புதுடெல்லி: ஏப்ரல் - மே மாதம் பொதுத்தேர்தல் நடக்கும் சூழலில் சில அரசியல் கட்சிகள், அதற்கு முன்பே பெண்களின் அதிகமான அரசியல் பிரதிநிதித்துவ தேவையை எவ்வாறு எழுப்பின என்பதை புரிந்து கொள்ள, ஆயிரமாயிரம் பெண் வாக்காளர்களை மட்டும் நாம் பார்க்க வேண்டும்.

அஞ்சு பா, வயது 20; வட மேற்கு ஒடிசாவின் சுந்தர்கார்க் மாவட்டம் ராஜ்கம்பூர் கிராமத்தை சேர்ந்த பட்டதாரி மலைவாழ் இனப்பெண். அவர் ஒரு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார்; பயிற்சிக்கு பிறகு வேலை விண்ணப்பிக்க போவதாக கூறுகிறார். திருமணம்? அவர் முகம் மாறுகிறது; முதலில் வேலை தான் என்கிறார்.

அஞ்சு குழந்தையாக இருந்தபோது, 12ஆம் வகுப்பு முடித்த அவரது தாய் ராணி செக்குந்திர பா, டெல்லியில் வீட்டு தொழிலாளி பணி புரிந்து வந்தார். அவரது முதல் மற்றும் இதுவரை வாக்களித்த ஒரே தேர்தல் அப்போது நடந்தது. கடந்த 2000ஆம் ஆண்டில் அவரது சட்டமன்ற தொகுதியான பிர்மிடிராபுர் வேட்பாளர் ஜார்ஜ் திர்கே, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். திர்கேவுக்கு ஏன் அவர் வாக்களித்தார். ஏனென்றால், ராணியின் கிராமத்தினர் திர்கேவை ஆதரிப்பது என ஒரு கூட்டு முடிவை எடுத்திருந்தது.

ஆனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அஞ்சுவுக்கு யாரும் தெரிவிக்கவில்லை. அவரது நண்பர்களை போலவே, தன் விருப்பப்படி (தேர்வு) செய்ய அவர் வழி நடத்தப்பட்டார். அவர் ஒரு பெண் வேட்பாளரை விரும்புவாரா? "யார் வேட்பாளர் என்று பார்ப்பேன் என்று கூறும் அவர், இதுவரை, பெண்கள் என் கிராமத்தில் நன்கு வேலை செய்துள்ளனர் என்கிறார். எங்கள் ஊராட்சி தலைவர் [கிராம சபை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்] ஒரு பெண் மற்றும் அணுகக்கூடிய மற்றும் கடின உழைப்பாளி. நமக்கு நிறைய சாலை வேலைகள் செய்துள்ளார். எனவே, ஆண்களைவிட பெண்கள் கூடுதல் அர்ப்பணிப்புடன் சமுதாயத்திற்கு தொண்டாற்றுகிறார்கள்” என்று, இந்தியா ஸ்பெண்டிடம் தொலைபேசியில் அவர் தெரிவித்தார்.

ஒருவேளை, நான்கு முறை முதல்வராக இருந்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், அஞ்சு போன்ற பெண்களை பார்த்து தான், தனத் மாநிலத்தின் 21 மக்களவை தொகுதிக்கான தனது வேட்பாளர்களில் 33% பெண்களுக்கு ஒதுக்குவதாக அறிவித்தார். 2019 ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவை (சட்டசபை) தேர்தலும் ஒரே நேரத்தில் நடக்கிறது.

ஆண் வாக்காளரை விட தேர்தலில் அதிகம் வாக்களிக்கும் புதிய, உறுதியான, ஆயிரமாயிரம் பெண் வாக்காளர்களை அஞ்சு பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

இந்த புதிய வாக்காளர், 10 ஆம் வகுப்பு படித்த தனது தாயை விடவும், 2016இல் பள்ளி சேர்ந்த தனது சகோதரனை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டவராக இருக்கிறார். உலக வங்கியின் அறிக்கையின்படி, மேல்நிலைப்பள்ளி சேரும் பெண்களின் விகிதம் 75.8%; இது ஆண்களின் 74.59% என்பதைவிட அதிகமாகும்.

