புதுடெல்லி: மனித வளர்ச்சிக் குறியீட்டின் (HDI) இந்தியா பல்வேறு ஏற்றத்தாழ்வுகளுடன் தனது தெற்காசிய அண்டை நாடுகளுடன் பின்தங்கி இருப்பதாக ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு நிதியத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வுகள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கின்றன.

இந்தியா, 2018 ஆம் ஆண்டின் மனித வளர்ச்சி குறியீட்டில், 189 நாடுகளில் 0.640 மதிப்பெண்களுடன் 130வது இடத்தை பிடித்து, "நடுத்தர" வகையான வளர்ச்சி பிரிவில் உள்ளது. இது இலங்கை (மனித வளர்ச்சி குறியீடு 0.77, 76வது இடம்), சீனா (0.75 மற்றும் 86) ஆகிவற்றுடன் மோசமானது; ஆனால் பாகிஸ்தான் (0.56 மற்றும் 150), நேபாளம் (0.57 மற்றும் 149), வங்கதேசம் (0.68 மற்றும் 136) நாடுகளைவிட மேம்பட்டதாக உள்ளது.

Source: 2018 Statistical Update, Human Development Indices and Indicators

ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியா 26.8 புள்ளிகளை இழந்தது. அதன் தெற்காசிய சராசரி 26.1 புள்ளிகள் ஆகும். மனித வளர்ச்சி குறியீடானது உடல்நலம், கல்வி மற்றும் வருமானத்தை சார்ந்துள்ள நிலையில், இவ்வழிகளில் பொருளாதாரத்தை முன்னேற்ற, சமத்துவமின்மையை குறைக்க, இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி, 2018 ஆகஸ்டில் தெரிவித்தவாறு, 2022 ஆம் ஆண்டில் இந்தியா தனது பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் (ரூ. 350 லட்சம் கோடி) என்று இரட்டிப்பாக திட்டமிட்டுள்ளது. அவர் கணிப்பின்படி ஆண்டுக்கு 8% என்ற வளர்ச்சியை எட்ட, இந்தியா சுகாதாரம், கல்வியில் மேலும் முதலீடுகளை செய்ய வேண்டும்.

இதை கவனியுங்கள்: மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) $ 2.59 டிரில்லியன் (ரூ. 180 லட்சம் கோடி) மதிப்புடன், உலகில் ஆறாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்த போதும், உலகில் வளர்ச்சி குறைபாடு குழந்தைகளில் 30.8% பேர் இங்கு தான் உள்ளனர்.அவர்களது வயதுடன் ஒப்பிடும் வளர்ச்சியுடன் இல்லை; இந்தியாவில் ஐந்து குழந்தைகளில் ஒருவர், உடல் மெலிந்து எடை குறைவாகவும் உள்ளார். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க போராடுகிறார்கள். வகுப்பறை, பணியிடங்களில் நண்பர்களை தேடிக்கொள்வது கடினமாக உள்ளது.

இந்தியாவுக்கு, ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான செலவால் 46 பில்லியன் டாலர் வரை (ரூ.3.2 லட்சம் கோடி) வரை இழப்பு ஏற்படலாம். இது, 2018-19 மத்திய பட்ஜெட்டில் சுகாதார, கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு செலவிட்டதை (21.6 பில்லியன் டாலர் அல்லது ரூ.1.38 லட்சம் கோடி) விட இரு மடங்கு அதிகம்.

இந்தியாவில் இந்த உச்சகட்ட உற்பத்தியானது 6.5 ஆண்டுகளில் (சீனாவில் இது 20 ஆண்டு, பிரேசிலில் 16, இலங்கையில் 13) எட்டப்பட்டுள்ளது. மருத்துவ இதழான தி லான்செட் வெளியிட்ட மனித மூலதனத்திற்கான சர்வதேச தரவரிசையில், 195 நாடுகளில் இந்தியா 158வது இடத்தில் இருப்பதாக, 2018 செப்டம்பரில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டு இருந்தது.

"கல்வி, சுகாதாரம், மேம்பட்ட மனித மூலதனம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலீடு ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்புகளை எங்களின் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன” என்று, வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார அளவீடு மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் (IHME) இயக்குனரும், ஆய்வு ஆசிரியருமான கிறிஸ்டோபர் முர்ரே தெரிவித்தார்.

