அதிக எடை அல்லது பருமன் கொண்ட இந்திய பெண்கள்;அவர்களில் பெரும்பாலோர் பணக்காரர் மற்றும் நகர்ப்புறவாசிகள்
புதுடெல்லி: பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு இந்தியாவில் பரவலாக இருந்தாலும், பெண்கள், குறிப்பாக நகர்ப்புற, படித்த மற்றும் பணக்கார குடும்ப பெண்களின் எடை அதிகரித்து வருவதாக, புதிய உலகளாவிய ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. அதிக எடை மற்றும் பருமனான பெண்களின் விகிதம், 2016 வரையிலான 17 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக, அது தெரிவிக்கிறது.
‘தெற்காசியாவில் பள்ளி செல்வதற்கு முந்தைய வயது குழந்தைகள், வளரிளம் பெண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அதிக எடையின் போக்குகள் மற்றும் தொடர்புகள்’ என்ற தலைப்பில், உலகளாவிய இதழான நியூட்ரியண்ட்ஸ் -இல் ஆகஸ்ட் 2019 இல் வெளியான ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
1999 முதல் 2016 வரையிலான 17 ஆண்டுகளில், அதிக எடை கொண்ட ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளின் விகிதம் 2.9% முதல் 2.1% வரை குறைந்தது. இருப்பினும், அதே காலகட்டத்தில், அதிக எடை கொண்ட இளம் பருவ பெண்கள் (15-19 வயது) மற்றும் பெண்கள் (20-49 வயது) விகிதம் முறையே 1.6% இல் இருந்து 4.9% ஆகவும், மற்றும் 11.4% இல் இருந்து 24% எனவும் இரட்டிப்பு ஆகியது. இந்த வயதிற்குட்பட்ட பெண்களிடையே உடல் பருமன் பாதிப்பு 2.4% இல் இருந்து 6% ஆக, இரு மடங்காக அதிகரித்துள்ளது.
தென் ஆசியாவில் உள்ள ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு மற்றும் நேபாளம் ஆகிய ஆறு நாடுகளில் சிறுமியர், வளரிளம் பெண்கள் மற்றும் வயது வந்த பெண்களிடம் இந்த ஆய்வு நடைபெற்றது. ஆய்வு செய்யப்பட்ட அனைத்து நாடுகளும் அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன் போன்றவற்றில் இதேபோன்ற போக்கு இருப்பதை, ஆய்வில் பணியாற்றிய யேல் பல்கலைக்கழகம், டஃப்ட்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
நேபாளம், இந்தியா மற்றும் பங்களாதேஷில் அதிக எடை கொண்ட வளரிளம் பெண்கள் மற்றும் பெண்களின் விகிதம் காலப்போக்கில் அதிகரித்தது. இந்த நாடுகள், தங்களது மக்கள்தொகையில் பெரும் பகுதியினரிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கையாளும் அதே வேளையில், மற்ற பிரிவுகளில், கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் மற்றும் சிறுமியர் இடையேயும், படிக்காத மற்றும் ஏழ்மையான வீடுகளிலும் கூட அதிக ஊட்டச்சத்து அதிகரித்து வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
"உலகளவில், வளரிளம் பருவ பெண்கள் அதிக எடை மற்றும் உடல் பருமன் அதிகரிப்பு எடை குறைபாட்டை (sic) சரிவைவிட பெரியது ”என்று ஆராய்ச்சியாளர்கள் எழுதினர். "2000ஆம் ஆண்டுக்கு பிந்தைய போக்குகள் தடையின்றி தொடர்ந்தால், குழந்தை மற்றும் வளரிளம் பருவ பெண்களின் உடல் பருமன் அதிகரிப்பானது, 2022 ஆம் ஆண்டளவில் எடை குறைந்தவர்களின் விகிதத்தைவிட அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், தெற்காசியாவில் பெண்கள் அதிக உடல் எடை விகிதத்தில் இந்தியா மிகக் குறைவாகவே (24%) உள்ளது; மாலத்தீவு (46%) மற்றும் பாகிஸ்தான் (41%) ஆகியன, உலகளாவிய மதிப்பீடான 38%ஐ விட கணிசமாக அதிகமாகவே உள்ளன.
