புதுடெல்லி: வடக்கு அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுக்கான இரு திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளுக்கு எதிரான மனுக்கள், தற்போது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றன; இது, அதிக ஆபத்துள்ள திட்டங்கள் தொடர்னான சுற்றுச்சூழல் மதிப்பீட்டில் பொதுமக்களின் கருத்துக்கேட்பு தேவையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இத்தகைய கருத்து கேட்புகளில் இருந்து நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பது விபத்துக்கள் மற்றும் அவசரநிலைகளைச் சமாளிக்க போதுமான தற்காப்பு நடவடிக்கைகளுடன் மோசமான திட்ட முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிவிக்கை-2006ன் கீழ், ஜனவரி 2020 வரை அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும், உள்ளூர் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் திட்டங்கள் குறித்தும், தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஒரு தளமாக பொதுமக்கள் கருத்துக்கேட்புகள் உள்ளன. சிறிய சுரங்க மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு ஒருசில குறிப்பிட்ட விலக்குகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில், சுற்றுச்சூழல் அமைச்சகம் ஜனவரி மாதத்தில்அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு திட்டங்களுக்கும், கடற்கரை மற்றும் கடல் பகுதிகளுக்கு பொதுமக்களின் கருத்துகளை பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கும் அறிவிப்பை திருத்தியது. மார்ச் மாதத்தில் பொதுமக்கள் கருத்துக்களுக்காக வெளியிடப்பட்ட வரைவு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிவிப்பு-2020ல் இதே விலக்கையும் அமைச்சகம் முன்மொழிந்தது, இது அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.

ஜனவரியில் செய்த திருத்தத்திற்கு பிறகு, கடல் அனுமதி மற்றும் கடலோர எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக 14 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன - அசாமில் ஒன்பது, மற்றும் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா ஒன்று என்று, சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் அனுமதி வலைப்பக்கத்தில் உள்ள பயன்பாடுகளை இந்தியா ஸ்பெண்ட் ஆய்வு செய்ததில் தெரிய வந்தது. இவற்றில், ஏழு விண்ணப்பங்கள் ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஓ.என்.ஜி.சி), மூன்று ஆயில் இந்தியா லிமிடெட், வேதாந்தா மற்றும் மூன்று அதானி வெல்ஸ்பன் எக்ஸ்ப்ளோரேஷன் லிமிடெட் உடையது. (பல்வேறு மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அதிகாரிகளிடம், நிலுவையில் உள்ள திட்டங்களின் பட்டியலை கீழே காண்க).

இந்த திட்டங்கள் எதற்கும் இப்போது பொதுமக்களின் கருத்து பெறத் தேவையில்லை. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் குடிமக்கள் குழுக்களிடையே இது ஏன் கலக்கத்தை ஏற்படுத்துகிறது? எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களின் பேரழிவு அபாயங்கள், பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்: மே 27 அன்று பஜ்ஜானில் எண்ணெய்க் கிணறு எண் 5 ல் ஏற்பட்ட வெடிப்பு விபத்து மற்றும் ஜூன் 9 அன்று ஏற்பட்ட தீ விபத்துகள், 3,500 க்கும் மேற்பட்ட குடும்பங்களை பாதித்தது. இந்த பேரிடர், ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்தது.

"பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு நடத்தப்படாதபோது, ​​இதுபோன்ற பேரிடரால் பாதிக்கப்படக்கூடிய நபர்கள் [திட்டங்களுடன்] தொடர்புடைய அபாயங்கள் குறித்து இருட்டில் வைக்கப்படுகிறார்கள். இது தற்செயல் நடவடிக்கைகளையும் பாதிக்கிறது,” என்று கேரளாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் வழக்கறிஞர் கிருத்திகா ஏ. தினேஷ் கூறினார். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் டின்சுகியா மாவட்டத்தில் பின்ஜன் மற்றும் மெச்சாக்கியில் உள்ள இரண்டு எண்ணெய் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்ததை எதிர்த்து, தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஜூலை 20 ம் தேதி மனுக்களில் ஒன்றை விசாரித்த தேசிய பசுமைத்தீர்பாயம், இந்த சர்ச்சைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் அசாம் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டது.

இந்த திட்டங்கள் ஹைட்ரோகார்பன் நிறைந்த அசாம்-அரகன் படுகை அமைந்துள்ளன, அங்கு மக்கள் தொகை அடர்த்தி சதுர கி.மீ.க்கு 350 ஆகும், இது தேசிய சராசரியான சதுர கி.மீ. 382 என்பதை நெருங்கியுள்ளது. மற்ற கருத்துக்களில், பொதுமக்கள் கருத்துக்கேட்பை தவிர்ப்பதற்கு திட்டங்களை அனுமதிக்க அமைச்சின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் (ஈஏசி) பரிந்துரையை மனுக்கள் எதிர்த்தன.

