நோபல் பரிசு வென்றவரின் வேலையின்மை எச்சரிக்கை அகமதாபாத் வீதிகளில் விரிவடைகிறது
அகமதாபாத்: "இந்த துயரம் எப்பொது முடிவுக்கு வரும் என்று எங்களுக்குத் தெரியாது". சகோதரரும் கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டவருமான ராஜேந்திரா (33), தேவேந்திர சுனாரா (34) ஆகியோருக்கு வேலை கிடைத்து இரு வாரங்களாகிவிட்டது. அவர்களின் வலுவிழந்த தோள்கள், சோர்ந்து போன கண்கள், கவலை தோய்ந்த முகங்கள், விரக்தியில் இருப்பதை காட்டுகிறது.
ஒவ்வொரு நாளும் காலை 8 மணியளவில், சுமார் 2,000 தினக்கூலி தொழிலாளர்களுடன் சேர்ந்து - சாலையின் ஓரத்தில் குழுக்களாக, அல்லது, அங்கே உள்ள டயர்கள் மீது உட்கார்ந்தவாறு - கட்டுமானப்பணி, சரக்கு ஏற்றுதல், பிளம்பிங், மின்சார ஒயரிங் போன்ற ஏதாவதொரு பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
அக்பர் நகர் வட்டாரத்தில், -இந்தியாவின் 5வது அதிக மக்கள் தொகை கொண்ட நகரில் 50 தொழிலாளர் மையங்களில் ஒன்று; மாநிலத்தின் அதிக தனிநபர் வருவாயில் 13வது இடத்தை பெற்றுள்ளது- இங்கு, மெதுவாக வந்து நிற்கும் வாகனங்களில் உள்ள வேலை ஒப்பந்தக்காரர்களிடம், வேலை பெறுவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். இவர்களில் பாதிபேரு உள்ளூர்வாசிகள்; எஞ்சியவர்கள் உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என, இந்தியா ஸ்பெண்டிடம் அவர்கள் தெரிவித்தனர்.
"இந்த துயரம் எப்போது முடிவுக்கு வரும் என்று எங்களுக்குத் தெரியாது". சகோதரரும் கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டவருமான ராஜேந்திரா (33), தேவேந்திர சுனாரா (34) ஆகியோருக்கு வேலை கிடைத்து இரு வாரங்களாகிவிட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு வரை அவர்கள் இருவரும் தலா ரூ.10,000- ரூ.15,000 வரை வருவாய் ஈட்டி வந்தனர்; தற்போது மாதத்திற்கு ரூ.3,000-ரூ.5000 தான் கிடைக்கிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இந்தியாவில் புழக்கத்தில் 86% புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கும் முன்பு வரை, தற்போது ஈட்டும் வருவாயை விட இரு மடங்கு சுனாரா சகோதரர்கள் சம்பாதித்து வந்தனர்: இருவரும் தலா ரூ.10,000- ரூ.15,000 வரை வருவாய் ஈட்டி வந்தனர்; தற்போது மாதத்திற்கு ரூ.3,000-ரூ.5000 மட்டுமே கிடைக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு, இச்சகோதரர்கள் மாதம் 25 நாட்கள் வேலை செய்தார்கள். இப்போது அவர்களுக்கு ஐந்து முதல் 10 நாட்கள் வேலை கிடைக்கிறது. அவர்களை சுற்றியிருக்கும் மற்ற தொழிலாளர்கள், இந்த தகவலை உறுதி செய்தனர்.
நோபல் பரிசு பெற்ற பால் க்ரூக்மன், இந்தியாவில் வேலையின்மை பிரச்சனை தலைதூக்கும் என்று எச்சரித்த நிலையில், இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பு 1.8 கோடியாக சுருக்கிவிட்டது என்ற அரசின் அறிக்கை கசிந்த நிலையில், இச்சகோதரர்கள் கடந்த 10 ஆண்டுகளில் “மிக மோசமான காலத்தில்” வாழ்ந்து வருவதாகவும், இத்தகைய வேலையின்மையை தாங்கள் பார்த்ததில்லை என்றும் கூறினர்.