பாலினம் மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகளை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்து அதற்கான தீர்வுகளையும் வழங்குகிறது:

பாலின ஏற்றத்தாழ்வு

கடந்த 5 ஆண்டுகளில் 1000 ஆண்களுக்கு 919 பெண்களே பிறந்துள்ளனர். இது, நகரப்புறங்களை (925) விட, கிராமப்பகுதிகளில் மிக மோசமாக (899) உள்ளதாக, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS-4) 2015-16 தெரிவிக்கிறது.

எழுத்தறிவை எடுத்துக் கொண்டால், ஆண்களை (85.7%) விட, பெண்களின் விகிதம் (68.4%) பின்தங்கியே உள்ளது; 35.7% பெண்கள் மட்டுமே 10ஆம் வகுப்பை கடந்துள்ளதாக, ஆய்வு கூறுகிறது.

பள்ளிகளில் சிறுவர்களும், சிறுமியரும் 16 வயது வரை, ஏறத்தாழ ஒரே பதிவு விகிதத்தை வைத்திருந்தாலும், 18 வயதை கடக்கும் போது அதில் பெரிய வேறுபாடு தெரிகிறது. பெண்கள் மற்றும் பையன்கள் எண்ணுதல், நேரம் பார்த்தல், எடை கூட்டுதல் போன்ற எளிய பணிகளை கூட செய்ய போராடுகின்றனர்; குறிப்பாக பெண்களின் நிலை மிக மோசமாகும் என, 2017ஆம் ஆண்டு கல்வி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வீட்டு வேலைகளில் கவனம் செலுத்த ஏதுவாக, இந்தியாவில் நான்கில் ஒரு பெண் 18வயதுக்கு முன் (26.8%) திருமணம் செய்து வைக்கப்படுகிறார். திருமணத்திற்கு பிறகும் அவரது நிலை மோசமாகவே உள்ளது. கர்ப்பம் அடையாத இரு பெண்களில் ஒருவருக்கு ரத்தச்சோகை (53.2%), நான்கில் ஒருவருக்கு எடை குறைபாடு (22.9%), திருமணமான மூன்றில் ஒரு பெண் குடும்ப வன்முறையை (31.1%) சந்திப்பதாக, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தெரிவிக்கிறது.

முன்பை விட அதிக கல்வியறிவு பெற்றிருந்தாலும், இந்திய பெண்களில் அதிகம் பேர் வேலை செய்யவில்லை. 2013 ஆம் ஆண்டில், இந்தியாவில் 15 வயதிற்கு மேலான தொழிலாளர்களில் பெண்களின் எண்ணிக்கை 27.2%; இது ஆண்களில் 78.8% என்று உள்ளது. இது பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்ததுடன் ஒப்பிடும் போது 34.8% குறைவு என்று, 2017 ஆகஸ்டில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது.

பாலின குறிகாட்டிகள் மீது இந்தியாவின் செயல்பாடு அதன் அண்டை நாடுகளைவிட மோசமாக உள்ளது - ஐ.நா. பாலின சமத்துவமின்மை குறியீட்டில் இந்தியா, 189 நாடுகளில் 127வது இடத்தைப் பிடித்தது. இதில் குறைந்த இடங்களை நேபாளம் (118), சீனா (36), இலங்கை (80) நாடுகள், வங்கதேசம் (134), பாகிஸ்தான் (133) ஆகியன அதிகமாக உள்ளன.

பரவலாக சமத்துவமின்மை

கடந்த 1980ஆம் ஆண்டுகளில், 31%-க்கும் மேலாக மொத்த சொத்துக்களில் 55%-ஐ கட்டுப்படுத்துவதன் மூலம்,10%க்கும் மேல் கட்டுப்படுத்தும், உலகின் மிக சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது என, 2018 உலக சமத்துவமின்மை அறிக்கை கூறுகிறது. மொத்த சொத்துக்களில் கீழ் 50 சதவீதத்தில் 15.3% மட்டுமே கட்டுப்படுத்துகிறது. 1980-களில் இருந்து மேல் சொத்துக்களில் 1% பெருகிய நிலையில், கீழே 50 சதவீதம் சரிந்துள்ளது.

சில ஜாதிகள் மற்றும் சமூகங்கள் மற்றவர்களை விட மோசமாக உள்ளன. முஸ்லீம்கள், பெளவுத்தர்களில் சொத்து பங்கு என்பது குறைந்த பட்சமாக இருந்தது; 2002-ல் இருந்து 2012ல் இது குறைந்திருந்ததாக, 2018 ஆக்ஸ்பாம் இந்தியா அறிக்கை தெரிவிக்கிறது.