பாக்ஜன் போன்ற விபத்துகளுக்கான ஆயத்த இடைவெளிகளை நிரப்ப, பொதுமக்கள் கருத்துகேட்புகள் உதவுவதாக, பஜ்ஜானிலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள நேதுன் காவ்னில் வசிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர் நிரந்தா கோஹெய்ன் வாதிட்டார். "எங்கள் கவலைகள் மற்றும் குறைகளைக் கொண்ட ஒரு பொதுமக்கள் கருத்துக்கேட்பு பதிவு மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனத்தின் வாக்குறுதிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறைபாடுகள் ஏற்பட்டால் அல்லது நிறுவனம் அதன் வாக்குறுதிகளைத் திரும்பப் பெற்றால் பயனுள்ள சான்றாகிறது," என்று அவர் கூறினார். இது பொறுப்புணர்வை சரிசெய்ய உதவுகிறது, குறிப்பாக நீதிமன்ற வழக்குகளுக்கு வழிவகுக்கும் விபத்துக்கள்.

பொதுமக்கள் கருத்துக்கேட்பு பற்றி குறைவாக விளம்பரப்படுத்தப்படுவதாக, தேவையான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆவணங்கள் தேவைக்கேற்ப கிடைக்கவில்லை என்று, குடியிருப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். நாங்கள் பின்னர் விவரிப்பது போல், நிறுவனங்கள் சில நேரங்களில் பழைய பொதுமக்கள் கருத்துக்கேட்புகளை பயன்படுத்தி அதேபகுதியில் புதிய திட்டங்களுக்கான பொதுமக்கள் கருத்து கேட்புத் தேவையை தவிர்க்கின்றன.

அக்டோபர் 31 ம் தேதி நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தேசிய பசுமைத்தீர்ப்பாய குழுவின் சிறப்பு அறிக்கை மூலம், பாக்ஜன் எண்ணெய் வயலானது கட்டாய சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் இயங்குகிறது என்று தெரியவந்தது. அத்துடன், பொதுமக்களின் கருத்துக்கேட்பு இல்லாமல் அப்பகுதியில் புதிய திட்டத்திற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.

கருத்து கேட்காமல் 2011-2020ல் 14 திட்டங்களுக்கு அனுமதி

அசாம்-அரகன் படுகையானது, எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளின் சிக்கலான வலையமைப்பைக் கொண்டுள்ளது. அவற்றில் பலவும் சூழல் உணர்திறன் மண்டலங்களை எல்லைப்படுத்துகின்றன அல்லது அவற்றின் நடுவே உள்ளன: தேசிய பசுமைத் தீர்பாயத்தில் உள்ள இரண்டு மனுக்களில் ஒன்று, 18 கிணறுகள் தோண்டுவது மற்றும் மெக்காக்கி பகுதியில் எரிவாயு குழாய் பதித்தல் தொடர்பானது. மற்றொன்று பஜ்ஜன் சுரங்க குத்தகை பகுதியில் அமைந்துள்ள கிணறுகளில் இருந்து திப்ரு சைகோவா தேசிய பூங்காவில் (டி.எஸ்.என்.பி) ஏழு இடங்களில் ஹைட்ரோகார்பன்களை துளையிடுவது தொடர்பானது. ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) இன் பஜ்ஜன் சுரங்க குத்தகை 75 சதுர கி.மீ பரப்பளவில் உள்ளது மற்றும் பயன்பாட்டில் 17 எண்ணெய் கிணறுகள் மற்றும் ஐந்து எரிவாயு கிணறுகள் உள்ளன. இந்த குத்தகை பகுதிகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாகவும், திப்ரு சைகோவா தேசிய பூங்கா, மாகுரி மோட்டாபுங் ஈரநிலம் அல்லது டெஹிங் பட்காய் யானை வாழிடப்பகுதிக்கு அருகிலும் உள்ளன.

இந்தியா முழுவதும் 14 ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) திட்டங்கள் உள்ளன, அவற்றில் இரண்டை எதிர்த்து வழக்கு தொடரபப்ட்டுள்ளன, அவை, அனைத்தும் ஜனவரி திருத்தத்திற்கு முன்பு 2011 மற்றும் 2020 க்கு இடையில் பொதுமக்கள் கருத்துக்கேட்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன என்பது, ஆயில் இந்தியா லிமிடெட் இணையதளத்தில் கிடைக்கும் அனுமதி கடிதங்களை இந்தியா ஸ்பெண்ட் மதிப்பாய்வு செய்ததில் தெரியவருகிறது. ஆயில் இந்தியா லிமிடெட் தவிர, பிற நிறுவனங்களின் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களுக்கும் பொதுமக்கள் கருத்துக் கேட்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது: தெற்கு அசாமிலும், கச்-சவுராஷ்டிராவிலும், குஜராத்தில் அங்கலேஷ்வரிலும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி) வாயிலாக கிணறுகள் தோண்டப்படுவதற்கும் பொது விசாரணைகள் முறையே 2009, 2013 மற்றும் 2017 இல் இருந்து விலக்கு தரப்பட்டது. கெய்ர்ன் இந்தியா எனர்ஜிக்கு 2010 ஆம் ஆண்டில் ராஜஸ்தானின் பார்மரில் அதன் தற்போதைய யூனிட்டில், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் இதே போன்ற விலக்கு வழங்கப்பட்டது.