தொழிலாளர்கள் வேலையின்மிய பிரச்சனைக்கு "பிரதான காரணம்" அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை தான். இது, குஜராத்தில் அதிக பணப்புழக்கம் உள்ள கட்டுமானத்துறையை "கடுமையாக பாதித்தது"; இத்துறை, விவசாயத்திற்கு (22%) அடுத்ததாக 10% பங்களிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளது என, லாப நோக்கற்ற அமைப்பான குஜராத் இன்ஸ்டிடியூட் ஆப் ஹவுசிங் அண்ட் எஸ்டேட் டெவலப்பர்ஸ் தலைவர் ஆஷிஸ் படேல் தெரிவித்தார்.
இது, 11பகுதிகளை கொண்ட தொடரின் நான்காவது பகுதி. (நீங்கள் இங்கே முதல் பகுதி, இரண்டாம் பகுதியை இங்கே, மூன்றாவது பகுதியை இங்கே படிக்கலாம்). நாடு தழுவிய அளவிலான உழைக்கும் வர்க்கம் உள்ள இடங்களில் இருந்து கள நிலவர அறிக்கையை - திறனற்ற மற்றும் பகுதி திறன் கொண்ட தொழிலாளர்கள் தினக்கூலி அல்லது ஒப்பந்தமுறையில் பணி புரியும் இடங்களில் - இந்தியாவின் முறைசாரா துறை வேலைவாய்ப்புகளை கண்காணித்து வெளியிடுகிறோம். வெகுஜன, கல்வி கற்காத மற்றும் ஓரளவு எழுத்தறிவுள்ள தொழிலாளர்களின் பெரும்பகுதியை கொண்டுள்ள இந்தியாவின் தொழிலாளர் தொகுப்பில் இது92% என்று, அரசு புள்ளி விவரங்களை பயன்படுத்தி சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட 2016 ஆய்வு தெரிவிக்கிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்த பின் உருவான தொடர் வேலை இழப்புக்கள் குறித்து தேசிய அளவில் சர்ச்சைகள்,விவாதங்கள் நடக்கும் சூழலில், அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம், நம்பிக்கைகளை கருத்தில் கொண்டு இக்கட்டுரை தொடர் வெளியாகிறது. அகில இந்தியா உற்பத்தியாளர்கள் அமைப்பு, அதன் 3,00,000 உறுப்பினர்களில் 34,700 பேரிடம் கருத்து கேட்டது. இதில், 2018 ஆண்டுடனான நான்கு ஆண்டுகளில், மூன்றில் ஒரு பகுதியினர் வேலை இழந்தது தெரிய வருகிறது. 2018ஆம் ஆண்டில் மட்டும் 1.1 கோடி வேலைகள் இழப்புகள், பெரும்பாலும் கிராமப்புற அமைப்புசாரா துறைகளில் ஏற்பட்டுள்ளதாக, ஆலோசனை அமைப்பான இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2016 நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது குஜராத்தில் வேலையில்லாத பிரச்சனை விகிதம் 2.2% என்று இருந்ததாக சி.எம்.ஐ.இ. தரவுகள் தெரிவிக்கின்றன; இது, 2016 டிசம்பரில் 5%; 2018 பிப்ரவரியில் 9.5% மற்றும் 2018 அக்டோபரில் 7.4% என்று அதிகரித்தது. 2019 பிப்ரவரி மாதத்தில், குஜராத்தில் வேலையின்மை விகிதம் 5.5% ஆகும்.
இது குறித்து அதிகாரபூர்வ கருத்து வெளிவரவில்லை. ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் குஜராத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்பதையோ, வேலையின்மை அதிகரித்தது என்பதையோ குஜராத் அரசு ஏற்கவில்லை. பெயர் வெளியிட விரும்பாத தொழிலாளர் துறை அதிகாரி ஒருவர், இதன் தீவிரம் குறித்து கூறினார். இதனால், வேலைகிடைக்காத தொழிலாளர்களுக்கு எத்தகைய ஆதரவு கிடைக்கவில்லை.
உழைக்கும் வாழ்க்கையில் வேலையின்மை பிரதானம்
சுனாராவில் குடும்பம் 10 ஆண்டுகளுக்கு முன், நிதி நெருக்கடியை சந்தித்தது தான் கடினமான தருணங்கள் - அவரது தந்தையின் சிறிய விளை நிலத்தில் சாகுபடி பொய்த்ததால் இது ஏற்பட்டது - இதனால் ராஜேந்திரா தனது எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பை இரண்டாம் ஆண்டுடனும், தேவேந்திரா தனது பி.காம் படிப்பை இரண்டாம் ஆண்டுடனும் நிறுத்திக் கொண்டு, குஜராத்தின் அமைப்புசாரா தொழிலாளர் அமைப்பில் இணைந்தனர்.
