‘தகவல் அறியும் உரிமை மசோதா வரைவு அந்த சட்டத்தையே மாய்த்துவிடும்; தகவல் ஆணையரின் சுதந்திரத்திற்கும் அது வேட்டு; அவற்றை மீண்டும் மலரச் செய்வோம்’
டெல்லி: மதபூஷி ஸ்ரீதர் ஆச்சர்யலு, மத்திய தகவல் ஆணையராக இருந்து அண்மையில் ஓய்வு பெற்றவர்; இந்தியாவின் மிக உறுதி வாய்ந்த வழக்கறிஞர்களில் ஒருவர். குடிமக்களின் தகவல் அறியும் உரிமை சட்டத்தை (ஆர்.டி.ஐ.) வலுப்படுத்துவதற்காக, வெளிப்படைத்தன்மை கொண்டு வந்தவர். ஆச்சார்யலு, 65, கடந்த 2013 நவம்பர் மாதம் மத்திய தகவல் ஆணையம் (சி.ஐ.சி.) பதவிக்கு அவர் நியமிக்கப்படும் முன்பு வரை, ஐதராபாத்தில் உள்ள தேசிய சட்ட ஆய்வுகள் அகாடமி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தவர். அவர் தனது ஐந்து ஆண்டு பதவி காலத்தில் உயர்-முக்கிய வழக்குகளில் முக்கியமான தகவல் அறியும் உரிமை சட்டங்களை நிறைவேற்றியவர். போலவரம் அணை குறித்த விவரங்களை பகிரங்கமாக வெளியிடும் உத்தரவு, எம்.பி.க்கள் நிதி செலவினம், வருங்கால வைப்புநிதி ஆணையம், பிரதமர் உட்பட உயர் அலுவலக பதவிகளில் இருப்பவர்களின் கல்வித்தகுதி மற்றும் சமீபத்தில் பெரிய கடன்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கியின் ஆவணங்களை வெளியிட உத்தரவு போன்றவை, அவரது முக்கிய உத்தரவுகள் ஆகும். ஆர்.டி.ஐ. சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் அரசின் முடிவை வெளிப்படையாக விமர்சிக்கும் ஆச்சார்யலு, இது சட்டத்தை ”முடிவுக்கு” கொண்டு வரும்; சி.ஐ.சி.யின் கண்காணிப்பு செயல்பாடுகளை இது சீர்குலைக்கும் என்கிறார். இந்தியா ஸ்பெண்டிற்கு ஆச்சார்யலு அளித்துள்ள நேர்காணலில், தனது நியாயமான முடிவுகளை பிரதிபலிப்பதோடு, இந்தியாவின் வெளிப்படைத்தன்மைக்கு முன்புள்ள உள்ள சவால்களையும் பட்டியலிடுகிறார்.
திருத்தப்பட்ட பகுதிகள்:
கடந்த ஐந்தாண்டுகளாக மத்திய தகவல் ஆணைய உறுப்பினராக இருந்து தகவல் அறியும் உரிமை சட்ட செயல்பாடுகளை கண்காணிக்கும் பணியில் இருந்தீர்கள். உங்கள் பார்வையில் ஆர்.டி.ஐ.யின் செயல்பாடுகள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
என்னை பொறுத்தவரை, 10க்கு 9 என்று மதிப்பிடுகிறேன். தகவல் அளிக்கப்படாத விஷயங்களில் இயல்பாகவே நமது கவனம் செல்கிறது. என் காலத்தில் 20,000 வழக்குகளை கையாண்டுள்ளேன். பெரும்பாலானவை வெளிப்படையானவை; என் உத்தரவுகள் பின்பற்றப்பட்டுள்ளன. என் முன் ஆஜரான அதிகாரிகள், வெளிப்படையாக செயல்பட வேண்டும் என்பதை தூண்டுவதற்கு முயற்சித்தேன். சட்டம், சுற்றுச்சூழல் [வனம் மற்றும் பருவநிலை மாற்றம்] போன்ற அமைச்சகங்கள், டெல்லி அரசு, பார் கவுன்சில் மற்றும் மருத்துவக் கவுன்சில் போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளில் நான் மாற்றங்களை கண்டேன். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் ஆர்.டி.ஐ. கோரிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த சட்டம் எவ்வளவு பரவலாக பயன்படுத்தப்படுகிறது என்பதையே இது காட்டுகிறது. ஆனால் ஆர்.டி.ஐ. கோரிக்கைகளில் 60% முதல் 70% ஆனது, ஊழியர் குறைகளை சரிசெய்யவோ அல்லது உரிமம் குறைபாடு சரிசெய்தல் தொடர்பானவை. பதவி உயர்வுகள், ஓய்வூதியம் பற்றியும் இதில் கேட்கப்படுகிறது; அல்லது பொதுவில் ஏற்கனவே இருப்பது தொடர்பான அரசாணை நகலும் கோரப்படுகிறது. இது தவறான கண்ணோட்டத்தை காட்டுகிறது.
