புதுடெல்லி: அரிசி உற்பத்தியின் முக்கிய பகுதியாக இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்கள் சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் ஆகியவற்றை மாற்றுவதன் மூலம் நெல் சாகுபடி நடக்கும் பஞ்சாப், ஹரியானாவின் நிலையான நீர்ப்பாசனம் மூலம் கோதுமை சாகுபடியை ஊக்குவிக்கலாம்; அதே வேளையில், 2030இல் எதிர்கொள்ளவிருக்கும் நீர் நெருக்கடிகளை தடுக்க இந்தியாவுக்கு உதவ முடியும் என, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி -நபார்ட் (NABARD) மற்றும் சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்த இந்திய ஆராய்ச்சி கவுன்சில் - ஐ.சி.ஆர்.ஐ.இ.ஆர் (ICRIER) ஆகியவற்றின் 2018 ஆய்வு தெரிவிக்கிறது. 2030 ஆண்ட்ல் நீர் தேவை இரு மடங்கு அதிகரிக்கும் என்று மார்ச் 2019 வாட்டர் எய்ட் இந்தியா அறிக்கை காட்டுகிறது.

திறமையற்ற பயிர் முறைகள் நிலத்தடி நீர் இருப்புக்களை பாதித்துள்ளன; அவை கடந்த நாற்பது ஆண்டுகளில் நீர்ப்பாசன பரப்பளவில் சுமார் 84% க்கு தண்ணீரை வழங்கியுள்ளது என, ‘முக்கிய இந்திய பயிர்களின் நீர் உற்பத்தித்திறன் வரைபடம்’ என்ற தலைப்பில் நபார்ட் மற்றும் ஐ.சி.ஆர்.ஐ.இ.ஆர் ஆய்வு கூறியது. இந்தியாவின் மிக முக்கிய இரண்டு உணவுப் பயிர்களான அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றுக்கு அதிக நீர் தேவைப்படும்; ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய சராசரியாக 2,800 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது; ஒரு கிலோ கோதுமைக்கு 1,654 லிட்டர் வேண்டும் என, வாட்டர் எய்ட் இந்தியா’வின் “மேற்பரப்புக்கு அடியில்: உலகின் நீர் 2019 ’அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் அரிசி மற்றும் கோதுமை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் வட மேற்கில் உள்ள பஞ்சாப், ஹரியானா - நபார்டு மற்றும் ஐ.சி.ஆர்.ஐ.ஆர் அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த அரிசி உற்பத்தியில் கிட்டத்தட்ட 15% பங்களிப்பு செய்கிறது - மற்றும் கங்கை சமவெளியில் மேற்கு உத்தரப்பிரதேசமும் விவசாய உற்பத்திக்கான உலகின் அதிகபட்ச நீர்-ஆபத்து மண்டலங்களில் ஒன்றாகும்; மற்றவர்கள் வடகிழக்கு சீனா மற்றும் தென்மேற்கு அமெரிக்கா என்று வாட்டர் எய்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலப்பரப்பில் 42% தற்போது வறட்சியை எதிர்கொண்டுள்ள நிலையில், பஞ்சாபின் மாவட்டங்களில் 88.11% மற்றும் ஹரியானாவின் 76.02% வறட்சி தடுப்பு தன்மையை கொண்டுள்ளதாக, ஜர்னல் ஆஃப் ஹைட்ராலஜி வெளியிடப்பட்ட 2018 ஆய்வு கூறுகிறது. நீர்ப்பாசனம் மற்றும் மின்சார உள்கட்டமைப்பில் விரிவான முதலீடுகள் மற்றும் நீர் மற்றும் மின் நுகர்வுக்கான அரசு மானியங்கள், ஒரு காலத்தில் பஞ்சாப் பாலைவனமாக இருந்தது என்ற உண்மையை மூடிமறைத்துள்ளது.