அவர், இந்தியாவின் இளைய, விரும்பங்கள் தன்னகத்தே கொண்டுள்ள புதிய தலைமுறை பெண்களின் ஒரு பகுதியாக விளங்குகிறார். மேலும், பட்டதாரியாக விரும்பும் 10இல் 7 பெண்களின் ஒருவராகவும், தனக்கென ஒரு தொழில் பாதை வேண்டுமென்று கூறும் 4இல் மூன்று பெண்ணில் ஒருவராகவும் திகழ்கிறார். இப்புள்ளி விவரங்கள், நாந்தி அறக்கட்டளை 2018 ஆய்வில் தெரியவந்தவை.

அவரது தலைமுறையின் மிக இளம் ஆண்கள் போலவே பெண்களும் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று அஞ்சு விரும்புகிறார். முதல்முறை வாக்களிக்கும் பெண்கள் வாக்காளர்களில் 68% பேர் ஆண்களை போலவே பெண்களும் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று கூறியதாக, கணக்கெடுப்பு ஆராய்ச்சி நிறுவனமான லோக்நிதி-சி.எஸ்.டி.எஸ் மற்றும் தி குயிண்ட் இணையதளம் நடத்திய பிப்ரவரி 2019 ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தங்கள் குடும்பத்தினரின் வற்புறுத்தல் இல்லாமல் தங்களது விருப்பப்படி கட்சி அல்லது வேட்பாளரை தேர்வு செய்வதாக கூறினர்.

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று கால் நூற்றாண்டுக்கும் மேலாக பேசப்படும் நிலையில், 1992 ஆம் ஆண்டின் 73 வது மற்றும் 74 வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் கட்டாயப்படுத்தப்பட்டது; இது அடிமட்டத்தில் பெண்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை உருவாக்கியுள்ளது.

பெண்கள் தற்போது பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் 46% என, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தெரிவிக்கிறது.

"ஏறத்தாழ ஒரு லட்சம் பெண்கள் பஞ்சாயத்து அமைப்புகளில் தேர்வு செய்யப்படும், மேலும் இரண்டு லட்சம் பெண்கள் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தும் உள்ளனர். அவர்கள் வாக்காளர்கள், வளர்ச்சி மற்றும் அவர்களது கிராமங்களின் பிற பிரச்சினைகள் பற்றி நன்கு அறிந்தவர்கள்” என்று டெல்லியை சேர்ந்த சமூக அறிவியல் நிறுவனம் (ISS) பெண்கள் ஆய்வு பிரிவின் தலைவரான பித்யுத் மொகந்தி தெரிவித்தார்.

இந்த பெண்கள் கண்ணாடி கூரையை உடைந்து கொண்டு போகக்கூடாது; ஆனால் வாக்குச் சாவடியில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விருப்பம் அவர்களுக்கு தெரியும்.

“மேலும் மேலும் பெண்கள் வாக்களிக்க அதிகம் வருவதற்கு மேல்மட்டக் கொள்கை தலையீடு காரணமல்ல; சுய அதிகாரத்துடன் தன்னார்வ செயலே இதற்கு காரணம்” என்று ப்ரூகிங்ஸ் இந்தியா அமைப்பின் இயக்குனர் ஷாமிகா ரவி தெரிவித்தார்.

பெண் வாக்காளர்களின் வாக்குப்பதிவு சீராக வளர்வது ஒரு அமைதியான புரட்சி என்று ரவி கூறினார். 2014 பொதுத்தேர்தலில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான பாலின இடைவெளி குறைவாகவே இருந்தது - 1962 தேர்தலில் 15% புள்ளி என்ற இடைவெளியை ஒப்பிடும்போது இது தற்போது 1.5% புள்ளிகள்- மற்றும் 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தேர்தல் வாக்களிப்பில் பாலின வேறுபாடு அனைத்து மாநிலங்களிலும் - பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசம் போன்ற காலம் காலமாக பின்தங்கிய பீமரு' உட்பட - குறைந்துள்ளது என, 2014 மார்ச் Economic and Political வார இதழில் முதித் கபூர் மற்றும் ஷாமிகா ரவி எழுதிய கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இந்த சரிவு "1990 களுக்குப் பின்னர் தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு வியத்தகு அளவில் அதிகரித்தது, ஆண்கள் பங்கேற்பு மாறாமல் இருந்தது" என்று அவர்கள் எழுதியுள்ளனர்.

