புதுடெல்லி: அது, 2018ன் குளிர்கால ஆரம்ப நாள். 23 வயதான தரவு பதிவு நிர்வாகியனா ஷீலா*, தான் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ தனது இடத்தில் நிற்காமல் சென்றதால், இரண்டு முடிவில் ஒன்றை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளானார். அவர் வேனில் - தனியொரு பயணியாக - செல்வதில் தாக்கப்படும் ஆபத்து உள்ளது; அல்லது, ஓடும் வேனில் இருந்து குதித்து விடுவது, இதில் காயம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

அவர், வேனில் இருந்து பாய்வது என்பதை தேர்வு செய்தார். இதில் அவரது வலது கை மற்றும் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. எனினும் கிராமின் சேவா (கிராமப்புற சேவை) வேனின் வாகன ஓட்டுனரிடம் இருந்து தப்பினார். இந்தியாவில் தலைநகரான டெல்லியின் புறநகர் பகுதியில் குறைந்த வருவாய் பிரிவினரின் போக்குவரத்து முன்னுரிமை இவ்வாறு உள்ளது. தெற்கு டெல்லியின் ஓகேலா பேஸ்-I பகுதியில் உள்ள அலுவலகத்தில் இருந்து 7 கி.மீ.க்கு அதிகமான பயணம் செய்து, தக்ஷின்பூரில் உள்ள தனது வீட்டை அடைய, ஷேர் ஆட்டோவில் - ஆட்டோவில் கி.மீ. ஒன்றுக்கு ரூ.10 என்ற நிலையில் இதில், சவாரி ஒன்றுக்கு ரு.5 மட்டும் - செல்வது மட்டுமே ஷீலாவுக்கு மலிவான மற்றும் நம்பகமான போக்குவரத்து வாய்ப்பாக உள்ளது; 3,900 பேருந்துகள் மற்றும் ஒரு 8 வரிசை உள்ள 373-கி.மீ. நீளமுள்ள மெட்ரோ ரயில் சேவை உள்ள டெல்லியில் இந்த நிலை.

அன்றாடம் அலுவலகத்திற்கு சென்று வரும் வழியில் டெல்லி தெருக்களில் ஆபத்தை எதிர்கொள்ளும் பல பெண்களில் ஷீலாவும் ஒருவர். டெல்லி நகரில் உள்ள பெண்களுக்கு மெட்ரோ ரயில் மற்றும் பஸ்களில் இலவசமாக சென்று வரலாம் என்ற முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அண்மை அறிவிப்பு, பெண்களின் பயணத்தின் மீது முக்கிய தாக்கத்தை கொண்டுள்ளது; இது, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொது இடங்களுக்கான அணுகல் குறித்த முடிவுகளுடன் தொடர்புள்ளது.

நகர்ப்புறங்களில் உள்ள பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதற்கு முரணாக, இந்தியாவில் பெண் தொழிலாளி பங்களிப்பு விகிதம் கிராமப்புறங்களில் உள்ளதை விட நகரங்களில் குறைவாகவே உள்ளது என்று தரவுகள் கூறுகின்றன. டெல்லி- 1.9 கோடி பேர் வசித்து, மால்கள், கபேக்கள், பலஅடுக்கு மாடி அலுவலங்கள் உள்ள - மாநகரில் 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 11.7% பெண்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை; இது, தேசிய சராசரியான 27% உடன் ஒப்பிடுகையில் குறைவு.

மனைவி நடந்து செல்ல கணவருக்கு டூவீலர்

டெல்லியில் பெண்கள் மற்றும் சேவைப் பணிகள் குறித்த எனது ஆய்வுகளில், வேலை தேடும் இளம் பெண்களுக்கு பாதுகாப்பு, அணுகல் மற்றும் பொது போக்குவரத்தின் பற்றாக்குறையைப் பற்றி கவலைகள் எழுப்பப்பட்டன. ஒரு கார் டிரைவரான, 29 வயது சுஷ்மா* விவகாரத்தை எடுத்துக் கொள்ளலாம். பெண்களுக்கான ஓட்டுனர் பயிற்சி வகுப்பு பற்றி கேள்விப்பட்டிருந்த அவர், அதில் சேருவதற்கு விரும்புவதாக கணவரிடம் கூறினார். எனினும் அவரது மாமியார் ஊக்கப்படுத்தாததால், சோர்வடைந்த சுஷ்மாவுக்கு வீடே கதியென்று இருந்தார்.

அவர்களின் அணுகுமுறை "ஒரு பெரிய பிரச்சனை" என்று சுஷ்மா என்னிடம் சொன்னார். அவர்கள், என் பயணத்திற்கு பணம் தருவதில்லை; கணவரும் அவரது சம்பளத்தை அவர் தாயிடம் தான் கொடுக்கிறார்.

