சத்தீஸ்கர் மாநில கிராமப்புற பெண்களின் வாழ்க்கை முறை ஸ்மார்ட் போன்களால் மாற வாய்ப்பு- ஆண்கள் குறுக்கிடாதவரை
ரிங்கினி கிராமம், துர்க் மாவட்டம் (சத்தீஸ்கர்): அது, சத்தீஸ்கர் மாநிலத்தின் தொலைதூர கிராமம். அங்குள்ள அரசு அலுவலகம் முன், ஆரஞ்சு நிற டோக்கனுடன் 200க்கும் மேற்பட்ட பெண்கள் வரிசையில் நிற்கின்றனர். அலுவலகத்திற்குள் நுழைந்து வெளிவரும் பெண்களிடம் டோக்கனுக்கு பதில் ஸ்மாட்ர்போன் உள்ளது. ஸ்மார்ட்போன் பெற்ற பூரிப்புடன் வரும் பெண்கள் வெளியே ஆங்காங்கே கூடி நின்று, அதை பயன்படுத்தும் முறை பற்றி தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.
இது, சத்தீஸ்கரின் ஒரு கிராமத்தில் மட்டும் அரங்கேறும் காட்சியல்ல. 2018 செப்டம்பர் முதல், மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் அரசு சார்பில் இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டு வருகிறது. சஞ்சார் கிராந்தி யோஜனா - ஸ்கை (SKY), அதாவது தொலைத்தொடர்பு புரட்சி திட்டம் என்ற பொருள்படும் இத்திட்டம், செப்டம்பர் இறுதிக்குள் 2.3 மில்லியன் கிராமப்புற பெண்களை எட்டியுள்ளது. அத்துடன் 3,00,000 கல்லூரி மாணவியர், 3,50,000 நகர்ப்புற பெண்களுக்கும் இத்திட்டத்தில் ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த தொலைத்தொடர்பு வசதி கிடைக்க ஏதுவாக, 1,500 தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைப்படவுள்ளன. இது பயனாளிகளுக்கு அதிகமான தொலைபேசி பயன்பாடு மற்றும் உரிமை தருவதை ஊக்குவிக்கிறது.
சத்தீஸ்கரில் குறைந்த செல்போன் பயன்பாடு என்ற குறையை போக்கவும், பெண்களுக்கு அதிகாரத்தை வழங்கும் வகையிலும் ஸ்கை திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தின்படி, இந்தியாவில் மொபைல்போன் பயன்பாடு குறைவாக, 45.6% என உள்ள நான்காவது மாநிலம் சத்தீஸ்கர்; இது, ஒட்டுமொத்த சராசரியைவிட 5% புள்ளிகள் குறைவாகும்.
Source: Financial Inclusion Insights, 2015-2016. Estimates pool years.
அதேநேரம் மொபைல்போன் உரிமையாளர் பாலின விகித இடைவெளி, இந்தியாவின் மிகக் குறைந்த ஒன்றாக, சத்தீஸ்கரில் 14.3% ஆக உள்ளது. இங்கு, 52% ஆண்களும், 38% பெண்களுமே மொபைல்போன் வைத்துள்ளனர். இந்தியாவின் ஒட்டுமொத்த சராசரியான 32.7% என்பது, இதைவிட இரு மடங்கு அதிகமாகும். இருப்பினும் உரிமத்தில் ஒப்பீட்டளவில் சிறிய பாலியல் இடைவெளி காலப்போக்கில் அதிகரிக்காது என்று பொருளல்ல. ஆண்கள் அதிகம் மொபைல்போன் வைத்திருக்கும் மாநிலங்களில் இந்த பாலின விகிதம் அதிக இடைவெளியில் உள்ளது.
