மும்பை: இந்தியாவின் பாகுபாடு நிறைந்த மற்றும் பெண்களுக்கு எதிரான மரபுவழி சட்டங்களில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்த்திருத்தங்கள், பெண்களின் சமூக-பொருளாதார நிலைமையை உயர்த்த உதவினாலும், ஆண் குழந்தை மீதான சமூகத்தின் பெரும்பாலானவர்களின் விருப்பத்தை குறைக்க, அது தவிறிவிட்டதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

மாறாக, 1970 முதல் 1990 வரையான காலப்பகுதியில் இத்தகைய சீர்திருத்தங்கள், பெண்களின் கருக்கொலை மற்றும் அதிக குழந்தை இறப்பு விகிதத்தை தவிர்க்க முடியாமல் அதிகரித்ததாகவும்; குடும்பத்தில் முதல் குழந்தை பெண் என்றால், இரண்டாவது குழந்தைக்கு ஆசைப்படுவதும், 2018 ஆய்வில் தெரிய வந்தது.

இக்கண்டுபிடிப்புகள், 2017-18 பொருளாதார ஆய்வின் மூலம் ஆதரிக்கப்படுகிறது; இதில், 6.3 கோடி பெண்கள் - இது தோராயமான இங்கிலாந்தின் மக்கள்தொகை - இந்தியாவில் 'காணவில்லை' என்கிறது.

சட்ட சீர்திருத்தங்களுக்கு பிறகு பிறந்த பெண்களில் 2-3% பேர், அவர்களது முதல் பிறந்தநாளை அடைவதற்கு முன்னர் இறந்துவிட வாய்ப்புள்ளதாக, ஆய்வு கண்டுபிடித்தது; மற்றும் 9% புள்ளிகள் முதல் குழந்தை பெண் என்றால் அடுத்து ஒரு ஆண் குழந்தைக்கு பலரும் விரும்புகின்றனர். கருவில் பாலினத்தை சோதித்து கருக்கலைப்பு வழிவகுக்கும் அல்ட்ரா ஸ்கிரீனிங் ஸ்கேன் தடுக்க சட்டம் மாற்றப்பட்ட் போதும், பெண் குழந்தை பிறப்பு 4% குறையும் அளவுக்கு நடைமுறை என்பது தீவிரமாக இருந்தது.

இந்த ஆய்வானது கிங்ஸ் கல்லூரி பல்கலைக்கழகம், நியூயார்க் பல்கலைக்கழகம் மற்றும் எஸ்செக்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டு, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (1991-92, 1998-9 மற்றும் 2005-6) மூன்று சுற்றுகளின் தரவுகள் மற்றும் கிராமப்புற பொருளாதார மக்கள்தொகை ஆய்வு (REDS) 2006 புள்ளி விவரங்கள் அடிப்படையில் ஜார்னல் ஆப் டெவலப்மெண்ட் எகனாமிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டது.

கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா என "தொடக்கத்திலேயே சீர்திருத்தம்" செய்த ஐந்து மாநிலங்களில் வாழும் குடும்பங்களை, ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்; இம்மாநிலங்கள் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு சம உரிமை உரிமைகளை வழங்கும் இந்து வாரிசு சட்டம்-1956ல் 1970 மற்றும் 1990ஆம் ஆண்டுகளுக்கு இடையே வெவ்வேறு தேதிகளில், திருத்தம் செய்தன. நாடு முழுவதும் சம பரம்பரை உரிமைகள் என்பதை மத்திய அரசு கட்டாயப்படுத்தியபோது, 2005இல் மட்டும் சுதேசி சட்டங்களைச் சீர்திருத்த மாநிலங்களில் உள்ள குடும்பங்களின் கட்டுப்பாட்டு குழுவுக்கு எதிராக இது ஒப்பிடப்பட்டது.

முந்தைய ஆய்வுகள் திருமணத்தில் "சந்தை" என்ற பெண்களின் நிலைப்பாட்டில் இருந்து சீர்திருத்தங்களின் தாக்கம் ஆய்வு செய்திருந்தாலும், ஆராய்ச்சியாளர்கள் மகன்-விருப்பம், பெண் மரபியல் மற்றும் "மகன்-சார்புடைய கருவுறுதல் நிறுத்துதல் நடத்தை" மீதான தாக்கத்தை பகுப்பாய்வு செய்திருப்பது இது முதல்முறை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மகனுக்கு முன்னுரிமையால் ஒதுக்கிவைக்கப்படும் பெண்கள்

கடந்த 1956ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமை சட்டத்தின் கீழ், பரம்பரை சொத்துக்களுக்கு நேரடியான உரிமை மகன்களுக்கு மட்டுமே இருந்தது; தந்தை ஒரு உயிலை விட்டுச்செல்லாதவரை பரம்பரை சொத்துகளில் மகள்கள் தவிர்க்கப்பட்டனர்.