ஒட்டுமொத்த பாலின விகிதம் 1960களில் தொடங்கி 2000 ஆம் ஆண்டு வரை ஓரளவிற்கு மோசமடைந்தாலும், வாக்காளர் பாலின விகிதம் அதிகரித்துள்ளது. வன்முறை குறைந்தது மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்புகள் ஆகியன பெண்கள் அதிகளவில் வாக்களிப்பதற்கான காரணங்களில் சில, என்று ரவி கூறுகிறார். "பெண்களுக்கு வாக்களிக்கும் செலவு குறைந்துவிட்டது," என்ற அவர், முன்பு அதிகளவில் தேர்தல் மோசடிகள் - அனுமதித்த ஒரு வாக்கிற்கு பதில் ஒருவர் மேலும் சில வாக்கை செலுத்துவது - பெண்கள் மற்றும் வயதானவர்களின் வாக்குகளை கைப்பற்றும் சம்பவங்கள் அதிகளவில் நடந்தன.

மேலும் பல பெண்கள் வாக்களிக்க வர வேண்டும் என்பதற்காக 1990களில் இருந்து தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள், இயக்கங்களை தொடங்கி நடத்தி வருகிறது. "நான் செய்த முதல் விஷயம், நாட்டின் பாலின விகிதத்தைக் கவனிக்க வேண்டும் என்பது தான்” என்று, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி கூறியிருந்தார். ஒரு தொடர்ச்சியான பாலின விகிதம் இருந்தபோதிலும், வாக்காளர் பட்டியலில் இருந்து 2 கோடி பெண்களின் பெயரை காணவில்லை. "வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பெண்களை கண்டறிந்து அவர்களின் பெயரை சேர்க்க, வாக்கு மைய அளவிலான அதிகாரிகளை சாவடிக்கு அனுப்பினோம்," என்று, இந்தியா ஸ்பெண்டிடம் அவர் கூறினார்.

வாக்காளர் பட்டியலில் இருந்து பெண்களின் பெயர் இன்னும் காணாமல் போகிறது. எனினும், இம்மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட புதிய வாக்காளர்களில் 4.35 கோடி பெண்கள், 3.8 கோடி ஆண்கள் உள்ளதாக, தி எகனாமிக் டைம்ஸ் 2019 மார்ச் 12இல் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

States With Largest Increase In Number Of Women Voters
State New Women Voters (In million) Total Registered Women Voters (In million)
Uttar Pradesh 5.4 66.1
Maharashtra 4.5 41
Bihar 4.28 33.2
West Bengal 4 34
Tamil Nadu 2.9
Gujarat 2.4 21

Source: Election Commission of India

வரலாற்று ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்தல்

ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜுஜனதா தளம் (பிஜேடி), மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிவின் திரிணாமூல் காங்கிரஸ் ஆகியன, 2019 பொதுத்தேர்தலில் பெண்களுக்கு கணிசமான வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தன. இது, பாலின பிரதிநிதித்துவத்தில் வரலாற்று ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய சில வழிகளாக கருதலாம்- மக்கள் தொகையில் 48.1% பெண்கள் உள்ள நிலையில் மக்களவை இடங்களில் 12.1% மட்டுமே பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஒடிசாவில், சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், நாடாளுமன்ற தொகுதிகளில் 33% வேட்பாளர்கள் பெண்களாக நிறுத்தப்படுவர் என்று முதல்வர் பட்நாயக் தெரிவித்தார்.

பி.ஜே.டி. வெளியிட்ட ஒன்பது பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலில் மூன்று பெண்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் இரண்டு குடும்ப வாரிசுகள். பள்ளி ஆசிரியரான கவுசல்யா ஹிகாகா, நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) ஜினா ஹிகாகாவின் மனைவி; இவர், கோராபுட் தொகுதியில் நிற்கிறார். மற்றொருவர் சுனிதா பிஸ்வால்; முன்னாள் முதல்வரான காங்கிரஸின் ஹேமனந்த் பிஸ்வாலின் மகளான இவர், 2019 மார்ச்சில் பி.ஜே.டி.யில் இணைந்து, சுந்தர்கார்க் தொகுதியில் போட்டியிடுகிறார்.