இத்தருணத்தில் தான், மொபைல்போன் வைத்திருப்போர் பாலின விகித இடைவெளியை குறைக்கும் வகையில் சத்தீஸ்கர் அரசின் ஸ்கை திட்டம் பெரும் தூண்டுகோலாக அமைந்துள்ளது. (இந்த இடைவெளிக்கான காரணங்கள், விளைவுகள் குறித்த மேலும் புதிய விவரங்களுக்கு எங்கள் குழுவின் புதிய கட்டுரையை பார்க்கவும். இது, டியூக் பல்கலைக்கழக ஹார்வர்ட் கென்னடி கல்வி நிறுவனத்தின் கொள்கை வடிவமைப்பு சான்றுத்துறையின் ரோகிணி பாண்டே மற்றும் சாரிடி டிரெயர் மூர் மற்றும் தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சைமன் ஷானனர் தலைமையிலான குழு, இதை தயாரித்துள்ளது).
மொபைல்போன்களால் நன்மைகள்
சத்தீஸ்கர் அரசின் ஸ்கை திட்டத்தால்,மொபைல் ஈடுபாட்டுக்கு அப்பால் பெண்களுக்க் சாத்தியமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே மொபைல்போன்கள், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன என்று பல ஆராய்ச்சிகள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளன. உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே, சந்தை பொருட்களுக்கு சிறந்த விலையை அணுக, இது உதவுகிறது; வேலைவாய்ப்புகள் குறித்து அறியவும் உதவுகிறது. கென்யாவில், பொருளாதார அதிர்வை சந்தித்த குடும்பங்களில் மொபைல் பணம் வாயிலாக பாதிப்பு குறைந்துவிட்டது. எஸ்எம்எஸ் மற்றும் குரல் அழைப்புகள் மூலம் நிதி, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளின் செயல்பாடுகள் மேம்பட்டுள்ளன.
மொபைல்போன் அணுகல் பெண்களுக்கும், மற்றவர்களுக்குமான மதிப்பை உயர்த்துவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. கென்யாவின் மொபைல்போனில் நிதிச்சேவை வழங்கும் எம்-பேசா, அங்குள்ள குடும்பங்களை ஏழ்மையில் இருந்து 2% உயர்த்தியுள்ளதாக, ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. பெண்களை தலைவராக கொண்ட குடும்பங்களில் பயன்பாடு அதிகரித்து மொபைல்போன் வாயிலாக பணம் பெற்று பெண்கள் கூடுதல் பலன் அடைகின்றனர். நைஜீரிய ஆய்வின்படி, பணத்திற்கு பதில் மொபைல்போன் வாயிலாக நிதி பரிமாற்றம் செய்வதால் வீடுகளில் உணவு முறை, தரம் முன்னேறியிருப்பதாகவும், வீடுகளில் பேரம் பேசும் அவர்களின் திறன் மேம்பட்டிருப்பதாகவும் கூறுகிறது.
தற்போதைய ஆராய்ச்சியில் இம்முடிவு, பரந்த அளவிலான கண்டுபிடிப்பை எதிரொலிக்கிறது: பெண்களுக்கு அதிகாரத்துடனான சொத்து என்பது பொருளாதார வளர்ச்சிக்கு மதிப்புடையது. வளங்களை பெண்கள் அணுகும் போது குழந்தைகளும் அவற்றைப் பயன்படுத்துவதாக, ஆய்வுகள் காட்டுகின்றன. உதாரணமாக, தென் ஆப்ரிக்காவில் பெண் தலைமையுள்ள குடும்பங்களில் ஓய்வூதிய நலனுக்கான அணுகல்கள், பெண்களுக்கான ஊட்டச்சத்து மேம்பாட்டுக்கு வழிவகுத்துள்ளது. பிரேசிலில் உள்ள குடும்பங்களிலும் இதே ஒற்றுமையை பார்க்க முடிகிறது; இங்கு, பெண்களின் வருவாய் உள்ள குடும்பங்களில் குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கு வாய்ப்புள்ளது. அவர்களுக்கான ஊட்டச்சத்துக்கு முதலீடு, ஓய்வு நேர மற்றும் மனித மூலதன வாய்ப்புகள் கிடைக்கிறது.
