மும்பை: 16ஆவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.கள்) தங்களுக்கு ஒதுக்கிய தொகுதி வளர்ச்சி நிதியில் 85% தொகையை பயன்படுத்தி உள்ளனர்; மொத்த தொகை ரூ. 12,051.36 கோடியில் 15% அதாவது ரூ. 1,806.08 செலவிடப்படவில்லை. இத்தொகை, கஜா புயலால் வீடு இழந்தவர்களுக்கு தமிழக அரசு கட்டித்தரவுள்ள 1,00,000 வீடுகளுக்கான செலவுத்தொகை ரூ.1,700 கோடியை விட அதிகமாகும்.

மேகாலயா, டெல்லி, சண்டிகர், குஜராத் மற்றும் சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் நாட்டிற்கே வழிகாட்டியாக, தங்கள் தொகுதி வளர்ச்சி நிதியை செலவிட்டுள்ளனர்; மாறாக, அதிகபட்சமாக கோவாவை சேர்ந்த எம்.பி.க்கள் (22.54%) நிதியை பயன்படுத்தப்படவில்லை. நாகாலாந்தில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறைகளுக்கு எம்.பி. நிதி பரிந்துரைக்கப்படவில்லை அல்லது தொகை வழங்கப்படவில்லை; ஜம்மு காஷ்மீரில் ரூ. 1.43 லட்சம், இமாச்சலப் பிரதேசத்தில் வெறும் ரூ. 5,000 மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் தொகுதி வளர்ச்சி நிதி (MPLADS) மூலம் எம்.பி.க்கள் தங்கள் தொகுதியின் தேவைக்கேற்ப வளர்ச்சி திட்டங்களுக்கு அந்த நிதியை செலவிடலாம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு எம்.பி.க்கும் ஆண்டுக்கு ரூ. 5 கோடி ஒதுக்கப்படுகிறது. இதை கொண்டு, மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட உயர் அதிகாரிகள் மூலம் தனது தொகுதியில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள முடியும்.

இதில் குடிநீர் வழங்கல், பொது சுகாதாரம், கல்வி, சுகாதாரம், சாலைகள், போன்ற முன்னுரிமை துறைகளுக்கும், அது தொடர்புடைய வேலைகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதில் எம்.பி.க்களின் பங்களிப்பு வேலைகளுக்கு பரிந்துரை செய்வது மட்டுமே; அதன்பின் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வேலைகளை ஒப்புதலளித்தல், நிறைவேற்றி முடித்தல் ஆகியன மாவட்ட அதிகாரிகளின் பொறுப்பு என்று எம்.பி. தொகுதி நிதி குறித்த வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. எம்.பி.க்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படாமல் இருந்தால், அடுத்து அதே தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.வசம் அந்த நிதியானது வழங்கப்படும்.

எம்.பி.க்கள் தொகுதி வளர்ச்சி நிதியின் பயன்பாட்டு சதவீதத்தை கணக்கிடுவதற்கு அரசு தரவுகளில் பயன்படுத்தப்படும் சூத்திரம்: அரசால் விடுவிக்கப்பட்ட நிதிப் பிரிவினரால் வகுக்கப்படும் செலவினம் என்பதாகும். செலவினமானது மாவட்ட அதிகாரத்திற்கு கிடைக்கும் தொகையைவிடக் குறைவாக இருப்பதால், வட்டி மற்றும் முன்பு இல்லாத பணம், வெளியிடப்பட்ட நிதியை விட பயன்பாட்டு சதவீதம் அதிகமாக இருக்கலாம்; இதனால் சில சந்தர்ப்பங்களில் நம்பமுடியாதபடி, 100% என்பதைவிட பயன்பாடு அதிகம் இருக்கலாம்.

எம்.பி. ஆல் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களுக்கு எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து செலவழிக்கும் அதிகாரம், நிதியின் இறுதி அளவுடன் மாவட்ட அளவிற்கான செலவினங்களை பிரிப்பதன் மூலம் செலவிடப்பட சதவீதத்தை இந்தியா ஸ்பெண்ட் கணக்கிட்டுள்ளது.

முன்னுரிமை துறைகளில் எம்.பி. தொகுதி நிதியைப் பயன்படுத்துதல்

16வது மக்களவையின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் எம்.பி.க்கள் பரிந்துரையின் பேரில் கல்வி துறைக்காக மேற்கு வங்க மாநிலம் (ரூ. 44.41 கோடி) மாவட்ட அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்ட அதிக நிதியை கண்டது. அடுத்து, பஞ்சாப் (ரூ. 35.62 கோடி), தமிழ்நாடு (ரூ 27.85 கோடி).