இந்திய மக்கள் தொகையில் 8% உள்ள பட்டியலின பழங்குடியின மக்கள், குறைந்த சொத்துக்கள் பிரிவில் 45.9% பங்குடன் இடம் பெற்றுள்ளதாக, 2018 பிப்ரவரியில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது.

இந்த சொத்தில் பெரும்பகுதிக்கு குறைவாக, விரைவில் வழங்கப்படலாம். பிரேசில், சீனா, எகிப்து, இந்தோனேசியா மற்றும் நைஜீரியா - ஐந்து பெரிய வளரும் நாடுகளின் குடிமக்களைவிட பெற்றோர்களின் வருமானம், கல்வி அடைப்புக்களில் இருந்து பிரிந்து வாழும் இந்தியர் எண்ணிக்கை குறைவு என, உலக வங்கி அறிக்கையை மேற்கோள்காட்டி 2018 ஜூனில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

குறைந்த செல்வமானது, குறைவான வாழ்க்கை எதிர்பார்ப்புகளை, மோசமான சுகாதார விளைவுகள், மோசமான கல்வி விளைவுகளை கொண்டிருந்ததாக பல்வேறு ஆய்வுகள் தெரிவித்தன. அடிக்கடி ஏற்படும் அவசர சுகாதார தேவைகள், பெரும்பாலும் மக்களை அதாவது 2011-12ஆம் ஆண்டில் 5.5 கோடி பேரை வறுமையில் தள்ளியது.

மக்களிடம் முதலீடு செய்தல் என்பதன் முக்கியம் ஏன் பெருகி வருகிறது

சமூக செலவினங்களில் முதலீடு ஒரு அவசியம் என்பதை இந்த காரணிகள் காட்டுகின்றன. "முக்கியமாக உள்கட்டமைப்பில் இருப்பதை விட மக்களிடம் முதலீடு செய்வது நிலையான வளர்ச்சியை அடைய சிறந்த வழி; மற்றும் மனித மூலதனத்தில் சுகாதார மற்றும் கல்வி மூலம் முதலீடுகள் நிர்ப்பந்திக்கப்பட்ட வருமானத்தை வழங்குகின்றன " என்று உலக சுகாதார அமைப்பு இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதனொம் கேபிரேயஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பெண்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துதல்: பெண்களின் நல்வாழ்வு அவர்களின் உடல்நிறை குறியீட்டில் இருந்து (பிஎம்ஐ) மதிப்பிடப்படுகிறது; கல்வி, முன்கூட்டியே திருமண, மகப்பேறு பராமரிப்புக்கான அணுகல் (ANC) ஆகியன, இந்தியாவில் உயர்ந்த மற்றும் குறைவான துருப்பு விகிதங்களுக்கிடையேயான வேறுபாடுகள் என, சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் 2018 ஆய்வை சுட்டிக்காட்டி, 2018 ஜூலையில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

பெண்கள் உடல் நிறை குறியீட்டை (19%) விட அதிகம் குழந்தைகளின் போதுமான உணவு (9%) என்பது, அவர்கள் முதிர்ச்சியடையாததால் என ஆய்வில் தெரிய வந்தது. பெண்கள் உடல்நலம் மற்றும் அதிகாரம் நேரடியாக, பல முந்தைய ஆய்வுகள் (இங்கே மற்றும் இங்கே) குழந்தை உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்தை பாதிக்கின்றன.

நல்ல ஆரோக்கியத்தையும், பெண்களுக்கு பொருளாதார வளர்ச்சிக்கான பல வாய்ப்புகளையும் உறுதிப்படுத்துவது, உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார வருவாயை மட்டுமல்லாமல் ஆரோக்கியமான வருங்கால மக்கள் அதிகரிக்க காரணமாகிறது.

பண பரிமாற்றங்கள்: லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் வறுமையை குறைக்க பண பரிவர்த்தனைகள் பயன்படுத்தப்படுகின்றன; இவை பொருளாதார கொள்கைகளின் "தந்திரமான" விளைவுகளில் இருந்து எதிர்பார்த்ததை விட விரைவான முடிவுகளை வழங்கியுள்ளதாக, 2017 சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கை தெரிவிக்கிறது.