பல ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளர்கள் மற்றும் வெளிப்படைத்தன்மையான வழக்கறிஞர்கள், நீங்கள் அளித்த ‘9’ என்ற மதிப்பீட்டோடு உடன்படவில்லை; தகவல் அறியும் உரிமையை அரசு படிப்படியாக சிதைத்து வருவதாக அவர்கள் வாதிடுகின்றனர். உதாரணத்துக்கு, பெருந்தொகையை கடனாக பெற்றவர்கள் விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்காதது; அல்லது சி.ஐ.சி. காலி பணியிடங்களை நிரப்பாததை கூறலாம்.
ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளர்கள் பல முக்கியமான பிரச்சினைகளை எழுப்பியுள்ளனர்; நான் அவற்றை ஒப்புக்கொள்கிறேன். மேலும் அவர்களோடு ஒத்துப் போகிறேன். 2018 டிசம்பர் 10-ல், நாட்டின் முதல் குடிமகனும், எனது எஜமானருமான குடியரசுத் தலைவருக்கு, சி.ஐ.சி.யில் காலியாக உள்ள (தலைமை தகவல் ஆணையர் உட்பட) எட்டு இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று திறந்த மடலை எழுதியிருந்தேன். மேலும் முக்கியமானது, சி.ஐ.சி. ஆணைய நியமனங்களின் தரம் ஆணைய தரத்தை பிரதிபலிக்கிறது. இதற்காக, சி.ஐ.சி. மேலும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும். சட்டம், ஊடகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவை, மேலாண்மை, இதழியல் மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் இருந்து ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று ஆர்.டி.ஐ. சட்டம் குறிப்பிடுகிறது. ஓய்வு பெற்ற அதிகாரிகளை மட்டுமே சி.ஐ.சி.க்கு நியமிப்பதை அரசு ஏன் ஆதரிக்கிறது? தலைமை தகவல் ஆணையர் மட்டுமே அதிகாரம் மிக்கவராக இருக்க வேண்டும் என்று சட்டம் எங்குமே கூறவில்லை. பிற துறைகளில் இருந்தும் தலைமை நிர்வாகி உட்பட நியமனங்கள் செய்யப்பட வேண்டும். ஓய்வு பெற்றவரை இத்துறைக்கு நியமிக்கும் முன், அவர் தனது பணி காலத்தில் எவ்வாறு வெளிப்படைத் தன்மையுடன் இருந்தார், வெளிப்படைத்தன்மை தொடர்பான அவரது விருப்பம் எத்தகையது போன்றவற்றை மதிப்பிட்ட பிறகே இப்பதவிகளுக்கு அவர் நியமிக்கப்பட வேண்டும். தகவல் ஆணையம் [மத்திய மற்றும் மாநிலங்கள்] என்பது ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கான ஓர் இடம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிம்பத்தை அரசு களைய வேண்டும். [சி.ஐ.சி. நியமனம் தொடர்பாக ஆர்.டி.ஐ. செயல்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் தொடர்ந்த பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம், டிசம்பர் 13ஆம் தேதி சி.ஐ.சி. யில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு பெறப்பட்ட விண்ணப்ப விவரங்களை வெளியிடுமாறு அரசுக்கு முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை பிறப்பித்தது].
பொது தகவல் அலுவலரின் (PIO) பதவியை துல்லியமாக நீக்கியதன் மூலம், அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்தை சிதைத்துள்ளது. பிரிவு அதிகாரிகள் உட்பட இளநிலை அதிகாரிகள், ஆர்.டி.ஐ. கோரிக்கைகளுக்கு சேவை செய்கின்றனர், அதே நேரம் ஆர்.டி.ஐ. தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரங்களைக் கொண்ட மூத்த அதிகாரிகளோ வெகுதூரத்தில் இருக்கின்றனர்.
