சீதாபூர், உத்தரபிரதேசம்: சர்ளா தேவியின் மண் வீட்டில், உணவு பதார்த்தங்களுடன் கூடிய பெரிய பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. ஏனெனில் அவரது திருமணத்திற்கு 200 விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். வெள்ளை அடிக்கப்பட்ட மண்பானைகள் - கடவுளுக்கு படையலிடும் சடங்கிற்காக - சர்ளா தேவி உட்கார வைக்கப்பட்டிருந்தார். இன்னும் 16 வயதை கடந்ததாக தெரியவில்லை; ஐந்தாம் வகுப்பைக்கூட தொடராத அவர், சீதாபூரின் மூன்றில் ஒரு பங்கு சிறுமியரில் இணைந்திருக்கிறார்.

உத்தரபிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் - இங்கு 20-24 வயதுடைய 35.5% பெண்கள், 18 வயதை அடைவதற்கு முன்பு திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் - உள்ள சர்லா தேவியின் வீட்டிற்கு வெளியே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.

இங்கே மாநில தலைநகர் லக்னோவில் இருந்து 90 கி.மீ வடக்கே உள்ள தியோகாலி கிராமத்தில் இருக்கும் சர்ளா தேவிக்கு, தாம் சட்டத்தை மீறி இருக்கலாம் என்பது தெரிந்திருக்கவில்லை. ஒருவேளை அவருக்கு இல்லாமல் இருக்கலாம். அவர் 17 அல்லது 18 வயதாக இருக்கலாம் என்று கணக்கிட்டாலும், வயது அல்லது அடையாளத்தை நிரூபிக்க அவரிடம் எந்த ஆவணமும் இல்லை.

18 வயதிற்கு முன் திருமணமான 20-24 வயதுடைய சீதாபூர் பெண்களின் விகிதம் 2016 ஆம் ஆண்டில் 35.5% ஆக இருந்தது; இது இந்தியாவின் சராசரி 26.8% ஐ விடவும், உத்தரப்பிரதேசத்தின் சராசரியான் 21.2% ஐ விடவும் அதிகமாக உள்ளது; இந்த விஷயத்தில் மாநில தரவரிசையில் இது ஆறாவது இடத்தில் உள்ளது. உலகில் 70 கோடி குழந்தை மணப்பெண்களில் கிட்டத்தட்ட பாதி (42%) பேர் தெற்காசியாவில் வாழ்கின்றனர்; இவர்களில் மூன்றில் ஒருவர் இந்தியாவில் உள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் - யுனிசெப் (UNICEF) 2015 ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. சீதாபூர் ஒரு "உயர் முன்னுரிமை மாவட்டம்" என வகைப்படுத்தப்பட்டு உள்ளது; இது உத்தரபிரதேசம் (உ.பி.) முழுவதும் 19 மற்றும் இந்தியா முழுவதும் 184, குழந்தை திருமணம் மற்றும் பதின்பருவ கர்ப்பத்தை குறைக்க சிறப்பு கவனம் செலுத்துகிறது.

சர்ளா தேவி மேல்நிலை பள்ளி வகுப்பில் சேர்த்திருந்தால், அவள் திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்பு ஆறு மடங்கு குறைவாக இருந்திருக்கும். சிறுமிகளை பள்ளியில் தக்கவைத்துக்கொள்வது குழந்தை திருமணத்தைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி ஆகும். குழந்தை மணப்பெண்கள் சீக்கிரமஏ கர்ப்பம் அடையும் அபாயத்தில் உள்ளனர்; அதிக எடை கொண்ட குழந்தைகளை பெறுகிறார்கள்; முன்கூட்டியே இறந்து ஒட்டுமொத்த பொருளாதார முன்னேற்றத்தை குறைப்பதாக, ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியபடி யுனிசெப் அறிக்கை தெரிவிக்கிறது.

பக்கத்து கிராமமான தல்கானை சேர்ந்த 20 வயது தீபு குமாரை திருமணம் செய்ய ஆயத்தமாக இருந்த சர்ளா தேவி, தனது ஆறு அல்லது ஏழு வயதில் புற்று நோயால் இறந்த தாயின் நினைவுகூட தெளிவாக இல்லை என்றார். ஆறு பேரைக் கொண்ட குடும்பத்தை அவரது தாய் இல்லை என்ற சூழலில் வீட்டு வேலைக்காக சர்ளா தேவி பள்ளியை விட்டு நிறுத்தப்பட்டார். சீதாபூரில் உள்ள 8,00,000 வீடுகளில், 2.9% பேர் மட்டுமே குறைந்தபட்சம் ஒரு சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஒருவராவது உறுப்பினராவது உள்ளனர்.