இதேவழியில், தங்களது குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக சத்தீஸ்கர் பெண்களும், ஸ்கை திட்ட மொபைல்போன்களை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். மேலும், தொழில்நுட்பத்துடன் பெண்கள் முன்னேறுவது, ஒரு உன்னதமான முயற்சியாகும், அத்துடன், ஆண் பயனாளிகளை விட பெண் பயனாளிகளை இலக்காகக் கொண்ட ஸ்கை திட்டத்தின் மதிப்பை உயர்த்திக் காட்டுகிறது.
ஆண் ஏகாதிபத்தியம்- ஒரு பிரச்சனை
பெண் பயனாளிகளை இலக்காக ஸ்கை திட்டம் கொண்டிருப்பதிலும் ஒரு எச்சரிக்கை தேவைப்படுகிறது: பயனாளிகள் அவற்றை பயனுள்ளதாகவும் பொருத்தமானதாகவும் கருதினாலும், பரிமாற்றம் மட்டுமே பயன் தரத்தக்கதாக இருக்கும். பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா (PMJDY) அல்லது பிரதமரின் மக்கள் நலத்திட்டத்தின் சமீபத்திய அனுபவம், இது விளக்குகிறது.
ஒவ்வொரு வீட்டிலும் குறைந்ததது ஒருவர் வங்கி கணக்கை வைத்திருக்க வேண்டும் என்பது, பி.எம்.ஜே.டி.ஒய். திட்டத்தில் நோக்கம். எனினும், போதிய நிதி சேர்ப்பு இல்லாததால், பி.எம்.ஜே.டி.ஒய் திட்டத்தில் தொடங்கப்பட்ட பல வங்கி கணக்குகள் பயனற்றதாகவே உள்ளன. பொருளாதார ரீதியாக திட்டத்தின் தாக்கங்களை உணர, தங்களுக்க் வங்கிக் கணக்கு எதற்கு என்பதை பயனாளிகளுக்கு புரிய வைக்க வேண்டும்; பயன்படுத்தும் முறையை தெரியப்படுத்த வேண்டும். வேறுவிதமாக கூறினால், அளவிடுவதற்கு பொருந்தும் மெட்ரிக் முறை நிதி சேர்க்கும் கணக்கில் உள்ள மக்களின் எண்ணிக்கையில் இல்லை.
அதேபோல் ஸ்கை திட்ட பயனாளர்கள் மொபைல்போனை பயன்படுத்தவில்லை என்றாலோ, அவற்றை பயன்படுத்தும் திறனை பெறாவிட்டாலோ, பாலின இடைவெளியை குறைக்கும் இத்திட்டத்தின் முயற்சி தோல்வியுறும்; பயன்களை பெண்கள் பெற இயலாமல் போய்விடும். இதில் உள்ள மற்றொரு சிக்கல், வங்கிகள் போல் அல்லாமல் கணக்கை எளிதில் மொபைல் போனில் பரிமாற்றம் செய்யலாம் என்பது, தெற்காசிய நாடு கலாச்சாரத்திற்கே ஆண்கள் பெரும்பாலும் சொத்துகளின் உரிமையை கட்டுப்படுத்துவர்.
ஒரு பெண் தனது மொபைல்போன் பயனுள்ளதாக கருதினாலும், அதை எப்படி பயன்படுத்துவது என்று அவருக்கு தெரிவதில்லை. இதனால், மொபைல்போன் தொழில் நுட்பம் தெரிவதை சாதகமாக்கி அவரது கணவர் ஏகபோக ஆதிக்கம் செலுத்தலாம். இது, ஸ்கை திட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவுக்கான பயிற்சியின் அவசியத்தை உணர்த்துகிறது. ஏழைகள் பயனுறும் வகையில் பெரிய அளவில் பயிற்சி அளிக்க வேண்டியதன் முக்கியத்துவதை இது காட்டுகிறது.
(சவண்ணா நொரே, ஹார்வர்ட் கென்னடி கல்வி நிறுவனத்தின் கொள்கை வடிவமைப்பு ஆதாரம் தொடர்பான ஆராய்ச்சியாளர்.)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.