ஏன் பொது ஆய்வு முக்கியமானது

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அறிவிக்கை - 2006 அவற்றின் சாத்தியமான சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்களுக்கான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை திட்ட முன்மொழிவுகளை மதிப்பீடு செய்வதற்கான நடைமுறையை அமைக்கிறது. அவற்றின் அளவு, திறன், இருப்பிடம் மற்றும் தாக்கங்களின் தீவிரத்தின் அடிப்படையில், அறிவிப்பு அவற்றை ஏ, பி1 மற்றும் பி2 என வகைப்படுத்துகிறது. மத்திய சிறப்பு ஈ.ஏ.சி ஆனது, ஏ வகை திட்டங்களை மதிப்பிடுகிறது மற்றும் மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழு (எஸ்.ஏ.சி) பி 1 மற்றும் பி 2 வகை திட்டங்களின் தாக்கத்தை மதிப்பிடுகிறது, அவை சுற்றுச்சூழல் அனுமதிக்கு வேறுபட்ட அளவுகோல்களைக் கொண்டுள்ளன - மற்றவற்றுடன், பி 2 திட்டங்கள் பொதுமக்கள் கருத்து கேட்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. பொதுமக்களுடன் ஆலோசனை என்பது மதிப்பீட்டு செயல்முறையின் ஒரு முக்கியமான கட்டமாகும், அப்போது உள்ளூர்வாசிகளின் கருத்துக்கள் முன்மொழியப்பட்ட தளத்தில் ஒரு விசாரணையிலும், எழுதப்பட்ட பின்னூட்டத்தின் மூலமும் கேட்கப்படுகின்றன. இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்களும் பங்கேற்கலாம். பொதுமக்கள் கருத்து கேட்பு என்பது குடிமக்கள் திட்ட தொடர்பான முடிவெடுப்பதில் பங்கேற்க மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கைகளை ஆராய்வதற்கான ஒரு முக்கியமான தளமாகும், அவை பெரும்பாலும் தொடர்பில்லாத ஆவணங்கள் மற்றும் மோசமான தரவுகளில் இருந்து நகலெடுக்கப்பட்ட கருத்துகளால் நிரப்பப்படுகின்றன.

ஜனவரி வரை, ஏற்கனவே குறிப்பிட்டபடி வெளி மற்றும் கடலோர எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு திட்டங்களில், கட்டாய பொதுமக்கள் கருத்து கேட்பில் இருந்து ஒரு வழக்கின் அடிப்படையில் விலக்கு அளித்து வந்தது. ஆயில் இந்தியா லிமிடெட்டின் இணையதளத்தில், நிறுவனம் 2011 முதல் இப்போது வரை 23 திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் கடிதங்களை பதிவு செய்கிறது. இவற்றில், 14 நாங்கள் கூறியது போல, பொது கருத்துக்கேட்பு இல்லாமல் வழங்கப்பட்டது.

ஆபத்தான எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு திட்டங்களுக்கான பொதுகருத்து கேட்பின் தேவையை வழங்கும் போது, அது வலுவான பொது எதிர்ப்பை எதிர்கொள்கிறது மற்றும் இணக்கத்திற்கான மோசமான பதிவுகளைக் கொண்டுள்ளது, எனவே கேள்விகளை எழுப்புகிறது என்று ஆர்வலர்கள் தெரிவித்தனர். "நிறுவனங்களின் விதிமீறல்களுக்குப் பிறகு அதையே செய்வதாக உள்ளூர் மக்களைக் குறை கூறுகின்றன, எனவே பொது மக்கள் கருத்து கேட்புகளை தவிர்க்கின்றனர், எங்கள் உண்மையான கவலைகளைப் பகிர்ந்து கொள்ளவும் பதிவு செய்யவும் எங்களுக்கு வாய்ப்பை மறுக்கின்றன," என்று, அசாமில் கோலாகாட் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பிமல் கோகோய் கூறினார்.

