புனே: பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட @narendramodi டிவிட்டர் பக்கத்தில், 2018 அக்டோபர் மற்றும் 2019 மார்ச் மாதங்களுக்கு இடையே 2,143 முறை அதாவது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ட்வீட் செய்யப்பட்டுள்ளது. அவரது அரசியல் கட்சியான @ BJP4India டிவிட்டர் பக்கத்தில் அதிகபட்சமாக 31 முறை டிவிட் செய்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களில் பிரதமர் மோடி மறுடிவிட் செய்த ஒரே டிவி சேனல் ரிபப்ளிக் டிவி தான். கடந்த ஆறு மாதங்களில் ஒன்பது முறிய மறுடிவிட் செய்துள்ளார். அவர் செய்துள்ள 35 மறுடிவிட்களில் ஏழு, அவரது சொந்த டிவிட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் சமூக வலைதளங்களில், குறிப்பாக ட்விட்டரில் தீவிரமாக, விரிவாக பயன்படுத்தி வருகின்றனர். இவரது பல ட்வீட், படங்கள் இந்தியாவின் பிரதான ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

இந்த மாதத்தில் இந்தியாவின் 17வது மக்களவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் சூழலில், பிரதமர் மோடியை மட்டுமே சுற்றியுள்ள ஆளுங்கட்சியின் பிரசாரங்களில் கடந்த ஆறு மாதங்கள் மிக முக்கியமானவை.

கடந்த 2018ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியை இழந்தது. அதே நேரம் ஆளும் பா.ஜ.க. அரசு 2019 பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

பிரதமரின் கடைசி ஆறு மாத டிவிட்டுகளில் இரண்டு பொருட்கள் அவரை பின்பற்றுபவர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டது - 2019 பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் மத்திய ரிசர்வ் படையினர் 40 பேர் கொல்லட்டது தொடர்பானது; மற்றொன்று அவரது தேசிய அளவிலான காவலாளி என பொருள்படும் "மெயின் பி சாவ்விதார்" என்ற பிரசாரம்; இதற்கு பதிலடி தந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "சௌகிதார் சோர் ஹேய் [காவல்காரன் ஒரு திருடன்]" என்றார்.

தலைப்பு செய்திகளில் இடம் பெற்ற பிற நிகழ்வுகளும், அரசியல் டிவிட்டுகளும் ஒரு குழப்பத்திற்கு வழிவகுத்தன; எதிர்த்தரப்பில் உருவான மகாகத்பந்தன் (பெரும் கூட்டணி) என்ற பெரும் கூட்டணி உருவாக்கம், குஜராத்தில் உலகிலேயே மிக உயரமானதாக சர்தார் வல்லபாய் படேல் சிலை திறப்பு, மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களும் இதில் அடங்கும்.

பெரும்பாலான ட்வீட்டுகள் 2018 அக்டோபரில் வந்தவை

முன்பே குறிப்பிட்டது போல், 2019 மார்ச் மாதத்துடனான 182 நாட்களில் பிரதமர் மோடி மொத்தம் 2,143 முறை ட்வீட் செய்துள்ளார். இது ஒருநாளைக்கு சராசரி 12 ட்வீட்டுகள் என்பதாகும். மாதம் வாரியாக, @narendramodi எடுத்து கொண்டால் 2018 அக்டோபரில் சராசரியாக ஒருநாளைக்கு 16 முறை ட்வீட் செய்துள்ளார்; இது பிப்ரவரி மாதம் 9 டிவிட் என்றளவில் குறைந்தது. 2019 மார்ச் மாதத்தில் பொதுத்தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக, ஒருநாள் சராசரியாக 11 முறை ட்வீட் செய்தார்.

அக்டோபர் 15, 2018 வாரத்தில் பிரதமர் ட்வீட் செய்த - 239 முறை. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டம் உள்ள நிலையில், இந்த டிவிட்டுகளில் 84இல் #காந்தி150 இடம் பெற்றிருந்தது.