சதா சங்க சுய உதவிக்குழுவின் தலைவராக இருந்து, அடிமட்டத்தில் இருந்து சொந்த முயற்சியில் தலைவராக வளர்ந்தவர், பிரமீளா பிஷோய். இவர் போட்டியிடும் அக்சா தொகுதியில் இருந்து தான், 20 ஆண்டுகளுக்கு முன் அரசியல் பயணத்தை நவீன் பட்நாயக் தொடங்கினார்.

"பிஜு ஜனதாதளம் எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் உறுதியாக உள்ளது," என்று அக்கட்சி எம்பி பினாகி மிஸ்ரா கூறினார்.உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று கால் நூற்றாண்டுக்கும் மேலாக பேசப்படும் நிலையில், 1992 ஆம் ஆண்டின் 73 வது மற்றும் 74 வது அரசியலமைப்பு திருத்தம் மூலம், உள்ளாட்சி அமைப்புகள், ஊராட்சிகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கட்டாயமாவதற்கு முன்பு, 1991இல் பி.ஜே.டி. நிறுவனரான பிஜூபட்நாயக் மாநில சட்டத்தின் மூலம் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். 2012இல், அவரது மகன் நவீன் இதை 50% என்று உயர்த்தினார்.

"பி.ஜே.டி. கட்சிக்கு பெண்கள் பாரம்பரிய ஆதரவு தளமாக உள்ளது; கட்சியின் முக்கிய வாக்கு வங்கியாக அவர்கள் உள்ளனர். கவர்ச்சிகரமானதை கண்டு ஆண்கள் எளிதில் மயங்குவதை போல் பெண்கள் எளிதில் மாற மாட்டார்கள். து. பெண்கள் தங்கள் சிந்தனையில் மிகவும் உறுதியானவர்கள்,” என்று, மிஸ்ரா மேலும் கூறினார். "ஆட்சியில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதால், அரசியலிலும் ஆண்களின் ஆதிக்கம் உள்ளது. உண்மையில் தகுதி வாய்ந்த பெண்கள் கண்ணாடி கூரையை உடைக்க சிரமப்படுகிறார்கள்; அவர்களுக்கு உதவ நவீன் பட்நாயக் கடமைப்பட்டுள்ளார்" என்றார் அவர்.

தற்போது நாடாளுமன்றத்தில் ஒடிசாவின் பிரதிநிதித்துவமாக உள்ள 21உறுப்பினர்களில் மூன்று பேர் மட்டுமே பெண்கள். 147 உறுப்பினர்கள் கொண்ட மாநில சட்டசபை உறுப்பினர்களில் ('சட்டமன்ற உறுப்பினர்கள்' அல்லது 'எம்.எல்.ஏ.க்கள்' என்று அழைக்கப்படுவார்கள்) பெண்கள்8% மட்டுமே உள்ளனர்; இது தேசிய சராசரியான 9%ஐ விட குறைவு.

கடந்த 2014இல், ஒடிசா சட்டசபை தேர்தலுக்கான பெண்கள் வேட்பாளர்கள் எண்ணிக்கிய, முந்தைய 2009 தேர்தலை விட குறைவாகவே இருந்தது. இருப்பினும், 2009இல் இருந்ததைவிட 2014 இல் அதிகமான பெண்கள் வெற்றி பெற்றனர்.

சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் பிரச்சாரம் செய்வதை பெண்கள் பாரம்பரியரீதியாக கடினமாக உணர்ந்தார்கள் என்று எம்.எல்.ஏ. பிரத்யுஷா ராஜேஸ்வரி சிங் தெரிவித்தார். 2014 தேர்தலுக்கு பின் சில மாதங்களில் இவரது கணவர் மறைந்துவிட, இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். "ஊராட்சிகளில் இடஒதுக்கீடு முன்னுரிமையால் பெண்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆனால் அவர்களது குடும்பத்தில் ஆண் உறுப்பினர்கள் ஆதிக்கம் செலுத்துவதால், பெண்களின் குரல்கள் இன்னும் கேட்கப்படவில்லை. ஆனால் கல்வி மூலம் அவர்கள் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை பெறுகின்றனர்; மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர், "என அவர் மேலும் கூறினார்.