"பஞ்சாப் இன்றைய நிலையில் இருப்பது 100-150 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தான் என்பது எங்களுக்கு தெரியும். 1800 கள் வரை இது, நாடோடிகள் வசிக்கும் ஒரு பாலைவனமாக இருந்தது,” என்று பொருளாதார நிபுணரும், பொது கொள்கை வகுப்பாளரும், குஜராத் மாநிலம் ஆனந்தில் உள்ள கிராம மேலாண்மை நிறுவன முன்னாள் இயக்குனருமான துஷார் ஷா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். “இப்போது மக்கள் குழாய் மூலம் நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் தனியாரை நம்பி உள்ளனர்; இவை, கால்வாய் நீரால் செறிவூட்டப்படுகிறது. ராஜஸ்தானை போல் அல்லாமல் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், 100% நீர்ப்பாசனம் உள்ளது (இது 0% வறட்சியைத் தடுக்கும் பகுதியை கொண்டுள்ளது), இதுவே வறட்சியைத் தணிக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.

பாலைவனமாக இருந்த பஞ்சாப், இப்போது தண்ணீரை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உள்ளது. விவசாய ஏற்றுமதிக்கு இந்தியா அதிகளவில் நிலத்தடி நீரைப் பயன்படுத்துகிறது; இதனால் நிலத்தடி நீரை பயன்படுத்தும் மூன்றாவது பெரிய இடமாக இது உள்ளது - உலகளாவிய மொத்த அளவில் 12% - என வாட்டர் எய்ட் இந்தியா அறிக்கை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நிலத்தடி நீரின் தற்போதைய தொடர் பயன்பாட்டின் மூலம், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள், அடுத்த 25 ஆண்டுகளில் மீண்டும் பாலைவனமாக மாறக்கூடும் என்று மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் (வடமேற்கு பகுதி) வரைவு அறிக்கை எச்சரிக்கையை சுட்டிக்காட்டி, தி ட்ரிப்யூன் 2019 மே 13 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2014-15 ஆம் ஆண்டில், இந்திய விளை நிலங்கள், 10 டிரில்லியன் லிட்டர் தண்ணீரை 3.7 மில்லியன் டன் பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்காக நுகர்வு செய்தன. கிட்டத்தட்ட அந்த அளவு தண்ணீரை அவை உறிஞ்சியுள்ளன. 100 கோடி மக்கள் தண்ணீய்ர் பற்றாக்குறையுடன் வாழ்ம் ஒருநாட்டில், இது கவலைக்குரியது; மேலும் 60% பேர் கடும் தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

வடமேற்கில் கோதுமை, மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களில் அரிசி சாகுபடி செய்யலாம்

இந்தியாவின் மொத்த பயிர் பரப்பளவில் 60% க்கும் அதிகமான ஆக்கிரமித்துள்ள 10 முக்கிய பயிர்களின் சாகுபடி முறைகளை, பாரம்பரியமாக கருதப்படும் பயிர் உற்பத்தித்திறனில் யூனிட்டிற்கு எவ்வளவு அதிகரிக்க முடியும் என நபார்ட் மற்றும் ஐ.சி.ஆர்.ஐ.இ.ஆர். இன் ஆய்வானது பகுப்பாய்வு செய்தது.