"நான் எனது தேவைக்கு பணத்தை அவரிடம் தான் கேட்க வேண்டும்" என்று, திருமணத்திற்கு பிறகு 12ஆம் வகுப்பு முடித்த சுஷ்மா தெரிவித்தார். "சங்கம் விஹாரில் இருந்து நான், [6 கி.மீ.] தொலைவில் உள்ள கல்காஜிக்கு நடந்தே செல்ல வேண்டும். இதுதான் நான் இந்த வரிசையில் செய்தேன் … நான் அவ்வாறு கடினமாக உழைத்திருக்காவிட்டால் இன்று நாங்கள் இங்கு இருக்க மாட்டோம்" என்றார்.

ஒவ்வொரு நாளும் தனது பிடிவாதத்திற்கும், தனது வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஆசைக்கும் ஓட்டுநர் வகுப்புகளில் கலந்துகொள்ள ஒரு மணி நேரத்திற்கு மேல் நடக்க விருப்பம் தெரிவித்ததாக சுஷ்மா தெரிவித்தார். தனது பிடிவாதத்திற்காகவும், வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டுமென்ற விருப்பத்திற்காகவும், சுஷ்மா ஒவ்வொரு நாளும் ஓட்டுநர் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள, ஒரு மணி நேரத்திற்கு மேல் நடப்பதில் விருப்பம் கொண்டிருந்தார். இப்போது ஓட்டுனராக மாறிவிட்ட சுஷ்மா, அவர் குடும்பத்தில் ஒரு வேலைக்கு செல்லும் நபர்.

அதேபோல், 24 வயதாகும் ரமா*, தனது வாழ்க்கையில் "இன்னும் அதிகமாக" சாதிக்க விரும்புவதாக என்னிடம் கூறினார். ஒரு அரசு சாரா நிறுவனத்தின் சமூக பணியாளரான ரமா, பரிபாத் எல்லைக்கு அருகே உள்ள பதர்பூரில் இருந்து தெற்கு டெல்லியின் கிர்கி எக்ஸ்டன்ஷன் பகுதி வரையிலான தொலைவை (12 கி.மீ.) 90 நிமிடங்கள் பகுதி நடந்தும், பகுதி பேருந்திலும் என்று வாரத்திற்கு ஐந்து நாட்கள் சென்று வருகிறார்.

நகரின் மெட்ரோ ரயில் சேவை தற்போது பதர்பூர் வரை விரிவடைந்துள்ளது என்ற போதும், ரமாவால் மெட்ரோ ரயிலிலோ அல்லது பேருந்து நிறுத்தத்திற்கு டாக்ஸியில் செல்வதோ முடியாது என்கிறார். இதனால், ஆட்டோவுக்கான தொகை ரூ.40ஐ சேமிக்க, பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தே சென்று, இரண்டு பேருந்துகளை பிடித்து செல்கிறார். “என்னால் அதை செலுத்த இயலாது” என்கிறார் ரமா. "எனவே, சீக்கிரமே எழுந்துவிடுவேன். குழந்தை போல் 20-25 நிமிடங்களில் நடக்க வேண்டும் - இது விரைவானதாக இருக்க முடியும்" என்றார் அவர்.

ஒகேலாவில் உள்ள தொழிற்சாலையில் பணி புரியும் ரமாவின் கணவர், தினமும் இருசக்கர வாகனத்தில் சென்று வருகிறார். ரமாவும் அவரது கணவரும் சேர்ந்து ஒரு பைக் வாங்கினார்கள். இப்போது அவர்களின் இருவர் சம்பளத்தில் இருந்து தான் பைக்கிற்கான தவணை தொகையை செலுத்தி வருகின்றனர்.

போக்குவரத்து ஒரு பாலினம் பிரச்சினை

ஷீலா, சுஷ்மா மற்றும் ரமா போன்ற பெண்களின் அனுபவங்கள், வளர்ந்து வரும் வேலைவாய்ப்புகளை அடைவதற்கான அவர்களின் முயற்சியோடு, பொது போக்குவரத்தில், பாலினம் பிரச்சினை எப்படி முன்னிலைப்படுத்தப்படுகிறது என்பதை காட்டுகிறது.

ஒருசிலர், பெண்களுக்கு மட்டும் இலவசமாக பொது போக்குவரத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவதை விமர்சனம் செய்தனர்; (தொழிலாளர் வர்க்க) ஆண்களுக்கு எதிரான பாகுபாட்டை இது காட்டுவதாக அவர்கள் கூறினாலும், பெண்களின் பாதுகாப்பு பிரச்சனையில் முதல்வர் கெஜ்ரிவால், அவரே தனி கவனம் செலுத்தி இருக்கிறார்.

ஷீலா, கிராமின் சேவா வேனில் இருந்து குதித்தார்; ஏனெனில் வேனில் ஒரு பெண் பயணியாக தனியே பயணிப்பது பாதுகாப்பற்றது என்பதை அவர் உணர்ந்தார். பொது போக்குவரத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அவர்களுக்கு அது நட்புக்குகந்த சூழலை தரும்.

