பிராந்திய கட்சி ஆட்சி, அரசியல் வன்முறையின் நிலைகளை உயர்த்துகிறது: ஆய்வு
ரோட்டர்டாம் மற்றும் கல்கரி: ஒரு பிராந்தியக்கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுப்பது அவரது சொந்தத்தொகுதியில் வன்முறையின் அளவை 7.2%உயர்த்துவதற்கு வழிவகுப்பதாக, புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
ஒரு பிராந்திய கட்சி ஆட்சிக்கு வரும்போது வன்முறை நிகழ்வுகள் 9.9% ஆகவும், வன்முறை மரணங்கள் 13.4% ஆகவும் உயர்கின்றன என்று எங்கள் பகுப்பாய்வு கூறுகிறது. பொருளாதார பேராசிரியர்களுடன் இணைந்து, ஒரு பிராந்திய கட்சி பிரதிநிதியின் தேர்தலுக்கும், அரசியல் வன்முறைக்கும் இடையிலான உறவை பற்றி நாங்கள் ஆய்வு செய்தோம். பிராந்திய கட்சிகளை இந்திய தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக "மாநிலக் கட்சிகள்" என்று அங்கீகரிக்கப்பட்டவை மற்றும் புவியியல் ரீதியாக அப்பகுதியில் தேர்தல் வெற்றியை அனுபவித்தவை என்று நாங்கள் வரையறுத்தோம்.
எங்கள் ஆய்வின் போது 74 பிராந்திய கட்சிகள் செயல்பாட்டில் இருந்தன. அவற்றில் சில அசாம் கணபரிஷத், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அதிமுக), போடோலாண்ட் மக்கள் முன்னணி, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்டி, நாகா மக்கள் முன்னணி மற்றும் தெலுங்கு தேசம் கட்சி.
இந்த ஆய்வானது, 1988 மற்றும் 2011ஆம் ஆண்டுக்கு இடையிலான தொகுதி அளவிலான சட்டசபை தேர்தல் தரவுகளையும், 1989 மற்றும் 2015ஆம் ஆண்டுக்கு இடையிலான அரசியல் வன்முறை நிகழ்வுகளையும் கவனித்தது.
பிராந்திய அரசியல் கட்சிகள், இந்திய ஜனநாயகத்தின் வரையறுக்கும் அம்சமாகும். ஆளும் பாரதிய ஜனதா அல்லது காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் தங்களின் இருப்புக்கு, பிராந்திய கட்சிகளுடனான கூட்டணிகளை பெரிதும் நம்பியிருக்கும் பல மாநிலங்கள் உள்ளன. உதாரணமாக, தமிழ்நாட்டில் 1967 முதல் ஆட்சியில் இருக்கும் பிராந்திய முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) தலைமையிலான கூட்டணிகளில், பாஜகவும் காங்கிரசும் இரண்டாம் பங்கு வகிக்கின்றன.
பிராந்தியக் கட்சிகள், கொள்கையளவில் அரசை மக்களிடம் கொண்டு செல்ல, சிறந்ததாக இருக்கக்கூடும்; குறைந்தபட்சம் தேசிய கட்சிகளுடன் ஒப்பிடலாம். மொழி, இனம், அல்லது “தேசியம்” போன்ற சில பரிமாணங்களில் பொதுவாக அடையாளம் காணும் புவியியல் ரீதியாக, மக்களிடம் குறிப்பாக முறையிடும் ஒரு மேடையில் அவர்கள் தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள்.
ஆனால் பிராந்தியவாதத்திற்கு ஒரு விலையை கொடுக்க வேண்டியிருப்பதை, எங்கள் ஆய்வில் கண்டோம்.
பல பிராந்தியக் கட்சிகளும், உள்ளூர் மக்களுக்கு அதிக சுயாட்சியை கோரும் பிராந்திய இயக்கங்களில் இருந்து உருவாகின்றன. அவை, அதே பிராந்திய இயக்கங்களில் இருந்து உருவான தீவிர மற்றும் வன்முறை அமைப்புகளின் உடன்பிறப்புகளாக உள்ளன. எனவே, பிராந்திய கட்சிகள் பெரும்பாலும் பரந்த இயக்கத்தின் மிக தீவிரமான பிரிவுகளுடன், சிக்கலான மற்றும் சாத்தியமான கூட்டணி உறவை தக்கவைத்துக் கொள்கின்றன; இதற்காக, தேர்தல் நேரத்தில் அரசியல் ஆதரவுக்கு ஈடாக தீவிரவாதிகளின் வன்முறை நடவடிக்கைகளை எளிதாக்கவோ அல்லது கவனிக்கவோ கூடாது என்பதாகும்.
படம் 1 (ஏ & பி) தேசிய கட்சிகள் [1 (ஏ)] மற்றும் பிராந்திய கட்சிகள் [1 (பி)] வென்ற இடங்களின் சதவீதத்திற்கு எதிராக வன்முறை நிகழ்வுகளின் சராசரி எண்ணிக்கையை வகுக்கிறது. படம் 1 (அ) தேசிய கட்சிகளின் வெற்றி சதவீதத்தில் 10% புள்ளி உயர்வு, அரசியல் வன்முறையில் 11.94% வீழ்ச்சியுடன் தொடர்புடையது என்பதைக் குறிக்கிறது. பிராந்தியக் கட்சிகளின் வெற்றி சதவீதத்தில் 10% புள்ளி அதிகரிப்பு அரசியல் வன்முறையில் 14.26% அதிகரிப்புடன் தொடர்புடையது என்பதை கீழே உள்ள படம் குறிக்கிறது.