இருவரின் மனைவியருக்கும் வேலை இல்லை; அவர்களின் குழந்தைகள் தொடக்கப்பள்ளியில் படிக்கின்றனர் வட்டாஜ் கிராமத்தில் உள்ள வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இது, பரபரப்பான சாலைகளுக்கு மத்தியில், சந்தை சதுக்கத்தில் நடக்கும் தொலைவில் இருக்கிறது.
குஜராத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களாக இருப்பவர்களில் ஏறத்தாழ 70% பேர், 40 வயதுக்குட்பட்டவர்கள் என, அமைப்புசாரா தொழிலாளர்கள் உரிமையை பாதுகாக்கும் அரசுசாரா அமைப்பான மஸ்தூர் ஆதிகர் மஞ்ச்சின் செயலாளர் ரமேஷ் ஸ்ரீவத்சவ் தெரிவித்தார்.
வீட்டு வாடகை, பள்ளி போன்ற அடிப்படை தேவைகளுக்கு பணம் செலுத்தக்கூட போரட வேண்டியிருப்பதாக கூறும் சுனாரா சகோதரர்கள், “70க்கும் அதிகமான” தங்களது சக தொழிலாளர்கள் தினசரி தேவைக்கு, வட்டிக்கு பணம் தருவோரிடம் இருந்து “அதிக” வட்டிக்கு அதாவது, மாதம் 10% முதல் 20% வட்டிக்கு கடன் பெறுவதாக கூறினர்.
இதேபோல், காத்லோடியா, சபர்மதி, சந்த்லோடியா, ஷாபூர், நேரு நகர், சர்கெஜ், வஸ்னா மற்றும் மேம்நகரில் உள்ள தொழிலாளர் மையங்களில் காத்திருக்கும் தினக்கூலிகளின் குரல்களும் இதையே ஒலித்ததை எங்கள் அனுபவத்தில் கண்டோம்.
குஜராத்தின் அமைப்புசாரா பிரிவில் தற்போது வேலையின்மை தலைதூக்கி இருப்பதற்கு, பணமதிப்பிழப்பு நடவடிக்கையே காரணம் என்று குற்றச்சாட்டு உள்ளது. முன்பு போல் வேலை இல்லாத நிலையில், இன்னும் வேலைக்காக பலர் காத்திருக்கின்றன, அவர்கள் கூறுகின்றனர்.
தற்காலிக வேலைகளுக்கான வாய்ப்புகளை கண்டறிவதற்கு கூட அரசு முயற்சி செய்யவில்லை.
"அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை பெரியது; எந்த ஆய்வுகள் மூலமும் கணக்கிடப்பட்டு, இதன் எண்ணிக்கையை பெற முடியாது" என, துணை தொழிலாளர் ஆணையர் ஷிருதிபன் மோடி தெரிவித்தார். "அரசு பல்வேறு வாரியங்கள் மற்றும் நலத்திட்டங்களில் பதிவு செய்து, அவர்களை கணக்கிட முயன்று வருகிறது" என்ற அவர், மாநிலத்தின் தொழிலாளர் தொகுப்பில் 83% அமைப்புசாரா தொழிலில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியை விட ஒன்பது சதவீத புள்ளிகள் குறைவு என்றார்.
நாட்டின் அனைத்து முக்கிய தொழிற்பேட்டையில் உள்ள முக்கிய தொழிலாளர் மையங்களிலும் தினசரி வேலைக்காக காத்திருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 100,000 என, தொழிலாளர் உரிமைக்காக போராடும் குஜராத்தை சேர்ந்த அரசுசாரா அமைப்பான, தொழிலாளர் ஆராய்ச்சி மற்றும் செயல்பாட்டு மையத்தின் மீனாபென் ஜாதவ் தெரிவித்தார்.
திறன்வாய்ந்த மற்றும் பகுதித்திறன் தொழிலாளர்கள் நாளொன்று ரூ.800 வருவாய் ஈட்டும் நிலையில், அக்பர் நகர் சர்க்கிள் பகுதியில் மிக அதிகளவில் இருக்கும் திறன்குறைந்த தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.400 கிடைத்தாலே, அது அதிர்ஷ்டம் என்ற நிலையே உள்ளது. இது, அந்த தொகையை விட பாதியளவிலேயே உள்ளது.