அவரது தாயார் உயிருடன் இருந்திருந்தால் சர்ளா தேவியின் தலைவிதி வேறுபட்டிருக்குமா என்று சொல்வது கடினம்.

ஏனெனில் அவரது தாயார் 13 வயதில் திருமணம் செய்து கொண்டவர் மற்றும் சர்ளா தேவி ஆரம்பகால திருமண சுழற்சிக்குள் சிக்கும் போது, அவரது தங்கைக்கும் அதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.

"நான் திருமணம் செய்துகொண்டு வெளியேறும்போது, நான் செய்த எல்லா வேலைகளையும் என் தங்கை செய்வார்," என்று அவர் கூறினார். அவர் திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட ஒரு காரணம் என்னவெனில், குடும்பத்தை - இரு இளைய உடன் பிறப்புகள், தந்தை மற்றும் தாத்தா பாட்டி ஆகியோரை கவனிப்பதில் இருந்து கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் என்றார்.

சர்ளா தேவியின் நிலைமை அவரது சொந்த வாழ்க்கையிலும், அவரை போன்ற பெண்களின் வாழ்க்கையிலும், தற்போதுள்ள 2.61 டிரில்லியன் டாலர்கள் என்பதை 2025இல் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும் லட்சியம் கொண்டுள்ள இந்தியாவிற்கும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியப் பெண்களையும் இந்தியாவையும் தடுத்து நிறுத்துதல்

இந்தியாவின் தொழிலாளர் தொகுப்பில் ஆறு ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட குறைவான பெண்கள் - 2011-12இல் 25% உடன் ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் 18% க்கும் அதிகமானோர் மற்றும் நகர்ப்புறத்தில் 15%இல் இருந்து 14% - என குறைவான பெண்களே பணியாற்றி வருகின்றனர்; குழந்தை திருமணம் பெண்களையும் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நிபுணர்கள் விளக்கினர்.

"குழந்தை திருமணங்கள் இரு பாலினத்தையும் பலவீனப்படுத்துகின்றன; ஆனால் குறிப்பாக பெண்களுக்கு அதிகம்," என இங்கிலாந்தில் மான்செஸ்டர் பல்கலைக்கழக அபிவிருத்தி பொருளாதாரத்துறை பேராசிரியரும், இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீயை வென்றவருமான பினா அகர்வால் கூறினார்.

ஒரு குழந்தை மணமகள் தான் திருமணத்தில் பாதிக்கப்படக்கூடியவர்; அவரால் தனது வாழ்க்கை துணை பற்றி தகவலறிந்து தேர்வு செய்ய இயலாது. பள்ளி படிப்பு முடிக்க, பெற்றோரின் சொத்து உரிமைகோருதல் அல்லது “ஒரு முழு குடிமகனாக செயல்பட” முடியாது என்று அகர்வால் கூறினார்.

"ஆரம்பகால கர்ப்பம் என்பது அவரது ஆரோக்கியத்தையும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்; ஒரு தாயாக அவரது திறன்களை குறைத்து மதிப்பிடச் செய்யும்" என்று அகர்வால் கூறினார். "முறையான கல்வி இல்லாவிட்டால், அவர் திறமையற்ற மற்றும் வேலையின்மையை எதிர்கொள்ள நேரிடும். மேலும் வேலை செய்ய விரும்பினாலும் வேலை கிடைக்காமல் தவிக்கும் பெண்களின் உயர்ந்து வரும் விகிதத்தை அதிகரிக்கும்" என்றார்.

நாட்டைப் பொறுத்தவரை, இது தொழிலாளர்களின் திறமை மற்றும் உற்பத்தியை கடுமையாக வீணாக்கும். ஏராளமான குழந்தை திருமணங்களின் அடிப்படையில், இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பு அதிகமானது” என்றார் அவர்.

சர்ளா தேவி தனது திருமணத்தின் போது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் யாரும் பள்ளி படிப்பு முடிக்கவில்லை என்று இந்தியா ஸ்பெண்ட்டிடம் சர்ளா கூறினார், அதேபோல் 83.6% சீதாபூரின் பெண்கள், மேல்நிலைப்பள்ளிக்கு செல்லாதவர்கள்.