ஒடிசாவில் உள்ள மகளிர் முகமைகளின் வாக்குகள் ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே காணப்படுகின்றன; ஆனால் சுய உதவி குழுக்கள் (எஸ்.எச்.ஜி) எண்ணிக்கை மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. தற்போது அரசின் மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் 70 லட்சம் பெண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்களாக உள்ளனர். 2019 ஜனவரியில் மிஷன் சக்தி மாநாட்டில் சுமார் 50,000 பெண்கள் பங்கேற்ற நிலையில் பட்நாயக் அரசு சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 3 லட்சம் வரை வட்டியில்லா கடனை அறிவித்துள்ளது. நவம்பர் 2018 ல், ஒடிஷா உச்சி மாநாட்டில், அவர் 600,000 சுய உதவிக்குழுக்களுக்கு ஸ்மார்ட்போன்களை தருவதாக உறுதி அளித்திருந்தார்.

நாடாளுமன்ற வேட்பாளர்களின் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு என்ற அறிவிப்பை பட்நாயக் வெளியிட்ட ஒருநாள் கழித்து, மம்தா பானர்ஜி தனது கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இவர்களில் 41% பெண்கள்; இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றில் எந்தவொரு தேர்தலிலும் முன் எப்போதும் இல்லாத அளவில் இது அதிகபட்சமாகும்.

"மம்தா எப்போதுமே ஒரு கணிசமான விளையாட்டு திட்டம் இல்லை. அவர் மிகவும் தூண்டுதலாக இருக்க முடியும்," என்று, அந்த மாநிலத்தின் பெயர் வெளியிட விரும்பாத அரசியல் பார்வையாளர் கூறினார். "சிலருக்கு தொகுதிகளில் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும். ஆனால், பெண்கள் பலருக்கு வாய்ப்பு தந்து, அதன் மூலம் யாரும் பின்பற்றாத, செய்ய முடியாத தடைகளை உடைத்து, தனது புகழை நிலை நிறுத்தியிருக்கிறார்” என்றார் அவர்.

34 ஆண்டுகாலம் தொடர்ந்து பதவியில் இருந்த மார்க்சிச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த 2011 சட்டசபை தேர்தலிலேயே ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் இருந்தனர். அடுத்த சட்டசபை தேர்தலில், பெண் வாக்காளர் வாக்குப்பதிவு மட்டும் ஆண்கள் விட அதிகமாக இருந்தது. ஆனால் இன்னும் பெண்கள் வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிட்டனர். இதன் முடிவுகள், மம்தாவின் புகழ் அப்படியே இருந்தது, இந்திய கம்யூனிஸ்ட் -மார்க்சிஸ்ட் (CPM) கட்சியின் செல்வாக்கு, மாநிலத்தில் மூன்றில் ஒரு பங்காக குறைத்தது. பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) பிரதான எதிர்க்கட்சியாக உருவானது.

பா.ஜ.க மற்றும் காங்கிரசின் போட்டியாளர்களின் ஆரம்ப பட்டியல்களின் பகுப்பாய்வு செய்தால், பெரிய கட்சிகளுக்கு இது வழக்கம் போல்வியாபாரம் என்பது தெரிகிறது. பா.ஜ.க. அறிவித்த முதல் பட்டியலில் 184 வேட்பாளர்களில் 23 பேர் அல்லது 12.5% மட்டுமே பெண்கள். காங்கிரஸ் பட்டியலில் உள்ள 143 வேட்பாளர்களில் 17 பேர் அல்லது 11.9% மட்டுமே பெண்கள்.