ஆமாம். அது முற்றிலும் உண்மை. தகவலை மறுக்க முடிவெடுப்பது பெரும்பாலும் அதிக அளவுகளில் நடைபெறுகிறது; ஆனால் பொது தகவல் அலுவலர் என்பது, மொத்த இயந்திரத்தில் உங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் ஒரு சிறிய பகுதிதான். என் முன் ஆஜரான பொது தகவல் அலுவலரிடம் நான் "எங்கே தகவல் நடந்தது என்று சொல்லுங்கள்; அல்லது 25,000 ரூபாய் அபராதம் செலுத்த தயாராக இருக்க வேண்டும்" என்று கூறினேன். அவர்கள் “எங்களின் கைகளில் எதுவும் இல்லை” என்பார்கள்; நான் மீண்டும் “பிறகு யாரிடம் இருக்க வேண்டும்” என்று நான் கேட்பேன். அதனால் தான் ஒரு பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர், ஒரு ஆணையத்தலைவர் மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கலில் முடிந்தது. ஆனால், கடைசி வழக்கு பெரிய செய்தியானது. ஆனால் பல துறைகளில் என் பதவி காலம் முழுவதும் நான் அதை செய்து கொண்டிருந்தேன்.
ஆர்.பி.ஐ. வழக்கு நீங்கள் கடைசியாக விசாரித்த, மிக முக்கியமான ஒன்று. ஆர்.டி.ஐ. சட்டத்திற்கு இணங்கவில்லை என்று நீங்கள், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினீர்கள். ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெற்று வேண்டுமென்றே செலுத்தாமல் இருப்பவர்களின் விவரங்களை கேட்டு உத்தரவு போட்டிருந்தீர்கள். ஆனால், உங்கள் உத்தரவை எதிர்த்து "இத்தகைய தகவலை வெளிப்படுத்துதல் தேசிய பொருளாதாரத்தை பாதிக்கக்கூடும்" என்று, பம்பாய் உயர் நீதிமன்றத்தில் ஆர்.பி.ஐ. வழக்கு தொடர்ந்ததோடு, டிசம்பர் 14, 2018 அன்று உத்தரவின் பேரில் ஒரு இடைக்கால தடையை பெற்றது. அதுபற்றி?
ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு மிகவும் துரதிர்ஷ்டமானது. பெரிய கடனைத் திருப்பிச் செலுத்துபவர்களைப் பற்றிய தகவல் தனிப்பட்டதாக உள்ளது மற்றும் அது தேசிய பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாகுகிறது; நாட்டின் பொருளாதார நலன்களை பாதிக்கிறது என்பது மிகவும் அபத்தமானது. (இவைதான்) மிகவும் அரசியலமைப்பு மற்றும் பொறுப்பற்ற விவாதங்கள். இது ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தை மூடி மறைப்பதாகும். யார் வேண்டுமென்றே தவறு செய்தவர்கள் என்பதை வெளிப்படுத்தாததன் மூலம், நீங்கள் வங்கியாளர்களின் ஈடுபாட்டை மறைத்து வருகிறீர்கள் - இது எனது சந்தேகம்; நீங்கள் வேண்டுமென்றே முன்னிருப்பு செயல்முறையை ஆதரிக்கிறீர்கள். பல ஆயிரம் கோடி ரூபாய் பொது பணம் கடனாக வழங்கப்பட்டுள்ளது. சில சக்திவாய்ந்த கட்சிகள் பிறகு தவறு புரிந்துவிட்டன. இத்தகவல் ஏன் மக்களிடம் இருந்து ரகசியமாக வைக்கப்பட வேண்டும்? இது சட்டத்தின் மொத்தமீறல், சட்டவிரோதமாகும்.
உண்மையில், கடனாளிகளால் ஏற்படும் இதுபோன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வெளிப்படையான, சிறந்த வழக்கு அவசியமானது. வெளிப்படைத்தன்மை இல்லாதது மோசடி, தவறு, கிரிமினல் அலட்சியம், ஒழுங்குமுறை குறைபாடுகள் மற்றும் கடன் எப்போதும் இருக்க செய்கிறது. இறுதியில் கடன் சுமை தாங்க முடியாததாக தோன்றுகிறது. பிறகு நீங்களே வெளியே வந்து, அது ஒரு செயல்பாடற்ற சொத்து (NPA) என்றும் சொல்கிறீர்கள். இது வங்கிகளின் வணிக ரகசியம் அல்ல; ஒரு வியாபார குறைபாடு.