கடந்த 1970களில் இருந்து, பரம்பரைச் சட்டத்தில் செய்த மாற்றங்களால், நிதி மற்றும் சமூக நிலையை வலுப்படுத்தி, ஆண் உறவினர்களை சார்ந்திருப்பதை குறைப்பதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க முயன்றன.

சொத்துகளில் மகன்களுக்கான பாரம்பரிய முன்னுரிமை குறைக்கவேண்டும்; ஏனென்றால் குடும்பத்தை சொத்தாக வைத்திருக்கும் மகள்களால் வயதான காலத்தில் பெற்றோருக்கு பாதுகாப்பை வழங்க முடியும். அதேபோல், ஒரு மகளை சுமையாக கருதுவதற்கு காரணமாக உள்ள வரதட்சணை முறையை இது ஒழிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மாறாக, இச்சீர்திருத்தங்கள் "பெண்கள் நீக்குவதற்கு" வழிவகுக்கும் "திட்டமிடப்படாத" விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன; குடும்ப கட்டமைப்புகள் மற்றும் கூட்டு முறைகளை ஒழுங்குபடுத்தும் சமூக நெறிகள் சட்டத்திற்கான மாற்றங்களைக் கொண்டிருப்பதில்லை என ஆய்வு கூறுகிறது.

"பெண்களுக்கு பரம்பரை உரிமைகள் வழங்குவதில் ஒரு மகனைக் காட்டிலும் ஒரு மகள் இருக்க வேண்டும் என பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்” என்று அந்த ஆய்வு கூறுகிறது. பெண்ணிற்கான செலவினம் அதிகரிப்பதாக பெற்றோர் அஞ்சுகின்றனர்; பெண்களின் மரபுவழி சொத்துக்கள், அவருடைய மாமியாரின் கட்டுப்பாட்டிற்குள் விழும் அபாயம் இருப்பதாக கவலை கொண்டனர்.

"இந்து அமைப்பின் கீழ் உள்ள ஒரு பெண்ணுக்கு சொத்துக்களை நீங்கள் மாற்றினால், அது அப்பெண் திருமணம் செய்து சென்ற வீட்டுக்கு போய்ச் சேரும்" என, இந்தியாவின் முன்னாள் தலைமை புள்ளிவிவர மற்றும் சர்வதேச வளர்ச்சி கழகத்தில் இந்தியாவின் திட்ட இயக்குனரான பிரணாப் சென், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "வாரிசு உரிமை சட்டத்தில் செய்யும் மாற்றங்கள் பெண்களின் வருவாயை மேம்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை; அந்த புதிய சொத்துக்களை கட்டுப்படுத்தும் உரிமை அவரிடம் இருக்காது - அதை அவர் மணம் முடித்து சென்ற குடும்பத்தினர் கையகப்படுத்தியிருப்பர்" என்றார் அவர்.

பெற்றோருக்கு. தங்களது குடும்ப நிலத்தை உருவாக்கி அதை மேம்படுத்தும் ஒரு மகனை பெறுவது என்பதே தொடர்ந்து ஊக்கம் தருவதாக உள்ளது; குடும்பத்தில் "செல்வத்தை உருவாக்குதல்" மற்றும் இருவரின் பிற்கால பாதுகாப்பு ஆகியவற்றிற்கும் இது பங்களிப்பு செய்கிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது. பெற்றோர் தங்களது மகனுக்கு சொத்து முழுவதையும் எழுதி வைத்தால் பிற்காலத்தில் வெளியேற்றாப்படுவோமோ என்ற அச்சுறுத்தல் அபாயத்தை உணருகிறார்கள்.

"ஒரு மேலாதிக்க விவசாய குடும்பத்தில், மற்ற எதற்கும் முன்பாக நிலம் மிகவும் முக்கியமானது", என்று சென் கூறினார். சொத்துகள் துண்டு துண்டாக பிரிவதை தடுக்க பெற்றோர் விரும்புகின்றனர்; ஏனெனில் இதனால் உற்பத்தி குறையும். இதற்கான ஒரே வழி, உடன் பிறந்தவர்களுக்குள் சொத்துகளை பங்கிட்டு வருவாயை விநியோகிப்பதாகும்” என்றார் அவர்.