"பா.ஜ.க. ஏற்கனவே கட்சிக்குள் பெண்களுக்கு 33% ஒதுக்கியுள்ளது" என்று, மகாராஷ்டிரா பாஜக கட்சியின் செய்தித் தொடர்பாளரும், பொருளாளருமான ஷைனா என்.சி. தெரிவித்தார். "ஆனால் இது போதாது. தேர்தலில் போட்டியிடுவது மிக முக்கியமானது" என்றார் அவர்.

பெண்கள் வாக்காளர்கள் என்ன விரும்புகிறார்கள்

பெண்கள் வாக்காளர்கள் தேர்தல் விளைவுகளை பாதிக்கிறார்களா?நிச்சயமாக என்கிறார் ப்ரூகிங்ஸ் இந்தியாவின் ரவி. எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத பீகாரில் நடந்த பிப்ரவரி 2005 சட்டசபை தேர்தல் குறித்த ஆய்வில், 243 தொகுதிகளில் 87 இடங்களில் வெற்றி பெற்ற கட்சியின் மாற்றத்தை ரவி கண்டார். ஆனால் பிப்ரவரி மற்றும் அக்டோபர் இடையே பெண் வாக்காளர்கள் சதவீதம் 42.5% இக் இருந்து 44.5% என்று அதிகரித்தது; ஆண் வாக்காளர்கள் விகிதம், 50% முதல் 47% வரை குறைந்தது.

"பெண்கள் மாற்றத்திற்காக வாக்களிக்கிறார்கள்; அதே வேளையில் ஆண்கள் அதிக நிலைப்பாடு உடையவர்களாக உள்ளனர், "என்றார் ரவி. "நிதீஷ் குமார் [பீகாரின் தற்போதைய முதலமைச்சர்] பெண்கள் வாக்குகளால் தாம் ஆட்சிக்கு வந்ததை அறிந்துள்ளார். அரசியல் கட்சிகள் இப்போது அவருடைய புத்தகத்தில் ஒரு கருத்தை எடுத்துக் கொள்கின்றன" என்றார்.

பெண்கள் வாக்காளர்கள் என்ன விரும்புகிறார்கள்? பீகாரில் 82 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. அவர்களின் நீண்டகால கோரிக்கையான மதுவிலக்கை அமல்படுத்த, நிதீஷ் குமார் உறுதியளித்துள்ளார்; பதவி ஏற்றதும் அதை காப்பாற்றினார்.

ஒடிசாவில், பெண்கள் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க - அரசு வேலைகளில் ஒதுக்கீடு, தொழில்சார் பயிற்சி, சைக்கிள், சுகாதார நாப்கின், சீருடை மற்றும் பெண்கள் உதவித்தொகை - உள்ளிட்டவற்றுடன் பெண்களுக்கான "இயற்கை தொகுதியை" பட்நாயக் உருவாக்கியதாக, ஐக்கிய ஜனதாதளம் கட்சி தேசிய பொதுச் செயலாளரும், செய்தித்தொடர்பாளருமான பவன் கே. வர்மா தெரிவித்தார். "அரசு கொள்கைகளின் நன்மைகள், பெண்கள் ஓட்டளிக்கும் வகையில் நிறுவனமயமாக்கல் உள்ளது," என்றார் அவர்.

பெண்கள் வாக்காளர்கள் பெரும்பாலும் ஆண்களின் அதே கோரிக்கைகளுடன் உள்ளதாக, பித்யுத் மொகந்தி தெரிவித்தார். பட்டியலில் முதலில் இருப்பது வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரமும் ஆகும். ஆனால், சுகாதார, கல்வி, குடிநீர், பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதி ஆகியவற்றை பெண்கள் விரும்புகின்றனர்.

இருப்பினும், பெண்கள் ஒரு தொகுதிக்கென வாக்களிப்பதாக எந்த ஆதாரமும் இல்லை.பெண்களின் வாக்களிப்பு முறைகளில் ஒரு அரசியல் கட்சிக்கான சற்று சாய்ந்து அல்லது முன்னுரிமை கூட கணிசமாக முடிவுகளை மாற்ற முடியும் என, டெல்லியை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவமான, மேம்பாடு சங்கங்களின் ஆய்வு மையம் (CSDS). இயக்குனர் சஞ்சய் குமார் தெரிவித்தார். வாக்குப்பதிவில் பாலின இடைவெளியை குறைப்பதன் மூலம், தேர்தலில் பெண் செல்வாக்கு வளர வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.