அக்பர் நகர் சர்க்கிளிலில் நாள் முழுவதும் காத்திருந்த பிறகும் கூட ராஜேந்திரா மற்றும் தேவேந்திராவுக்கு வேலை கிடைக்கவில்லை. தோல்விக்கு பிறகு தங்களது டிபன் பாக்ஸ் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினார்கள் - தங்களது பிரதான வாழ்வாதாரத்திற்கு வேலையின்றி, அவர்கள் எந்த முன்னேற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.
'வாழ்க்கை இன்னும் கடினமாகிவிட்டது'
குஜராத்தின் கட்டுமானத்துறை பண மதிப்பிழப்புக்கு முன் "பொருளாதார மந்தநிலை காரணமாக" சரிவை கண்டது, இது “இது (பணிகளை) நிறுத்தியது”; அதன் மூலம் வேலையின்மை மற்றும் உழைப்பு இழப்புக்கு வழிவகுத்தது என ஒரு உலகளாவிய சொத்துசார் ஆலோசனை அமைப்பான நைட் பிராங்க் எல்.எல்.பி.-யின் அகமதாபாத் கிளை மேலாளர் பல்வீர் சிங் கல்ஸா தெரிவித்தார்.
கடந்த 2016இல் அறிமுகமான ரியல் எஸ்டேட் கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு சட்டம் -ரேரா (RERA) மற்றும் 2017 ஜூனில் அறிமுகமான ஜி.எஸ்.டி. ஆகியன அதன் அவசரமான, குழப்பமான செயல்பாட்டிற்காக பரவலாக விமர்சனம் செய்யப்பட்டது; மேலும் "சந்தைகளை தாக்கின" என்றார் கல்ஸா.
ஒவ்வொரு ஆண்டும் அகமதாபாத்தில் 25,000 முதல் 30,000 வரை புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் தொடங்கப்படுகின்றன; பண மதிப்பிழப்புக்கு முன்பே இது 15,000- 16,000 என்ற அளவில் இது "வீழ்ச்சியடைந்தது"; காரணம் 2008இல் உலகளாவிய அளவில் நீடித்த பொருளாதார மந்த நிலையின் விளைவுகள் ஆகும். கடந்த இரு ஆண்டுகளில் - பண மதிப்பிழப்பு, ரேரா மற்றும் ஜி.எஸ்.டி.க்கு பின் - ஆண்டு ஒன்றுக்கு 2,000-4,000 குடியிருப்புகள் மேல் கட்டப்படவில்லை.
இந்த மந்தநிலையானது, உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மிகவும் கடினமாக்கியுள்ளது.
அக்பர்நகர் சர்க்கிளில், பிரகாசமான ஒரு மஞ்சள் சட்டைஅணிந்திருந்த கட்டடத் தொழிலாளியான 25 வயது ராஜேஷ் பர்மர், நோய்வாய்ப்பட்டது போல் விரக்தியில் இருந்தார். அவர் அப்போது தான் காய்ச்சலில் இருந்து மீண்டு வந்திருந்தார். சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் ஒரு நிலையான வேலை தேடி, 200 கி.மீ. தொலைவில் உள்ள தஹோத் நகரில் இருந்து அகமதாபாத்திற்கு வந்திருந்தார். பண மதிப்பிழப்புக்கு முன்பு வரை தினமும் ரூ.400 வீதம் மாதம் ரூ.12,000 சம்பாதித்து வந்தார். 25 நாட்களுக்காவது கட்டுமானப்பணிகள் கிடைத்து வந்தன. இப்போது அவர் தினமும் ரூ.200 கூலியை ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஒரு மாதத்தில் எட்டு முதல் 12 நாட்களுக்கு வேலைக்கு சென்று, மாதம் ரூ. 4,000 முதல் ரூ 6,000 வரை வருமானம் ஈட்டினால், குடிசைப்பகுதியில் உள்ள, குடிநீர், கழிப்பறை வசதியற்ற ஓலை வீட்டிற்கு வாடகையாக ரூ.2000 தர வேண்டும். ஒவ்வொரு நாளும் குடிநீரை தேடி, அவர் 2 கி.மீ. வரை செல்ல வேண்டும்; கல்வி கற்காத அவரது மனைவியும் தினக்கூலியாக மாதம் ரூ.4,000 சம்பாதிக்கிறார். இருவரும் 2 கி.மீ. தொலைவில் உள்ள அக்பர் நகர் சர்க்கிலுக்கு சைக்கிளில் சென்றாக வேண்டும். சில நேரங்களில் அவர்களது மூன்று குழந்தைகளும் வேலைக்கு சைக்கிளில் சென்றுவிட்டால், இவர்கள் இருவரும் நடந்தே சென்றாக வேண்டும்.