கல்வி பணிக்காக மிகவும் குறைந்தபட்சமாக நாகலாந்தில் நான்கு பணிகளுக்காக வேறும் ரூ. 100 மட்டுமே எம்.பி. நிதியில் இருந்து வழங்கப்பட்டது. அதேபோல் மிசோரமில் ரூ. 20 லட்சம், ஜம்மு காஷ்மீரில் ரூ.35.93 லட்சம்.

சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை பணிக்காக எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அனுமதிக்கப்பட்ட உயர்ந்த தொகை என்று பார்த்தால் மேற்கு வங்கம் (ரூ. 39.97 கோடி), பஞ்சாப் (ரூ. 9.7 கோடி), அதற்கடுத்த இடங்களில் குஜராத் (ரூ. 6.25 கோடி) மற்றும் தமிழ்நாடு (ரூ. 4.64 கோடி) ஆகியன உள்ளன.

நாகாலாந்து மாநிலத்தில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறைக்கு எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் யில் MPLADS இன் கீழ் எந்தவொரு திட்டமும் பரிந்துரை செய்யப்படவில்லை அல்லது தொகை வழங்கப்படவில்லை. ஜம்மு & காஷ்மீரில், ரூ. 1.43 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தில் மட்டும் 5,000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது.

துப்புரவு மற்றும் பொது சுகாதாரத்திற்கு எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி அதிகம் செலவிட்டத்தில் மீண்டும் மீண்டும் பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தின் முன்னணி வகிக்கின்றன. அவை முறையே, ரூ. 23.46 கோடி மற்றும் ரூ. 17 கோடி செலவிட்டன. அடுத்ததாக, தெலுங்கானாவில் ரூ. 9.72 கோடி ஆகும். நாகாலாந்து மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியன குறைந்த முன்னுரிமை தந்தன. நாகலாந்தில் துப்புரவு மற்றும் பொது சுகாதாரத்திற்காக எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் கிட்டத்தட்ட எதுவும் அனுமதிக்கப்படவில்லை. இமாச்சலப் பிரதேசத்தில் 12 லட்சம் ரூபாவும், உத்தரகண்ட் மாநிலத்தில் 14 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டது.

மஹாராஷ்டிராவில் வறட்சி பாதித்த விதர்பா மற்றும் மராத்வாடா பகுதிகளில், எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.211.68 கோடியில் 27% அல்லது ரூ. 58.1 கோடி செலவிடப்படவில்லை. அகாலா, அமராவதி, புல்தானா, யவத்மல் மற்றும் வாஷிம் மாவட்டங்களை உள்ளடக்கிய விதார்பா பகுதியில், எம்.பி. தொகுதி நிதி ரூ. 71.2 கோடியில் ரூ. 57.03 கோடி மட்டுமே செலவிடப்பட்டது; ரூ. 14.18 கோடி செலவிடப்படவில்லை.

அவுரங்காபாத், பீட், ஜல்னா, ஒஸ்மனாபாத், நாந்தேட், லாதூர், பர்பானி, ஹினோலி மாவட்டங்கள் அடங்கிய மராத்வாடா பிராந்தியத்தில் மொத்த எம்.பி. தொகுதி நிதி ரூ. 140.48 கோடியில் ரூ.118.5 கோடி செலவிடப்பட்டது; ரூ. 21.96 கோடி செலவிடப்படவில்லை.

அதிகம் செலவிடப்படாத நிதி கொண்டுள்ள எம்.பி.க்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிய அதிகபட்சம் (99.9%) பயன்படுத்த பரிந்துரியத்த முதல் ஐந்து எம்.பி.க்கள் ராமா கிஷோர் சிங் (வைஷாலி, பீகார்), நெபியு ரியோ (நாகலாந்து), ஹர்ஷ் வர்தன் (சாந்தினி சௌக், டெல்லி), கான்ராட் சங்மா (துரா, மேகாலயா) மற்றும் டி.ஜி. வெங்கடேஷ் பாபு (சென்னை வடக்கு, தமிழ்நாடு). குஜராத்தின் சபர்ணந்தா தொகுதி எம்.பி.யான திப்சின் ஷங்கர்சிங் ரத்தோட், தனது பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்ட எம்.பி. தொகுதி நிதியில் 99.8% ஐ செலவிட்டுள்ளார்.

ராமா கிஷோர் சிங் தனது முழு ஐந்து ஆண்டு கால ஆட்சிக்கான ரூ. 25 கோடியில், ரூ. 22.5 கோடியை விடுவித்துள்ளார். ரூ. 24.41 கோடியில் ரூ. 24.40 கோடியை மாவட்ட நிர்வாகம் செலவிட்டுள்ளது; இதில் வட்டி மற்றும் முந்தைய தொகை இல்லை. பீகாரில் உள்ள எம்.பி.க்களின் பரிந்துரையால் மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச தொகை சாலை, ரயில்வே, பாலங்கள் மற்றும் பாதைகளை நிர்மாணிப்பதற்காக ரூ. 6.5 கோடியாகும்.