பருமனான மற்றும் அதிக எடையுள்ளவர்களின் விகிதம், படிப்பு குறைந்தவர்கள் மற்றும் ஏழைகள் மத்தியிலும் வேகமாக அதிகரிக்கிறது, இது தெளிவான கொள்கை தாக்கங்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவின் இரட்டை சுமை
இந்த மாற்றங்கள் இருந்தபோதிலும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெண்களின் விகிதம் அதிகமாக உள்ளது. உதாரணமாக, 2016 இல்,ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 37.4% வளர்ச்சி குறைபாடும், வளரிளம் பெண்களில் 41.8% மற்றும் பெண்களில் 18.8% பேர் எடை குறைபாடு உள்ளவர்கள் என்று அதே ஆய்வு தெரிவிக்கிறது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒன்பது ஊட்டச்சத்து இலக்குகளை - ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் வளர்ச்சி குறைபாடு (வயதுக்கு குறைவான உயரம்) குறைத்தல், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எடை குறைபாடு (உயரத்திற்கேற்ற உடல் எடை இல்லாமை), மற்றும் ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களின் உடல் எடை; வயது வந்த பெண்களிடையே இரத்த சோகை ஏற்படுவதை குறைத்தல், பெண்கள் மற்றும் ஆண்களிடையே உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயைக் குறைத்தல்; மற்றும் பிரத்தியேக தாய்ப்பால் அதிகரித்தல் - ஆகியவற்றை நோக்கி இந்தியா செல்லவில்லை. இந்தியா ஸ்பெண்ட் டிசம்பர் 2018 கட்டுரையில் தெரிவித்தபடி, 2025ஆம் ஆண்டுக்கான இலக்குகள் தவறவிடப்படலாம்.
இருப்பினும், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதிக உடல் எடை ஆகியவை ஒரே நாடுகள், சமூகங்கள் மற்றும் குடும்பங்களில் கூட அதிக அளவில் இணைந்திருக்கின்றன என்பதற்கான சான்றுகள் உள்ளன.
முன்னதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் வரும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், 2016 ஆம் ஆண்டு ஆய்வில் பெரியவர்களில் உடல் பருமன் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தது - அதன்படி நகர்ப்புற இந்தியாவில் 44% பெண்கள் உடல் பருமன் மற்றும் 11% எடை குறைந்தவர்கள்.
"தற்போதைய ஊட்டச்சத்து உத்திகள், சவாலை ஒப்புக்கொள்கிறது. ஆனால் அதில் நடவடிக்கைகள் இல்லை" என்று உணவுக் கொள்கை சிந்தனைக் குழுவான சர்வதேச உணவு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் (IFPRI) மூத்த ஆராய்ச்சியாளர் பூர்ணிமா மேனன் கூறினார். ஊட்டச்சத்து விளைவுகளை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டமான போஷன் அபியான் ஐந்து குறிக்கோள்களைக் கொண்டுள்ளது; அவை ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையை மட்டுமே கையாள்கின்றன மற்றும் ஊட்டம் அதிகரிப்பை அது குறிப்பிடவில்லை.
"[அதிக ஊட்டம் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு] சிக்கல்களைக் கையாளும் கொள்கை நடவடிக்கைகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் பொதுவாக வெவ்வேறு குழுக்களாக இருந்தனர்; ஆனால் இரு குழுக்களும் இன்னும் வலுவாக ஒன்றிணைவதற்கான அங்கீகாரம் அதிகரித்து வருகிறது" என்று மேனன் மேலும் கூறினார்.