இருப்பினும், பெண்களுக்கு நம்பகமான பொது போக்குவரத்திற்கான தேவை என்பது, தீவிர பாதுகாப்பு பிரச்சினைக்கு என்பதோடு மட்டுமே கிடையாது.

பெண்களின் இயக்கம் என்பது, சுஷ்மிதா விவகாரத்தை போல், நிதி கட்டுப்பாட்டின் கீழ் குடும்பங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், பெண்கள் தங்களது பயணத்திற்காக வாதிட்டு சாதித்தால் கூட, அவர்களின் போக்குவரத்து என்பது மலிவான பொது போக்குவரத்தையோ அல்லது நடந்து செல்வதையோ நம்பி இருக்க வேண்டும். மறுபுறத்தில், ரமாவின் கணவரைப் போலவே ஆண்கள் தங்கள் குடும்பத்தினர் தரும் பைக்கை பயன்படுத்தலாம்.

பெண்கள் பணியாற்றும் நேரட்தில் தங்களது குழந்தைகளை உடன் வைத்து கொள்ள இயலாது; இதனால் வீட்டையும் குழந்தைகளையும் கவனிக்கும் பொறுப்பும் அவர்கள் மீது அளவுக்குமீறி விழுந்துவிடுகின்றன.

கடைசி மைல் வரை இணைப்பு

பயணச்செலவு தடைகளை அகற்ற அரசின் நடவடிக்கை, இதனால் வேலை, கல்வி மற்றும் பொது இடங்களில் போக்குவரத்துக்கான பெண்களின் அணுகலை அதிகரிக்கும். மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்தாலும், மெட்ரோ நிலையங்கள், கடைசி மைல் வரை இணைக்கப்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம். குறிப்பாக கிராமின் சேவா ஆட்டோ போன்றவற்றின் சேவைகளின் அடைய நம்பகத்தன்மை, டெல்லியின் குறைந்த வருவாய்க்கான சுற்றுப்புறங்களில் ஏற்பட வேண்டும்.

தக்சின்பூரி மற்றும் கான்பூர் (தெற்கு டெல்லி) பகுதிகளில் வசிக்கும் இளம் பெண்களுடனான என் ஆராய்ச்சியில், கிராமின் சேவா தான் பொதுவான போக்குவரத்தாக இருப்பதை நான் கண்டேன். டெல்லி போக்குவரத்து கழகம் - டி.டி.சி. (DTC) மட்டுப்படுத்தப்பட்ட பேருந்துகள் சேவைகள், டெல்லி புறநகர் பகுதிகளை எட்டும் வகையில் 2010இல் அறிமுகம் செய்யப்பட்டது. கிராமின் சேவா போக்குவரத்தானது நம்பகமான மற்றும் திறமையான போக்குவரத்து முறையல்ல என்றாலும், பெண்கள் அதைப் பயன்படுத்துகின்றனர்; ஏனென்றால், நான் முன்பே குறிப்பிட்டது போல, ஆட்டோக்களைவிட இது மலிவானது மற்றும் வீட்டிற்கே வருகிறது.

டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) 61 மெட்ரோ நிலையங்களில் "பல மாதிரி ஒருங்கிணைப்பு" முறையை அறிவித்துள்ளது; அதாவது, மெட்ரோ நிலையங்களில் மின்சார ரிக்சா, ஆட்டோக்கள் அல்லது வாகன நிறுத்தத்திற்கு இடம் தந்து, அதிக போக்குவரத்து வசதிகளை பெற செய்வதாகும்.

இது மெட்ரோ நெட்வொர்க்கிற்கு பெண்களின் சிறந்த அணுகலை உறுதி செய்யும் என்றாலும், செலவுகள், அடைவது மற்றும் நம்பகம் போன்றவை இன்னமும் பொது போக்குவரத்து சேவையை பெண்கள் அணுகுவதை தடுக்கின்றன.

ப்ராஞ்சலி*, 12ஆம் வகுப்பு முடித்தபின் ஒரு சிறிய அலுவலகத்தில் நிதி உதவியாளராக பணியாற்றியவர் என்னிடம் கூறுகையில், “ஒவ்வொரு நாளும் நெரிசலில் சென்று வர” வேண்டியுள்ளது என்றார்.

நேரடி மற்றும் மலிவு போக்குவரத்து வழங்குவதன் மூலம், வேலை தேடும் அல்லது வேலைக்கு பெண்கள் ஒவ்வொரு நாளும் "சென்று- வர” ஆகும் செலவுகளை குறைக்கலாம்; மேலும், இது வெற்றிகரமாக இருந்தால், மற்ற இந்திய நகரங்களுக்கும் இது மாதிரியாக இருக்கும்.

*அடையாளம் காட்டாமல் இருக்க அனைத்து பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.

(இஸ்லாம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.