ஹர்ஷ் வர்தனுக்கு ஒதுக்கப்பட்ட எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 25 கோடி; இதில் ரூ. 10 கோடியை அரசு விடுவித்தது. மாவட்ட நிர்வாகம் ரூ .14.09 கோடியில் ரூ. 14.08 கோடியை செலவிட்டது. ரியோவின் மாவட்ட நிர்வாகம் ரூ. 20.12 கோடியில், ரூ.20.11 கோடியை செலவிட்டுள்ளது. சங்மாவின் மாவட்ட நிர்வாகமானது ரூ. 10.08 கோடியில் ரூ. 10.07 கோடியை திட்டங்களுக்கு பயன்படுத்தியது. ரூ. 26.84 கோடியில் ரூ. 26.80 கோடியை பாபுவின் மாவட்ட நிர்வாகம் பயன்படுத்தியுள்ளது. ரதோட்டின் மாவட்ட நிர்வாகம், ரூ. 21.11 கோடியில் ரூ. 21.08 கோடியை செலவிட்டுள்ளது.

தொகுதி நிதியை குறைவாக பயன்படுத்தி எம்.பி.க்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை, ஒன்று முதல்- இரண்டரை ஆண்டுகள் வரை முழுமையாக பயன்படுத்தாத எம்.பி.க்கள் ஐந்து பேர். 2014 மே மாதம் முதல் டிசம்பர் 2017 வரை பாந்த்ரா -காண்டியா மக்களவை உறுப்பினர் நானா பால்குனராவ் பட்டோல் பரிந்துரையின்படி ரூ.17.5 கோடியை அரசு விடுவித்தது; ஆனால் மாவட்ட நிர்வாகம் அதில் எந்த தொகையையும் செலவிடவில்லை; இதனால் பயன்பாட்டு சதவீதம் பூஜ்ஜியம் ஆனது. அரசால் விடுவிக்கப்பட்ட தங்கள் நிதிகளைக் கொண்டிருந்த மற்ற எம்.பி.க்கள், தங்களது மாவட்ட நிர்வாகத்திற்கு நிதியை செலவிடவில்லை. அசாமின் லாகிம்பூர் தொகுதி எம்.பி.யாக மே 2014 முதல் மே 2016 வரை இருந்த சர்பானந்த சோனுவால் (ரூ. 7.5 கோடி) செலவிடவில்லை. தெலுங்கானாவில் வாரங்கல் எம்.பி. ஸ்ரீஹரி கடியம் (ரூ 5 கோடி), மே 2014 முதல் ஜூன் 2015 வரை ஒரு ஆண்டுக்கு மேலாக நிதியை செலவிடவில்லை.

16வது மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு எம்.பி.க்கள் அதாவது சர்பராஸ் ஆலம், மார்ச் 2018 இல் அரரியா பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்; நவம்பர் 2018 இல் கர்நாடகாவில் பெல்லாரியில் இருந்து எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கடாபுர சுப்பையா உக்கிரப்பா இருவரும், தங்களது தொகுதி நிதியில் தலா ரூ.2.5 கோடியை செலவழிக்கவில்லை.

எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகம் பயன்படுத்திய மாநிலங்கள்

Source: MPLADS

மேகாலயா, டெல்லி, சண்டிகர், குஜராத் மற்றும் சிக்கிம் ஆகியன எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை மிக அதிகமாக பயன்படுத்திய முதல் ஐந்து மாநிலங்கள் ஆகும். அவை எவ்வாறு இதை பயன்படுத்தின என்பதை இங்கே காண்போம்.

மேகாலயாவில், எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியை மாவட்ட அதிகாரிகள் 92.17% (43.68 கோடி ரூபாயில் 40.26 கோடி ரூபாய்) பயன்படுத்தினர். ரூ. 7.4 கோடி மதிப்புள்ள மொத்தம் 282 சாலைகள் மற்றும் ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சமூக கூடங்கள், பொது வசதி திட்டங்கள், எல்லை சுவர்கள் போன்றவற்றை நிர்மாணிக்க ரூ. 2.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறைக்கு ரூ. 1.47 கோடி, பொது கழிப்பறை மற்றும் கழிவறைகள், வடிகால் மற்றும் சுத்திகரிப்புத் துறைக்கு ரூ.85.4 லட்சம் ஒதுக்கப்பட்டது. கல்வி பணிக்காக ரூ. 72 லட்சம் தண்ணீர் குடிநீர் வசதி, குடிநீர் வசதி, நீர் பாசனம், குழாய் மற்றும் இதர திட்டங்கள் ரூ. 57 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

டெல்லி மாவட்ட நிர்வாகத்தில், எம்.பி.க்களுக்கு கிடைத்த நிதியில் 91.46% (ரூ. 134.47 கோடியில் ரூ. 122.9 கோடி) செலவிடப்பட்டது; ரூ. 11.48 கோடி பயன்படுத்தப்படவில்லை.