உலகின் மொத்த நீரிழிவு நோயாளிகளில் இந்தியாவில் மட்டும் தற்போது 49% பேர் உள்ளனர்; 2017 ஆம் ஆண்டில் 7.2 கோடி நோயாளிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது; இது 2025இல் கிட்டத்தட்ட 13.4 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, இந்தியா ஸ்பெண்ட் ஏப்ரல் 2018 கட்டுரை தெரிவித்துள்ளது.
2016 உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிக்கையின் படி, இருதய நோய் காரணமாக இந்தியாவில் ஏற்படும் பொருளாதார இழப்புகள், 2012ஆம் ஆண்டு முதல் 2030 வரை ரூ.2,25,000 கோடி (2.25 டிரில்லியன் டாலர்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து குறைபாட்டின் பாதிப்பு அதிகரிக்கும் போதும், மேம்பட்ட குழந்தை உணவு முறைகள் மூலம் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கையாள்வதில் பொதுக் கொள்கை தொடர்ந்து கவனம் செலுத்துவதால், இந்த நடைமுறைகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்தனர்.
தாய்ப்பால் உடல் பருமனுக்கு எதிராக பாதுகாப்பு விளைவுகளை ஏற்படுத்தும் அதே வேளையில், சுவை தரக்கூடிய பிற உணவு வகைகள் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட உணவு போன்றவை, விளைவுகளை பாதிக்கும்.
Trends In Excess Body Weight And Obesity In South Asia | ||||||
---|---|---|---|---|---|---|
Afghanistan | Bangladesh | India | Maldives | Nepal | Pakistan | |
Year | 2003 | 2014 | 2016 | 2009 | 2016 | 2013 |
Preschool children overweight (%) | 5.3 | 1.5 | 2.1 | 5.8 | 1.3 | 3.3 |
Adolescent girls (15-19 years) | ||||||
Overweight (>25 kg/m2) (%) | 10.4 | 8.2 | 4.9 | 24.5 | 4.4 | 7.1 |
Obese (>30 kg/m2) (%) | 2 | 1.3 | 0.9 | 2.8 | 0.4 | 0.4 |
Adult women (20-49 years) | ||||||
Overweight (>25 kg/m2) (%) | 29.3 | 25.6 | 24 | 45.8 | 6.8 | 41.2 |
Obese (>30 kg/m2) (%) | 8.7 | 4.7 | 6 | 13.2 | 1.2 | 15.4 |
Source: Nutrients
ஏழைகளிடையே உடல் பருமன் ஆபத்து
உடல் பருமன் மற்றும் அதிக எடை உள்ளவர்களின் விகிதம், படிப்பு குறைந்தமற்றும் ஏழைகள் மத்தியில் வேகமாக அதிகரிக்கிறது என்றும் இந்த ஆய்வு அறிவுறுத்துகிறது. இது ஏற்கனவே அனைத்து வகையான ஊட்டச்சத்து குறைபாடு, நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் தொற்றா நோய்களுக்கு என்.சி.டி (NCDs) பாதிக்கப்படக்கூடியது என்பதை வலியுறுத்துகிறது.
வருமானம் அதிகரிக்கும் போது, கார்போஹைட்ரேட்டுகள், சமையல் எண்ணெய், இனிப்பு வகைகள் மற்றும் விலங்கு சார்ந்த உணவு ஆகியவற்றுடன், அதிக நேரம் உட்கார்ந்த வேலைகள் மற்றும் உணவு அதிகரிக்கிறது; ஆராய்ச்சியானது தொற்றா நோய்களுடன் இவற்றை இணைக்கிறது.
"ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதிக எடை / உடல் பருமன் ஆகிய இரண்டிற்கும் பொதுவான பாதுகாப்பு காரணி சிறந்த தரம் - மாறுபட்ட உணவுகள்" என்று ஐ.எப்.பி.ஆர்.ஐ.- இன் மேனன் கூறினார். அதிக எடை, உடல் பருமன் மற்றும் உணவு தொடர்பான தொற்றா நோய்களுடன் ஊட்டச்சத்துக் குறைபாட்டின் ஆபத்து அல்லது சுமையை ஒரே நேரத்தில் குறைக்கும் திறன் கொண்ட தலையீடுகள், திட்டங்கள் மற்றும் கொள்கைகள் - "இரட்டைகடமை" செயல்களைக் கண்டுபிடிப்பதே நமக்குத் தேவை என்றார் அவர்.
"தெற்காசியாவில் அதிக எடை மற்றும் உடல் பருமன் பற்றிய வளர்ந்து வரும் கவலைகளுக்கு தீர்வு காண, உணவுச் சூழலைப் பற்றிய ஒரு முக்கியமான ஆய்வு, நல்ல தரமான உணவுகளுக்கான அணுகல் மற்றும் அனைத்து வகையான ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான, உணவு அடிப்படையிலான நிரலாக்கத்தின் செயல்திறன் ஆகியவை அவசரமாக தேவைப்படுகின்றன," ஆராய்ச்சியாளர்கள் எழுதினார்.
அதிக எடை கொண்ட தாய்மார்களுக்கு அதிக எடையுள்ள குழந்தைகள்
தெற்காசியாவில், குறிப்பாக இந்தியாவில், அதிக எடை கொண்ட தாய்மார்களின் குழந்தைகள், பருமனாக இல்லாத பெண்களின் குழந்தைகளை விட கூடுதல் எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த உறவு 1999, 2001 மற்றும் 2016 மாவட்ட சுகாதார ஆய்வுகளில் மாறாமல் இருந்தது, இருப்பினும் காலப்போக்கில் வாய்ப்பு குறைந்தது.
குறைவான உணவுகளை உட்கொண்ட குழந்தைகள் - மாறுபட்ட உணவில் ஒவ்வொரு உணவிலும் எட்டு உணவுக் குழுக்களில் குறைந்தது ஐந்து பேர் அடங்குவர் - அதிக எடையுடன் இருப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன என்று ஆய்வு கூறுகிறது.
நகர்ப்புறங்களில் வசித்து வரும் வளரிளம் பருவ பெண்கள் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிக எடையுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டை விட 2016 ஆம் ஆண்டில் அதிகமான இந்திய பெண்கள் அதிக எடையுடன் இருந்தனர், குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழ்ந்தவர்கள், கல்வி கற்றவர்கள் மற்றும் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இதில் அடங்குவார்கள் என்று, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
கல்வி முறைகள் உடல் பருமன் பிரச்சனையை தீர்க்கவில்லை
தெற்காசியாவில், நீங்கள் பணக்காரர், மேலும் படித்தவர்கள், அதிக எடை மற்றும் பருமனாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம், குறைந்த சமூக-பொருளாதார குழுக்கள் பருமனானவர்களாக இருப்பதற்கான மேற்கு நாடுகளுக்கு எதிராக இது உள்ளது.
முறையான கல்வி அதிக எடையுடன் இருப்பதை ஊக்குவிக்கவில்லை என்றாலும், உகந்த உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து நடைமுறைகள் குறித்த அறிவை மேம்படுத்த இது எதுவும் செய்யவில்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டினர். "தெற்காசியாவின் கல்வி முறைகள் மிகவும் குறிப்பிடத்தக்க ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நெருக்கடியின் விரிவாக்கத்திற்கு பார்வையாளர்களாக இருக்கின்றன; மேம்பட்ட உணவுத் தேர்வுகள், உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியமான நடத்தைகளைத் தெரிவிக்கவும், கல்வி கற்பிக்கவும், ஊக்குவிக்கவும் அவர்கள் அதிகம் செய்ய வேண்டும், ”என்று அந்த ஆய்வறிக்கை கூறியது.
(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் சிறப்பு நிருபர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.