ஆர்.டி.ஐ.யின் நோக்கங்களில் ஒன்று அத்தகைய மோசமான ஆட்சியை கேள்வி கேட்பதுதான். உண்மையில், முந்தைய ஆணையர் ஷைலீஷ் காந்தி (தகவல் வெளியிட ஆர்.பி.ஐ-க்கு உத்தரவிட்டவர்) உத்தரவுகளை பிறப்பிக்கும் முன்பே, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை ஆர்.பி.ஐ. மீறத் தொடங்கியது. ரிசர்வ் வங்கியின் அதிகாரம் மிக்க உயரிய நபரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உட்படுத்தப்பட வேண்டும்.ஆனால் அவர்கள் வெளிப்படுத்தக்கூடாது என்ற ஒரு கொள்கை முடிவை எடுத்துள்ளனர். அவர்கள் தங்கள் இணையதளத்தில் வெளியிடும் தகவல்கள் பலவும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் இருந்து ‘தப்ப உதவும்’ வகையில் விதிவிலக்கு என்று குறிப்பிடுகின்றனர். இது முற்றிலும் தவறு. இப்போது அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர் [கடன் பெற்றவர்கள் விவரம் வெளியிட வேண்டும் என்ற சி.ஐ.சி. ஆணைக்குழுவின் உத்தரவுக்கு எதிர்த்து]. ஒரு சாதாரண நபர் 10 ரூபாய் செலுத்தி ஆர்.டி.ஐ. விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஆர்.பி.ஐ. போன்ற பலம் வாய்ந்த அமைப்புகளை எப்படி எதிர்கொள்ள முடியும்? இது மிரட்டல் போன்று தானே? இது போன்ற தருணங்களில் சாதாரண நபரை மீட்பது தான் சி.ஐ.சி.யின் பணியாகும்.
உங்கள் உத்தரவுக்கு எதிராக பம்பாய நீதிமன்றத்தை அணுகியிருக்கும் ஆர்.பி.ஐ.யின் செயல், தகவல் வெளியிடுவதை தவிர்க்கும் அதிகாரிகளின் தன்மையையே பிரதிபலிக்கிறது.
இறுதி வேண்டுகோளை சமர்ப்பிக்கும் தளமாக தகவல் ஆணையம் இருக்க வேண்டும். ஆனால், தகவல்களை வழங்குவதில் இருந்து தப்பித்துக் கொள்ள அரசுகளின் மூன்றாவது முறையீடு இடங்களாக நீதிமன்றங்கள் மாற்றியுள்ளன. குடிமக்கள் தங்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாக கருதினால், அதை தெரிவிக்கும் கருவியாக ரிட் மனு இருக்க வேண்டும். அதற்கு பதிலாக, தகவல் ஆணையர்கள் மற்றும் குடிமக்களுக்கு எதிராக அரசே மனுக்களை தாக்கல் செய்து, தகவலை வெளியிட வேண்டாமென்று முறையிடுகின்றன. கேலிக்கூத்தை பாருங்கள்! சி.ஐ.சி.யின் பல்வேறு உத்தரவுகளுக்கு எதிராக அரசு சார்பில் 1,700 ரிட் மனுக்கள் இருப்பதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. இந்த வழக்குகளை தாக்கல் செய்வதால் மக்களுக்கு என்ன சொல்லப் போகிறோம் என்று அரசு தன்னைத்தானே கேட்க வேண்டும். நீங்கள் சி.ஐ.சி. யை மிரட்டுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள். சில நேரங்களில் ஆணையர் தனிப்பட்ட முறையில் பிரதிதியாக வழக்குகள் பதிவு செய்யப்படுகிறார். குஜராத் பல்கலை தாக்கல் செய்த ஒரு வழக்கில் (இங்கு, ஆச்சார்யலுவின் உத்தரவு பேரில் பிரதமர் நரேந்திர மோடியில் கல்வித் தகுதியை பல்கலைக்கழகம் வெளிப்படுத்தியது; ஆனால், தடை கேட்டு குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது), நான் பிரதிவாதிகள் 1,2 மற்றும் 3 ஆவேன். அதாவது, பிரதிவாதி 1 எம்.ஸ்ரீதர் ஆச்சார்யலு, பிரதிவாதி 2 எம்.ஸ்ரீதர் ஆச்சார்யலு, தகவல் ஆணையர், பிரதிவாதி 3 தகவல் ஆணையர்.