இந்தியாவின் 640 மாவட்டங்களில் உற்பத்தி, காலநிலை மற்றும் நீர் பற்றிய தரவுகள் மூலம், இந்த ஆய்வு நீர் உற்பத்தித்திறனை கண்டது. (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி; மாவட்டங்கள் பின்னர் 718 ஆக பிரிக்கப்பட்டன). இது மூன்று வெவ்வேறு அளவீடுகள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது: உடல்சார்ந்த நீர் உற்பத்தித்திறன் (PWP), இது ஒரு யூனிட் தண்ணீருக்கான பயிர் உற்பத்தியாகும்; அடுத்து, நீர்ப்பாசன நீர் உற்பத்தித்திறன் -ஐ.டபிள்யூ.பி (IWP), இது விவசாயி பயன்படுத்தும் பாசன நீரில் உற்பத்தியாகும் உற்பத்தியாகும்; மற்றும்பொருளாதார நீர் உற்பத்தித்திறன் -ஈ.டபிள்யூ.பி (EWP), இது மழைப்பொழிவு அல்லது நீர்ப்பாசனம் மூலம் பயிரால் நுகரப்படும் ஒரு யூனிட் தண்ணீருக்கு பயிர் உற்பத்தியின் மதிப்பு ஆகும். இவை ஒவ்வொன்றும் நில உற்பத்தித்திறனுடன் ஒப்பிடுகையில், தற்போதுள்ள பயிர் முறை பல்வேறு பகுதிகளின் இயற்கையாகவே கிடைக்கும் நீர்வளங்களுடன் ஒத்துப்போகிறதா, இவை நீரியல் ரீதியாக நிலையானதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மிக உயர்ந்த அளவில் அரிசி உற்பத்தித்திறனை (ஹெக்டேருக்கு 4 டன்) கொண்டிருக்கும் வேளையில், இந்த மாநிலங்களுக்கான ஐ.டபிள்யூ.பி 0.22 கிலோ / மீ 3 ஆக குறைவாக உள்ளது, அவை கிட்டத்தட்ட 100% நீர்ப்பாசனம் வைத்திருந்தாலும், திறமையற்ற நீர்ப்பாசன பயன்பாட்டை பிரதிபலிக்க ஊக்குவிக்கப்பட்டன; பஞ்சாப் அரசின் இலவச மின்சாரக் கொள்கையால் விவசாயிகள் நிலத்தடி நீரை போர்வெல்களை செலுத்த உதவுகிறது.

இதற்கு மாறாக, மழைக்கால சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் ஆகியன முறையே 32% மற்றும் 3% நீர்ப்பாசன தழுவலை கொண்டிருந்தாலும், அவை அதிக அளவு ஐ.டபிள்யு.பி.- 0.68 கிலோ / மீ 3 மற்றும் 0.75 கிலோ / மீ 3 கொண்டுள்ளன. நீர்ப்பாசன அளவு குறைவாக இருப்பதால் இங்குள்ள நில உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது; இருப்பினும் நீர்நிலை ரீதியாக இப்பகுதி நெல் சாகுபடிக்கு ஏற்றது.

இந்த மாநிலங்களில் விவசாயத்திற்கு குறைந்த மின்சாரம் வழங்குவதோடு நெல்லின் வளர்ச்சியடையாத கொள்முதல் கொள்கை என்பது நெல் சாகுபடியிலிருந்து குறைந்த லாபத்தைக் குறிப்பதாக, நபார்ட் மற்றும் ஐ.சி.ஆர்.ஐ.இ.ஆர் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த பிராந்தியத்தில் நிலத்தடி நீர் செலவுகளும் மிக அதிகம், மேலும் விவசாயிகள் தண்ணீரை பம்ப் செய்ய டீசலை நம்பியிருக்க வேண்டும், இது மின்சார செலவுக்கு இரண்டு முதல் மூன்று மடங்கு ஆகும்.

"மேற்கு இந்தியாவில் நிலத்தடி நீர் நெருக்கடி கிட்டத்தட்ட முற்றிலும் மானியங்களால் ஏற்படுகிறது," என்று, ஷா விளக்கினார். "கிழக்கு இந்தியாவில், நிலத்தடி நீர் மாற்றப்படாத எந்தவொரு தொகுதிகளையும் நீங்கள் காண முடியாது, ஏனென்றால் மின்சாரம் அல்லது நீர்ப்பாசனத்திற்கு எந்தவிதமான மானியங்களும் இல்லை, விவசாயிகள் தண்ணீரைப் பயன்படுத்துவதில் மிகவும் சிக்கனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்" என்றார் அவர். சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் இப்போது மழைநீர் சேகரிப்பு, நீர்ப்பாசன தொட்டிகளை வறண்டு போடுவது, நீர்நிலை திட்டமிடல் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை நிரப்ப விவசாய குளங்களை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளில் முதலீடு செய்யப்படுவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும், கோதுமையைப் பொறுத்தவரை, பஞ்சாபில் 1.22 கிலோ / மீ 3 என்ற மிக உயர்ந்த ஐ.டபிள்யூ.பி உள்ளது, அதைத் தொடர்ந்து ஹரியானா 1.05 கிலோ / மீ 3 ஆகும், மேலும் இப்பகுதியில் சாகுபடிக்கு ஏற்றது. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் வறண்ட பகுதிகளில் குறைந்த ஐ.டபிள்யூ.பி (முறையே 0.53 கிலோ / மீ 3, 0.63 கிலோ / மீ 3 மற்றும் 0.71 கிலோ / மீ 3)இந்த மாநிலங்களில் கோதுமை சாகுபடி நீர் அழுத்தத்தை அதிகரிக்கும்.