Environmental Clearances granted to Oil India Limited without public hearings
S No. Project Name Date of Environmental Clearance District State
1 Oil collecting stations 12.01.2011 Multiple Assam
2 Setting up of 4 development projects- oil collecting station at Bhogpara, augmentation of capacity of intermediate tank farm at Tangakhat, new browser unloading station at Makum and Hapjan- Savitri crude oil pipeline in Tengakhat-Naharkatia-Jorajan area 24.01.2011 Dibrugarh, Tinsukia Assam
3 Exploratory drilling of 2 wells for oil & gas at Borhat Pel 06.07.2011 Sivasagar Assam
4 Drilling of development well (3) and exploratory well (1) 01.11.2011 Duliajan Assam
5 Drilling of development well (26) and exploratory well (15) 01.11.2011 Tinsukia Assam
6 Drilling of development well (17) and exploratory well (14) 01.11.2011 Dibrugarh Assam
7 Drilling of development wells (11) and exploratory well (8) 01.11.2011 Ningru Arunachal Pradesh
8 Drilling of development wells (10) and exploratory well (8) 01.11.2011 Ningru Arunachal Pradesh
9 Exploratory drilling of six more wells at fresh locations in the second batch form 19 possible locations 24.01.2014 Godavari Andhra Pradesh
10 exploration and testing of hydrocarbons (onshore 21 wells) 09.10.2014 Tinsukia & Dibrugarh Assam
11 Exploratory drilling in Cauvery sedimentary offshore basin 22.06.2015 Tuticorin Tamil Nadu
12 Exploratory drilling at additional 18 locations 27.11.2017 East Godavari district Andhra Pradesh
13 Onshore oil & gas development drilling 6 exploratory and 12 development wells, setting up of 4 production installations and laying of gas pipeline 09.04.2020 Tinsukia Assam
14 Extension drilling and testing of hydrocarbons at seven locations 11.05.2020 Tinsukia Assam

Source: Website of Oil India Limited; accessed on September 23, 2020

ஊடுருவ முடியாத முடிவுகள்

திப்ரு பூங்கா அனுமதி தொடர்பான வழக்கைக் கருத்தில் கொள்வோம். ஆயில் இந்தியா லிமிடெட், ஏற்கனவே ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2011 மற்றும் டிசம்பர் 2016 இல் அதன் பிற திட்டங்களுக்கான பொது விசாரணையை நடத்தியது என்ற அடிப்படையில், இ.ஏ.சி. நிறுவனம் டிசம்பர் 2017 இல் பொது மக்களின் கருத்து கேட்பை தவிர்ப்பதற்கு நிறுவனத்தை அனுமதித்தது.

"சட்டத்தில் கிடைக்கும் விதிகளின் அடிப்படையில் நாங்கள் விலக்குகளை கோரியுள்ளோம். சட்டத்திற்கு முரணான அல்லது வெளியே எதையும் நாங்கள் கேட்கவில்லை,” என்று, ஆயில் இந்தியா லிமிடெட்டின் பொது மேலாளரும் செய்தித்தொடர்பாளருமான திரிதிவ் ஹசாரிகா கூறினார்.

ஆனால் ஈ.ஏ.சி கூட்டங்களின் நிகழ்ச்சிக்குறிப்புகளை வாசிப்பது, இந்த கூற்றை நிரூபிக்கிறது. ஒரு பொதுமக்களின் கருத்துக்கேட்பை நடத்தத் தவறியதற்காக சுற்றுச்சூழல் அமைச்சகம், ஆயில் இந்தியா லிமிடெட்டிற்கு அனுமதி கோரிக்கையை வழங்கியபோது, அந்த நிறுவனம் வெறுமனே பொது கருத்துக்கேட்பை நடத்தாமல் மீண்டும் ஒரு முன்மொழிவை சமர்ப்பித்தது. "உள்ளூர் நெருக்குதல் குழுக்களின் கட்டுப்பாடற்ற செயல்கள்" தான், பொதுமக்கள் கருத்து கேட்பை சவாலாக ஆக்கியதாக நிறுவனம் கூறியது, மேலும் இ.ஏ.சி.யும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.

"... உள்ளூர் சமூகங்களின் ஆரோக்கியத்தில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டத்திற்கான பொது கருத்துக்கேட்பை நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது நியாயமற்றது," என்று, மெச்சாக்கி பகுதியில் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராக அசாமில் உள்ள நஹர்காடியா மாவட்டத்தைச் சேர்ந்த வனவிலங்கு ஆர்வலர் பிமல் கோகோய் மற்றும் மிருது பாபன் புகான் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் வாதிட்டனர். "மேலும், பொதுமக்கள் கருத்து கேட்பு ஏற்கனவே நடத்தப்பட்டிருந்ததால் அதை வைத்துக் கொண்டு மற்றொரு திட்டத்திற்காக பொதுமக்கள் கருத்து கேட்காமல் அனுமதி தருவது தவறானது" என்றார்.

