்த வார்த்தையை குறிப்பிடவில்லை" என்று திருநங்கைகளின் பிரதிநிதி பானு கூறினார்.

இதில் மற்றொரு இடைவெளி "ஆண் திருநங்கைகளின் மொத்த இல்லாமை மற்றும் கண்ணுக்குத் தெரியாமை" [பெண்ணாக இருந்து ஆணான திருநங்கைகள்] ஆகும்" என்று கவி கூறினார். "தீர்க்கப்பட்ட அனைத்து சிக்கல்களும் [ஆணில் இருந்து பெண்ணாக மாறியவருக்கு] சம்பந்தப்பட்டவை" என்றார்.

ஆணாக மாற விரும்பும் ஆண் திருநங்கைகள் பெண்ணாக பிறக்கிறார்கள்; மேலும் பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மிகவும் கடினம் என்று கவி கூறினார். இதற்கு மார்பகத்தை அகற்றுதல், தொண்டை கண்டம் (ஆதாமின் ஆப்பிள்) மற்றும் தொடர்ச்சியான பிற செயல்பாடுகள் தேவை. "ஆனால் அவர்கள் பெற வேண்டிய வசதிகள் அல்லது உதவி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை," என்று அவர் கூறினார்.

இட ஒதுக்கீடு மற்றும் குழந்தைகள்

ஆர்வலர்களின் கூற்றுப்படி, புதிய மசோதாவானது, பள்ளியில் இருந்து தொடங்கும்வாழ்வாதார பிரச்சினைகளுக்கு பதில் செல்லவில்லை.

புதிய மசோதா, திருநங்கைகளுக்கான “தொழிற்பயிற்சி மற்றும் சுயதொழில்” உட்பட “வாழ்வாதாரத்தை ஆதரிப்பதற்கான நலத்திட்டங்கள் மற்றும் திட்டங்களை வகுக்க வேண்டும்” என்று அரசு கோருகையில், இது ஒரு முக்கிய கோரிக்கையை - பொதுத்துறை வேலை இட ஒதுக்கீடு, அதாவது மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளது போன்ற ஒதுக்கீட்டை - புறக்கணிக்கிறது.

"உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களாக திருநங்கைகள் கருதப்படுகிறார்கள்" என்று பானு கூறினார். "இந்தியாவில் திருநங்கைகள், ஓ.பி.சி. [இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள்] என்று கருதப்படுகிறார்கள்; குறிப்பாக தமிழ்நாட்டில், எம்.பி.சி. [மிகவும் பின்தங்கிய வகுப்பு] வகைப்பாட்டில் உள்ளனர்.நான் ஒரு தலித்; அத்துடன் ஒரு ஆதிவாசி மற்றும் ஒரு முஸ்லீம் திருநங்கை. இந்த ஓபிசி அல்லது எம்பிசி வகை இடஒதுக்கீட்டை நான் எவ்வாறு ஏற்றுக் கொள்வது? இது முழு அநீதி” என்றார்.

இந்த மசோதாவின் சிக்கல்கள் திருநங்கைகளின் ஆரம்ப கட்டத்தை அங்கீகரிக்கத் தவறியதில் இருந்து தொடங்குகின்றன.

"பள்ளியில் திருநங்கைகள் அல்லது எல்ஜிபிடி மாணவர்களை கொடுமைப்படுத்துதல் என்பது அரசு கவனிக்காத ஒரு பிரச்சினையாகும்" என்று கவி கூறினார். திருநங்கைகள் கொடுமைப்படுத்துவது, இந்தியாவில், குறிப்பாக குழந்தைகள் மத்தியில், முறையான ஒரு சமூகப் பிரச்சினையாகும் என்று அவர் கூறினார். டிரான்ஸ் குழந்தைகள் "அவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்கவர்கள்", மற்றும் பலர் பள்ளியில் உள்ளனர்; பயணத்தில் அல்ல என, கொள்கை வகுப்பாளர்கள் தவறாக கருதுவதாக, அவர் கூறினர்.

மற்றொரு சர்ச்சைக்குரிய பிரச்சினை என்னவென்றால், திருநங்கைகள் தங்கள் பைனரி அல்லாத அல்லது திரவ பாலுணர்வை ஏற்றுக்கொள்ளாத குடும்பங்களிலிருந்து வெளியேறுவது.

"ஒரு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் உத்தரவைத் தவிர, ஒரு திருநங்கை என்ற அடிப்படையில் எந்தவொரு குழந்தையும் பெற்றோரிடம் இருந்தோ அல்லது உடனடியாக குடும்பத்தினரிடம் இருந்தோ பிரிக்கப்படக்கூடாது" என்று மசோதா கூறுகிறது. "எந்தவொரு பெற்றோரும் அல்லது குடும்ப உறுப்பினரும்" ஒரு திருநங்கையை கவனித்துக் கொள்ள முடியாவிட்டால், தகுதிவாய்ந்த நீதிமன்றம் அத்தகைய நபரை மறுவாழ்வு மையத்தில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கும்".

திருநங்கை சமூகத்தில் சேர விரும்புவதை இளைஞர்கள் இனி தீர்மானிக்க முடியாது என்பதும் இதன் பொருள்; அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அல்லது மறுவாழ்வு மையத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டுமா என்று நீதிமன்றம் முடிவு செய்யும். "இந்தியாவில், ஏராளமான திருநங்கைகள்/ திருநம்பிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; பெரும்பாலானவர்கள் 25 வயதிற்கு உட்பட்டவர்கள்" என்று பானு கூறினார்.

இந்த மசோதா, பாகுபாடு குறித்து கவனம் செலுத்தாததால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் (போஸ்கோ) சட்டம்-2012 இன் உதாரணத்தை ஐயர் மேற்கோள் காட்டினார், உதாரணமாக, ஒரு காவல் நிலையம் குழந்தைகளை எவ்வாறு வரவேற்க வேண்டும் என்பதை விளக்குகிறது. "இந்த மசோதாவில் அதெல்லாம் இல்லை; இது எந்தவொரு செயல் திட்டத்தையும் கொண்டிருக்காமல், அரை மனதுடன் உள்ளது" என்று ஐயர் கூறினார்.

(மல்லப்பூர், இந்தியா ஸ்பெண்ட் மூத்த பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.