கொள்முதல் கொள்கையில் மாற்றம் & சிறந்த குறைந்தபட்ச ஆதார விலை

கொள்முதல் கொள்கையில் ஒரு உத்தி மாற்றம் அதிகப்படியான நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் திறனற்ற பயிர் நடைமுறைகளைச் சமாளிக்கும் என்று நபார்ட் & ஐ.சி.ஆர்.ஐ.இ.ஆர் அறிக்கை பரிந்துரைத்தது.

வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள விவசாயிகள் நிலத்தடி நீர்மட்டம் குறைவதை அறிந்திருந்தனர், மேலும் அரிசி மற்றும் கோதுமைக்கு தருவது குறைந்தபட்ச ஆதாரவிலையை அரசு வழங்கினால், மக்காச்சோளம் அல்லது பருப்பு வகைகள் போன்ற நீர்-திறனுள்ள பயிர்களுக்கு மாறத் தயாராக இருந்தனர்.

பருப்பு வகைகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை - எம்.எஸ்.பி.(MSP) உண்மையில் 2017 இல் அதிகமாக இருந்தபோதும், உறுதியான கொள்முதல் விலை கிடைப்பது, விவசாயிகளை தொடர்ந்து தண்ணீர் தேவைப்படும் பயிர்களை பயிரிடத் தூண்டுகிறது. 2017-18 ஆம் ஆண்டில் பொதுவான மற்றும் கிரேடு ஏ வகை நெல்லுக்கு எம்எஸ்பி முறையே குவிண்டால் ஒன்றுக்கு ரூ .1,550 ஆகவும், குவிண்டால் ரூ .1,590 ஆகவும் இருந்தது. பருப்பு பயிர்களில், இது துவரம் பருப்பு (பிஜியன் பருப்பு) குவிண்டால் ஒன்றுக்கு ரூ .5,250; பச்சை பயிறு (மூங்க்) ஒரு குவிண்டால் ரூ .5,375 மற்றும் உளுந்துக்கு (உராத்) குவிண்டால் ரூ .5,200. கிழக்கு மாநிலங்களில், நெல் விலை பெரும்பாலும் எம்.எஸ்.பி-யை விட 10% முதல் 25% வரை குறைவாக இருக்கிறது; இது பஞ்சாப்-ஹரியானாவில் உள்ள சக விவசாயிகளுடன் ஒப்பிடுகையில் இலாபங்களை விவசாயிகளுக்கு இழக்கிறது.

விவசாயிகளின் வாங்கும் திறனை மேம்படுத்துவதற்காக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடி நல உதவி பரிமாற்றம், நீர் மற்றும் மின்சாரம் மீதான விலை அடிப்படையிலான மானியங்களுக்கு பதிலாக மாற்றப்பட்டது, நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்துவதால், விவசாயிகளை பயனுள்ள பயிர் முறைகள் மற்றும் நிலையான நீர்ப்பாசன நடைமுறைகளுக்கு இழுக்கக்கூடும். இதற்கு அவசியமான, சரியான நேரத்தில் தண்ணீர் மற்றும் மின்சாரம் முன்நிபந்தனைகளாக தேவைப்படும் என்று நபார்ட் & ஐ.சி.ஆர்.ஐ.இ.ஆர் அறிக்கை நிறைவு செய்துள்ளது.

(ஆபிரகாம் டெல்லியைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர். இந்திய மனித குடியேற்ற நிறுவனத்தின் நகர்ப்புற பணியாளர்; இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.