கருத்து தெரிவிப்பது மக்கள் உரிமை

ஒரு பொதுமக்கள் கருத்து கேட்பு என்பது, ஆபத்தான திட்டத்தால் பாதிக்கப்படும் எந்தவொரு சமூகத்தின் உரிமையாகும் என்று, இரண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாய வழக்குகளில் மனுதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் டெல்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான சுற்றுச்சூழல் வழக்கறிஞரும், வன மற்றும் சுற்றுச்சூழலுக்கான சட்ட முன்முயற்சியின் நிறுவனருமான ரிட்விக் தத்தா கூறினார். "பொதுமக்கள் கருத்துக்கேட்பில் பங்கேற்பது ஒரு பொருத்தமான உரிமை. ஒரு முன்மொழியப்பட்ட திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பிடும்போது ஒரு பொதுமக்கள் கருத்து கேட்பை நடத்த வேண்டிய அவசியத்தை, ஒரு நிபுணர் குழு விலக்கும்போது, ​​அது உள்ளூர் மக்களின் வெளிப்படுத்தும் உரிமைக்கு ஒரு தடையாக இருக்கிறது, ”என்று அவர் வாதிட்டார். தேசிய பசுமைத்தீர்ப்பாய வழக்குகளுக்கும் மேலாக, திப்ரு பூங்காவில் ஆயில் இந்தியா லிமிடெட்டிற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராக கவுஹாத்தி உயர்நீதிமன்றமும், பொதுநலன் வழக்கு (பொது கருத்து கேட்பை தவிர்ப்பது பற்றி) விசாரித்து வருகிறது.

அசாமில் ஆயில் இந்தியா லிமிடெட்டின் 13 திட்டங்களுக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிகளில், நான்கில் மட்டுமே பொதுமக்கள் கருத்துக்கேட்பு நடைபெற்றதை எங்கள் பகுப்பாய்வு காட்டியது. ஆயில் இந்தியா லிமிடெட் கூட அப்பகுதியில் நான்கு விசாரணைகளை நடத்தியதாக கூறுகிறது. “இது [பாக்ஜன்] முதன்முறை பயன்படுத்தப்பட்ட பகுதி அல்ல. கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் இங்கு செயல்பட்டு வருகிறோம், கடந்த எட்டு முதல் பத்து ஆண்டுகளில், நாங்கள் நான்கு பொதுமக்கள் கருத்து கேட்புகளை மேற்கொண்டோம், ” என்று ஹசாரிகா கூறினார்.

Environmental Clearances Granted To Oil India Limited In Assam
S No. Project Name Date of Environmental Clearance District Public
Hearing
1 Oil collecting stations 12.01.2011 Various locations Exempted
2 setting up of 4 development projects- oil collecting station at Bhogpara, Augmentation of capacity of intermediate tank farm at Tangakhat, new browser unloading station at Makum and Hapjan- Savitri crude oil pipeline in Tengakhat-Naharkatia-Jorajan area 24.01.2011 Dibrugar, Tinsukia Exempted
3 Exploratory drilling of 2 wells for oil & gas at Borhat Pel 06.07.2011 Sivsagar Exempted
4 Drilling of development well (3) and exploratory well (1) 01.11.2011 Duliajan Exempted
5 Drilling of development well (26) and exploratory well (15) 01.11.2011 Tinsukia Exempted
6 Drilling of development well (17) and exploratory well (14) 01.11.2011 Dibrugarh Exempted
7 gas transmission pipeline from Baghjan to CGGS & OTP near W/50 and crude oil pipelines from Baghjan to makum 16.01.2012 Tinsukia, Dibrugarh 08.07.2011
8 setting up of secondary tank farm 16.01.2012 Duliajan, Dibrugarh 07.07.2011
9 Expansion of gas field development in three different areas 17.06.2013 Various locations 23.08.2011
10 exploration and testing of hydrocarbons (onshore 21 wells) 09.10.2014 Tinsukia & Dibrugarh Exempted
11 Onshore oil & gas exploration from 5 wells 03.07.2019 Tinsukia 15.09.2018
12 Onshore oil & gas development drilling 6 exploratory and 12 development wells, setting up of 4 production installations and laying of gas pipeline 09.04.2020 Tinsukia Exempted
13 Extension drilling and testing of hydrocarbons at seven locations 11.05.2020 Tinsukia Exempted

Source: Website of Oil India Limited; accessed on September 23, 2020

கருத்துக்கேட்பு போதியளவில் விளம்பரப்படுத்தப்படவில்லை

தின்சுகியா மற்றும் திப்ருகார் மாவட்டங்களில் பரவியிருக்கும் ககோரிஜனில் துளையிடும் திட்டம் தொடர்பாக, சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் இரண்டு பொது கருத்துக்கேட்புகள் இருந்தபோதும், அவை ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை, அவற்றில் ஒன்று முடிக்கப்படவில்லை. ஆனால் ஒரு முழுமையான விசாரணையின் அடிப்படையில், மெச்சாக்கி மற்றும் திப்ரு பூங்கா திட்டங்களுக்கு அனுமதி வழங்க இ.ஏ.சி பரிந்துரைத்தது.