ஒரு கட்சிக்கு பெண் தலைவியாக இல்லாதவரை - பெண்களுக்கு பெண்கள் தான் வாக்களிக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக, தமிழ்நாட்டின் 2016 சட்டசபை தேர்தலில், அ.இ.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK), அதன் தலைவரான ஜெ.ஜெயலலிதாவின் தலைமையில் பெற்ற வெற்றி, ஆண் தலைமையிலான வெற்றியைக்காட்டிலும் 10% புள்ளிகள் அதிகம் என சி.எஸ்.டி.எஸ். குமார், மிண்ட் இதழிலில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவாக, மாநிலத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான போக்கை அக்கட்சி முறியடித்தது. இதேபோல், மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், திரிணமூல் காங்கிரஸின் வாக்குவிகிதம், பெண்கள் மத்தியில் கணிசமாக அதிகரித்துள்ளது.

அதிக வெற்றி பெற்றிருந்தாலும், பெண்கள் வேட்பாளர்களுக்கு சிறிய அறை

எந்த விதமான வழியைப் பார்த்தாலும், இந்திய அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவம் மிக குறைந்தளவே உள்ளது. வரலாற்று ரீதியாக, அதிகார பதவியை வகித்த இந்திய பெண்கள் - ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் முதல் பெண் தலைவர் விஜயலட்சுமி பண்டிட், இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் விதிவிலக்காக - ஆனால் விதிகளின் படியல்ல.

கடந்த 1952 ஆம் ஆண்டின் முதல் மக்களவையில் 22 பெண் எம்.பி.க்கள் அல்லது 4.5% மட்டுமே பெண்கள். 67 ஆண்டுகளுக்குப் பிறகு, பெண்களின் எண்ணிக்கை 12.15% என்றளவிலேயே உள்ளது. பதவிக்காலம் முடியும் தற்போதைய மக்களவையில் 66 பெண் எம்.பி.க்கள் மட்டுமே.

மாநில சட்டசபைகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் மோசமாக உள்ளது, தேசிய சராசரியோ, 9% என்றுள்ளது. நாகாலாந்து மாநிலம் உருவாக்கப்பட்டு 53 ஆண்டுகளில், இதுவரை ஒரு பெண் எம்.எல்.ஏ. கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. நாடாளுமன்றத்திற்கு, காலஞ்சென்ற ராணோ மெஸி ஷாயிசா மட்டுமே சென்றுள்ளார்.

பெண்களுக்கு பிரதிநிதித்துவம் தருவதில் ஹரியானா மாநிலம் முன்னிலையில் உள்ளது. சட்டப்பேரவையில் அங்கு மொத்தம் 15% பெண்கள் உள்ளனர். கேரளாவில், 2001 தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் 9.3% ஆக இருந்தது; ஆனால் தற்போது இது 6 சதவீதத்திற்கு கீழ் குறைந்தது.

தேர்தலில் பெண்களை களையெடுப்பதில் தங்கள் பாரபட்சத்தை விளக்க அரசியல் கட்சிகள் மேற்கோள் காட்டிய காரணம் 'வெற்றி' அல்லது வெற்றி விகிதம் ஆகும். ஒடிசாவில் ஒரே நேரத்தில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெறு நிலையில் பிஜேடி கூட நாடாளுமன்ற தேர்தலுக்கு மட்டுமே பெண்களுக்கு இடங்களை ஒதுக்கியுள்ளது.

இருப்பினும், பெண் போட்டியாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆண்கள் விட அதிக வெற்றி சதவீதம் என்று காட்டுகின்றனர்.

