ஜார்க்கண்ட் புதிய சட்டசபையில் 15 ‘வாரிசு’ எம்.எல்.ஏ.க்கள்
மும்பை: மொத்தம் 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், 15 எம்.எல்.ஏ.க்கள் அரசியல் வாரிசுகள். இவர்களில் ஏழு பேர் பாரதிய ஜனதா, ஆறு பேர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்), இருவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்று தேர்தல் தரவுகளை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிய வந்துள்ளது.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள் 2019 டிசம்பர் 23 அன்று அறிவிக்கப்பட்டன. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி, மொத்தமுள்ள 81 இடங்களில் 47 தொகுதிகளை வென்றது. அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட பாஜக, 79 இடங்களில் போட்டியிட்டு, 25ஐ மட்டுமே கைப்பற்றியது.
இந்த கட்டுரையில் ஒரு ‘வாரிசு’ என்பது தேர்தல் அரசியவாதியின் தந்தை அல்லது துணை அரசியல் இருப்பார் / அல்லது இருந்தார் என்பதை குறிக்கிறது. அதை தாண்டிய குடும்ப உறவுகளை இந்த தரவு வாரிசாக கணக்கிடவில்லை. எனவே, வாரிசு தொடர்பான புள்ளிவிவரங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டவை தான்.
ஒட்டுமொத்தமாக, முக்கிய அரசியல் கட்சிகளால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் குறைந்தது 28 பேர் அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 15 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக (எம்.எல்.ஏக்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டதை எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது.
Dynast Legislators In Jharkhand Assembly Election, 2019 | ||||
---|---|---|---|---|
Candidate | Political party | Family Member in politics | Relation With Candidate | Constituency |
Jai Prakash Bhai Patel | BJP | Teklal Mahato | Father | Mandhu |
Amit Kumar Mandal | BJP | Raghu Nandan Mandal | Father | Godda |
Pushpa Devi | BJP | Manoj Kumar | Husband | Chattarpur Palamau |
Manish Jaiswal | BJP | Braj Kishor Jaiswal | Father | Hazaribagh |
Alok Kumar Chaurasiya | BJP | Anil Kumar Chaurasiya | Father | Daltonganj |
Bhanu Pratap | BJP | Lal Hemndra Pratap | Father | Bhawanthpur |
Nilkanth Singh Muna | BJP | T Muchirai Munda | Father | Khunti |
Amba Prasad | INC | Yogendra Saw | Father | Barkagaon(Ramgarh) |
Purnima Niraj Singh | INC | Niraj Singh | Husband | Jharia(Dhanbad) |
Sabita Mahato | JMM | Sudhir Mahato | Husband | Ichagarh |
Vikas Kumar Munda | JMM | Ramesh Singh Munda | Father | Tamar |
Joba Majhi | JMM | Devendra Majhi | Husband | Manoharpur |
Hemant Soren | JMM | Shibu Soren | Father | Borhait/Dumka |
Sita Murmur | JMM | Durga Soren | Husband | Jama |
Dinesh Wiliam Marandi | JMM | Simon Marandi | Father | Littipara |
Source: Analysis of Election Commission of India data
இம்முடிவுகள் அரசியல் வாரிசுகளை ஏற்றுக்கொள்வதோ அல்லது நிராகரிப்பதோ அல்ல என்று அரசியல் விஞ்ஞானியும் கொள்கை ஆராய்ச்சி மையத்தை சேர்ந்தவருமான ராகுல் வர்மா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
"இந்தியா முழுவதும் பல மாநில அரசியல் என்பது உள்ளூர் காரணங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது; ஜார்க்கண்டில், மற்ற இந்தி பேசும் மாநிலங்களை விட எம்.எல்.ஏ.க்கள் தக்கவைத்துள்ள இடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக உள்ளது, ”என்று அசோகா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவர் கில்லஸ் வெர்னியர்ஸ், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
பல தொகுதிகள் காலப்போக்கில் ஒரே குழு, சாதி அல்லது பழங்குடியினரால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாக கூறும் அவர், சில உள்ளூர் சமூகங்கள் தங்கள் அரசியலில் தங்களது பிடியை வலுப்படுத்திக் கொள்ள, குடும்பங்கள் அல்லது வாரிசுகளை தொடர்ந்து பங்களிக்க செய்கின்றன என்றார்.