காகோரிஜானில் "நற்பெயர்" இருந்தபோதும், நிறுவனம் "பலிகடா" ஆக்கப்பட்டு இருப்பதாக ஆயில் இந்தியா நிறுவனம், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தது. "உள்ளூர் பொது மக்களால் கூட்டம் சீர்குலைக்கப்பட்டு, முதலாவது கருத்து கேட்பு கூட்டம் நிறைவடையாமல் போய்விட்டது" என்று ஹசாரிகா கூறினார். "பின்னர் நாங்கள் மற்றொரு பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தினோம். இருப்பினும், உள்ளூர் எதிர்ப்பு காரணமாக திட்டத்தை தொடங்க முடியவில்லை. இப்பகுதியில் நதி அரிப்பு குறித்த அரசின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் கிளர்ந்தெழுந்தனர், ஆனால் அவர்கள் தங்கள் கோபத்தை எங்களிடம் வெளிப்படுத்தினர், எங்களது திட்டத்தை நிறுத்தினர்” என்றார்.

இருப்பினும், ஆயில் இந்தியா லிமிடெட்டின் பொது விசாரணை, தாக்கத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன, அதாவது உள்ளூரில் நெருக்கடி தரும் குழுக்களை வெல்வதன் மூலம் சாதகமான முடிவுகளைப் பெறும் செயல்பாட்டுக்கு இது அவர்களைத் தூண்டுகிறது என்பதாகும்.

உள்ளூர்வாசிகள் சிலர் எங்களிடம் கூறியது, பொதுமக்கள் கருத்து கேட்பு குறித்து, போதுமான அளவில் விளம்பரம் செய்யப்படுவதில்லை என்பதாகும். இது அவர்களின் முடிவை பாதிக்கிறது. எடுத்துக்காட்டாக, பஜ்ஜானில் வரவிருக்கும் பொதுகருத்துக்கேட்பு குறித்த அறிவிக்கை, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் போதுமான அளவில் வெளியிடப்படவில்லை என்று கோஹெய்ன் கூறினார். "மக்கள் அதுபற்றி அறிந்தால் தானே, அவர்களால் கருத்துச் சொல்ல செல்ல முடியும்," என்றார் அவர். "ஊராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகம் மற்றும் தொழில்துறை அலுவலகம் அனைத்தும் இ.ஐ.ஏ. அறிவிக்கை நகலை நாங்கள் மதிப்பாய்வு செய்ய வைக்க வேண்டும். ஆனால் நாங்கள் அவற்றை அங்கிருந்து பெறுவது அரிது - அவற்றை பெற ஆன்லைனை தான் நம்பி இருக்க வேண்டும். ஆனால் எத்தனை பேருக்கு இணையதள அணுகல் உள்ளது? பொதுமக்கள் கருத்து கேட்பில் யார் என்ன சொல்கிறார்கள் என்பதில் இவை அனைத்தும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன” என்றார்.

மற்றொரு மனு, டி.எஸ்.என்.பி.க்கு வழங்கப்பட்ட அனுமதிக்கு எதிரானது; பொதுமக்கள் கருத்து கேட்புக்கு விலக்கு அளிக்கும் ஈ.ஏ.சி முடிவு நியாயமற்றது என்று வாதிட்டது. “சுற்றுச்சூழல் மாறுதல் மதிப்பீட்டு அறிவிப்பு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் சில அடிப்படையில் விலக்கு அளிக்க அனுமதிக்கிறது. தற்போதைய வழக்கில் அத்தகைய அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை மற்றும் சட்டத்தின் கீழ், நிபுணர் மதிப்பீட்டுக்குழுவுக்கு (ஈஏசி) சொந்தமாக விலக்கு அளிக்க எந்த அதிகாரமும் இல்லை” என்று வாதிடப்பட்டது.

உள்ளூர் நிலைமையை மதிப்பிடுவது ஈ.ஏ.சி அறிவிக்கை- 2006ன் கீழ் கட்டாயம் என்பதால், அசாம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒரு அறிக்கையை ஈ.ஏ.சி கேட்டிருக்க வேண்டும் என்பதை ரிட்விக் தத்தா சுட்டிக்காட்டினார். இரண்டு மனுக்கள் மீதும் டிசம்பர் 15ம் தேதி அடுத்த விசாரணை நடைபெறவுள்ளது.

திப்ரு கிணறு துளையிடும் பணி தொடர்பாக ஆயில் இந்தியா லிமிடெட்டிற்கு அனுமதி கடிதத்தில் கையெழுத்திட்ட சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இயக்குனர் ஏ.கே.பதேஸ்வரி என்பவருக்கு, நீதிமன்ற வழக்கில் ஏற்பட்ட சர்ச்சை குறித்து கேட்டு, இந்தியா ஸ்பெண்ட் மின்னஞ்சல் அனுப்பியது. அஸ்ஸாம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இந்த விவகாரத்தில் அதன் கருத்துக்களைக் கோரி கேள்விகள் அனுப்பப்பட்டன. இது கடந்த நான்கு வாரங்களில் தலா ஒரு தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், எங்களுக்கு அதிகாரப்பூர்வ பதில் எதுவும் கிடைக்கவில்லை. பதில் கிடைத்தால் இக்கட்டுரையை புதுப்பிப்போம்.