ஒரு கணிசமான வெகுஜனத்தை தாங்குவது பெண் வேட்பாளர்கள் நிறுத்துவதில் அரசியல் கட்சிகளின் கூட்டு தோல்வி கவலைக்குரியது; ஏனெனில் பெண்கள் தலைவர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என, Women in Party Politics என்ற தலைப்பில் 2014இல் ஷாமிகா ரவி வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ப்ரூகிங்ஸ் இந்தியாவின் ஆராய்ச்சி உதவியாளரும், ஆராய்ச்சி இணை ஆசிரியருமான ரோஹன் சாந்து, "நமது அரசியல் அமைப்பு, பெண் தலைவர்களை உருவாக்கும் முயற்சியில் கூட்டாக தோல்வியடைந்தன; நாடாளுமன்றத்தில் சட்டவரைவு செய்யப்படுத்த அவை தயாராக இல்லை. அத்தகைய சூழலில், மசோதா நிறைவேறியிருந்தாலும் அதன் விளைவுகள் சந்தேகத்திற்குரியதாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

கட்சிகள் அதன் அமைப்புக்குள்ளேயே பெண்களுக்கு இடஒதுக்கீடு தருவது பற்றி காகித அளவில் பேசுகின்றன; உண்மையில் அது வேறுபட்டதாக இருக்கிறது.

கடந்த 2014இல், 42 உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சியின் செயற் குழுவில் ஐந்து நிர்வாகிகள் மட்டுமே பெண்கள் என்று, ரவி மற்றும் சாந்து கண்டறிந்தனர்.

இந்த சூழல், மற்ற கட்சிகளை ஊக்கப்படுத்துவதாக இல்லை. திரிணமூல் காங்கிரஸின் 30 துணைத்தலைவர்களில் யாரும் பெண்கள் கிடையாது. ஆம் ஆத்மி கட்சி தேசிய செயற்குழுவின் 24 உறுப்பினர்களில் இருவர் மட்டுமே பெண்கள். 12 உறுப்பினர்களைக் கொண்ட சி.பி.எம். அரசியல் குழுவில் ஒரு பெண் உறுப்பினர் மட்டுமே உள்ளார்.

இதில் பாரதிய ஜனதா மட்டுமே அதன் தேசிய நிர்வாகிகள் 77 பேரில் 26 பெண் உறுப்பினர்களை கொண்டுள்ளது.

"கட்சியின் தலைமை பொறுப்புகளில் பெண்கள் இல்லாதிருப்பது, உள்கட்சி அரசியல், உள்கட்டமைப்பில் இல்லாததன் அறிகுறியாகும், இது பெண்களின் அரசியல் பங்களிப்புக்கு ஆதரவாக இல்லை" என்று ரவி கூறினார்.

ஆனாலும், பெண்களின் அரசியல் பங்களிப்புக்கு வாயிலாக அரசியல் கட்சிகள் தான் இருக்க முடியும். எத்தனை பெண்கள், யார் யார் எங்கு போட்டியிடுவது என்பதை அரசியல் கட்சியின் தலைமை தான் தீர்மானிக்கிறது.

சட்டசபை தேர்தலில் எத்தனை பெண்களுக்கு வாய்ப்பளிப்பது என்பதில் பிஜேடி மெளனமாக இருந்தாலும், அக்கட்சி வெளியிட்ட அறிவிப்பால், மக்களவை தொகுதியில் பெண்களை வரவேற்பது என்ற திரிணமூல் காங்கிரஸின் முடிவுக்கு உதவியுள்ளது என்றார் ரவி. ஏனெனில் இது "பெண்கள் தலைவர்கள் மத்தியில் ஒரு இணைப்பை உருவாக்குவதற்கு வழிவகுக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

மற்ற கட்சிகள் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்பதற்கு இதுவரை எந்த அடையாளமும் இல்லை. இந்தியாவின் அரசியல் வாழ்வில் பெரும்பான்மையான பாலின சமத்துவத்தை அடைவதற்கான முதல் படியாக 2019 ஆம் ஆண்டு தேர்தல் பாதையில் அதிகம் பெண்களை காணலாம் மஹந்தி தெரிவித்தார்.

"இந்தியர்களின் மதிப்புகள் ஒரே இரவில் மாறாது; மாற்றங்களை பார்க்க தலைமுறைகளை தாண்ட வேண்டியிருக்கும் " என்ற மொஹந்தி "நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்" என்றார்.

(நமீதா பந்தரே, இந்தியா எதிர்கொள்ளும் பாலின பிரச்சினைகள் பற்றி அடிக்கடி எழுதும் டெல்லி பத்திரிகையாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.