கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இப்போது அவற்றை பயன்படுத்த மக்களை தயார்ப்படுத்த வேண்டும்
டெல்லி: ஸ்வச் பாரத் மிஷன் (தூய்மை இந்தியா திட்டம்) 2019 அக்டோபர் 2 ஆம் தேதியுடன், ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், கழிப்பறைகளுக்கான அணுகல் கணிசமாக அதிகரித்துள்ளது, ஆனால் கழிப்பறை பயன்பாடு என்ற பழக்கம் வேகத்தை அதிகரிக்கவில்லை. கிராமப்புற பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் கழிவறைகளைக் கொண்ட வீடுகளில் உள்ள மக்களின் விகிதம் 2014இல் இருந்த 23% என்ற நிலையே தொடர்வதாக, தரவு காட்டுகிறது. கட்டப்பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்துவதற்கு, திறந்தவெளி மலம் கழிப்பதால் ஏற்படும் ஆபத்துக்களை எடுத்துக்காட்டுவது உதவும் என்று, பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கிருமிகள் பொதுவானவை - அவை பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும், உயர் சாதியினருக்கும், தாழ்ந்தவர்களுக்கும் வேறுபடுவதில்லை. திறந்தவெளியில் மலம் கழிப்பதன் மூலம், கிருமிகள் நீர் வினியோகம் மற்றும் உணவை மாசுபடுத்துகின்றன, இதனால் வயிற்றுப்போக்கு, நுரையீரல் (குடல்) நோய் மற்றும் புழுக்கள் பரவுகின்றன.
தூய்மை இந்தியா திட்டம் (SBM) தொடங்கப்பட்டதில் இருந்து, அரசின் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 10 கோடிக்கும் அதிகமான வீட்டு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையே, சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘குளோபல் கோல்கீப்பர்’ விருதை வழங்கி, பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் பாராட்டுக்களை பெற்றுத் தந்தது.
இருப்பினும் இத்தகைய கழிப்பறைகள் கட்டப்பட்டிருப்பது, திறந்த மலம் கழிப்பதை குறைக்கும் வேகத்தைத் தக்கவைக்கவில்லை. பல வட மாநிலங்களில், தூய்மை இந்தியா திட்டம் 2014 முதல் ஒட்டுமொத்த திறந்த மலம் கழிப்பதை 70% முதல் 44% ஆகக் குறைத்துள்ள நிலையில், கழிவறைகளைக் கொண்ட வீடுகளில் கிட்டத்தட்ட நான்கு (23%) மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தொடர்வதாக, திட்டத்தின் முன்னேற்றம் குறித்த ஆராய்ச்சி காட்டுகிறது.
இது ஒரு புதிய பிரச்சினை அல்ல; மத்திய பிரதேசத்தில் 2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுக்கு இடையில் நடத்தப்பட்ட மொத்த துப்புரவு பிரச்சாரம் (நிதி மானியங்களில் இதேபோன்ற கவனம் செலுத்தியது) தூய்மை இந்தியா திட்டத்தின் முன்னோடி பற்றிய சீரற்ற மதிப்பீடு, கிராமங்களின் இரு குழுக்களுக்கு இடையே, கழிவறைக்கு சொந்தமான வீடுகளின் ஆரம்ப விகிதாச்சாரம், இந்த திட்டம் அமலானதும் அதிகரித்தது; கழிவறைகள் 26 சதவிகித புள்ளிகள் அதிகரித்த நேரத்தில் கழிப்பறை பயன்படுத்துவோர் 3 சதவீத புள்ளிகளே அதிகரித்தது.
இருப்பினும், திறந்த மலம் கழிப்பதைக் குறைப்பது புதிய கழிவறை எண்ணிக்கை அதிகரிப்போடு பொருந்தவில்லை. இத்திட்டம் அமலான கிராமங்களில், 70%க்கும் அதிகமான மக்கள் திறந்த வெளியில் மலம் கழித்தனர். துப்புரவு வசதிகள் மேம்படுத்தப்பட்ட வீடுகளில், 41% பேர் தினமும் திறந்தவெளியில் மலம் கழித்து வந்தனர்.
அருவெறுப்பைத் தூண்டுவதன் மூலம் நடத்தை மாற்றுதல்
தூய்மை இந்தியா திட்டத்தை பொறுத்தவரை, இப்போது மிக முக்கியமான கேள்வி என்னவென்றால் - அவர்கள் கட்டிய கழிவறைகளை மக்கள் உண்மையில் பயன்படுத்தும் வகையில் கொள்கை எவ்வாறு ஒருங்கிணைக்கிறது என்பதாகும்?
திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் மாசுபடுதல் குறித்த புரிதல், சமூகங்களை கழிப்பறைகளை அதிகம் பயன்படுத்துவதைத் தூண்டக்கூடும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
இந்த புரிதலை அதிகரிக்க முற்படும் ஒரு திட்டம், சமூகம் தலைமையிலான மொத்த துப்புரவு -சி.எல்.டி.எஸ் (CLTS) அணுகுமுறை ஆகும், இதில் கிராமவாசிகள் தங்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கும் இடங்களுக்கான பாதைகளை வரைபடமாக்கவும், அந்த வழியில் கிருமிகள் பரவுவதைப் பற்றி விவாதிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவர்களின் உணவு மற்றும் நீர் எவ்வாறு மாசுபடுகின்றன என்பதை காட்டி, அவர்கள் மத்தியில் அருவெறுப்பை தூண்டுவதன் மூலம், இந்த அணுகுமுறை கழிவறை பயன்பாட்டின் விகிதங்களை மேம்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை நடவடிக்கை ஆய்வகத்துடன் (ஜே-பிஏஎல்) இணைந்த ஆராய்ச்சியாளர்களால் தான்சானியா, மாலி மற்றும் இந்தோனேசியாவில் சீரற்ற மதிப்பீடுகள் சி.எல்.டி.எஸ் அணுகுமுறை கிராமங்களில் திறந்த வெளியில் மலம் கழிப்பதைக் குறைத்தது, முக்கியமாக, கழிவறைகளை சொந்தமாகக் கொண்டிருக்காத வீடுகளில் கழிவறைகளை நிர்மாணிப்பதன் மூலமாக.
திறந்தவெளி மலம் கழிப்பதைக் குறைப்பதில், திட்டங்களின் தாக்கம் மாலியில் மிக அதிகமாக இருந்தது, இது ஏற்கனவே இருக்கும் கழிவறைகளைக் கொண்ட வீடுகளில் திறந்த மலம் கழிப்பதைக் குறைத்தது. இந்தோனேசியா மற்றும் தான்சானியாவில் இந்த விளைவு காணப்படவில்லை, அங்கு கழிவறைகளைக் கொண்ட வீடுகளில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் விகிதம் குறைவாக இருந்தது.
நடத்தை மாற்றத்திற்கு நிதி மானியங்கள்
குறைந்த எண்ணிக்கையில் கழிவறை பயன்பாஅடு உள்ள பகுதிகளில், ஒரு நடத்தை மாற்றத் திட்டத்துடன் நிதி உதவியை வழங்குவது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிடையே கழிவறைகளின் உண்மையான பயன்பாட்டை அதிகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
பின்வரும் மூன்று திட்டங்களில் ஒன்றைப் பெறுவதற்கு தோராயமாக ஒதுக்கப்பட்ட பங்களாதேஷ் கிராமங்களில் ஒரு மதிப்பீடு: கழிவறை கட்டுமானத்திற்கான தகவல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு; கழிப்பறை ஊக்குவிப்பு திட்டம் (மேலே குறிப்பிட்டுள்ள சி.எல்.டி.எஸ் அணுகுமுறைக்கு மிகவும் ஒத்திருக்கிறது); அதே திட்டம் மற்றும் நிதி மானியங்கள். ஒரு ஒப்பீட்டுக் குழுவாக பணியாற்ற வேறு கிராமங்கள் எந்த தலையீடும் பெறவில்லை.
தகவல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு திட்டமும், கழிப்பறை ஊக்குவிப்பு திட்டமும், திறந்தவெளி மலம் கழிப்பதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், நிதி மானியங்களுடன் கூடிய கழிப்பறை ஊக்குவிப்பு திட்டம், ஒப்பீட்டு கிராமங்களுடன் ஒப்பிடும்போது திறந்தவெளி மலம் கழிப்பதை 22% குறைத்தது.
இருப்பினும், இந்த குறுக்கீடுகள் இந்தியாவின் சூழலில் முழுமையாக செயல்பட, கழிப்பறை பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் சாதி மற்றும் திறந்த மலம் கழிப்பதை நிலைநிறுத்தும் கழிவறை மாதிரிகள் பற்றிய தவறான தகவல்களையும் தீர்க்க வேண்டும்.
தூய்மை இந்தியா திட்டம் பரிந்துரையின்படி இரட்டை குழி கழிவறை வடிவமைக்கப்பட்டுள்ளது, அதன்படி, நிரப்பப்பட்ட குழியை காலியாக்குவது, பாதுகாப்பாகவும் மலிவாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது மனிதர்களே கழிவுகளை அகற்ற வேண்டியதன் அவசியத்தைத் தடுக்கிறது. இருப்பினும், இத்தகைய கழிப்பறைகளின் திறன் பற்றிய தவறான எண்ணங்கள், தனிநபர்கள் இரட்டை குழி கழிவறைகளை தவறாக மாற்றியமைத்து, பெரிய குழி உள்ள கழிப்பறைகளை உருவாக்க வழிவகுத்தன, அவை, அதிக செலவினம் மற்றும் பாதுகாப்பற்றவை. இது, மனிதர்களே கழிவுகளை அகற்றுதல் அல்லது திறந்த மலம் கழிக்கும் அபாயத்தைக் கொண்டு வருகிறது.
ஒன்றாக எடுத்துக்கொண்டால், ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களிலிருந்து படிப்பினைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நடத்தை மாற்றத்தைத் தூண்டுவது கழிவறை கட்டுமானத்திற்கும் பாதுகாப்பான பயன்பாட்டிற்கும் இடையிலான தொடர்ச்சியான இடைவெளியை மூடுவதற்கு உதவும், மேலும் இந்தியாவை திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நாடாக மாற்றும்.
(சதானந்த், தெற்காசியாவின் அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை நடவடிக்கை ஆய்வகத்தில் ஒரு கொள்கை மற்றும் பயிற்சி உதவியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.