சத்தீஸ்கர் அரசு எம்.பி. கிபான் கெர் பரிந்துரையின் பேரில் ரூ 22.5 கோடியை விடுவித்தது. மொத்தம் ரூ. 27.87 கோடியில் ரூ. 25.42 கோடியை (91.21%) மாவட்ட அதிகாரிகள் செலவு செய்துள்ளனர். சண்டிகரில் பொது கழிப்பறை மற்றும் கழிவறைகளை நிர்மாணிக்க ரூ. 17.849 லட்சம் வழங்கப்பட்டது.

குஜராத்தில், மாவட்ட அதிகாரிகள் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ. 613.37 கோடியில் ரூ. 559.39 கோடியை (91.20%) பயன்படுத்தியுள்ளனர். குஜராத்தில், ரூ.56.71 கோடியை, சாலை மற்றும் ரயில் துறைகளில் 2,743 திட்டங்களுக்கு மாவட்ட அதிகாரிகள் அனுமதி அளித்தனர். பொது வசதிகள் அமைப்பின் கீழ் ரூ. 26.75 கோடி, கல்வித் துறைக்கு ரூ. 8.6 கோடி, குடிநீர் வசதிக்காக ரூ. 8.44 கோடி, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறைக்காக ரூ. 6.25 கோடி, மின் துறைக்கு ரூ. 4.91 கோடி, துப்புரவு மற்றும் பொது சுகாதாரத்திற்கு ரூ.2.97 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிக்கிமின் மாவட்ட அதிகாரிகள் எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதி ரூ. 22.23 கோடியில் ரூ .20.16 கோடி (90.69%) பயன்படுத்தியுள்ளனர். வெள்ள நிவாரணம். கட்டடங்கள், பொது நீர்பாசன வசதிகள், பொது நிலத்தடிநீர் மறுசீரமைப்பு மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள் ஆகியவற்றிற்காக ரூ. 720.87 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித் திட்டத்தின் கீழ் ரூ. 623.48 லட்சம் திட்டங்கள், கட்டடங்கள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு கம்ப்யூட்டர் மற்றும் பிற திட்டங்கள் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டது. சமுதாய மையங்கள், பேருந்து நிறுத்தங்கள், மயான வசதி மற்றும் பிற திட்டங்களுக்கு ரூ 451 லட்சம் வழங்கப்பட்டது. சாலைகள் மற்றும் ரயில்வே துறைக்கு ரூ. 355.41 லட்சம், மின்சாரம் வழங்க ரூ. 277.092, சுகாதாரம் மற்றும் பொது சுகாதாரத்திற்காக ரூ. 242.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

எம்.பி. தொகுதி நிதியை குறைவாக பயன்படுத்திய மாநிலங்கள்

எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகம் பயன்படுத்தியது கோவா மாநிலம் தான். அதை தொடர்ந்து லட்சத்தீவுகள், ராஜஸ்தான், அசாம் மற்றும் திரிபுரா ஆகியன உள்ளன. கோவாவில், எம்.பி. தொகுதி நிதியில் 22.54% மாவட்ட அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை. ரூ. 35.41 கோடியில் ரூ. 7.98 கோடி செலவிடப்படவில்லை. வாக்காளர் எண்ணிக்கையில் சிறிய மக்களவை தொகுதியான லட்சத்தீவு, எம்.பி. தொகுதி நிதியில் 78.14% பயன்படுத்தியது; ரூ. 21.04 கோடியில், ரூ. 4.6 கோடி செலவிடப்படவில்லை.

ராஜஸ்தானில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் 21.46% மாவட்ட அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை. ரூ. 531.05 கோடியில் ரூ. 113.97 கோடி செலவிடப்படவில்லை. அசாம் மற்றும் திரிபுராவில் முறையே 19.81% மற்றும் 18.6% நிதி பயன்படுத்தப்படவில்லை. அசாமில், ரூ. 308.12 கோடியில் ரூ.61.03 கோடியும், திரிபுராவில் ரூ. 40.92 கோடியில் ரூ. 7.61 கோடியும் செலவிடப்படவில்லை.

(அகமது, இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.