பணக்கார நாடாக வளரும் இலங்கை; குறைந்த நடுத்தர வருவாய் நாடாகவே நீடிக்கும் இந்தியா
மும்பை: இந்தியா, மற்ற 46 நாடுகளுடன் குறைந்த நடுத்தர வருவாய் கொண்ட நாடாகவே தொடர்கிறது; அதே நேரம் இலங்கை, 2020 நிதியாண்டில் (FY) உயர் நடுத்தர வருவாய் குழுவிற்கு முன்னேறி உள்ளதாக, வருமான நிலைகளின் அடிப்படையில் நாடுகளை வகைப்படுத்திய, உலக வங்கியின் ஜூலை 1, 2019 அறிக்கை வெளியீடு தெரிவிக்கிறது.
இலங்கை, குறைந்த வருவாய் கொண்ட பிரிவில் இருந்து, 1999 நிதியாண்டில் குறைந்த நடுத்தர வருவாய் குழுவில் நுழைந்தது; இந்த ஆண்டு உயர்-நடுத்தர வருவாய் குழுவிற்கு செல்லும் முன், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ந்திருந்ததை, தரவுகள் காட்டுகின்றன. 2009 நிதியாண்டில் குறைந்த வருமானத்தில் இருந்து இந்தியா குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடாக மாறியது.
உலக வங்கி அட்லஸ் முறை எனப்படுவதைப் பயன்படுத்தி கணக்கிடப்பட்ட மொத்த தேசிய வருமானம் - ஜிஎன்ஐ (GNI) தனிநபர் (தற்போதைய அமெரிக்க டாலர்) அடிப்படையில் பொருளாதாரங்களை வகைப்படுத்துகிறது. வங்கி நான்கு வருவாய் குழுக்களைப் பயன்படுத்துகிறது: குறைந்த ($ 1,025 அல்லது அதற்கும் குறைவாக; ரூ.70,069 அல்லது குறைவாக), குறைந்த-நடுத்தர ($ 1,026 முதல் $3,995; ரூ.70,137 முதல் ரூ.2,73,098), அதிக நடுத்தர ($ 3,996 முதல், $3 12,375; ரூ.2,73,167 முதல் ரூ. 8,45,955) மற்றும் அதிக ($ 12,376 அல்லது அதற்கு மேற்பட்டவை; ரூ.8 ,46,023 அல்லது அதற்கு மேற்பட்ட) வருவாய் குழுக்கள்.
218 பொருளாதாரக் குழுக்களில், 80 உயர் வருவாய், 60 அதிக-நடுத்தரம், 47 குறைந்த-நடுத்தரம் மற்றும் 31 குறைந்த வருவாய் கொண்ட குழுவில் உள்ளன. வகைப்பாடு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் நாளில் புதுப்பிக்கப்படும். இந்த ஆண்டின் வகைப்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் ஜி.என்.ஐ. தனிநபர்- 2018 தரவை அடிப்படையாகக் கொண்டது.
இலங்கையை தவிர, 2019இல் வேறு ஆறு நாடுகள் - அர்ஜென்டினா, கொமொரோஸ், ஜார்ஜியா, கொசோவோ, செனகல் மற்றும் ஜிம்பாப்வே - வருமான நிலைகளின் அடிப்படையில், தங்களது வகைப்பாடுகளில் மாற்றங்களை கண்டுள்ளன. அதிக வருவாய் குழுவில் இருந்து உயர்நடுத்தர வருவாய்க் குழுவிற்கு நழுவிய ஒரே நாடு அர்ஜென்டினா. மற்ற நாடுகள் மேல் நோக்கி உயர்ந்துள்ளன.
Source: World Bank, 2019
வகைப்பாடுகள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன என்பதை இங்கே காணலாம்:
- ஒரு நாட்டின் ஜி.என்.ஐ தனிநபர் என்பது, பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், மாற்று விகிதங்கள் மற்றும் மக்கள்தொகையுடன் மாறக்கூடும். தேசிய கணக்கு முறைகள் மற்றும் தரவுகளுக்கான திருத்தங்கள் தனிநபர் ஜி.என்.ஐ யையும் பாதிக்கும்.
- சிறப்பு வரைதல் உரிமைகள் - எஸ்.டி.ஆர் (SDR) டிப்ளேட்டரை பயன்படுத்தி ஆண்டுதோறும் பணவீக்கத்திற்கு சரிசெய்யப்படும் வகைப்பாடு வரம்புகள்.
எஸ்.டி.ஆர் பணவீக்கம் காரணமாக கடந்த ஆண்டை விட வரம்புகள் அதிகரித்துள்ளன. ஜூலை 1, 2019 நிலவரப்படி புதிய வாசல்கள்:
Source: World Bank, 2019
உயர் வருமான வரம்பு 2018-19 முதல் கடன் விகிதங்களை நிர்ணயிக்கும் காரணியாகும், இதற்கு முன் வருமான வகைப்பாடுகள் கடன் விதிமுறைகளை பாதிக்கவில்லை. "தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக அதிக வருமானம் என வகைப்படுத்தப்பட்ட நாடுகளின் கடன் விகிதங்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறது," என்று உலக வங்கி வெளியீடு தெரிவித்துள்ளது.
இந்தியா, அதன் அண்டை நாடுகள் மற்றும் பிரிக்ஸ்
மாலத்தீவுகள் ($ 9,310 அல்லது ரூ. 6,36,432) மற்றும் இலங்கை ($4,060 அல்லது ரூ. 2,77,542) ஆகிய இரண்டு மட்டுமே, தெற்காசியாவின் உயர் நடுத்தர வருமானக் குழுவில் உள்ளன.
இந்தியா ($ 2,020 அல்லது ரூ.1,38,087), வங்கதேசம் ($ 1,750 அல்லது ரூ.1,19,630), பூடான் ($ 3,080 அல்லது ரூ. 2,10,549) மற்றும் பாகிஸ்தான் ($ 1,580 அல்லது ரூ.1,08,009) ஆகியவற்றுடன் குறைந்த நடுத்தர வருவாய்க் குழுவில் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் ($ 550 அல்லது ரூ. 37,598) மற்றும் நேபாளம் ($ 960 அல்லது ரூ. 65,626) ஆகியன குறைந்த வருவாய் பிரிவில் இடம் பெற்றுள்ளன.
Source: World Bank, 2019
சக வளரும் பொருளாதாரத்தில்- பிரிக்ஸ் நாடுகளில் குறைந்த நடுத்தர வருமானக் குழுவில் உள்ள ஒரே நாடு இந்தியா. மற்ற நாடுகளான பிரேசில் ($9,140 அல்லது ரூ. 6,24,810), ரஷ்யா ($ 10,230 அல்லது ரூ. 6,99,323), சீனா ($ 9,470 அல்லது ரூ. 6,47,369) மற்றும் தென்னாப்பிரிக்கா ($ 5,720 அல்லது ரூ. 3,91,019) ஆகியன - உயர் நடுத்தர வருவாய் குழுவில் இடம் பெற்றுள்ளன.
Source: World Bank
(மல்லபூர், இந்தியா ஸ்பெண்ட் மூத்த கொள்கை ஆய்வாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.