பண பரிமாற்றம் பிரேசிலில் சமத்துவமின்மையை, 28% ஜி.ஐ.என்.ஐ. குறியீட்டால் அதாவது சமத்துவமின்மை அளவு - 1995 மற்றும் 2004 க்கும் இடையே குறைக்க உதவியது. குழந்தை வளர்ச்சி குறைபாட்டை 13.6% இருந்து 2006ஆம் ஆண்டில் 7% ஆக குறைக்க உதவியது.

ஒரு உலகளாவிய அடிப்படை வருவாய்-யுபிஐ (UBI) -- ஒரு கால இடைவெளியில் தொடர்ச்சியான, நிபந்தனையற்ற பணம் செலுத்துதல் -- 2016-17 இந்திய பொருளாதார ஆய்வறிக்கையில் நீண்ட விவாதமாக இருந்தது. தற்போதைய நலத்திட்ட அமைப்புகளில் இருந்து கசிவுகளை குறைக்க உதவுவதோடு, ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் யு.பி.ஐ. உதவ முடியும் என அந்த அறிக்கை தெரிவித்ததாக, 2017 ஜூனில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரைதெரிவித்திருந்தது.

"மக்கள் தொகையில் 75% பேரின் தனிநபர் வருமானம் ரூ .6,450 ஆக ஓராண்டுக்கு இருந்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் யி.பி.ஐ.யின் மதிப்பு 4.2% ஆகும்” என்று நாங்கள் தெரிவித்திருந்தோம். எனினும், இது அரசியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ சாத்தியமற்றதாக இருக்கலாம் என்று அரசு கூறியது.

ஒரு உண்மையான 'உலகளாவிய' சுகாதார பாதுகாப்பு: இந்தியாவின் பொது சுகாதார செலவினம் உலகில் மிகக் குறைவாகவும், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (2015) 1.02% ஆகவும் உள்ளது. நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுவதை விட 5%; குறைந்த வருவாய் உடைய மற்ற நாடுகளின் 1.4% என்பதை விட குறைவாகும். 2025ம் ஆண்டுக்குள் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% வரை செலவழிக்க இந்தியா உறுதியளித்துள்ளதாக,அதன் தேசிய சுகாதார கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமான முதலீடு மற்றும் பொது மக்களை வலுப்படுத்துதல் - குறிப்பாக முதன்மை - சுகாதார அமைப்பு அணுகல் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான வழியாகும். 10 கோடி இந்திய குடும்பங்களுக்கு ரூ.5,00,000 காப்பீடு வழங்குவதற்காக ஆயுஷ்மன் பாரத் யோஜனா (தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம்) திட்டத்தை இந்தியா செயல்படுத்துகிறது. வெளிநோயாளிகளோ, மருந்து செலவினங்கள் என்ற பெரும் செலவினங்கள் காப்பீடு திட்டத்தின் கீழ் வரவில்லை என்ற முந்தைய காப்பீடு மாதிரியானது வறுமையில் குறைக்கவில்லை என்ற அனுபவத்தை தந்துள்ளது.

"நிதி பாதுகாப்பு, பொருத்தமான பாதுகாப்பு மற்றும் உலகளாவிய அணுகல் ஆகியவற்றை உண்மையில் வழங்கும் ஒரு [சுகாதார] அமைப்பு நமக்குத் தேவை. காப்பீட்டு திட்டங்கள் நன்கு திட்டமிடப்பட்டுள்ளன, ஆனால் இந்த நோக்கங்களை அவை நிறைவேற்றவில்லை” என்று இந்தியாவின் பொது சுகாதார அறக்கட்டளையின் இயக்குனர் ஸ்ரீநாத் ரெட்டி, இந்தியா ஸ்பெண்டிடம் 2018 ஜனவரியில் தெரிவித்திருந்தார்.

முதன்மை, இரண்டாம்நிலை மற்றும் மூன்றாம் சேவைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் பல சுகாதார-நிதி ஆதாரங்களை இணைப்பதன் மூலம், உலகளாவிய சுகாதார திட்டம் என்ற ஒற்றை அமைப்பு உருவாக்குதலே உண்மையான பாதுகாப்பு திட்டமாகும் என்று ரெட்டி தெரிவித்தார்.

திருத்தம்: இக்கட்டுரையில் $ 5 டிரில்லியன் என்பது 350 லட்சம் கோடி ரூபாய் என்று திருத்தப்பட்டுள்ளது; முன்பு குறிப்பிட்டது போல் 35 லட்சம் கோடி அல்ல. தவறுக்கு வருந்துகிறோம்.

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.