மேல்நிலைக் கல்வி கற்ற சிறுமியர், கல்வி கற்காக சிறுமிகளை விட சிறுவயது திருமணம் செய்வதற்கான வாய்ப்பு ஆறு மடங்கு குறைவாக உள்ளது. மேலும் குழந்தைத் திருமணத்தின் விளைவுகளில் இருந்து சிறுமியரை பாதுகாப்பதில் தரமான கல்வியைத் தொடர்ந்து பெறுவது மிக முக்கியமானது என, ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் 2014 அறிக்கை கூறியது.

இந்த கண்டுபிடிப்புகள் சீதாபூரில் உள்ள இளம் பெண்களின் வாழ்க்கையின் மூலம் உயிர்ப்பிக்கப்படுகின்றன.

சீதாபூரில் குழந்தை திருமணம் ஏன் அதிகம்

சீதாப்பூர் மாவட்டம் உத்தரப்பிரதேசத்தின் எட்டாவது அதிக மக்கள் தொகை கொண்டது. கல்வியறிவில், 75 மாவட்டங்களில் 59 வது இடத்தில் உள்ளது; 61% கல்வியறிவு கொண்டது. இது, மாநில சராசரியான 67.7% ஐ விட குறைவாகும் என, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது.

பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்கள் அதிகமாகவும், கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான அணுகல் குறைவாகவும் உள்ள சமூகங்களில் குழந்தை திருமணம் பரவலாக உள்ளது என ஆலோசனை அமைப்பான நிரந்தர் அறக்கட்டளையின் 2015 அறிக்கை தெரிவிக்கிறது. இது, ஏழைளை விட பணக்கார பெண்கள் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது என்று கூறுகிறது.

குழந்தை திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தேசிய கருவுறுதல் வீதத்தை சராசரியாக 11% குறைக்கக்கூடும் என்று, உலகளாவிய ஆராய்ச்சி அமைப்பான பெண்கள் குறித்த சர்வதேச ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது, 18 வயதிற்கு முன் திருமணமான பெண்கள், நீடித்த கருவுறுதல் காலத்தைக் கொண்டிருப்பதாக கூறியது; இது, முன்கூட்டிய மற்றும் பல கர்ப்பங்கள், அதிக தாய்வழி இறப்பு மற்றும் அதிக குழந்தை இறப்புக்கு வழிவகுக்கிறது.

"12-14 வயதில் பெண்கள் திருமணம் செய்துகொள்வது இங்கே ஒரு பொதுவான நிகழ்வு" என்று இலாப நோக்கற்ற அமைப்பான, இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் வளரிளம் பருவ சுகாதார திட்ட சீதாபூர் தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் கோமல் பாத்து கூறினார். "ஒரு பெண் திருமணமாவது தான் தனக்கு பாதுகாப்பானது என்று கருதப்படுவதற்கான நிலை உள்ளது” என்றார். குடும்பத்தில் வறுமை அல்லது மரணத்தால் ஒரு பெண் குழந்தை மிகவும் பாதிக்கப்படுகிறது ஏனெனில் அவர், பொறுப்புகளுடன் எடைபோடப்படுகிறார் மற்றும் கல்வியை அவர் கைவிட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

இளம் வயது பெண் திருமணம், பெண்ணின் குடும்பத்திற்கு குறைந்த வரதட்சணையை குறிக்கிறது என்று பாத்து கூறினார். "18 வயதிற்கு முன்னர் பெண்கள் திருமணம் செய்வது தண்டனைக்குரியது என்பதை இன்று மக்கள் அறிவார்கள்," என்றார் அவர். "(ஆனால்) இது கலாச்சாரத்தில் உள்ளார்ந்ததாகும் (மேலும்) மக்கள் இதுபோன்ற செயலை சட்டவிரோதமாக செய்வார்கள்".

இந்த அணுகுமுறைகள் இந்தியாவின் பெரிய பகுதிகளில் இன்றும் நிலவுகின்றன, அங்கு குழந்தை திருமண விகிதம் குறைந்துள்ளது, ஆனால் அது அவ்வளவு வேகமாக இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் 644 மாவட்டங்களில், 330 மாவட்டங்களில் தேசிய சராசரியை விட குழந்தை திருமணம் அதிகமாக உள்ளது. அதிக பாதிப்பு உள்ள முதல் 10 மாவட்டங்களில், ஏழு ராஜஸ்தானிலும், ஒன்று உத்தரப்பிரதேசத்திலும் உள்ளது.