ஹேஷ்டேக்குகளும் குறிப்புகளும்

பிரதமரின் டிவிட்டுகளில் #காந்தி150-க்குப் பிறகு இரண்டாவது மிகப்பெரிய ஹேஸ்டாக் #MannKiBaat (31 முறை), என்ற அவரது மாதாந்திர வானொலி உரையாகும். #VoteKar and #MainBhiChowkidar என்ற ஹேஷ்டேக்குகளில் முறையே முறையே 16 மற்றும் 12 முறைகள் டிவிட் செய்யப்பட்டன.

பிரதமர் மோடி டேக் செய்த அல்லது மற்ற ட்விட்டுகளை 539 முறை கையாண்டார், இதில் பா.ஜ.க.4 இந்தியா என்பது நாம் முன்பே கூறியது போல, அதிகபட்சம் டேக் செய்யப்பட்டன. ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கான பா.ஜ.க.வின் ட்விட்டர்கள், முதல் 10 இடங்களை பிடித்தன. அந்த மூன்று மாநிலங்களில் 2018 டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது.

பிரதமர் மோடியின் ஹேஷ்டேக்குகள், மற்றும் பதில்கள் பற்றிய பகுப்பாய்வு (2,143 ட்வீட்டுகள் 35) இதில் மறு டிவிட்டுகள் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், அவர் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மறு டிவிட் செய்த ஒரே டிவி ரிபப்ளிக் டிவியின் (ஆங்கிலம் மற்றும் ஹிந்தி) பதிவுகளை (ஒன்பது முறை) தான்; அதுவும், பிரதமர் தனது மக்களவை தேர்த்ல பிரச்சாரத்தின் போது அந்த டிவிக்கு ஒரு நேர்காணல் நடத்திய பிறகு தான்.

மறு டிவிட்டுகள் மற்றும் லைக்குகள்

பிரதமரின் 2,143 ட்வீட்டுகளில் 7.7 மில்லியன் மறு டிவிட்டுகள் மற்றும் 32.4 மில்லியன் லைக்குகள் (likes) உள்ளன.

பகுப்பாய்வு செய்த நேரத்தில் டிவிட் செய்யப்பட்டதில் அதிகபட்ச லைக்குகள் (271,932) மற்றும் மறு டிவிட்டுகள் (66,485), விங்க் கமாண்டர் அபிநந்தன் இந்தியா திரும்புவது குறித்தும் மற்றும் முழுபொறுப்பு குறித்தும் (75 மற்றும் 40, முறையே) ஒரு ட்வீட் இருந்தது. இந்தியா மற்றும் காந்தி மீதான அன்பை வெளிப்படுத்தும் ஒரு ஜோர்டானிய பாடகரின் எண்ண வெளிப்பாட்டை பற்றி அரபு மொழியில் எழுதப்பட்டதாக இருந்தது. # காந்தி150 ட்வீட் ஒன்றும் அதில் இருந்தது.

அதிக லைக்குகள் (160,802) மற்றும் மறு டிவிட் (56,398) செய்தவை, பிரதமர் மோடி பேசி, ஹேஷ்டேக் செய்த அந்த டிவிட், "ஊழல், அழுக்கு மற்றும் சமூக தீமைகளை எதிர்த்து அனைவருடன் போராடுவதோடு, இந்தியாவின் முன்னேற்றத்திற்காக கடினமாக உழைத்து வரும் காவலன் (சௌக்கியாடர்)" என்பதாகும். இந்த ஹேஸ்டேக் #MainBhiChowkidaar மற்றும் அது தொடர்பான ஒரு பிரச்சார பாடல் மற்றும் வீடியோவை கொண்டிருந்தது.

முதன்மையான 10 டிவிட்டுகளில் 4, புல்வாமா தாக்குதலுக்கு பிந்தைய நிகழ்வாக பாதுகாப்பு படையினர் அது தொடர்பான பதிவுகளாக இருந்தன. மற்ற இரண்டு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயற்கை எதிர்ப்பு ஏவுகணை செலுத்துதல் மற்றும் முன்னாள் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் குறித்தது.

(ராய் பாகி, ஒரு தரவு ஆய்வாளர் மற்றும் கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு மற்றும் தரவுத்தள பத்திரிகை துறை பட்டதாரி; இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.