ஆயில் இந்தியா லிமிடெட் மட்டுமே தனியாக இல்லை

கிராம எல்லைகளுக்கு அப்பால் 10 கி.மீ தூரத்தில் உள்ள கடல் திட்டங்கள், கோதான்கள் (மனித குடியேற்றப் பகுதிகள்) மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் வாய்ந்த பகுதிகள் பொதுமக்கள் கருத்து கேட்பில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம், இது கடல் மற்றும் கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு, மேம்பாடு மற்றும் உற்பத்தி திட்டங்களுக்கான தொழில்நுட்ப இ.ஐ.ஏ வழிகாட்டுதல் கையேடாக உள்ளது. இந்த கையேட்டை சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்காக ஆகஸ்ட் 2010 இல் உள்கட்டமைப்பு குத்தகை மற்றும் நிதி சேவைகள் தயாரித்தன. அப்போதிருந்து, பல வெளிநாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்கள் பொதுமக்கள் கருத்துகேட்பை தவிர்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டன. உதாரணமாக, 2013ம் ஆண்டில் குஜராத்தில் உள்ள கட்ச்-சவுராஷ்டிரா கடல்வழி பகுதியில் ஆய்வுக் கிணறுகள் தோண்டப்பட்டதற்காக ஓ.என்.ஜி.சி பொதுமக்கள் கருத்து கேட்பில் இருந்து விலக்கு பெற்றது. இதேபோல், குஜராத்தின் அங்கலேஷ்வரில் உள்ள அலியாபெட் வயலின் கடல் தொகுதியில் நான்கு கிணறுகள் தோண்டப்படுவதற்கு 2017ம் ஆண்டில் வழங்கப்பட்ட குறிப்பு விதிமுறைகளில் எந்தவொரு பொது கருத்துக்கேட்புக்கும் பரிந்துரை செய்யப்படவில்லை.

நாங்கள் முன்பு கூறியது போல, கடலோர எண்ணெய் குழாய்களுக்கு கூட இந்த வழி வழங்கப்பட்டுள்ளது. கெய்ர்ன் இந்தியா எனர்ஜி அதன் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் செயலாக்க திறன் மற்றும் தொடர்புடைய எரிவாயு உற்பத்தியை ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் அதிகரிக்க அனுமதிக்கப்பட்டது. தென் அசாமில் 30 கடலோரக்கிணறுகளை ஆய்வு செய்வதற்கு ஒ.என்.ஜி.சிக்கு இதேபோல் அனுமதி வழங்கப்பட்டது. பொது கருத்துக்கேட்புக்கு விலக்கு கோருவதற்கு அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு காரணம், நிறுவனம் ஏற்கனவே இப்பகுதியில் பொதுமக்கள் கருத்துகளை கேட்டுள்ளது என்பதுதான். (இந்த வாதத்தைப் பயன்படுத்தி விலக்கு கோரும் ஓ.என்.ஜி.சி இங்கே ஒரு எடுத்துக்காட்டு).

Oil & Gas Exploration Proposals Under Consideration Since January 2020
Assam
i ONGC 5
ii Oil India Limited 3
iii Vedanta Cairn India Limited 1
Madhya Pradesh
i HSE Frontier Basin (ONGC) 1
Maharashtra
i Adani Welspun 1
Rajasthan
i Vedanta Cairn India Limited 1
Uttar Pradesh
i Vedanta Cairn India Limited 1
West Bengal
i HSE MBA Basin (ONGC) 1
Total 14

Source: Environmental Clearance webpage the Ministry of Environment, Forests and Climate Change; accessed on November 2, 2020

பேரழிவு அபாயங்கள் ‘குறைத்து மதிப்பிடப்பட்டவை’ மற்றும் மோசமான இணக்கம்

ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய இரண்டும் தங்களது மதிப்பீடுகள் மற்றும் அறிக்கைகளில் பேரழிவு அபாயங்களை குறைத்து மதிப்பிடுகின்றன என்று நிபுணர்கள் தெரிவித்தனர். 2020 செப்டம்பரில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தபடி, அசாமில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் மோசமான அவசரகால நடவடிக்கை, தயார்நிலை இன்மை மற்றும் எண்ணெய் கசிவுகளின் பயனற்ற மேலாண்மை ஆகியவற்றை வனவிலங்கு நிறுவனத்தின் அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

"திட்டத்தைப் பொறுத்தவரை மேற்கொள்ளப்படும் இடர் மதிப்பீடு மந்தமானது, தவறானது; எண்ணெய் கசிவுகள், எண்ணெய் கிணறு வெடித்து தீ போன்றவற்றால் ஏற்படும் உண்மையான ஆபத்தை முன்னிலைப்படுத்தத் தவறிவிட்டது, இது இயந்திரத்தனமான முறையில் வெறும் சம்பிரதாயமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று, மெச்சாக்கி திட்டத்திற்கு எதிராக மனுவில் கூறப்பட்டுள்ளது. திப்ரு பூங்காவில் ஆயில் இந்தியா லிமிடெட்டால் துளையிடுவதற்கு எதிரான மனுவில், இ.ஐ.ஏ. அபாயங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது என்றும் வாதிட்டது.

எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் இணக்கப்பதிவும் மோசமாக உள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் குழாய் அமைப்பதை, ஆயில் இந்தியா லிமிடெட் தொடங்கியுள்ளதாக 2013ம் ஆண்டு கள வருகையின் போது தேசிய வனவிலங்கு குழு கண்டறிந்தது. அதன் அறிக்கை குழாய்களின் பாதை அமைப்புக்கு உள்ளூரில் பலத்த எதிர்ப்பையும், நிறுவனம் இ.ஐ.ஏ. நடைமுறைகளை புறக்கணிப்பதையும் குறிப்பிட்டது.

நாங்கள் கூறியது போல, பஜ்ஜன் எண்ணெய் வயலும், அசாமில் 26 கிணறுகளும் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் இயங்குகின்றன என்பதை தேசிய பசுமைத் தீர்பாயக்குழு சமீபத்தில் கண்டுபிடித்தது. நவம்பர் 2006 முதல் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் ஆயில் இந்தியா லிமிடெட் கிணறு செயல்பட்டு வருவதாக, அதன் ஆரம்ப அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஓ.என்.ஜி.சி விஷயத்தில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பிராந்திய அலுவலகம் தனது 2016 கண்காணிப்பு அறிக்கையில், அசாமில் 30 கிணறுகள் தோண்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளன என்று கூறியது. நிலுவையில் உள்ள வன அனுமதி, திடக்கழிவு அகற்றும் வழிகாட்டுதல்களை மீறுதல் மற்றும் கண்காணிப்பு அறிக்கைகளை ஒழுங்கற்ற முறையில் சமர்ப்பித்தல் ஆகியன, இதில் இணங்காதவை.

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில், மீண்டும் மீண்டும் எண்ணெய் குழாய் குழாய் கசிவு சம்பவங்கள் உள்ளூர் மக்களைக் கோபப்படுத்தியதாகக் செய்திகள் தெரிவித்தன. எண்ணெய் கசிவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று தேசிய பசுமைத்தீர்பாயத்தால் நியமிக்கப்பட்ட குழு, 2020 ஜூலை மாதம் குறிப்பிட்டது. இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்லும் நிலத்தடி ஓ.என்.ஜி.சி குழாய் ஒன்று, செப்டம்பர் 2020ல் கசிந்து அங்குள்ள ஒரு நெல் வயலை சேதப்படுத்தியது. எண்ணெய் கசிவைத் தடுப்பதில் ஏற்பட்ட குறைபாட்டிற்காக நிறுவனத்தை நீதிமன்றம் கண்டித்தது.

அமைச்சகம் மற்றும் திட்ட உரிமையாளர்கள் கடல் ஆய்வுகள் பாதிப்பில்லாதவை என்று கூறினாலும், அவை மக்கள்தொகை நிறைந்த பகுதிகளில் இருந்து விலகிச் செல்வதால், கடலில் மீன்வளம் மற்றும் கடற்கரையோரங்களில் அவற்றின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று சென்னையைச் சேர்ந்த செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன் இங்கே மற்றும் இங்கே குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 2020 திருத்தம் தொடபான செய்தி, காவிரி டெல்டாவில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் புதிய ஆர்ப்பாட்டங்களுக்கு தூண்டியது. ஹைட்ரோகார்பன் ஆய்வுகளுக்கு எதிராக 2010ம் ஆண்டு முதல் இப்பகுதியில் பரவலான ஆர்ப்பாட்டங்கள் இருந்து வருகின்றன; சுற்றுச்சூழல் அமைச்சகம் ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்களை இப்பகுதியில் ஆய்வு செய்வதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளை நடத்த அனுமதித்த நிலையில், இது 2019 ஆம் ஆண்டில் வேகம் பெற்றது. உள்ளூர் எதிர்ப்பிற்கு பதில் அளிக்கும் விதமாக, பிப்ரவரி 2020ல், தமிழக சட்டசபை ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தாவால் 300-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கிணறுகள் தோண்டப்படும் முடிவை நிராகரித்தது.

(கபூர், சுற்றுச்சூழல் கொள்கை தொடர்பான சுதந்திர ஆராய்ச்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.கருத்துகளை respond@indiaspend.org.என்ற முகவரிக்கு அனுப்பலாம்.மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.