"வாழ்க்கை எங்களுக்கு மிகவும் கடினமாக நகர்கிறது. குறிப்பாக இந்த நேரத்தில் அதிக வேலை கிடைக்காமல் மிகவும் கஷ்டத்துடன் போராடி வருகிறோம்," என்று பர்மர் கூறினார்.
மஸ்தூர் அதிகார் மஞ்ச்சின் ஸ்ரீவத்சவ், குஜராத்தில் தற்போது 12 லட்சம் தொழிலாளர்கள் இருப்பதக மதிப்பிட்டுள்ளார்; இருப்பினும் கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் (BOCW) சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவு (2017) 5,32,895 ஆக இருக்கும் என்கிறது. கட்டுமானத் தொழிலாளர்களில் கால்வாசி பேர் பெண்கள் என்றார் அவர்.
அகமதாபாத் நகரில் அக்பர் நகர் சர்க்கிளில், கல்வி அறிவு பெறாத 60 வயது லீலாபென் மக்வானாவும் ஓர் அங்கம். அவர் சக வேலையாட்களுடன் சாலைப்பிரிவில் அமர்ந்துள்ளார். "இந்த நிலைமை நோட் பந்திக்கு [பண மதிப்பிழப்பு] பிறகு மோசமடைந்தது," என்கிறார் அவர். பண மதிப்பிழப்புக்கு முன் மாதம் 20 நாட்கள் வேலை கிடைத்தது; தற்போது 6- 10 நாட்கள் தான் கிடைக்கிறது; அவரது தினக்கூலியும் ரூ.200 என பாதியாக குறைந்துவிட்டது.
கல்வி அறிவு பெறாத 60 வயது லீலாபென் மக்வானா, இங்குள்ள பெண்களின் அடையாளமாக உள்ளார். மக்வானாவின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். அதன்பிறகு, அக்பர்நகர் சர்க்கிளில் அவள் ஒரு அங்கமாக மாறினார். ஒரு பழைய அச்சிடப்பட்ட புடவை அணிந்தவாறு, வேலையாட்களுடன் சாலை பிரிவில் அமர்ந்திருந்தார். வேலையின்றி, வருவாய் குறைந்து, மன அழுத்தத்தில் அவர் இருந்தார்; அவரது மகன் (37) மற்றும் மகள் (35) ஆகியோர் திருமணம் இன்னும் நடைபெறவில்லை.
மாக்வானாவின் மகன் தனியார் கடையில் ஒரு தொழிலாளியாக மாதம் ரூ 7,000 சம்பளமாக சம்பாதிக்கிறார். அவரது மகள், வீட்டு வேலைகள் செய்து மாதம் ரூ.2,500 முதல் ரூ.5,000 பெறுகிறார். "இந்த நிலைமை நோட் பந்திக்கு [பண மதிப்பிழப்பு] பிறகு மோசமடைந்தது. முன் மாதம் 20 நாட்கள் வேலை கிடைத்தது; இப்போது 6- 10 நாட்களே வேலை கிடைக்கிறது” என்றார். அவரது ஊதியம் ஒரு நாளைக்கு ரூ.200 ஆக குறைந்துவிட்டது.
லீலாபென் மக்வானாவை போல்,45 வயது ஹன்சபென் சுமேராவும், குஜராத்தில் ஒரு "பயங்கரமான வேலையின்மை நெருக்கடிக்கு" பணமதிப்பிழப்பு நடவடிக்கை வழிவகுத்தது என்றார். மஞ்சள் மற்றும் வெள்ளை நிற அச்சிடப்பட்ட சேலை அணிந்திருந்த அவர், 10 ஆண்டுகளுக்கு முன் தமது கணவனை இழந்தவர். கட்டுமான வேலை தேடி, அக்பர் நகர் தொழிலாளர் மையத்திற்கு வருகிறார்.