அரசின் தகவல் உரிமை சட்ட திருத்தம் மசோதாவானது, சி.ஐ.சி.யை வழிக்கு கொண்டு வரும் ஒரு முயற்சியாகவும் கருதப்படுகிறதே?
இந்த திருத்தம் நிறைவேற்றப்பட்டால், சி.ஐ.சி. மற்றும் ஆர்.டி.ஐ. சட்டத்தைத் தாண்டிச் செல்வது அல்ல; அது முழுமையாக முடிக்கப்பட்டுவிடும். தற்போது சட்டத்தின் கீழ், ஆணையரின் காலவரை என்பது இறுதி செய்யப்பட்ட ஒன்று. சி.ஐ.சி.யின் சுதந்திரம் என்பது அதன் ஆணையர்களை அகற்றுவது கடினம் என்பதில் உள்ளது. இந்த திருத்தம், ஆணையரின் சுதந்திரத்தை பறித்துவிடும்; அதை மீண்டும் பழையபடி மலரச் செய்ய வேண்டும். அரசின் விருப்பத்தை பொறுத்தே பதவிக்காலம் என்ற திருத்தத்தை குடிமக்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும். அதேபோல், ஆர்.டி.ஐ. சட்டத்தில் திருத்தங்கள் முன்மொழியும் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை [தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா, 2018] மற்றொரு பெரிய அச்சுறுத்தலாகும். என் பணிக்காலத்தில் நான் கண்டவரை பிரிவு 8.1.ஜே. [இது 'தனிப்பட்ட தகவல்' என்ற அடிப்படையில் தகவல்களை நிராகரிக்கிறது] பெரும்பாலும் பி.ஐ.ஓ.க்களால் ஆர்.டி.ஐ. சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இப்போது, தனியுரிமை என்ற பெயரில், ஸ்ரீகிருஷ்ணா குழுவால் முன்மொழியப்பட்ட திருத்தம், ஒரு பொது அதிகாரத்தை சுற்றி ஒரு தகவலை கூட வழங்காது. இது ஒரு பெரிய அச்சுறுத்தலாகும்.
இத்தகைய சவால்களில் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாம் எவ்வாறு பலப்படுத்த முடியும்?
சில மாதங்களில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஆர்.டி.ஐ. குறித்த அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டையும், அதன் வெளிப்படைத்தன்மைக்கு எத்தகைய உறுதியை தருவார்கள் என்றும் பொதுமக்கள் கேட்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் கீழ்கண்டவற்றை கொண்டிருக்க வேண்டும்: ஆர்.டி.ஐ. சட்டத்தை குறைக்கவோ, நீர்த்துப் போகவோ செய்யக்கூடாது; அவர்கள் பிரிவு 4ஐ (தாமாக முன்வந்து வெளிப்படுத்தும் சட்டத்தின் பிரிவு) நிறைவேற்றுவதாக எழுத்து மூலம் உறுதி தர வேண்டும்; உடனடியாக தகவல் ஆணையர்களை நியமிக்க வேண்டும்; அவர்களில் 90% பேர் அதிகாரமற்ற துறைகளை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்; அரசியல்வாதிகள் ஆர்.டி.ஐ.யின் கீழ் தங்களை கொண்டு வர வேண்டும். வாக்களிக்கும் முன் கட்சிகளின் இத்தகைய அம்சங்களை குடிமக்கள் மதிப்பிட வேண்டும். ஆர்.டி.ஐ.யை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியையும் மக்கள் எதிர்க்க வேண்டும் மற்றும் பொது நலன்களுக்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனுக்களை தாக்கல் செய்வது தொடர வேண்டும்.
(சிந்த்ராங்கதா சவுத்ரி, சுயாதீன பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர். உள்நாட்டு மற்றும் கிராமப்புற சமூக நிலை, நிலம் மற்றும் வன உரிமை, நீதி ஆதாரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எழுதி வருகிறார். அவரை டிவிட்டரில் பின் தொடர, @ChitrangadaC)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.