சொத்து சுதந்தரம் கொண்ட பெண்களின் விகிதத்தை, "சீர்திருத்தங்கள் கணிசமாக அதிகரிக்கவில்லை," என்று ஆய்வு கூறுகிறது. சட்டங்கள் பெண்களுக்கு சொத்துரிமைக்கு சட்டரீதியான உரிமைகளை அனுமதித்தாலும், மிக குறைவாகவே அத்தகைய நடவடிக்கைக்கு வழிவகுக்கிறது; இது சமூகத்திற்கு எதிராக மற்றும் புரட்சியாகவே கருதும் சூழல் உள்ளது.

“ஒரு நெருங்கிய பிணைப்புள்ள குடும்பத்தில், தனக்கு சொத்து மறுக்கப்பட்டால் அதற்கான பெண் தனது பெற்றோர் அல்லது சகோதரர்களுக்கு எதிராக போராட விரும்புவதில்லை” என்று, சேவ் தி சில்ரன் என்ற அரசுசாரா அமைப்பின் குழந்தை பராமரிப்பு மற்றும் பாலினம் ஆலோசகரான ராதா செல்லப்பா, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். “மகள்களுக்கு ஏற்கனவே வரதட்சணை என்ற பெயரில் சொத்தில் ஒரு பங்கு வழங்கப்படுவதால், சொத்தில் அவர்களுக்கு உரிமையில்லை என்று, முழு வரதட்சணை அமைப்பு கூறுகிறது” என்றார் அவர்.

"எனவே இது ஒரு சட்டத்தை மட்டும் கொண்டிருப்பது அல்ல; அதை திறம்பட செயல்படுத்துவது பற்றியது" என்ற செல்லாப்பா "இது ஒரு குற்றவியல் சட்டமல்ல; ஒரு சிவில் சட்டம் மற்றும் நீதிமன்றத்தில் பெண்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் கையாளுவதில் உண்மையை சார்ந்துள்ளது. இப்போது, அது உண்மையில் நடப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்றார்.

பாலினத்தேர்வு பிறப்புகள் அதிகரிப்பு; பெண் குழந்தை இறப்பு அதிகம்

கடந்த 1980களில் இறக்குமதி செய்யப்பட்ட அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் கருவிகள், கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய உதவுகிறது; இதன் மூலம், பெண் குழந்தை எனில் கருவில் அழிப்பது போன்வற்றுக்கு வழிவகுத்தது. இதன் பலனாக, வாரிசுரிமை சட்டம் மற்றும் ஸ்கேன் வசதி உள்ள மாநிலங்களில், முதல் குழந்தை பெண்ணாக பிறந்த கட்டுப்பாடு குழுவுடன் ஒப்பிடும் போது, பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 4% புள்ளிகள் வரை குறைந்ததாக ஆய்வு தெரிவிக்கிறது.

இது, குடும்பங்கள் இன்னமும் நீண்ட காலமாக கலாச்சாரமாக மகன்கள் மீது விருப்பம் கொண்டிருப்பதை காட்டுவதாக, ஆய்வு கூறுகிறது; "இது உயிரியல் மாறுபாடு அல்லது மெதுவாக மாறிவரும் சுற்றுச்சூழல் காரணிகளோடு தொடர்புடையது" எனக் கூறும் பெண்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால், பரம்பரைச் சட்டங்களில் மாற்றம் வேண்டுமென்றே தெரிவிக்கின்றது. கருக்கொலை என்பது "உணர்வுபூர்வமான செயலாகும்" என்பதால், இது "மகள்களைக் காட்டிலும் மகன்களை கொண்டிருப்பதற்கு" பெற்றோரின் விருப்பத்தின் "தெளிவான நடவடிக்கை" ஆகும் என்கிறது அந்த ஆய்வு.

பிறப்புக்கு முன்பே கருவில் பெண் சிசுவை கலைத்து, பெண் குழந்தைகளை பெற்றோர் புறக்கணிக்கின்றனர் என்பதற்கு சான்றுகள் உள்ளன. எனவே, சட்ட சீர்திருத்தங்கள் இருந்த போதும், வீட்டு பாலின அமைப்பை சரிசெய்ய வேண்டும்.

சட்ட சீர்திருத்தம் மற்றும் அல்ட்ரா ஸ்கேன் கருவிகள் கொண்டு வரப்பட்ட மாநிலங்களில் முதல் குழந்தை பெண்ணாக உள்ள குடும்பத்தில் அடுத்து பிறந்த பெண் குழந்தை, தனது முதல் பிறந்தநாளை கொண்டாடும் முன்பே இறப்பது என்பது, 2-3% உயர்ந்துள்ளது. தேவையற்ற குழந்தைகளில் முன்கூட்டியே இறப்பு ஏற்படுவதற்கு, மருத்துவ சிகிச்சை மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான அணுகலை மறுப்பது பொதுவான முறை என்று, பிற ஆய்வுகள் காட்டுகின்றன.