"இது (வாரிசு ) பற்றிய ஆராய்ச்சி, வாரிசு அரசியல் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் மெதுவான பொருளாதார வளர்ச்சி போன்ற எதிர்மறையான தாக்கங்கள் இருப்பதை ஆவணப்படுத்தியுள்ளது" என்று வர்மா மேலும் கூறினார். "ஜனநாயக நாடுகளில் அரசியல் வாரிசுகள் என்பதும் ஒரு அங்கமாகிவிட்டது; அது அமெரிக்கா அல்லது இங்கிலாந்தாக இருந்தாலும் எல்லா இடங்களிலும் செழித்தோங்கி இருக்கிறது. இந்த போக்கிற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல" என்றார்.
பாஜக களமிறங்கிய 11 வாரிசு வேட்பாளர்களில் 7 பேர் வெற்றி
ஜார்க்கண்டில் பாஜகவால் நிறுத்தப்பட்ட 79 வேட்பாளர்களில், குறைந்தது 11 பேர் அரசியல் குடும்பத்தை சேர்ந்த வாரிசுகள். அசோகா பல்கலைக்கழகத்தின் உள்ளீடுகள் மற்றும் ஜார்க்கண்டின் மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டணி தொடர்பான எங்கள் ஆராய்ச்சியில் இது தெரிய வந்துள்ளது. இவர்களில் ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
"வாரிசுகள் மீண்டும் தலைதூக்காமல் இருக்க, அவர்களின் ஆட்சியை தடுக்க, பிராந்தியத்தின் செழிப்பு பன்மடங்கு அதிகரிக்க, 'தாமரை'க்கு வாக்களியுங்கள் என்று பாஜகவுக்கு பிரச்சாரம் செய்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2019 டிசம்பர் 8 ம் தேதி நடைபெற்ற பேரணியில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், ஜே.எம்.எம் நிறுத்திய 43 வேட்பாளர்களில் குறைந்தது ஒன்பது பேர் அரசியல் குடும்பங்களை சேர்ந்தவர்கள். இவர்களில் 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்; இதில் மூன்று முறை முதல்வரும், கட்சித்தலைவருமான ஷிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரனும் அடங்குவார்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, 31 இடங்களில் போட்டியிட்டதுல் அதில் குறைந்தது மூன்று பேர் வாரிசு வேட்பாளர்கள்; அவர்களில் இருவர் வெற்றி பெற்றுள்ளனர்.
Source: Analysis of Election Commission of India data
"வாரிசு வேட்பாளர்களை களமிறக்குவதில், பாரதிய ஜனதாவுக்கும் அதன் எதிரி கட்சிகளுக்கும் கணிசமான வித்தியாசம் இல்லை" என்று வெர்னியர்ஸ் கூறினார். "வாரிசு என்பது மற்றவர்களிடையே வேட்பாளர்களை வெல்வதற்கான ஒரு காரணியாகும். மேலும், பொது வேட்பாளர்களை விட வாரிசு வேட்பாளர்களை நிறுத்தவே பாஜக விரும்புகிறது. எப்படியானாலும், அரசியல் குடும்பங்களை சேர்ந்த வேட்பாளர்கள், எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக அதிகமாக இல்லை. எனவே இந்த பிரச்சினையை தகுதியைக்காட்டிலும் அதிகமாக செய்யக்கூடாது" என்றார் அவர்.
"காங்கிரஸ் கட்சி மற்றும் காந்தி குடும்பத்தை குறிவைக்க பாஜக 'வாரிசு அரசியல்' என்ற சொல்லை பயன்படுத்துகிறது," என்று வர்மா கூறினார். இருப்பினும், அரசியல் குடும்பங்களால் கட்டுப்படுத்தப்படும் கட்சிகளுக்கும் குடும்ப தொடர்பு கொண்ட வேட்பாளர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. பாஜக மற்றும் இடதுசாரிகளைப் பொறுத்தவரை, கட்சியானது குடும்பக் கட்டுப்பாட்டில் இல்லை; ஆனால், தேர்தலில் குடும்ப தொடர்பு கொண்ட வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர். பெரும்பாலான பிராந்திய கட்சிகளும், காங்கிரசும் ஒரு அரசியல் குடும்பத்தையே கொண்டுள்ளன” என்றார்.
(புஷ்பிதா டே, சிம்பியோசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மீடியா அண்ட் கம்யூனிகேஷன் பட்டதாரி, இந்தியா ஸ்பெண்டில் பயிற்சியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.