Source: National Commission for the Protection of Child Rights, 2017, Statistical Analysis of Child Marriage in India

குழந்தை திருமணத்தை நிறுத்த போராடும் இந்தியா

இந்தியாவின் குழந்தை திருமண விகிதம் கினியா மற்றும் எத்தியோப்பியாவை போலவே மோசமானது; இது புர்கினா பாசோவை - மூன்று ஆப்பிரிக்க நாடுகளும் இந்தியாவை விட ஏழ்மையானவை - விட மோசமானது மற்றும் குழந்தை திருமணத்தின் அதிக விகிதங்களைக் கொண்ட 10 நாடுகளில் ஆறாவது இடத்தில் உள்ளது.

உலகம் முழுவதும் உள்ளது போலவே இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் குறைந்து வருகின்றன; ஆனால் மெதுவாக உள்ளது. இந்தியாவில் பெண்களின் சராசரி திருமண வயது 2001ஆம் ஆண்டில் 18.2 ஆக இருந்து 2011இல் 19.2 ஆக உயர்ந்தது; இது ஆண்களுக்கு, 2001ஆம் ஆண்டில் 22.6 ஆக இருந்து, 2011இல் 23.5 ஆக உயர்ந்தது என, குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் - என்.சி.பி.சி.ஆர் (NCPCR) 2017 அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவினுள், உத்தரப்பிரதேசத்தின் ஆறு மாவட்டங்களில் குழந்தை திருமணம் நடைபெறுகிறது; இது தேசிய சராசரியான 26.8% ஐ விட இரண்டு மடங்கு அதிகம். அந்த மாவட்டங்களில் ஒன்று சீதாபூர்.

குழந்தை திருமணங்களை பதிவு செய்வது மற்றும் சட்ட நடவடிக்கை எடுப்பது கடினம். நாட்டில் இளம் வயது திருமணங்கள் பெரும்பாலும் பதிவு செய்யப்படாதவை; எந்தவொரு நிலையான தரவு சேகரிப்பு முறையின் ஒரு பகுதியாக அது கணக்கிடப்படுவதில்லை.

"10-14 வயதிற்குட்பட்ட திருமணங்கள் குறித்து மிகக் குறைவான தகவல்கள் உள்ளன," என்று, இளம்வயது திருமணம் குறித்த 2001 யுனிசெப் அறிக்கை கூறியது. அதன் பின்னர் அந்த நிலைமை கணிசமாக மாறவில்லை.

உத்தரப்பிரதேசத்தில் பெரும்பாலான குழந்தை திருமணங்கள் பதிவு செய்யப்படவில்லை என்று, இந்திய அரசின் தலைமை தணிக்கையாளர் -சி.ஏ.ஜி. (CAG) 2016 அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2010-2011; 2011-12 மற்றும் 2014-15 ஆகிய ஆண்டுகளில் குழந்தை திருமண தடைச்சட்டம்-1976 இன் கீழ் உத்தரப்பிரதேசத்தில் எந்தவொரு குழந்தை திருமண வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2012-14 ஆம் ஆண்டில், குழந்தை திருமணம் தொடர்பாக இரண்டு வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன.

2016 ஆம் ஆண்டில், இந்தியாவில் 326 குழந்தை திருமண வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 236 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் சமர்ப்பிக்கப்பட்டன; மேலும் முந்தைய ஆண்டுகளில் இருந்து 956 வழக்குகள் இன்னும் விசாரணை நிலுவையில் உள்ளதாக, சமீபத்திய தேசிய குற்ற ஆவணப் பணியக தரவுபடி மார்ச் 15, 2018இல் மாநிலங்களவையில் அளிக்கப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது. இதில் 35 குற்றவாளிகள் மற்றும் 115 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், தண்டனை விகிதம் 14.7% என்றுள்ளது; இதுபோன்ற வழக்குகளில் 93.4% நீதித்துறை முடிவுக்கு காத்திருக்கிறது.

மீண்டும் சீதாபூருக்கு வருவோம். அங்கு சர்ளா தேவியும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் ஆர்வத்துடன் அவரது திருமண ஏற்பாடுகளை தொடர்ந்தனர். அவரது வாழ்க்கையின் சுழற்சி அவரை நிலைநிறுத்தும் என்று தோன்றியது. உங்களது குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பீர்களா என்று கேட்டதற்கு, சர்ளா தேவி ஆர்வம் காட்டாதவராக இருந்தார். "நான் படிக்காதபோது, என் குழந்தைகளுக்கு நான் என்ன கற்பிப்பேன்?" என்று கேட்டார்.

(அலி, இந்தியா ஸ்பெண்ட் செய்தியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.