பண மதிப்பிழப்புக்கு முன்பு வரை சுமேராவும், மாதம் 20-25 நாட்கள் வேலை பார்த்து மாதம் ரூ.10,000 வருவாய் ஈட்டி வந்தார்; இப்போது அவரது வருவாய் மாதம் ரூ.5,000 என்றளவில் குறைந்துவிட்டது; எட்டு முதல் 12 நாட்களுக்கு தான் வேலை கிடைக்கிறது. வீட்டு வேலை செய்து அவரது இளைய மகள் மாதம் ரூ.3000 பெறுகிறார்.
"இவை எல்லாம் எப்போதும் முன்னேறும் என்று எனக்குத் தெரியவில்லை," என்று மக்வானா சொன்னார்.
2019-ல் ரியல் எஸ்டேட் தொழிலானது ஒரு திருப்புமுனையை எட்டும் என்று நம்பப்படுகிறது.
“இந்தாண்டு இவை மேம்படும்”
வரும் 2019 தீபாவளியில் இருந்து குஜராத்தின் ரியல் எஸ்டேட் தொழில் சரிவில் இருந்து மீளும் என்ற "நம்புவதாக", நைட் ப்ராங் அமைப்பின் கல்சா தெரிவித்தார். குஜராத்தின் கிராமங்களில் இருந்து சுமார் 200,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அகமதாபாத் எங்கும் குடியேறியுள்ளதாக, அவர் தெரிவித்தார். மேலும் கட்டிடங்கள் கட்டப்படும், "இது, தொழிலாளர்களுக்கு தேவை அதிகரிக்கும்" என்று அவர் கூறினார்.
குஜராத் இன்ஸ்டிடியூட் ஆப் ஹவுஸ் அண்ட் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அமைப்பின் படேல் மேலும் கூறுகையில், ஜி.எஸ்.டி. ஒழுங்குமுறை, பேரா சட்டங்கள் தொடர்பான் விதிகள், குஜராத் விரிவான வளர்ச்சி கட்டுப்பாடு விதிமுறைகள் (கட்டிடம் அனுமதி தொடர்பான, கட்டடத்தின் உயரம், கட்டணங்கள் உள்ளிட்டவை) மற்றும் ஆன்லைன் மேம்பாட்டு அனுமதி அமைப்பு (திட்ட அனுமதிக்கு டிஜிட்டல் விண்ணப்பம் அளித்தல்) போன்ற ரியல் எஸ்டேட் சரிவு போன்ற பிற சிக்கல்கள்,
மீண்டும் முன்னேற்றம் காணப்படுகிறது. பொதுத்தேர்தல்களுக்கு பிறகு அவர்கள் முற்றிலும் பழைய பாதைக்கு திரும்பி வருவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்," என்ற பட்டேல், "தேர்தல்களின் போது நிறைய செலவுகள் நடைபெறுகின்றன; அது சாதாரணமாக பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறது" என்றார்.
இதனிடையே, பி.ஓ.சி.டபிள்யு. குழு, பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு தற்போதுள்ள நலத்திட்டங்களில் பணியின் போது இறப்புக்கான இழப்பீடு ரூ.3,00,000; நிரந்தர உடல் இயலாமைக்கு ரூ.1,50,000 வழங்கப்படுகிறது. இதை உயர்த்துவதற்கு முயற்சித்து வருகிறது. இத்தொகையை முறையே ரூ.4,00,000 மற்றும் ரூ.3,00,000 வீதம் என உயர்த்தி வழங்க, அரசுக்கு யோசனை தெரிவித்து இருக்கிறோம் என்று, பி.ஓ.சி.டபிள்யு நலத்திட்ட வாரியத்தின் உறுப்பினர் - செயலாளர் பி.எம். பிரஜாபதி தெரிவித்தார்.
இது, 11 கட்டுரை கொண்ட தொடரில் நான்காவது ஆகும். முந்தைய கட்டுரைகள்: இந்தூர், ஜெய்ப்பூர் மற்றும் பெரும்பாவூர்.
(ஜோசப், அகமதாபாத்தை சேர்ந்த பிரீலான்ஸ் எழுத்தாளர் மற்றும் 101Reporters.com உறுப்பினராக உள்ளார்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.