குடும்பத்தில் ஒரு மகன் இருப்பதை உறுதிப்படுத்த முயற்சியாக, குடும்பங்கள் "தங்கள் கருத்தரிப்பை விரிவாக்குகின்றன" -- பிறகு வயது வந்த குழந்தைகள்- என்ற போதும் கூட, பரம்பரைச் சீர்திருத்தங்கள் பொருளாதார நிலையைப் பொறுத்தவரை இருவரும் பாலினத்தை சமப்படுத்துவதாக கூறப்படுகிறது.

முதலில் ஒரு பெண் பிறந்த குடும்பங்கள், 9% புள்ளிகள் இருந்தன; இது, முதல் குழந்தை ஒரு சிறுவனாக இருந்த குடும்பங்களை விட (12% மாதிரியான சராசரி) அதிகம் என்று, ஆய்வு கூறுகிறது. சட்ட சீர்திருத்தம் மற்றும் அல்ட்ரா ஸ்கேன் கருவிகள் வருகைக்கு பிந்தைய சூழல், கவனமின்றியும் “கருவில் மகனை வளர்த்தலை தீவிரப்படுத்தியது”; இது எதிர்பார்ப்புக்கு மாறான விளைவை ஏற்படுத்தியது.

கணவன் குடும்ப நெறிகளில் பற்று; தொடரும் மகனுக்கான முன்னுரிமை

இந்திய குடும்ப முறையில் திருமணத்திற்கு பிறகு மகள்கள் தங்களது கணவரின் குடுமத்திற்கு சென்றுவிடுவதும்; மகன்கள் திருமணத்திற்கு பிறகு தங்கள் வீடுகளிலும் வசிக்கும் சூழலில், இந்திய பெற்றோர்களில் 77% பேர், தங்களது வயோதிக காலத்தில் மகன்களுடன் வசிக்கவே விரும்புகின்றனர். இந்த முறைப்படி, பூர்வீக நிலத்தில் பணியாற்றுவதன் மூலம், வயதான பெற்றோரை கவனித்துக்கொள்வதாலும், பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு முழு சொத்தை மகன் வழக்கமாக 'வெகுமதியாக' அனுபவிக்கிறார்.

பெற்றோர்கள் தற்போது தங்கள் மூதாதையரின் சொத்துக்களை மகன்கள் மற்றும் மகள்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சட்ட சீர்திருத்தங்கள் வலியுறுத்துகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மகனின் அதே விருப்பம் நிலைத்தன்மை, பாலினச் சார்பு மரபுகள் வரலாற்று பாலின உறவுகளை திருத்தும் சட்டத்தை விட பெற்றோர் மீது வலுவான சக்தியை செலுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் வயதானவர் மக்கள் தொகையில் ஓய்வூதிய பலனை பெறுபவர்கள் 35%க்கும் அதிகமாகக்கூட இல்லை; மூன்று பங்கினர் அல்லது 3.9 கோடி பேர், சமூக பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக, 2017 ஏப்ரலில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது.

முன்னோக்கிய வழி

தொடர்ச்சியான சார்புகளின் வெளிச்சத்தில், பெண்களுக்கு எதிரான பாகுபாடு எவ்வாறு குறைக்கப்படலாம்; அவர்களின் சமூக-பொருளாதார நிலை எப்படி உயர்த்தப்படுமா?

"இத்தகைய சட்டத்தின் நீண்டகால அவசியத்தை அல்லது செயல்திறனை நான் சந்தேகிக்கவில்லை; ஆனால், கல்வி மற்றும் சமூகநலத் திட்டங்களை இலக்காகக் கொண்டு, வயது வந்த பெண்களுக்கு சமூகத்தில் பல்வேறு மட்டங்களில் வேலை செய்யக்கூடிய அதிகாரங்களை கொண்ட பல அம்சங்கள் வேண்டும்” என்று புனே பல்கலைக் கழகத்தின் அரசியல்துறை மற்றும் பொது நிர்வாகம் துறை பேராசிரியர் ராஜேஸ்வரி தேஷ்பாண்டே இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "இது [சட்ட சீர்திருத்தம்] ஒரு சொத்துப் பிரச்சினையாக கருதப்பட்டாலும், அது உண்மையல்ல - ஆண் குழந்தைக்கு ஆதரவாக ஆழமாக உள்நிலைப்பார்வை போக்கப்பட வேண்டும்" என்றார் அவர்.

(சங்கேரா, எழுத்தாளர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் ஆராய்ச்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.