ஒரு பிராந்திய அரசியல் கட்சி வேட்பாளருக்கு வெற்றி அல்லது தோல்வியின் விளிம்பிற்கு எதிரான வன்முறை சராசரி நிகழ்வை, படம் 2 விளக்குகிறது. 0 -இல் செங்குத்து கோட்டின் வலதுபுறத்தில், பிராந்திய கட்சி வேட்பாளர் சட்டசபை இடத்தை வென்றதை காட்டுகிறது. இடதுபுறத்தில், ஒரு பிராந்திய கட்சி வேட்பாளர் தோற்றது. உள்ளூர் எம்.எல்.ஏ ஒரு பிராந்திய அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருக்கும்போது வன்முறை நிகழ்வின் சராசரி நிகழ்வு அதிகரிக்கிறது என்று வரைபடம் காட்டுகிறது.
பிரிவினைவாத வேர்கள் ஒரு காரணியாகும்
இந்த அரசியல் வன்முறை அதிகரிப்பதற்கான ஒரு விளக்கம், பல பிராந்திய கட்சிகளுக்கு இருக்கும் பிரிவினைவாத தோற்றம் ஆகும்.
எங்கள் மாதிரி காலகட்டத்தில், எந்தவொரு தீவிரமான பிரிவினைவாத இயக்கத்தையும் செய்த மற்றும் தெரிவிக்காத மாநிலங்கள் என இந்த ஆய்வில் தரவுகள் பிரிக்கப்பட்டன. முதல் பிரிவில் அருணாச்சல பிரதேசம், அசாம், ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப் மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்கள் அடங்கும். குஜராத் போன்ற மாநிலங்களும் இருந்தன; அவை இந்து-முஸ்லீம் மோதல்களை முதன்மையாக அனுபவித்தவை; மேலும் பெரும்பாலும் நக்சலைட் வன்முறைகளை சந்தித்த ஆந்திரா போன்றவையும் உள்ளன.
உள்ளூர் பிராந்திய கட்சி ஆட்சியுடன் தொடர்புடைய வன்முறைகளின் அதிகரிப்பு என்பது, முற்றிலும் பிரிவினைவாத வரலாற்று பின்னணி கொண்ட மாநிலங்களில் இயக்கப்படுகிறது என்பதைக் கண்டறிந்தோம். ஒரு பிராந்திய கட்சியின் தேர்தல், குறிப்பாக பிரிவினைவாத வன்முறையை அதிகரிக்கிறது என்று இது பரிந்துரைத்தது.
இருப்பினும், இந்த மாநிலங்களில் பல இனவாத (அகச்சார்பு) வன்முறையையும் அனுபவித்தன. வன்முறை அதிகரிப்புக்கு, பிரிவினைவாதம் அல்லது அகச்சார்பு காரணமாக இருந்ததா என்பதை தீர்மானிக்க, வன்முறையில் ஈடுபடுவோரின் கூற்றுப்படி தரவுகளை மேலும் பிரித்தோம். பிரிவினைவாத வன்முறையானது, கிளர்ச்சியாளர்கள் மற்றும் மத்திய அல்லது மாநில அரசு படைகளை உள்ளடக்கும்; அதே நேரம் அகச்சார்பு வன்முறை, கிளர்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் குழுக்களை உள்ளடக்கும் என்பது இதன் கருத்து.
ஒரு பிராந்திய கட்சியின் பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட்டபோது கிளர்ச்சியாளர்கள் - அரசு படைகளுக்கு இடையிலான வன்முறை மட்டுமே அதிகரித்திருப்பதைக் கண்டறிந்தோம்; இந்த வேட்பாளர்களின் தேர்தல் குறிப்பாக பிரிவினைவாத வன்முறையை ஏற்படுத்துகிறது என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
வன்முறையின் அளவு பிராந்திய கட்சி அரசை ஆளுவதற்கு மட்டுமே பொறுப்பானதா அல்லது கூட்டணியில் உறுப்பினரா என்பதைப் பொறுத்தது என்பதையும் நாங்கள் ஆராய்ந்தோம். பிராந்திய கட்சிகள் ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்த நிகழ்வுகளால், வன்முறை முழுவதுமாக இயக்கப்படுகிறது. நிறைவேற்று அதிகாரத்தை அதிக அளவில் அணுகுவது இந்த பிராந்திய அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய வன்முறைக் குழுக்களை திருப்திப்படுத்துவதற்கான ஒரு வழியாக இருக்கலாம் என்று இது பரிந்துரைத்தது.
பிராந்திய கட்சிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டுமா?
இந்தியாவில் தேர்தல்களில் பங்கேற்க பிராந்திய கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும் என்பதை முடிவுகள் குறிப்பிடவில்லை. ஒன்று, பிராந்திய கட்சிகளைச் சேர்ந்த தனிப்பட்ட பிரதிநிதிகளின் காரண விளைவை, இந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது. அவற்றின் தேர்தல் பங்கை கட்டுப்படுத்த, அவற்றை தடை செய்வதன் காரண விளைவு பற்றிய மதிப்பீடும் தேவைப்படும்.
மேலும், பிராந்திய அரசியல் கட்சிகள், கொள்கையளவில், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வாக்காளர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்க முடியும். பிராந்திய அரசியல் கட்சிகளின் பங்கை கட்டுப்படுத்துவது குறித்து தீவிர முடிவுகளை எடுப்பதற்கு முன், அவற்றின் மற்றும் பிற கடினமான அளவிடக்கூடிய நன்மைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
(மகேசன், கனடாவின் கல்கரி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தின் இணை பேராசிரியர்; கபூர், நெதர்லாந்தின் ஈராஸ்மஸ் பல்கலைக்கழக பொருளாதார இணை பேராசிரியர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.